Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:அப்ப அவருடைய விமர்சனத்தை வெட்டி ஒட்டினீர்களோ....???! அது இங்கு தேவையா....?!
தவறு எது நியாயம் எது என்று தெரியாமலே நடுநிலை பற்றிக் கதைக்கின்றீர்கள்.....அதைச் சொல்வதே நமது வேலை BBC....அதற்கு உதவி அளித்தீர்கள் நன்றி....!
ஆரம்பத்தில் இருந்தே சில தெரிந்த விடயங்களை வைத்துக் கொண்டு பல தெரியாத விடயங்களுக்குள் உங்கள் கருத்துக்கள் மேலோட்டமாக இருந்த போதே உங்கள் கருத்தை இனம் கண்டுவிட்டோம்....அதை நிரூபிக்க வேண்டியது ஒரு கருத்தாளன் என்ற வகையில் எமது வேலையல்லவா...?!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நான் எழுதினதை முதல்ல சரியா புரிஞ்சுக்காம எழுதிட்டு அதை நான் சொன்னதுக்கப்புறம் அதை நிரூபிக்கபாத்தேன் இதை நிரூபிக்கப்பாத்தேன்னு சொல்லாதீங்க.
என்மேல தனிப்பட்ட தாக்குதல் நடத்துறதை விட்டுட்டு இந்த விமர்சனத்துல நிறைய விவாதத்துக்குரிய கருத்துக்கு உங்க கருத்துகளை சொல்லுங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உங்களுக்கு 'பார்வையில' கோளாரெண்டதுக்காக எங்களுக்குமே....வேணும் எண்டா வீட்டிலேயே கைலைற் பண்ணிப்பாத்துப் போட்டு அழிச்சுப் போட்டியள் எண்டா...களம் பார்வைக்கு உருப்படியா இருக்கும்....!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:உங்களுக்கு 'பார்வையில' கோளாரெண்டதுக்காக எங்களுக்குமே....வேணும் எண்டா வீட்டிலேயே கைலைற் பண்ணிப்பாத்துப் போட்டு அழிச்சுப் போட்டியள் எண்டா...களம் பார்வைக்கு உருப்படியா இருக்கும்....!
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நழுவாம அதுலை இருக்கிற கருத்துகளுக்கு உங்க பதிலை சொல்லுங்க <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
யாழ்/yarl Wrote:(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் / ஆசிரியர்: சி. புஸ்பராஜா / 632 பக்கங்கள் / அடையாளம் வெளியீடு, 1204 - 05, இரண்டாவது தளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, தமிழ்நாடு / விலை ரூ. 275 / இலங்கை விலை ரூ. 675.)
இந்த நூலைப்பற்றிய தமிழக எழுத்தாளரும் பத்திரிகையாளரும் பாரதியபாஷா வருது பெற்றவருமான திரு பா.ராகவனின் சுயமான விமர்சனம் ஒன்றை அவரது http://writerpara.blogspot.com/உருவி இங்இடுகிறேன்.
நன்றி பாரா
-யாழ்-
நம்பகமான சரித்திரம்
போக இருபத்தியெட்டு மணிநேரம், வர முப்பத்திரண்டு மணிநேரம். ஆகமொத்தம் அறுபது மணிநேரம். இதில் உறங்கிய இருபது மணி நேரங்களைக் கழித்தால் மிச்சமிருந்த நாற்பது மணிநேரங்களும் என்னுடையதாகவே இருந்தது. தொலைபேசி அழைப்புகள் இல்லை, ஈமெயில் இல்லை, மெசஞ்சர் இல்லை, நண்பர்கள் இல்லை, உறவு மக்கள் உடன் இல்லை. இந்தக் கல்கத்தா பயணத்தில் என் ஒரே துணை, ஒரு புத்தகம்தான்.
'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்' என்பது அந்தப் புத்தகத்தின் பேர். ஆசிரியர், சி. புஷ்பராஜா. (அவர் புஸ்பராஜா
என்றுதான் எழுதுகிறார்.) விஷய ரீதியிலும் சரி, பக்க ரீதியிலும் சரி. மிக கனமான புத்தகம்.
என்னை மாதிரி பிறவி தமிழ்நாட்டுக்காரத் தமிழர்களுக்கு ஈழப் போராட்ட விவரங்கள் எல்லாமே புகட்டப்பட்டவையாக மட்டுமே இருக்கும். போராளிகளுக்குச் சாதகமாகச் சிலரும் எதிராகச் சிலரும் காலகாலமாகத் தொடர்ந்து முன்வைத்ததெல்லாமே மதிப்புரைகள், விமரிசனங்கள்தானே தவிர, செய்திகள் அல்ல. ஈழத்தில் நடப்பது என்ன என்பது குறித்த - முழு அளவில் சரியான, திட்டவட்டமான செய்திகள் ஒருபோதும் தமிழகத்துக்கு நானறியக் கிடைத்ததில்லை.
மேற்சொன்ன இரு தரப்பு மதிப்புரைகள், விமரிசனங்கள்கூட அதனளவில் அதிகபட்ச உணர்ச்சி வெளிப்பாட்டுடன் தான் தரப்பட்டிருக்கின்றனவே தவிர, விஷயத்தின் இயல்புநிலை பேணப்பட்டதில்லை. ராஜிவ் காந்தி படுகொலைக்கு முன்னர்
ஒட்டுமொத்த தமிழகமும் ஈழப்போராளிகளின்மீது அனுதாபம் கொண்டிருந்ததும், படுகொலைக்குப் பின் தீர்மானமாகப் போராளிகளைத் தீவிரவாதிகளாக மட்டுமே பார்க்கத் தொடங்கியதும் இதனால்தான்.
ஈழத்தில் நடப்பதென்ன என்பது பற்றிய யோக்கியமான ஒரு தகவல் அறிக்கை கூட இன்றுவரை தமிழில் பதிவாகாத நிலையில் புஷ்பராஜாவின் இந்நூல் அந்த மிகப்பெரிய வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் தன்னாலான அதிகபட்ச சாத்தியத்தைத் தொட்டிருக்கிறது.
இத்தனைக்கும் புஷ்பராஜா ஒரு முன்னாள் போராளி. எழுபதுகளின் தொடக்கத்தில் 'ஈழத்தமிழ் இளைஞர் இயக்கம்' என்று ஜனநாயக ரீதியில் போராடிய அமைப்பில் முதலில் பங்குகொண்டு, பிறகு தமிழ் மாணவர் பேரவை என்கிற அமைப்பின் சார்பில் போராட்டத்தைத் தொடர்ந்து, அதன்பின் 'தமிழ் இளைஞர் பேரவை' கண்டு, பிறகு பாலஸ்தீன விடுதலை இயக்கமான PLO மாதிரி செயல்படவேண்டும் என்று முடிவு செய்து TLO என்கிற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தைத்
தோற்றுவித்து, வழிநடத்தி, அந்த இயக்கம் கலைந்தபிறகு அனைத்துப் போராளிகளின் இயக்கங்களுக்கும் தம்மாலான உதவிகள் செய்து, இறுதியில் பத்மநாபாவின் EPRLFக்காக அதன் பிரான்ஸ் கிளையின் பொறுப்பை ஏற்றுத் திறம்பட வழிநடத்தி, பிரான்ஸில் ஈபிஆர்எல்எ·ப் கூடாரம் கலைக்கப்படும்வரை அதற்காகச் செயல்பட்டவர் புஷ்பராஜா.
