Posts: 219
Threads: 27
Joined: Dec 2005
Reputation:
0
செப்டம்பர் 22இ 2003
பொடாவை உடனே வாபஸ் பெற வேண்டும்: கருணாநிதி
விழுப்புரம்:
அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை திமுக அனுமதிக்காது என கருணாநிதி கூறினார்.
திமுக மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர் கூறியதாவது:
<b>பொடா சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசின் முறை தவறிய செயல்களை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டது உறுதியானால்இ சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து யோசிப்பேன் என பிரதமர் வாஜ்பாய் என்னிடம் உறுதிமொழி தந்தார்.
நக்கீரன் கோபாலை பொடா சட்டத்தில் கைது செய்தது தவறு என தமிழக அரசை உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது. அவருக்கு ஜாமீனும் தந்துள்ளது. பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட என்ன உறுதியான ஆதாரம் வேண்டும்.
பொடா விவகாரத்தில் வாஜ்பாய் எங்களை கைவிட்டுவிட்டதாகவே நினைக்கிறோம்.</b>
தமிழ் 2இ000 ஆண்டு பழமை வாய்ந்தது. நாட்டின் செம்மொழிகளில் ஒன்றாக இருக்க தமிழுக்கு முழுத் தகுதியும் உண்டு. உலகின் தொன்மையான இந்த மொழியை மத்திய அரசு உடனே செம்மொழியாக அறிவித்து உரிய அங்கீகாரம் தர வேண்டும்.
அயோத்தி விவகாரத்தில் திமுக தனது நிலையில் தெளிவாகவே உள்ளது. சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்டக் கூடாது. இது தொடர்பாக பா.ஜ.க. சட்டம் கொண்டு வர முயன்றால் அதை திமுக திட்டவட்டமாக எதிர்க்கும். நீதிமன்றத்தின் தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்பது தான் எங்கள் நிலை.
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட முனைந்தால் மதக் கலவரம் தான் வெடிக்கும். ராமருக்கு நாங்கள் எதிரிகளும் அல்ல. அவருக்கு சர்ச்சைக்குள்ளான இடத்தில் தான் கோவில் கட்ட வேண்டுமா? என கருணாநிதி கூறினார்.
!
-
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
இதெல்லாம் சரி தான் தம்பி !! அவர் வைகோ மேல் சொன்ன கொலை பழி பத்தி என்ன சொல்றீங்க !! நிஜமாகவே வைகோ புலிகள் உதவியுடன் கலைஞரை கொலை செய்ய முயற்சி செய்தாரா அல்லது கலைஞர் பொய் சொன்னாரா?
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ராஜாதி ராஜா,
உங்களுக்கு ஜெ. தெய்வமாக இருக்கலாம்... அதற்காக இல்லாததையும் பொல்லாததையும் சொல்லக்கூடாது....
கலைஞர் வைகோ மீது கொலைப்பழி எப்போதும் சுமத்தியதில்லை.... உளவுத்துறை கொடுத்த அறிக்கையைத் தான் கொடுத்தார்... அதை அவர் நம்பினாரா இல்லையா என்பதை இது வரை சொன்னதில்லை....
,
......
Posts: 219
Threads: 27
Joined: Dec 2005
Reputation:
0
புதன், பிப்ரவரி 22, 2006
நீர்த்துப்போன கொள்கைகள் - வாஸந்தி
கருணாநிதியைப் பேட்டி காணும் தருணம் இது என்று நான் தயாரானேன். ஆச்சரியமாக கருணாநிதி உடனடியாகப் பேச சம்மதித்தார். அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு காலை ஒன்பது மணிக்குச் சென்றபோது, நான்கைந்து கட்சிக்காரர்கள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். குறுகலான மாடிப்படிகளைக் கடந்து கலைஞரைச் சந்திக்கச் செல்லும்போது, யாரோ, ‘‘முதுகிலெ குத்தினமாதிரி’’ என்று சொல்வது கேட்டது.
கருணாநிதி அமைதியாகக் காணப்பட்டார். ஆனால் பேசும்போது, கவலையோ, பீதியோ, ஏதோ ஒன்று அவரது கண்களில் நிழலாடியதாகத் தோன்றிற்று. பத்திரிகை உலகத்தில் அவரது கவலைகளைப் பற்றிப் பலவிதமான அலசல்கள் இருந்தன. ‘வை.கோ.வின் அதிகரித்துவரும் செல்வாக்கு அவரை அச்சுறுத்துகிறது; தமக்குப் பின் தனது மகன் ஸ்டாலினைப் பொறுப்பேற்கத் தயாரித்து வருபவருக்கு, வை.கோ. ஒரு நீக்கப்படவேண்டிய முட்டுக்கட்டையாகிப் போனார்’ என்று பரவலாகக் கருதப்பட்டது.
