Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
களம் பற்றிய கருத்துக்கள்
#21
நன்றி பொழில்

phozhil Wrote:அ. அஞ்சல்ப்பெட்டி- புணர்ச்சி பிழைதட்டிய இச்சொல்லை அஞ்சற்பெட்டி என்றோ அஞ்சல் பெட்டி என்றோ மாற்ற வேண்டும் என்பது என் அவா.
தவறைச்சுட்டியதற்கு நன்றி திருத்தவேண்டிய சொற்களுக்குள் இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.
phozhil Wrote:ஆ. register என்பதின் தமிழ்ப்பதம் அறியாதவர் யாழில் கால் பதித்தல் சிறப்பா?
சிறப்பில்லை எனில் நானும் இங்கு வரமுடியாது.
இங்கு இருப்பவர்கள் பலர் தமிழையே சரியாக எழுத தெரியாதவர்கள் தான். நீங்கள் தமிழ் நாட்டில் இருப்பதால் அந்நிலை இல்லாமல் இருக்கலாம்.
phozhil Wrote:இ. ஸ்தானம்-தமிழெழுத்தல்லாத ஒன்றை பெற்ற இப்பதம் தித்திக்கும் தமிழ் மீது துவளாத பற்று கொண்ட மனங்களை வருடுமா (அ) நெருடுமா?.
இதற்காான பதிலை ஏற்கனவே தந்துள்ளேன்.
(தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank ) இந்த சொல்லில் ஒன்றை சேர்த்துக்கொள்வதாக
phozhil Wrote:ஈ. சுயகுறிப்புக்கள்-இச்சொல்லையும் பரிசீலனைச் செய்க.
என்ன தவறு என்று குறிப்பிடாமல் பரிசீலனை செய்யச்சொன்னால்.???



மாற்றப்படும் சொற்கள்.

வியாக்கியானம்->கருத்துரை=comment
ஸ்தானம்->தரநிலை,படிநிலை,மதிப்பிடம்=rank
அஞ்சல்ப்பெட்டி->அஞ்சற்பெட்டி
இணைப்பில் -> பார்வையாளர்
Reply
#22
கருத்துரை என்பதை கருத்துக்கள் என்று சொல்லலாமா இளங்கோ

தரநிலை படிநிலை மதிப்பிடம் இது அதிகமான சொல்லாக இருக்கின்றது. இதைவிட வரிசை என்று சுருக்கநிலையில் கூறலாம். வரிசை என்பதன் அர்த்தம் மாறலாம். ஆனாலும் Rank என்பதற்கு வரிசை என்பதே சிறந்தது என்று நினைக்கின்றேன்.
[b] ?
Reply
#23
Recent Topics என்பதனையும் மாற்றம் செய்யலாம்.
சமீபவிடயங்கள் என்பது சற்று நெருடலாக இருக்கின்றது.
[b] ?
Reply
#24
வணக்கம் இளங்கோ,

முதலில் யாழ் களத்தை முற்றாக தமிழில் மாற்றும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். மற்றும் ஆங்கில சொற்களை நீங்கள் செய்கையின் அடிப்படையில் மொழி பெயர்க்கும்போது பலரும் பலவிதமான கருத்துக்களை வெளியிடுவதை கவனித்தேன். அவை உங்களுக்கு சிரமமாக இருக்கலாம். அதனால் நீங்கள் மொழி பெயர்க்கும் அனைத்து ஆங்கில சொற்களையும் உங்களுடைய தமிழாக்கத்துடன் இங்கே வரிசைப்படுத்தி போட்டீர்கள் என்றால் அவற்றுக்கு யாழ் கள நண்பர்கள் தங்களுடைய கருத்துக்களை எழுதுவார்கள். அவற்றிலிருந்து இறுதியாக பொருத்தமான மொழிபெயர்ப்பு சொற்களை தேர்ந்தெடுக்கலாம். நீங்களும் அடிக்கடி சொற்களை மாற்றவேண்டியது இல்லை. இது எனது தனிப்பட்ட கருத்து.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#25
Welcome to யாழ் இணையம் என்பதில் Welcome to மாற்றி தமிழில் போடலாமே !

யாழ் இணையத்திற்குள் அழைக்கின்றோம்
அல்லது

யாழ் இணையத்திற்குள் உங்களை வரவேற்கின்றோம்.
[b] ?
Reply
#26
இந்த welcome to என்பது ஒரு பிரச்சினையான சொல்
இதைப்போல் பல சொற்கள் இங்குள்ளது

இவை எல்லாம் தனிச்சொற்கள் இந்த தனிச்சொற்கள் சேர்ந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வசனம் அமைக்கின்றன. ஆனால் இவை ஆங்கில இலக்கணமுறையில் வசனம் அமைக்கின்றன.

நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் கூட, நான் யாழ் இணையம் என்று எந்தச்சந்தர்ப்பதிலும் எழுதவில்லை. இந்த forum ஐ நிறுவும் போது இந்த forum இன் பெயரைக்குறிப்பிடவேண்டும். அந்த சொல்லையே இங்கு weடcome to க்கு பின் இணைக்கின்றது.
அதே போல் welcome to க்கு பின் வேறு சொல்லும் சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப வரலாம் எனவே இரண்டு சொல்லுக்கும் பொருந்துவது போல் மொழிபெயர்க்க வேண்டும்.