பிறவிப் போராளிதான். துப்பாக்கியும் தோளுமாக அலைந்தவர்தான். ஆனாலும் \"சிங்களர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டுமென்ன? அதே வெறியுடந்தானே ஆயிரக்கணக்கான அப்பாவிச் சிங்களப் பெண்களையும் குழந்தைகளையும் கொன்று குவித்திருக்கிறோம்?\" என்று சுயவிமரிசனம் செய்துகொள்ளூகிற நேர்மை அவரிடம் இருக்கிறது.
புஷ்பராஜாவின் இந்நூல் இரண்டு பகுதிகள் கொண்டது. நேரடியாகத் தான் சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றிய மிக விரிவான தகவல்களை முதல் பகுதியிலும் கேள்விப்பட்டவை, அலசி ஆராய்ந்தவை, சரித்திரக் குறிப்புகள், விமரிசனங்கள், சுய விமரிசனம் ஆகியவற்றை அடுத்தப் பகுதியிலும் அளித்திருக்கிறார்.
0
சிங்களர்களின் இனவெறிக்குத் துல்லியமாக வயது சொல்லுவது கஷ்டம். ஆனால் 1948ல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டதிலிருந்து போராட்டம் அதன் தீவிரத்தன்மையை நோக்கி நகரத் தொடங்கியதாக நாம் கொள்ளலாம். முதலில் உரிமைப்போராட்டமாகத்தான் அது இருந்திருக்கிறது. பிறகு படிப்படியாகப் பரிணாம வளர்ச்சி கண்டு விடுதலைப் போராட்டமாகி விட்டதாகச் சொல்லுகிறார் புஷ்பராஜா.
விடுதலைப் போராட்டமே கூட ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியில் தான் நடத்தப்பட்டிருக்கிறது. பொதுக்கூட்டங்கள், ஊர்வலம், கண்டனப்பேரணி இத்தியாதி. அப்போதெல்லாம் ஈழத்தில் தமிழரசுக் கட்சி மிகுந்த செல்வாக்குடன் இருந்திருக்கிறது. அரசியல் தீர்வு ஒன்றைத்தவிர யாரும் எதையும் சிந்தித்துக்கூடப் பார்த்திருக்கவில்லை.
ஆனால் எழுபதுகளின் தொடக்கத்திலிருந்தே தமிழ் இளைஞர்கள் ஜனநாயகப்பாதையின்மீது அவநம்பிக்கை கொண்டு, ஆயுதப்போராட்டம் தான் இதற்குத் தீர்வாக முடியும் என்று நம்பத்தொடங்கியதன் விளைவுதான் ஏராளமான ஆயுதப்போராட்டக்குழுக்கள் தமிழ் ஈழத்தில் உதித்தன. இந்த ஜனநாயக அவநம்பிக்கை ஏற்பட்டதற்கான காரணங்களைப் படிப்படியாக விவரிக்கிறது இந்தப் புத்தகம். சத்தியாகிரக யுத்தத்தின்மூலம் பிரிட்டனிடமிருந்து இந்தியா சுதந்தரம்
பெற்றது போல சிங்கள மேலாதிக்கத்தினிடமிருந்து ஏன் சாத்திய மில்லை என்பதை வெளிப்படையாக அல்லாமல் ஒரு நீரோட்டமாக நூலெங்குமே மௌனமாகத் தெரிவிக்கிறார் புஷ்பராஜா.
ஆயுதம் தான் தீர்வு என்று நம்பி ஏற்றுக்கொண்டவர்களுள் அவரும் ஒருவர். தனது நோக்கத்தில் வெற்றியடைய முடியாமல் உயிர் பிழைக்கவென்று தப்பியோடிப் புலம்பெயர்ந்து வாழ்வது குறித்த குற்ற உணர்வும் கொண்டவர். இந்த இரு சொற்றொடர்களுக்கு இடையில் மறைபொருளாகக் கிடக்கிற கோடி சங்கதிகளைக் கோத்துக் கொடுத்திருக்கிறது இந்தப் புத்தகம்.
ஏன் ஆயுதம் தான் தீர்வு என்று தமிழ் இளைஞர்கள் முடிவு செய்தார்கள்? அப்படி முடிவு செய்தவர்கள் ஏன் ஒரே இயக்கமாக அல்லாமல் தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து நின்று போராடினார்கள்? ஏன் ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் ஒத்துப் போக வேயில்லை? இணைப்பு நடவடிக்கைகளெல்லாம் ஏன் தோற்றுப் போயின? சுமார் நாற்பது போராளிக்குழுக்கள் ஈழப்போராட்டத்தில் பங்குபெற்றபோதும் ஐந்து குழுக்களால் (LTTE, TELO, EPRLF, PLOT, EROS)
மட்டும்தான் ஓரளவேனும் தாக்குப்பிடிக்க முடிந்திருப்பது ஏன்? இந்த ஐந்திலேயே நான்கு குழுக்கள் அழிந்தது ஏன்? LTTE ஏன் தன் சகோதரக் குழுக்களைச் சிதறடித்து, ஒருத்தர் விடாமல் ஓட ஓட விரட்டிக் கொன்றது? சக போராளிகளையே அழித்த விடுதலைப்புலிகள் அமைப்பு எப்படி ஈழத்தின் தனிப்பெரும் விடுதலை இயக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது? மற்ற அனைத்துக் குழுக்களைக்காட்டிலும் புலிகள் அமைப்பு மட்டும் எப்படி அத்தனை பலம் பெற முடிந்தது? பிரபாகரன் என்ன தவறே செய்யாதவரா? காதல் வலையில் விழுந்தார் என்கிற ஒரே காரணத்துக்காக உமாமகேஸ்வரனை இயக்கத்தைவிட்டே துரத்தியவர், இறுதியில் தான் மதிவதனியைக் காதலிக்கத் தொடங்கியதும் இயக்கத்தின் சட்டதிட்டத்தையே மாற்றக்கூடியவராக இருந்தும் எப்படி அவரை விமரிசனம் இன்றி மற்றப் புலிகள் ஏற்றுக்கொண்டார்கள்? மற்ற எந்தப் போராளி இயக்கத் தலைவர்களிடமும் இல்லாத எந்த அம்சம் பிரபாகரனை அப்படியரு நிகரற்ற தலைவனாக்கியது? அப்படிப்பட்ட தலைவர், மற்ற இயக்கங்களில் இருந்தாலும் அனைத்துத் தரப்பினருடனும் நட்புடன்
பழகக்கூடிய, ஒரு அவசர ஆத்திரத்துக்கு உதவக்கூடிய அனுபவம் மிக்க போராளிகள் அத்தனைபேரையும் ஏன் பயன்படுத்திக்கொள்ள விரும்பவில்லை?
இப்படித் தொடரும் அத்தனைக் கேள்விகளுக்கும் பக்கம் பக்கமாக இந்தப் புத்தகம் சொல்லிக்கொண்டுவரும் விடைகளைத் தொகுத்துப் பார்த்தால் இறுதியில் புஷ்பராஜாவும் அவரையத்த பல போராளிகளும் போராட்டத் தாகம் இருந்தும் எதனால் இன்றைக்குப் புலம் பெயர்ந்து வாழவேண்டி இருக்கிறது என்கிற கேள்விக்கான பதில் அகப்படுகிறது.
இதில் வியப்புக்குரிய அம்சம், புஷ்பராஜாவின் குரல் நூலில் ஓரிடத்தில் கூட பாதிக்கப்பட்டவனின் குரலாக ஒலிக்கவில்லை. மாறாக, சுதந்தர தாகம் மேலோங்கிய ஒரு வீரனின் குரல்வளை நசுக்கப்பட்டு, கீச்சுகீச்சென்று அலறும் கதவிடுக்கு பல்லிக்குரலாகவே கேட்கிறது.