கருணாநிதியுடன் நடந்த அந்த நீண்ட பேட்டியின்போது ஒன்று தெளிவாயிற்று. ‘<b>வை.கோ.வின் செல்வாக்கு, ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல்’ என்ற உண்மையான கவலை அவருக்கு இருக்கக்கூடும். ஆனால் வைகோ.வை வெளியேற்ற வேண்டுமென்றே, புலனாய்வுத்துறையின் செய்தி முகாந்திரமாக உபயோகிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. அவர் உண்மையிலேயே பீதியில் துவண்டிருந்தார்; ஊழ்வினையை நேரில் சந்தித்த அதிர்ச்சியில் இருப்பவர்போல. </b>
‘‘ஆமாம், வை.கோ.வை என் உறைவாள்னு சொல்லியிருக்கேன். ஆனால் என் நல்லெண்ணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டு, இரண்டு வருஷமா தலைமைப் பதவியைப் பிடிக்கிற முயற்சியில் இருக்கார். 1989இலே, தி.மு.க. ஆட்சியிலே இருக்கிறப்ப, கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பா, எங்கிட்ட சொல்லாம கொள்ளாம, பிரபாகரனைச் சந்திக்க சிலோனுக்குப் போனார். இது விஷயமா அவரை நான் கடுமையா கண்டிச்சேன். அப்பவே கட்சியிலேந்து அவரை நீக்கியிருக்கணும். அது பண்ணாதது தப்புதான். ஆனா, மன்னிச்சுக்குங்க! மன்னிச்சுக்குங்கன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். அதுக்குப் பிறகும் அநேகத் தப்புகளுக்கு மன்னிக்கச் சொல்லிக் கேட்பார். உண்மையைச் சொல்றேன், <b>ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு கட்சிலே ரொம்பத் தெளிவான முடிவெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் கிடைச்சா சந்தோஷப்படுவோம்; ஆனா, தமிழ் ஈழத்துக்கு ஆதரவா கோஷம் போடமாட்டோம்னு</b>.
ஆனா, இந்த ஆள் தொடர்ந்து கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தறார். வெளிப்படையாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவா பேசறார். கடந்த ஓராண்டு காலமா என் தலைமைக்குப் பதிலா வை.கோ.வுடைய தலைமை வந்தா நல்லதுன்னு கனடாவுலே, பாரிஸ்ஸிலெ, யாழ்பாணத்திலெ, எல்.டி.டி.ஈ.யுடைய பிரச்சாரம் பத்திரிகை மூலமாவும் வலைத்தளங்கள்ளேயும் நடப்பது எனக்குத் தெரிஞ்சிருக்கல்லே; சிஙிமிலேந்து தகவல் வர்ற வரைக்கும்.’’
அவரது பேச்சை எனது ஒலி நாடா பதிவு செய்கையில், அவரது உதவியாளர் சண்முகநாதன், விறுவிறுவென்று தனது கையேட்டில் குறித்துக்கொண்டிருந்தார். பலவித பத்திரிகை கட்டிங்குகள், குறிப்புகள் தயாராக மேஜையில் வைக்கப்பட்டிருந்தன. ‘‘தகவல் கிடைச்சதும் வை.கோ.வை நேரிடையாக விளக்கம் கேட்டிருக்கலாமே’’ என்றேன். '‘‘பத்திரிகையாளர் கூட்டம் ஏன்?’’
‘‘CBI தகவல் ‘கோபால்சாமிக்கு வழிவகுக்கும் [tஷீ யீணீநீவீறீவீtணீtமீ] கொலைத் திட்டம்னு சொன்னதே தவிர, அதுக்குப் பின்னாடி கோபால்சாமி இருந்ததாச் சொல்லல்லே. அவரை எதுக்குக் கேட்கணும்? CBI தகவலை லேசா எடுக்கக் கூடாதுன்னு மக்கள்கிட்ட போக வேண்டியதாகிவிட்டது.’’ ‘‘எனக்கு முதல்லே நம்பமுடியல்லே’’ என்று கருணாநிதி தொடர்ந்தார். ‘‘ஆனா கோபால்சாமி நடந்துக்கிற விதத்தைப் பார்த்தா இப்ப சந்தேகம் வலுப்படுகிறது. ‘‘CBI அனுப்பிச்ச கடிதம் தனக்கு அதிர்ச்சி ஏற்படுத்திச்சு’’ன்னு சொல்றார். ‘‘ஆனா என்னைக் கூப்பிட்டு ஏன் பேசல்லே?’’ <b>நான் அவரோடு பேசத்தான் விரும்பினேன். ஆனா அகப்படல்லே. சென்னையிலே இருந்துகிட்டே இல்லேன்னு போக்குக் காட்டறார். பத்திரிகைக்கு அறிக்கை விடறார், அவரை கட்சியிலேந்து நீக்க இது ஒரு சூழ்ச்சின்னு. நாற்பது நாள் காத்திருந்து பிறகுதான் கட்சியிலேந்து நீக்கினோம்</b>.’’