உதாரணமாக இன்னொரு சொல்

search என்ற ஆங்கிலச்சொல் வினைச்சொல்லாகவும் வரும் பெயர்ச்சொல்லாகவும் வரும். எனவே குறிப்பிட்ட இந்தச்சொல்லையே இரண்டு சந்தர்ப்பத்திலும் பயன்படுத்தும்
ஆனால்
தமிழில் பெயர்ச்சொல்லாக தேடி என்றும்
வினைச்சொல்லாக தேடுக என்றும் வரும். எனவே இப்படியான சந்தர்பங்களில் புதிய கட்டளைகளை எமக்கேற்றவாறு நாம் தான் ஆக்க வேண்டும். இது நேரத்தை தின்னும் வேலை என்பதால் எனது forum இல் template இல் அதற்கான மாற்றத்தை செய்துள்ளேன்.

இதனால்த்தான் உடனேயே ஒரேயடியாக எல்லாச்சொற்களையும் மொழி பெயர்க்கமுடியவில்லை.

நான் மொழிபெயர்த்த சொற்கள் அனைத்தும் இப்படி சோதித்து பார்ர்த்துதான் எழுதினேன். ஆனாலும் சில இடங்களில் பொருந்தாமலும் இருக்கலாம்.

அதனால்த்தான் உங்களிடம் தவறுகளை சுட்டிக்காட்டும் படி கேட்டிருந்தேன். தொடர்ந்தும் தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.
நன்றி
Reply
#27
நன்றாக செய்திருக்கிறீர்கள்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#28
<b>யாழ் இணையம் அழகு தமிழில் மிகசிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
வாழ்த்துக்கள் பல...</b>

board language என்று ஆங்கிலத்தில் பார்க்கும்போது இடையுரு இல்லாமல் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால் board language தமிழில் பார்க்கும் போது சற்று வலது பக்கம் இழுத்து பார்க்க வேண்டியதாக இருக்கன்றது.

இதை மாற்ற முடியாதா...?

அல்லது எனது கணனியில் தான் இந்நிலையா...?
Reply
#29
தமிழ் எழுத்துக்கள் அதிக இடத்தை பிடிப்பதால் இப்படி நேரிடலாம் என்று நினைக்கிறேன்.

இதற்கு யாழ்களம் template இல் மாற்றம் செய்யலாம். ஆனால் அது வேறு தவறுகளைக்கொண்டு வரலாம்.

அதே போல் நீங்கள் உங்கள் கணணியிலும் சில மாற்றங்களை செய்யலாம்.
*சிறிய எழுத்தை தெரிவு செய்யலாம். அல்லது
*monitor இன் pixel ஐ கூட்டலாம்.
நீங்கள் கூறியதை சரியாக நான் விளங்கிக்கொண்டுள்ளேன் என்றால் நான் கூறுவது பயன் தரலாம்.
Reply
#30
நான் கூறியதை நீங்கள் சரியாகவே விளங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.
மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்க வேண்டுமா என்ன...!

தங்கள் விளக்கங்களுக்கும நன்றிகள்...
Reply
#31
யாழ் கருத்துக்களத்துக்கு LOGIN செய்து உள்ளே வர எனக்கு ஒரு தனிப்பட்ட செய்தி வந்திருக்கிறது என்று காட்டுகிறது. உள்ளே போனால் ஒன்றையும் காணவில்லை.
அதோடு எனது பெயர் LOGOUT பண்ணி நிற்பது போல காட்டுகிறது. வேறு பக்கத்துக்குள் போக LOGIN பண்ணி நிற்பது போல காட்டுகிறது. என்ன ஆச்சு?
Reply
#32
உங்களுடைய யுhசர் நேமையும் பாஸ்வேட்டையும் தாங்கோ நாங்கள் பாவிக்கிறம்.
Reply
#33
<!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#34
தமிழில் யாழ்களம் மாற்றலாகி அழகு தமிழாக இருக்கிறது.
Reply
#35
இந்த தாத்தாவின் மீது ஏன் எந்த சந்தர்ப்பத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது மற்றும் அது எப்போது நீக்கப்படும் என்று யாராவது சொல்ல முடியுமா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#36
இதை வாசித்தவுடன் கள நிர்வாகம் உடன் பதில் அளிக்க மாட்டார்களா... என்ன BBc..?
Reply
#37
அதைத்தான் நானும் எதிர்பார்க்கின்றேன்,
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#38
ஏனென்றுதான் எனக்கும் புரியவில்லை.கடைசியாக அவர்கூறிய கருத்துகளைப்பார்த்தால் புரிந்துவிடுமே
\" \"
Reply
#39
தாத்தாவுக்கு தடையா? தாத்ஸ் சொன்னாரே இனிமேல் இன்ரநெட் இலவசமா கிடைக்காது என்று. ஒருவேளை அதுதான் வரவில்லையோ?
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
தடையை எடுத்தாலும் தாத்தா வரமாட்டார். யாராவது இலவச இணைப்பு எடுக்க ஐடியா குடுத்தா வருவார்.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)