தான் சார்ந்த இயக்கம் செய்த குளறுபடிகளைக்கூட பகிரங்கமாக முன்வைக்கிறார் என்பதனால் இந்நூலின் சார்பு நிலை குறித்த சந்தேகம் கூட அடிபட்டுப் போய்விடுகிறது. அதே சமயம் பத்மநாபா என்கிற ஒரு தனிமனிதன்பால் புஷ்பராஜாவுக்கு இருக்கிற அபரிமிதமான அன்பின் காரணமாக அவரைப் பற்றிய விவரணைகளை மட்டும் உணர்ச்சியின் வசப்பட்டு எழுதியிருப்பதையும் குறிப்பிட வேண்டும். ஈபிஆர்எல்எ·ப்பின் தலைவரான பத்மநாபாவை ஒரு மகாத்மா அளவுக்கு புஷ்பராஜா சித்திரிப்பதை ஜீரணிப்பது மிகவும் கஷ்டமான காரியம். சென்னை, கோடம்பாக்கம் சக்கரியா காலனியில்
வெகுகாலம் தங்கியிருந்த பத்மநாபாவை (அங்கேதான் அவர் விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.) தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் அளவுக்குத் தமிழகத்துப் பத்திரிகையாளர்களும் மிக நன்றாக அறிவார்கள். ஆளும் கட்சியின் ஆசீர்வாதம் பெற்ற ஒரு அயல்தேசத்துப் போராளி இயக்கத் தலைவராக அவரும் அவரைச் சார்ந்தோரும் தமிழகத்தில் - குறிப்பாகச் சென்னையில் புரிந்த பல சட்டமீறல்கள் குறித்தும் அடாவடிகள் குறித்தும் பலர் சொல்ல நானே கேள்விப்பட்டிருக்கிறேன்.
மக்களிடம் கொள்ளையடிப்பதுதான் தவறு; ஆனால் அரசின் சொத்துகளைக் கொள்ளையடித்து, அரசு இயந்திரத்தை நிலைகுலைய வைப்பதில் தவறில்லை என்று சொல்லுகிற புஷ்பராஜாவால் இதையெல்லாம் ஒரு பிழையாக ஏற்கமுடியாமல் போகலாம். ஆனால் இதுவிஷயத்தில் ஒரு போராளியின் குரல் பொதுவான குரலாக இருக்கமுடியாது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்.
பத்மநாபா விஷயம் ஒன்றைத்தவிர இந்நூலில் புஷ்பராஜா உணர்ச்சிவசப்பட்டு வேறு யாரையும் தூக்கிவைக்கவோ, பாராட்டவோ, போட்டு மிதிக்கவோகூட இல்லை என்று சொல்லலாம். பிரபாகரன் செய்த பிழைகளை தக்க ஆதாரங்களுடன் வரிசைப்படுத்தும் புஷ்பராஜா, அத்தனையையும் மீறி அவரது நல்ல குணங்களை, தலைமைத் தகுதிக்கான சிறப்பியல்புகளை, அவரது அற்பணிப்பு உணர்வை, இயக்கத்தைக் கட்டுக்கோப்புடன் நடத்திச் செல்லும் பாங்கைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. எல்.டி.டி.ஈ. இயக்கத்தை 'தமிழ் புதிய புலிகள்' என்கிற பெயரில் முதல்முதலில்
தோற்றுவித்தவரான செட்டி எனப்படும் தனபாலசிங்கத்தை ஓரிடத்தில் கூட ஒரு போராளியாக புஷ்பராஜா குறிப்பிட மறுக்கிறார். அவர் கருத்தில் செட்டி ஒரு கொள்ளைக்காரர். வங்கிகளைக் கொள்ளை யடித்து, இயக்கத்தின் பேரில் சம்பாதிக்க விரும்பியவர். அவருடன் சேர்ந்தே பிரபாகரன் தன் பயணத்தைத் தொடங்கினாலும் பிரபாகரனின் நோக்கம் கொள்ளையடிப்பதல்ல என்கிறார் புஷ்பராஜா. இந்த வரிகளைப் படியுங்கள்:
<b>"பிரபாகரன், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் மிகவும் ஆர்வம் கொண்டவராகவும், பணம் சம்பந்தப்பட்ட விடயங்களில் செட்டியைப் போல் அல்லாது மிகவும் நேர்மையானவராகவும், கடுமையான கட்டுப்பாடுகளில் நம்பிக்கை கொண்டவராகவும், அதே வேளையில் தனிமையை விரும்பும் அமைதி கொண்டவராகவும் இருந்தார். தனது நெருங்கிய சகாக்களுடன் கூடத் தேவைக்கு அதிகமாகப் பேசமாட்டார். நம்பவும் மாட்டார். தன்னைச் சுற்றியுள்ளவர்களில் எந்த நேரமும் கவனமான கண்ணோட்டமுள்ளவர் பிரபாகரன்..."</b>
மிகத்தேர்ந்த எழுத்தாளர்களுக்கு மட்டுமே இப்படி மிகச்சில வரிகளில் ஒரு நபரின் புகைப்படத்தையும் எக்ஸ்ரேவையும் ஒருங்கே காட்டமுடியும். ஆச்சர்யம், புஷ்பராஜா ஒரு எழுத்தாளர் அல்லர்! அநேகமாக இந்தப் புத்தகம்தான் அவரது முதல் புத்தகமாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்த நூல் முழுவதுமே இத்தகைய சிலவரி விவரணைகளில் நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ்ப் போராளிகள் பற்றியும் அரசியல் தலைவர்கள் பற்றியுமான பிம்பங்களை வெகு அநாயாசமாகத் தந்துகொண்டேபோகிறார் புஷ்பராஜா. சிறை அதிகாரிகள் பற்றி - குறிப்பாகத் தன்னை பெண்டுகழற்றிய பஸ்தியாம்பிள்ளை என்கிற ஒரு போலீஸ் ஆபீசர் பற்றி புஷ்பராஜா எழுதுகிற இடங்களெல்லாம் மிகவுமே ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு சிறுகதைக்கான இறுக்கமும் கட்டுக்கோப்பும் கொண்டதாக அவரது எழுத்து காணக்கிடைக்கிறது.
"நான் இங்கு குறித்துள்ள வரலாற்று நிகழ்வுகள் சரியானவை என்ற திடம் என்னிடம் உண்டு. ஆனால் நான் கூறியுள்ள கருத்துக்கள், எனது விமர்சனங்கள் இப்புத்தகத்தை வாசிப்பவர்களுக்குச் சரியாக இருக்கவேண்டும் என்ற கடப்பாடு இல்லை என எண்ணுகிறேன்" என்று முன்னுரையில் புஷ்பராஜா சொன்னாலும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.
உண்மைக்கும் சார்புநிலை எடுத்த கருத்துக்கும் இடைப்பட்ட வித்தியாசம், எழுத்தில் மிக எளிதாகத் தெரிந்துவிடும். பெரிய பிரயத்தனங்களே வேண்டாம். ஏனெனில் அரிதாரம் பூசிப்பூசி மெழுகினாலும் உண்மை அதன் முகத்தைப் பூச்சுக்கு வெளியேதான் எப்போதும் வைத்திருக்கும்.
