05-26-2004, 12:40 AM
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி....!
ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மேற்குலக சமூகத்தில் வேலை வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறதே...குறிப்பாக பெண்கள் நிர்வகிக்கும் கடின உழைப்புப் பிரிவுகளில் உள்ள ஊழியர்களில்(தொழிற்சாலைகளில் சாதாரண நிலை ஊழியர்களில்) ஆண் ஊழியர்கள் கடினமான தொழில்கள் செய்ய தொடர்ச்சியாக விடப்படுவதும் பெண்களுக்கு இலகுவான வேலை இடங்கள் ஒதுக்கப்படுவதும் சாதாரண நிகழ்வுகள்.....அப்படி இருக்க பெண்கள் உண்மையில் ஆண்களுக்கு நிகர்த்த வினைத்திறனை வெளிப்படுத்தித்தான் வேலை செய்கிறார்களா என்ற கேள்வியும் எழுகிறது....! இது குறித்து நாம் ஒரு பெண் மேலாளரைக் கேட்ட போது அப்படிச் செய்தால்தான் தனக்கு அளிக்கப்பட்ட நாள் ஒன்றுக்கான உற்பத்தி இலக்கை அடைய முடியும் என்று சொன்னார்....!
அதுபோக பல பெண் மேலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்களை விளம்பரப்படுத்த பெண்களை அரைகுறையாக் காட்டுகிறார்களே...அப்போ பெண்களை அரைகுறையாகக் காட்டி இயற்கையாகவே மனிதனுள் உறங்கும் மிருக உணர்வுக்குத் தீனி போட்டுத்தான் வியாபாரம் நடத்த முடியும் என்ற வியாபார உளவியல் சிந்தனை பெண்களிடமும் பரந்து கிடக்கிறதா....?????! அப்படியாயின் நீங்கள் கூறும் இப்படியான கீழ் நிலைச் சந்தைச் சித்தாந்தம் கொண்ட ஆணாத்திக்க ஆண் உறுப்பினர்களுக்கும் குறிப்பிட்ட பெண்களுக்கும் என்ன வேறுபாடு....???! இப்படியானவர்கள் தான் இன்னும் சமூகத்தில் அதிகமாக இருக்கின்றனர்....!
பெண்கள் கல்வி பெறுகிறார்கள் என்றால் ஏலவே உள்ள கொள்கைகளையும் கோட்பாடுகளையும் விதிகளையும் வழிமுறைகளையும் தாம் கற்கின்றனரே தவிர வளமான சமூக மாற்றம் ஒன்றை நோக்கியதாக அவர்கள் தம் சிந்தனைகளுக்கேற்ப மாற்றங்களை எங்கும் புகுத்துகின்றனரா என்றால்...இல்லை என்பதே பதில்....! அப்படியாயின் பெண்கள் இன்று தாங்கள் பெறும் கல்வியால் நாளைய பெண்கள் பெறப்போகும் கல்வியில் என்ன மாற்றங்களைச் செய்ய முடியும்....?????!
அப்படிச் செய்யாமல் நீங்கள் கூறும் ஆணாதிக்க கருத்தாக்கம் உள்ள தற்கால கல்வியால் இன்று போல் நாளையும் பெண்கள் நீங்கள் கூறும் ஆணாதிக்க கருத்தாக்கங்களை உள்வாங்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்.....????!
இப்படி பல வினாங்கள் தொடர்ச்சியாக எழும் நிலையில் பெண்களால் புறக்கணிக்கப்படும் ஆண்களின் பிரச்சனையும் சமூகத்தில் உயர்ந்து வருகிறது...இதற்கு நல்ல உதாரணம் அண்மையில் பிரித்தானிய பிரதமர் மீது நடந்த மர்மப் பொடித் தாக்குதல்...இதைச் செய்தவர்கள் தந்தையர் உரிமைக்காக போராடும் ஒரு பிரிவினர்....!
எனவே பெண்களின் உரிமைகள் விடுதலை என்ற தொனியில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே இருக்கும் புரிந்துணர்வுடனான அன்பினால் வகுக்கப்பட்ட உறவு நிலையும் அடிப்படை மனித சமூகக் கட்டமைப்பும் தகர்க்கப்படுமானால் அதுவே மனித இன அழிவுக்கும் வித்திடும்....!
:twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>