Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
உது உதைத்தான் நானும் எதிர்பாத்தன்
நாங்கள் ஜிங் சக் போடுறம் எண்ட திருவாயாளை நீங்கள் என்ன போடுறியள் எண்டு சொல்லுங்கோ பாப்பம்
நாங்கள் ஜிங் சக் எண்டால் நீங்கள் அதை அப்பிடியே மாத்தி சக் ஜிங் அவ்வளவுதான் என்ன வித்தியாசமும் இல்லை நாங்கள் பிறபாட்டு எண்டால் நீங்கள் எதிர்ப்பாட்டு நாங்கள் தஞ்சாவூர்ப் பொம்மை மாதிரி தலையாட்டுறம் எண்டால் நீங்கள் நாங்கள் ஆட்டுரதுக்கு எதிர்வளமாய் ஆட்டிக் கொண்டிருக்கிறியள்
உது தான் யதார்த்தம் எண்டால் ஆட்டுங்கோ தாளம் என்ன மத்தளமே அடியுங்கோ கடைசியிலை நீங்கள் சொல்லுரதை நீங்கள் மட்டுமே நம்பிக்கொண்டிருப்பியள்
எங்கடை ஆச்சி அப்பு மட்டுமல்ல நான்கூட வல்லைக்குள்ளாலை தனிச்சவழி போய்வாறனான் முனி கினி அடிக்கேலை அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லம் பேய் எண்ட மாதிரி அரண்டுபோயிருக்கிறியள் எதிர்படுறதெல்லாம் முனி மாதிரித் தான் இருக்கும் எதுக்கும் உந்த தாடிச்சாமியளிட்டை மந்திரிக்கிறதை விட்டிட்டு நடக்கிர அலுவல்களைப் பாருங்கோ
நான் வரேக்கை சொன்னதை காட்டுறியள் நீங்கள் சொன்னதை நினைச்சுப் பாருங்கோ வலியக் கொழுவி கந்தருக்கு உண்மையை சொன்னா கோவம் வருது
வல்ல முனி உந்த யாதார்த வேசதாரியளைக் கேட்குது தர்றியளோ யதார்த்தம் எண்டால் உங்கடை அப்பு ஆச்சி சொன்னதுதானெண்டு நினைச்சியளெண்டால் அதையும் கேட்கும்
Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
மாற்றுக் கருத்து பற்றி அன்மைக்காலங்களில் அடிக்கடி இங்கு பேசப்படுகின்றது. மாற்றுக்கருத்து என்று நாங்கள் சொல்வதன் அர்த்தம்தான் என்ன. மாற்றுக் கருத்து என்பது ஒரே நோக்கத்திற்காக உழைப்பவர்கள் ஓரே நலனில் அக்கறையுள்ளவர்கள் தங்கள் ஒரேஇலட்சியத்தை அடைவதற்காக சுயநலத்தை விடுத்து பொது நலனுக்காக ஒரே குறிக்கோளை வைத்து நகரும்பாதைகள் தொடர்பான வேறுபட்ட மாற்று நிலைப்பாட்டைக் கருத்தியலை கொண்டிருந்தலே மாற்றுக் கருத்தாகும். மனிதவாழ்வின் முன்னேற்றத்திற்கு கம்யுூனிசமா அல்லது முதலாளியமா சிறந்தது என்று வாதிட்டால் அதற்குப்பெயர் மாற்றுக்கருத்து. இரண்டும் வளமான வாழ்விற்கு வழி யாது என்பது பற்றிய கற்கை. அதற்குப் பதிலாக கம்யுூனிசமா அல்லது நாசிசமா சிறந்தது என்று யாரும் வாதிட்டால் அதனை நாங்கள் யாரும் மனிதவாழ்வின் மகோன்மத்தின் மாற்றுக் கருத்தாக வாதிடுவதுண்டா?
வெள்ளைக்காரர்கள் மாற்றுக்கருத்துப் ( PLURALISM) பற்றி அடிக்கடி புலம்புவதுண்டு அதனை தங்கள் ஊடகங்களில் அடிக்கடி பிரதிபலிக்கச் செய்து அதுபற்றியதான ஒருபோலியான தோற்றப்பாட்டை ஒருசிலரிடையே ஏற்படுத்துவதில் வெற்றியும் கண்டுள்ளனர் என்பது வேதனையான உண்மை. அவர்களின் இந்த மாற்றுக்கருத்துக்கான இடமென்பது பிடல்காஸ்ரோவின் கியுூபாவிலும் மாவோவின் சீனாவிலும்தான் அவர்கள் முசாரப்பின் பாகிஸ்தானிலோ அல்லது பினோட்சேயின் சிலியிலோ இதுபற்றி;சிறிதும் கவலைப்பட்டது கிடையாது. அவர்களைப்பொறுத்தவரை தங்களது ஏமாற்று வித்தைகளை அவர்களுக்கு சார்பற்ற இடங்களில் புகுத்துவதற்கான ஒரு ஊடகமே இந்த மாற்றுக்கருத்து சனனாயகம். இதுபற்றி நாங்கள் கேள்வி கேட்டு எம்மிடையே தெளிமையை ஏற்படுத்த தயாரில்லை. மாறாக கஞ்சிக்கும் கால்துணித்துண்டுக்கும் வழியில்லாது இருக்கும் குடியானவனைப்பார்த்து அகிலம் அண்டப்பெருவெடிப்பால் உருவானதா அல்லது ஆழிப்பெருங்கடல் ஊழிக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடிஒழிந்து கொண்டதால் உருவானதா என நீ கேள்விகேட்டுப்பார்த்ததுண்டா என அர்த்தமற்ற கேள்விகளை கேள்விகேட்கிறேன் என்பதற்காக கேட்டு குழப்புவது எந்தவிதத்திலும் யாருக்கும் நன்மையைத் தரப்போவதில்லை. நீ கேட்கும் கேள்வி என்பது இடம் காலம் பொருள் அறிந்து அதன்தெளிவுடன் எழுப்பப்படவேண்டிய வினா. அந்தக்கேள்வியின் பயனால் பெறும் விடை நன்மையை விட தீமையையே அதிக விளைவாக தருமாயிருந்தால் அந்தக் கேள்வியை கேட்காது இருப்பதனாலேயே நீ சமூகத்திற்கு நன்மைசெய்தவனாகின்றாய்.