தன் போராட்ட முயற்சிகளில் சந்தேகமில்லாமல் தோல்வி கண்டு, அந்தத் தோல்வியை முழுப்பிரக்ஞையுடன் ஏற்றுக்கொண்டு, உயிர்தப்பி வாழப்போன இடத்தில் ஆத்ம பரிசோதனை செய்துகொண்டே புஷ்பராஜா இந்நூலை எழுதியிருக்கிறார். எந்தச் சார்பும் எடுத்தாகவேண்டிய கட்டாயம் அவருக்கில்லை. யாரையும் குளிர்விக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரைச் சார்ந்த எல்லாருமே இப்போது கொல்லப்பட்டவர்கள். எஞ்சியிருக்கும் ஒரு சருகு மட்டுமே
அவர். தனது தாயகத்தின் சுதந்தரம் ஒன்றைத்தவிர வேறெதிலும் விருப்பமற்றவராகத்தான் அவர் இந்நூலெங்கும் தென்படுகிறார். அந்தச் சுதந்தரத்துக்கு இனி தான் செய்யக்கூடியது எதுவுமில்லை என்பதையும் நன்கு உணர்ந்துஇருக்கிறார். ஆகவே அறிக்கை அளிக்கும் தலைவராக அல்லாமல் தொகுத்து எழுதும் பத்திரிகையாளனாக
மட்டுமே செயல்பட்டிருப்பதை மிக எளிதாக வாசகர்கள் உணர்ந்து கொள்ள முடியும்.
எனக்கென்னவோ இந்நூல் ஒரு நம்பகமான சரித்திர ஆவணமாகத்தான் தோன்றுகிறது. ஈழத்தமிழ் நண்பர்கள் யாராவது
படித்துவிட்டு, கருத்தைப் பகிர்ந்துகொண்டால் எனக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கே உபயோகமானதொரு காரியமாக அமையும்.
(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் / ஆசிரியர்: சி. புஸ்பராஜா / 632 பக்கங்கள் / அடையாளம் வெளியீடு, 1204 - 05, இரண்டாவது தளம், கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, தமிழ்நாடு / விலை ரூ. 275 / இலங்கை விலை ரூ. 675.)
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
BBC...உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதாக நீங்கள் நினைப்பதே தவறு....உங்கள் கருத்துக்களின் மீதான எமது கருத்துக்களே இங்கு வைக்கப்படுகிறது....! உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் அளவிற்கு நீங்களோ அல்லது நாங்களோ பெரிய விற்பன்னர்கள் அல்லர்....!
உண்மையில் இப்புத்தக்கத்தை முழுவதுமாக வாசிக்காமல் அதுதொடர்பில் எவரும் விமர்சனத்துக்குக் கூட விமர்சனம் எழுத முடியாது...காரணம்...எழுத்தாளருக்கு சார்பாகவும் அல்லது எதிராகவும் அதேவேளை எழுதப்பட்ட விடயங்களுக்குச் சார்பாகவும் அல்லது எதிராகவும் அல்லது நடுநிலையோடும் அல்லது நடுநிலை என்று தோற்றமளிக்கும் வகையிலும் விமர்சனம் வைக்கப்படலாம்...அதில் வியாபார தந்திரமும் அடங்கும்....!
ஈழத்து போராட்ட வரலாற்றில் சாதாரண மக்களாகிய எம்மால் நியாயத்தைக் காணக் கேட்க முடியாத பல செய்திகள் இந்த நூலில் அடக்கப்பட்டுள்ளது...அவற்றை எல்லாம் எப்படி எழுத்தாளரும் விமர்சகரும் நடுநிலையோடுதான் தந்தனர் எனத் தீர்மானிப்பது.....???!
நிச்சயமாக ஒன்று தெரிகிறது...இந்த முன்னாள் போராளி ஒரு இலட்சியத்துடன் போராடத்தொடங்கி திசைமாறிச் சென்று இருக்கின்றார் என்பதே...அதை விடுத்து இதில் சொல்லப்பட்ட அனைத்தும் எடுத்த எடுப்பில் சரி என்றோ தவரென்றோ ஏற்கப்பட முடியாதவையே.....!
குறிப்பாக "சிங்களவர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டும் என்ன"...இப்படி சொல்லி தொடர்ந்து செல்லும் அந்தப் பந்தியில் எழுத்தாளரோ விமர்சகரோ சிங்கள இனவெறியர் என்ற பதத்தை கொலை வெறியர்கள் என்று கையாண்டிருத்தலே அவ்விடத்துக்குப் பொருந்தும்....சிங்கள இனவெறி என்பது படுகொலை செய்வது மட்டுமானதல்ல...ஒரு இனத்தின் இருப்பையே அதன் அடையாளங்களையே அழிக்க முனைவதாகும்...அதற்கும் சில சமயங்களில் சிங்கள கிராமமக்கள் (திட்டமிட்ட குடியேற்றவாசிகள்...ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் அடங்களாக) அல்லது சில குண்டு வெடிப்புக்களில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதற்கும் (சில இடங்களில் இலக்கை அடைய மக்களின் இழப்பைத் தவிர்க்க முடியாததால்) எவ்வளவோ வேறுபாடு உண்டு....! இதை எல்லாம் கருத்தில் எடுத்து ஆழமாகவா கருத்துக்கள் அந்நூலில் பகரப்பட்டுள்ளன....????!
ஒன்று தெரியுமா பொய்ப்பிரச்சாரங்களின் போதும் சில உண்மைகளைக் காட்டி பிரச்சாரம் செய்யப்படும் அதைக்காட்டியே தமது பிரச்சாரம் முழுவதுமே உண்மை என்று காட்டி மக்களை ஏமாற்றுவது....இதைக்கூட அந்த நூலின் ஊடும் செய்ய முனைந்திருக்கலாம்......????! அப்படி இல்லாமல் உண்மையில் தனது தவறுணர்ந்து சிலவற்றைச் சொல்ல விரும்பியாவது எழுத்தாளர் இந்நூலை எழுதி இருக்கலாம்...அல்லது தாம் அறிக்கைகளாகவிட்டலோ..அல்லது செய்திகளாகவிட்டலோ...மக்கள் தம் கருத்தைப் புறக்கணிப்பர் என்பதால் நூல் வடிவில் விட்டு ஒரு நடுநிலை விமர்சனம் போன்ற விமர்சனத்தை வைத்து தமது கருத்துக்குப் பரப்புரையும் செய்யலாம்....இதில் நடந்ததென்ன.....???!
நூலை முற்றாக வாசித்தால் தான் தெரியும்...அதுவும் எமக்கு அங்கு கையாளப்பட்ட விடயங்கள் சிலவற்றினாவது உண்மைகள் தெரிந்திருந்தால் மட்டுமே நூலாசிரியரின் நோக்கமும் தேவையும் புரிந்து கொள்ளப்பட முடியும்.....!
எனவே இது தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் அறிந்தவர்கள் போல் வைத்து வாசகர்களை ஏமாற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை...அல்லது மேலோட்டமாக பூசி மொழுகிய கருத்துகளை சிந்தவும் எமக்கு விருப்பமில்லை....! அதே வேளை உண்மையோ பொய்யோ ஒரு நூலை வெளியிட்டு தனது மனவோட்டங்களை வாசகர்களுக்கு காட்ட விரும்பிய ஒரு நூலாசிரியரை குறைத்து மதிப்பிடவும் விருப்பமில்லை.....!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
kuruvikal Wrote:குறிப்பாக "சிங்களவர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டும் என்ன"...இப்படி சொல்லி தொடர்ந்து செல்லும் அந்தப் பந்தியில் எழுத்தாளரோ விமர்சகரோ சிங்கள இனவெறியர் என்ற பதத்தை கொலை வெறியர்கள் என்று கையாண்டிருத்தலே அவ்விடத்துக்குப் பொருந்தும்....சிங்கள இனவெறி என்பது படுகொலை செய்வது மட்டுமானதல்ல...ஒரு இனத்தின் இருப்பையே அதன் அடையாளங்களையே அழிக்க முனைவதாகும்...அதற்கும் சில சமயங்களில் சிங்கள கிராமமக்கள் (திட்டமிட்ட குடியேற்றவாசிகள்...ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் அடங்களாக) அல்லது சில குண்டு வெடிப்புக்களில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதற்கும் (சில இடங்களில் இலக்கை அடைய மக்களின் இழப்பைத் தவிர்க்க முடியாததால்) எவ்வளவோ வேறுபாடு உண்டு....! இதை எல்லாம் கருத்தில் எடுத்து ஆழமாகவா கருத்துக்கள் அந்நூலில் பகரப்பட்டுள்ளன....????!
எனவே இது தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் அறிந்தவர்கள் போல் வைத்து வாசகர்களை ஏமாற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை...அல்லது மேலோட்டமாக பூசி மொழுகிய கருத்துகளை சிந்தவும் எமக்கு விருப்பமில்லை....! அதே வேளை உண்மையோ பொய்யோ ஒரு நூலை வெளியிட்டு தனது மனவோட்டங்களை வாசகர்களுக்கு காட்ட விரும்பிய ஒரு நூலாசிரியரை குறைத்து மதிப்பிடவும் விருப்பமில்லை.....! 83..84..85 காலப்பகுதியில் வவுனியா.. மதவாச்சி.. அனுராதபுரம் பகுதிகளில் நடந்வற்றை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.. அவற்றை சிங்கள ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டினால் நாடு எந்த நிலைக்குத் தள்ளப்படும்..?
சிங்களவர்கள் இனவாதப்போக்கை காட்டி கலகத்தை தூண்டி ஒரு இனத்தை அழிக்கவில்லை..
தாங்கள் செய்தவற்றை மறைத்து சிங்களவன் செயதவற்றை மட்டும் சொல்லி பிரச்சாரம்செய்து இனவாதத்தை தூண்டி ஒரு இனத்தையே அழித்துக்கொண்டிருக்கிறார்கள் நம்மவர்கள்..
உங்களது முதற்பந்தியில் குறிப்பிட்டபடி சிங்கள கொலை வெறியர்கள் என்பதில் சிங்கள என்பதை எடுத்து தமிழ் என மாற்றிப்பாருங்கள்.. மேலும் சிங்கள சொல்லுக்குப்பதில் தமிழ் என மாற்றி வாசித்துப்பாருங்கள். இவ்வளவுகாலமும் நடந்த அனார்த்தங்களக்கான சூத்திரதாரிகள் யாரென்று புரியும்..
எழுத சந்தர்ப்பந்தந்த குருவிகருக்கு நன்றி..
Truth 'll prevail
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தாத்தா கருத்தைச் திசை திருப்பாதீர்கள்...சிங்களவர்கள் சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழர்கள் ஆயுதம் தூக்க வேண்டி வரும்வரை செய்தவை தங்களுக்கு ஞாபகமில்லாமல் போனதற்கு நாம் என்ன செய்ய முடியும்...! ஆனால் ஒன்று சிங்களவர்கள் கொடும் இனவாதிகளாக உங்களைப் போன்ற தமிழர்கள் சிலரும் காரணம்...அது உண்மைதான்.....! இப்போதாவது நீங்களும் அதில் ஒருவர் என்று ஒத்துக் கொண்டீர்களே நன்றிகள்...!
:twisted: <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
Mathivathanan Wrote:kuruvikal Wrote:குறிப்பாக "சிங்களவர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டும் என்ன"...இப்படி சொல்லி தொடர்ந்து செல்லும் அந்தப் பந்தியில் எழுத்தாளரோ விமர்சகரோ சிங்கள இனவெறியர் என்ற பதத்தை கொலை வெறியர்கள் என்று கையாண்டிருத்தலே அவ்விடத்துக்குப் பொருந்தும்....சிங்கள இனவெறி என்பது படுகொலை செய்வது மட்டுமானதல்ல...ஒரு இனத்தின் இருப்பையே அதன் அடையாளங்களையே அழிக்க முனைவதாகும்...அதற்கும் சில சமயங்களில் சிங்கள கிராமமக்கள் (திட்டமிட்ட குடியேற்றவாசிகள்...ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் அடங்களாக) அல்லது சில குண்டு வெடிப்புக்களில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதற்கும் (சில இடங்களில் இலக்கை அடைய மக்களின் இழப்பைத் தவிர்க்க முடியாததால்) எவ்வளவோ வேறுபாடு உண்டு....! இதை எல்லாம் கருத்தில் எடுத்து ஆழமாகவா கருத்துக்கள் அந்நூலில் பகரப்பட்டுள்ளன....????!
எனவே இது தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் அறிந்தவர்கள் போல் வைத்து வாசகர்களை ஏமாற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை...அல்லது மேலோட்டமாக பூசி மொழுகிய கருத்துகளை சிந்தவும் எமக்கு விருப்பமில்லை....! அதே வேளை உண்மையோ பொய்யோ ஒரு நூலை வெளியிட்டு தனது மனவோட்டங்களை வாசகர்களுக்கு காட்ட விரும்பிய ஒரு நூலாசிரியரை குறைத்து மதிப்பிடவும் விருப்பமில்லை.....! 83..84..85 காலப்பகுதியில் வவுனியா.. மதவாச்சி.. அனுராதபுரம் பகுதிகளில் நடந்வற்றை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன்.. அவற்றை சிங்கள ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டினால் நாடு எந்த நிலைக்குத் தள்ளப்படும்..?
சிங்களவர்கள் இனவாதப்போக்கை காட்டி கலகத்தை தூண்டி ஒரு இனத்தை அழிக்கவில்லை..
<b><span style='font-size:30pt;line-height:100%'>நம்மவர்கள் தாங்கள் செய்தவற்றை மறைத்து சிங்களவர் முஸ்லீம்கள் செய்தவற்றை மட்டும் சொல்லி பிரச்சாரம்செய்து இனவாதத்தை தூண்டி ஒரு இனத்தையே அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.. </b></span>
உங்களது முதற்பந்தியில் குறிப்பிட்டபடி சிங்கள கொலை வெறியர்கள் என்பதில் சிங்கள என்பதை எடுத்து தமிழ் என மாற்றிப்பாருங்கள்.. மேலும் சிங்கள சொல்லுக்குப்பதில் தமிழ் என மாற்றி வாசித்துப்பாருங்கள். இவ்வளவுகாலமும் நடந்த அனர்த்தங்களக்கான சூத்திரதாரிகள் யாரென்று புரியும்..
எழுத சந்தர்ப்பந்தந்த குருவிகருக்கு நன்றி..
Truth 'll prevail
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
இது போதாது விட்டுட்டாங்கள். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Posts: 59
Threads: 2
Joined: Feb 2004
Reputation:
0
History is written by the winners.
~Alex Haley
காலம் காலமாக வென்றவர்களே வரலாற்றை எழுதிவருகிறார்கள்..
விழுந்தவனுக்கும் விழுத்தப்பட்டவனுக்கும் வாழ்வு இல்லாதது போல் வரலாறும் இல்லை.
இனி...
மூலத்தை வாசியாத நான் வார்த்தையாட முற்படுமுன்.......
இவ்வாறு பேசப்பட்ட புத்தகங்கள் எத்தனை தமிழில் வந்துள்ளன........
என் ஞாபகம் சரியாக இருந்தால்...
1. அருளரின் லங்கராணி 1977/78
2. கோவிந்தனின் புதியதோர் உலகம் 1984/85
3. யாழ் பல்கலைகழக ஆசிரியர்களின் முறிந்த பனை 1996/97
3. அடல் பாலசிங்கத்தின் விடுதலை வேட்கை 2001
4. ஷோபா சக்தியின் கொரில்லா 2002
5. பாலசிங்கத்தின் விடுதலை 2003
6 புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 2004
என விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களே.
நிச்சயமாக நான் ஒன்றை நம்புகின்றேன் போராட்ட வரலாற்றின் பன்முகத்தன்மையை அடுத்த சந்ததி (நாமும்) புரிந்துகொள்ள இன்னும் நூறு புத்தகங்கள் வெளிவரவேண்டும்...
Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.
~African Proverb
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
Posts: 3,148
Threads: 70
Joined: Aug 2003
Reputation:
0
thampu Wrote:History is written by the winners.
~Alex Haley
காலம் காலமாக வென்றவர்களே வரலாற்றை எழுதிவருகிறார்கள்..
விழுந்தவனுக்கும் விழுத்தப்பட்டவனுக்கும் வாழ்வு இல்லாதது போல் வரலாறும் இல்லை.
இனி...
மூலத்தை வாசியாத நான் வார்த்தையாட முற்படுமுன்.......
இவ்வாறு பேசப்பட்ட புத்தகங்கள் எத்தனை தமிழில் வந்துள்ளன........
என் ஞாபகம் சரியாக இருந்தால்...
1. அருளரின் லங்கராணி 1977/78
2. கோவிந்தனின் புதியதோர் உலகம் 1984/85
3. யாழ் பல்கலைகழக ஆசிரியர்களின் முறிந்த பனை 1996/97
3. அடல் பாலசிங்கத்தின் விடுதலை வேட்கை 2001
4. ஷோபா சக்தியின் கொரில்லா 2002
5. பாலசிங்கத்தின் விடுதலை 2003
6 புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 2004
என விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களே.
நிச்சயமாக நான் ஒன்றை நம்புகின்றேன் போராட்ட வரலாற்றின் பன்முகத்தன்மையை அடுத்த சந்ததி (நாமும்) புரிந்துகொள்ள இன்னும் நூறு புத்தகங்கள் வெளிவரவேண்டும்...
Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.
~African Proverb போராட்டப் புத்தகம் அங்கிருந்து எழுத முடியாதய்யா.. ****போடுவாங்கையா.. இந்தாள் தப்பித் தவறி எகையோ இருந்து எழுதி வெளியிட்டபடியால் தப்பித் தவறி வந்திருக்குது.. கொஞ்சக்காலத்திலை அதுகூட இருக்காது..
****தணிக்கை செய்யப்பட்டுள்ளது-இராவணன் .
Truth 'll prevail
Posts: 59
Threads: 2
Joined: Feb 2004
Reputation:
0
Mathivathanan Wrote:[quote=thampu]History is written by the winners.
~Alex Haley
காலம் காலமாக வென்றவர்களே வரலாற்றை எழுதிவருகிறார்கள்..
விழுந்தவனுக்கும் விழுத்தப்பட்டவனுக்கும் வாழ்வு இல்லாதது போல் வரலாறும் இல்லை.
இனி...
மூலத்தை வாசியாத நான் வார்த்தையாட முற்படுமுன்.......
இவ்வாறு பேசப்பட்ட புத்தகங்கள் எத்தனை தமிழில் வந்துள்ளன........
என் ஞாபகம் சரியாக இருந்தால்...
1. அருளரின் லங்கராணி 1977/78
2. கோவிந்தனின் புதியதோர் உலகம் 1984/85
3. யாழ் பல்கலைகழக ஆசிரியர்களின் முறிந்த பனை 1996/97
3. அடல் பாலசிங்கத்தின் விடுதலை வேட்கை 2001
4. ஷோபா சக்தியின் கொரில்லா 2002
5. பாலசிங்கத்தின் விடுதலை 2003
6 புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 2004
என விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களே.
நிச்சயமாக நான் ஒன்றை நம்புகின்றேன் போராட்ட வரலாற்றின் பன்முகத்தன்மையை அடுத்த சந்ததி (நாமும்) புரிந்துகொள்ள இன்னும் நூறு புத்தகங்கள் வெளிவரவேண்டும்...
Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.
~African Proverb போராட்டப் புத்தகம் அங்கிருந்து எழுத முடியாதய்யா.. **** இந்தாள் தப்பித் தவறி எகையோ இருந்து எழுதி வெளியிட்டபடியால் தப்பித் தவறி வந்திருக்குது.. கொஞ்சக்காலத்திலை அதுகூட இருக்காது..
****தணிக்கை செய்யப்பட்டுள்ளது-இராவணன் .[/quote
யதார்த்தத்தில் பூடகமாக வாழப்பழகிக்கொண்ட நல்லவர்கள் நிறைய வாழும் புண்ணிய தேசம்.....................
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
thampu Wrote:Mathivathanan Wrote:[quote=thampu]History is written by the winners.
~Alex Haley
காலம் காலமாக வென்றவர்களே வரலாற்றை எழுதிவருகிறார்கள்..
விழுந்தவனுக்கும் விழுத்தப்பட்டவனுக்கும் வாழ்வு இல்லாதது போல் வரலாறும் இல்லை.
இனி...
மூலத்தை வாசியாத நான் வார்த்தையாட முற்படுமுன்.......
இவ்வாறு பேசப்பட்ட புத்தகங்கள் எத்தனை தமிழில் வந்துள்ளன........
என் ஞாபகம் சரியாக இருந்தால்...
1. அருளரின் லங்கராணி 1977/78
2. கோவிந்தனின் புதியதோர் உலகம் 1984/85
3. யாழ் பல்கலைகழக ஆசிரியர்களின் முறிந்த பனை 1996/97
3. அடல் பாலசிங்கத்தின் விடுதலை வேட்கை 2001
4. ஷோபா சக்தியின் கொரில்லா 2002
5. பாலசிங்கத்தின் விடுதலை 2003
6 புஸ்பராஜாவின் ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் 2004
என விரல் விட்டு எண்ணக்கூடிய புத்தகங்களே.
நிச்சயமாக நான் ஒன்றை நம்புகின்றேன் போராட்ட வரலாற்றின் பன்முகத்தன்மையை அடுத்த சந்ததி (நாமும்) புரிந்துகொள்ள இன்னும் நூறு புத்தகங்கள் வெளிவரவேண்டும்...
Until lions have their historians, tales of the hunt shall always glorify the hunters.
~African Proverb போராட்டப் புத்தகம் அங்கிருந்து எழுத முடியாதய்யா.. **** இந்தாள் தப்பித் தவறி எகையோ இருந்து எழுதி வெளியிட்டபடியால் தப்பித் தவறி வந்திருக்குது.. கொஞ்சக்காலத்திலை அதுகூட இருக்காது..

****தணிக்கை செய்யப்பட்டுள்ளது-இராவணன் .[/quote
யதார்த்தத்தில் பூடகமாக வாழப்பழகிக்கொண்ட நல்லவர்கள் நிறைய வாழும் புண்ணிய தேசம்.....................
நன்றி தம்பு சரியானதொரு புத்தகப்பட்டியலைத் தந்துள்ளீர்கள்.
சோபா சக்தியின் கொரில்லாப்புத்தகம் இன்னும் எனது கையில் கிட்டவில்லை.
அருளரின் லங்காராணி அற்புதமான ஒரு வரலாற்று நாவல்.யார் இந்த அருளர்(ஈரோஸ்?) என்பது கூட எனக்குத் தெரியாது.எனினும் அந்த இனக்கலவர காலம் பதிவு செய்யப்பட்டுள்ளது இஅதே போல் செங்கைஆழியானால் 24 மணி நேரம் என
மற்றைய கலவர நாட்களும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(இந்த லங்கா ராணி புத்தகத்தை இந்தியாவிலிருந்து ஒரு நண்பரிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கிவந்து
இங்கு ஒரு நண்பரிடம் இரவல்கொடுத்து
அது காணாமல் போன பட்டியலில் இடம்பெற்றுவிட்ட சோகக் கதையும் ஒன்று என்னிடமுள்ளது)
அதேபோல் முறிந்தபனைகள் புத்தகமும் வாசித்துள்ளேன் .இந்திய இராணுவ அட்டகாசங்களைப்பற்றியும் குறிப்பாக யாழ் மருத்துவமனையில் இந்தியப்படைகள் நடந்தவிதம் பற்றி மக்கள் வாயால் எழுதப்பட்டுள்ளது.முடிந்தால் படித்துப்பாருங்கள்
வி.புலிகள் பற்றியும் அதில் உண்டு.நல்லவையும் உண்டு இடறல்களும் உண்டு.எனக்கு அவை எந்தவித கருத்து மாற்றங்களையும் ஏற்படுத்தவில்லை.
விடுதலை வேட்கை இன்னமும் முழுதாகப் படிக்க கிடைக்கவில்லை.ஒரு சில அத்தியாயங்கள் தமிழ்ப்பத்திரிகை வாயிலாகப்படித்தேன்.தயக்கமின்றி சில செய்திகளை எழுதியிருந்தார் .கட்டாயம் படிக்கவேண்டும்.புத்தக வசதி கிடைத்தால் முழுமையாகபஇ படித்துவிட்டு எழுதுகிறேன்.யாராவது படித்திருந்தால் எழுதுங்கள்.
மிüகுந்த தாக்கத்தையும் வலியையும் ஏற்படுத்தியபுத்தகம் இந்த ்பளொட்டிலிருந்து விலகிய
மற்றைய குழு எழுதிய புதியதோர் உலகம்.புத்தகம் நகல் எடுக்கப்பட்டு ஒற்றைகளாகவே நான் படிக்கக்கூடியதாகவிருந்தது.இன்னமும் மறக்கமுடியாத
சித்திரவதை நினைவுகளை மீட்டும் புத்தகம் இது..
பிறகு இவர்கள் எப்படி மாறினார்கள் என்பது
அடுத்த வரலாறு!
Posts: 59
Threads: 2
Joined: Feb 2004
Reputation:
0
புஸ்பராஜவின் புத்தகம் தவிர மற்றைய புத்தகங்களை பல்வேறு தேவைகளுக்காக வாசித்த வாசகனில் ஒருவனாக சில கருத்துகளை இங்கு பகிர்ந்துகொள்ளலாம்...............
இந்த ஐந்து படைபுகளும் தனித்தனியே ஒன்றுடன் ஒன்று முரண்பட்டும் ஒன்றை ஒன்று விளக்க முற்படுவதாகவும் இருப்பது தேச விடுதலை என அழைக்கப்படும் ஈழ போராட்டத்தின் அக நிலை யதார்த்தம்.
60களில் தமிழில் சிறுகதை உலுப்பிவிட்ட ஜெயகாந்தனின் அக்கினிப் பரீட்ஷை போல், 80களில் தமிழ் நவீனத்திற்கு புது வடிவம் தந்த சுந்தர ராமசாமியின் ஜெ ஜெ சில குறிப்புகள் போல் ஷோபா சக்தியின் கொரில்லா ஈழ போராட்டத்தினை ஒரு எக்ஸ்ரே கண்கொண்டு பார்ப்பதாகவே எனக்குப்படுகின்றது. கந்தபுராண கலாச்சாரம் தன்னது எனும் யாழ்பாண சமூகத்தின் ஒரு குறுக்கு வெட்டு முகத்தை கொரில்லா அழகியல் குன்றாமல் ஒரு விஞ்ஞான பரிசோதனை செய்கின்றது.
களத்திலிருந்து புலத்திற்கு நீளும் கதைப்புலம் எமது மண்டைக்கபாளத்துக்குள் ஆயிரம் வாட் மின்சார விளக்கொன்றை பீச்சி அடிக்கின்றது. இந்த நாவல் எமது சமூகம் பற்றி விமர்சனம் மட்டுமல்ல சுயவிமர்சனமும் கூட.
இன்னொரு இரவில் தொடர்ந்து மற்றவை பற்றியும் சிலாகிப்பேன்....................
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
kuruvikal Wrote:BBC...உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதாக நீங்கள் நினைப்பதே தவறு....உங்கள் கருத்துக்களின் மீதான எமது கருத்துக்களே இங்கு வைக்கப்படுகிறது....! உங்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் அளவிற்கு நீங்களோ அல்லது நாங்களோ பெரிய விற்பன்னர்கள் அல்லர்....!
உண்மையில் இப்புத்தக்கத்தை முழுவதுமாக வாசிக்காமல் அதுதொடர்பில் எவரும் விமர்சனத்துக்குக் கூட விமர்சனம் எழுத முடியாது...காரணம்...எழுத்தாளருக்கு சார்பாகவும் அல்லது எதிராகவும் அதேவேளை எழுதப்பட்ட விடயங்களுக்குச் சார்பாகவும் அல்லது எதிராகவும் அல்லது நடுநிலையோடும் அல்லது நடுநிலை என்று தோற்றமளிக்கும் வகையிலும் விமர்சனம் வைக்கப்படலாம்...அதில் வியாபார தந்திரமும் அடங்கும்....!
ஈழத்து போராட்ட வரலாற்றில் சாதாரண மக்களாகிய எம்மால் நியாயத்தைக் காணக் கேட்க முடியாத பல செய்திகள் இந்த நூலில் அடக்கப்பட்டுள்ளது...அவற்றை எல்லாம் எப்படி எழுத்தாளரும் விமர்சகரும் நடுநிலையோடுதான் தந்தனர் எனத் தீர்மானிப்பது.....???!
நிச்சயமாக ஒன்று தெரிகிறது...இந்த முன்னாள் போராளி ஒரு இலட்சியத்துடன் போராடத்தொடங்கி திசைமாறிச் சென்று இருக்கின்றார் என்பதே...அதை விடுத்து இதில் சொல்லப்பட்ட அனைத்தும் எடுத்த எடுப்பில் சரி என்றோ தவரென்றோ ஏற்கப்பட முடியாதவையே.....!
குறிப்பாக "சிங்களவர்களை இனவெறியர்கள் என்று சொல்லும் எம்மவர்கள் மட்டும் என்ன"...இப்படி சொல்லி தொடர்ந்து செல்லும் அந்தப் பந்தியில் எழுத்தாளரோ விமர்சகரோ சிங்கள இனவெறியர் என்ற பதத்தை கொலை வெறியர்கள் என்று கையாண்டிருத்தலே அவ்விடத்துக்குப் பொருந்தும்....சிங்கள இனவெறி என்பது படுகொலை செய்வது மட்டுமானதல்ல...ஒரு இனத்தின் இருப்பையே அதன் அடையாளங்களையே அழிக்க முனைவதாகும்...அதற்கும் சில சமயங்களில் சிங்கள கிராமமக்கள் (திட்டமிட்ட குடியேற்றவாசிகள்...ஊர்காவல் படையினரின் குடும்பங்கள் அடங்களாக) அல்லது சில குண்டு வெடிப்புக்களில் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதற்கும் (சில இடங்களில் இலக்கை அடைய மக்களின் இழப்பைத் தவிர்க்க முடியாததால்) எவ்வளவோ வேறுபாடு உண்டு....! இதை எல்லாம் கருத்தில் எடுத்து ஆழமாகவா கருத்துக்கள் அந்நூலில் பகரப்பட்டுள்ளன....????!
ஒன்று தெரியுமா பொய்ப்பிரச்சாரங்களின் போதும் சில உண்மைகளைக் காட்டி பிரச்சாரம் செய்யப்படும் அதைக்காட்டியே தமது பிரச்சாரம் முழுவதுமே உண்மை என்று காட்டி மக்களை ஏமாற்றுவது....இதைக்கூட அந்த நூலின் ஊடும் செய்ய முனைந்திருக்கலாம்......????! அப்படி இல்லாமல் உண்மையில் தனது தவறுணர்ந்து சிலவற்றைச் சொல்ல விரும்பியாவது எழுத்தாளர் இந்நூலை எழுதி இருக்கலாம்...அல்லது தாம் அறிக்கைகளாகவிட்டலோ..அல்லது செய்திகளாகவிட்டலோ...மக்கள் தம் கருத்தைப் புறக்கணிப்பர் என்பதால் நூல் வடிவில் விட்டு ஒரு நடுநிலை விமர்சனம் போன்ற விமர்சனத்தை வைத்து தமது கருத்துக்குப் பரப்புரையும் செய்யலாம்....இதில் நடந்ததென்ன.....???!
நூலை முற்றாக வாசித்தால் தான் தெரியும்...அதுவும் எமக்கு அங்கு கையாளப்பட்ட விடயங்கள் சிலவற்றினாவது உண்மைகள் தெரிந்திருந்தால் மட்டுமே நூலாசிரியரின் நோக்கமும் தேவையும் புரிந்து கொள்ளப்பட முடியும்.....!
எனவே இது தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் அறிந்தவர்கள் போல் வைத்து வாசகர்களை ஏமாற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை...அல்லது மேலோட்டமாக பூசி மொழுகிய கருத்துகளை சிந்தவும் எமக்கு விருப்பமில்லை....! அதே வேளை உண்மையோ பொய்யோ ஒரு நூலை வெளியிட்டு தனது மனவோட்டங்களை வாசகர்களுக்கு காட்ட விரும்பிய ஒரு நூலாசிரியரை குறைத்து மதிப்பிடவும் விருப்பமில்லை.....!
:twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி, சரி இந்த புத்தகத்தை விட்டிருங்க. அந்த விமர்சனத்துல நிறைய நியாயமான கேள்விகள் இருக்கு. அதுக்கு உங்க பதிலை சொல்லுங்க.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=kuruvikal][b]எனவே இது தொடர்பில் தேவையற்ற விமர்சனங்களை எல்லாம் அறிந்தவர்கள் போல் வைத்து வாசகர்களை ஏமாற்ற நாம் ஒரு போதும் தயாரில்லை...அல்லது மேலோட்டமாக பூசி மொழுகிய கருத்துகளை சிந்தவும் எமக்கு விருப்பமில்லை....! அதே வேளை உண்மையோ பொய்யோ ஒரு நூலை வெளியிட்டு தனது மனவோட்டங்களை வாசகர்களுக்கு காட்ட விரும்பிய ஒரு நூலாசிரியரை குறைத்து மதிப்பிடவும் விருப்பமில்லை.....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 574
Threads: 6
Joined: Feb 2004
Reputation:
0
பிபிஸி களப்பொறுப்பாளரின் பார்வைக்குப்பின் அனுமதியளித்தால் உங்கள் ஆக்கம் இங்கே போடப்படும்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
இராவணன் Wrote:பிபிஸி களப்பொறுப்பாளரின் பார்வைக்குப்பின் அனுமதியளித்தால் உங்கள் ஆக்கம் இங்கே போடப்படும்.
விளக்கத்துக்கு நன்றி இராவணன்.
சீக்கிரம் அந்த கேள்விகளை போடுவீங்கன்னு நம்புறேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 31
Threads: 1
Joined: Apr 2003
Reputation:
0
தற்போது வெளிவரும் அரசியற்கட்டுரைகளையோ அல்லது நூல்களையோ நான் படிப்பதில்லை.நான் கண்ணால்கண்டவிடயங்கள் பலவற்றையே மாற்றி எழுதியுள்ளனர். மற்றையவிடயங்கள் எப்படி உண்மையாக இருக்கமுடியும். அதுமட்டுமல்லாது ஒருவருக்கொருவர் முரணானவரலாற்றை வேறு எழுகிறார்கள்.
இங்குள்ள வாசிகசாலைக்கு போனால் இலங்கைவரலாறு பற்றி ஆயிரம் நூல்களை எடுக்கலாம். ஆனால் சிலகாலங்களுக்குமுன் நடந்த வரலாற்றை தமிழர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி எழுதியது போல் இங்குள்ள நூல்களில் காணமுடியவில்லை.
காலணித்துவத்திற்குள் இலங்கை எப்படி வந்தது என்பதிலிருந்து அந்தவேளையில் யார் யார் கவர்ணர்களாக இருந்தாரகள். அப்போது இருந்த சமுகம் எப்படி இருந்தது. அரசர்கள் சண்டைகள் பற்றி அனைத்தையும் அறியலாம்.
புஸ்பராசனின் நூலுக்குரிய விமர்சனத்தை பாத்தா ஒரு சில தவறுகளை தவிர மிச்சம் நல்லா இருக்கும் போல இருக்கு. நேர்மையா இரண்டு பக்கத்து தவறுகளையும் நல்ல விசயங்களையும் சொல்லி இருக்கார் போல இருக்குது. படித்துபார்த்தால் தான் மிகுதிவிடயம் புரியும்.
Posts: 59
Threads: 2
Joined: Feb 2004
Reputation:
0
தொடர்ந்து பாலசிங்கத்தின் விடுதலை பற்றி..............
மாக்ஸ்சின் மூலவர்களான ஜேமனிய தத்துவ மேதை கெகல் பற்றியெல்லாம் நிறைய பேசும் பாலா பயபாக்கை ஏன் தவறவிட்டார் என்று தெரியவில்லை?..
அரிஸ்ரோட்டிலில் இருந்து நோம் சோம்ஸ்கி வரை சிலாகிக்கும் விடுதலையில் பாலாவின் அரசியல் பார்வை தான் தேர்ந்தெடுத்த அரசியல் பாதையுடன் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் போவது எமக்கு ஒன்றும் ஆச்சரியத்தை தரவில்லை. பாலாவின் தத்துவ தேடல் மிக நீண்டது.
விடுதலையின் முதல் அத்தியாயம் வாசகர்களின் அனைத்து மட்டத்துக்கும் எழுதியதுபோல் தொடரும் அத்தியாயங்கல் இல்லை. எம்ஜியாருடன் புலிகளுக்கு இருந்த உறவு, எம்ஜியாரின் உலக அறிவு, எப்படி எல்லாம் இந்திய அரசியலை நாம் பாவித்தோம் என்றெல்லாம் விபரித்தெழுதிச் செல்லும் பாலா எம்ஜியாரின் மரணத்துக்கு பிறகு ராஜீவ் காந்தி வரை செல்லாது அந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்கிறார்.
தொடர்த்து வரும் அத்தியாயங்களில் தனது வாசிப்பின் ஆழ அகலத்தை வாசகனுக்கு தெரியப்படுத்தும் மொழி நடை நினைவு கோரப்படவேண்டிய ஒன்று.
பொத்தம் பொதுவாக இன்னென்ன காலகட்டத்தில் இன்னென்னார் என்னென்ன சொன்னார்கள் என்ற விளக்க உரையுடன் அந்த புத்தகம் முடிவுக்கு வருவது ஆசிரியரின் எதிர்பார்ப்பு யுத்த முனையில் நேர்விரோதமாய் இருப்பது போல வாசகர்களையும் தொற்றிக்கொள்கிறது.
மீண்டும் தொடர்வேன்...........அனுமதித்தால்........
<b>I would never die for my beliefs because I might be wrong</b>
- Bertrand Russell
|