அவருடைய பார்வை மேஜையில் இருந்த புலிகளின் பத்திரிகை கட்டிங்குகள் மேல் பதிந்தது. ‘‘இதையெல்லாம் பார்க்கும்போது CBI கடிதத்துலே உண்மை இருக்கணும்னு சந்தேகம் வருது, வெளியிலே அவருக்கு ஆதரவு இருக்கலாம்னு; திட்டம் ஏதோ இருக்கணும்னு தோன்றுகிறது."
‘‘புலிகளுடன் தனக்கு இப்போது தொடர்பு இல்லை’’ என்று வை.கோ. சொன்னதைச் சொல்கிறேன்.
‘‘அவர் உண்மை பேசறாரா என்பதைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல்லே’’ என்றார் கருணாநிதி.
‘‘உங்கள் விமர்சகர்கள் சொல்கிறார்கள், திமுகவில் இப்போது ஜனநாயகம் இல்லை, வாரிசு அரசியல்தான் நடக்கிறது என்று...’’
கருணாநிதியின் முகத்தில் சட்டென்று எரிச்சல் படர்ந்தது. "நான் எப்பவும் சொல்றேன். தி.மு.க., சங்கர மடமோ, மன்னர் ஆட்சியோ நடத்தவில்லை, வாரிசு அரசியல் செய்ய. பிரதமர் நரசிம்மராவின் மகன் மாநிலத்தில் அமைச்சர். ரங்கராஜன் குமாரமங்கலத்துடைய அப்பாவும் தாத்தாவும் மந்திரிகளா இருந்தார்கள். அதைப் பத்தி யாரும் பேசறதில்லே. என்னைப் பத்தி மட்டும்தான் தப்பு சொல்கிறார்கள். ஏன்னா நான் சூத்திரன்."
"உங்க கட்சியிலேயே அப்படி ஒரு கருத்து இருக்கு" என்று நான் இடைமறித்தேன்.
"அது விஷமத்தனமான பேச்சு" என்றார் அவர். "வாரிசு அரசியல் செய்யணும்னா 1989 இலே தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதே செஞ்சிருக்கலாமே.?" அதற்குமேல் அதைப் பற்றிப் பேச ஏதும் இல் <b>முதல் முதலில் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் சந்தித்தது, தமிழர்கள் இலங்கையில் படும் சிரமங்களை அவர்கள் விவரிக்கக் கேட்டு பதைத்தது, பிரபாகரனின் இளமையும் கள்ளமில்லா முகமும் தன்னை வெகுவாக ஈர்த்தது, கடைசியில் அவர்களது செயல்கள் தன்னை அதிரவைத்தது, எல்லாவற்றையும் கதைபோல் அவர் சொல்லி வருகையில் நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை அவர் மறந்து போனதுபோல் இருந்தது. அவர்களைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் முதுகில் குத்தப்பட்டதாக உணர்வதுபோல் சொன்னார். "நம்பமுடியல்லெம்மா. நீங்க உட்கார்ந்திருக்கிற இந்த சோஃபாவுக்கு நேர் எதிரத்தான் அவங்க உட்கார்ந்திருந்தாங்க, ஏதுமறியாப் பிள்ளெங்க போல. அவங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தப்படுத்த முடியாத தோற்றம். சென்னையிலேயே பத்மனாபாவையும் அவருடைய சகாக்களையும் கொலை செஞ்சபோது அதிர்ச்சியா இருந்தது. ராஜீவ் காந்தியுடைய படுகொலைக்குப் பிறகு இனிமே எந்தத் தொடர்பும் இருக்கமுடியாதுங்கற முடிவுக்கு வந்தேன்</b>."
லை என்பதுபோல் அதை ஒதுக்கிவிட்டு, மீண்டும் புலிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார்.
கருணாநிதி மீண்டும் தலை அசைத்தார். '‘‘நம்பமுடியல்லே!" கண்களில் நிழலாடிய பீதி, முகத்தில், தசைகளில், திரையாய் போர்த்திற்று. அடுத்த இலக்கு தாமாக இருக்கலாமோ என்கிற பீதி. ‘‘முதுகிலெ குத்தினது போல’’ என்று கீழே யாரோ சொன்னதற்குப் புதிய பரிமாணம் சேர்ந்தது போலத் தோன்றிற்று.
நன்றி - தீராநதி
இதுவே என் கருதல்ல- சிலவற்றில் உடன்பாடுமல்ல
!
-
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
அதாவது கருணானிதி என்ன சொல்றார்ன்னா ..குழ்ந்தை பெத்துகணுமாம் ஆனால் கல்யாணம் மட்டும் பண்ண கூடாதாம்.
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
அதைத்தானே ஜெயலலிதா செய்திருக்கிறார்.... அவருக்கு குழந்தை உண்டு.... கணவர்கள் உண்டு.... ஆனால் கல்யாணம் மட்டும் ஆனதில்லை.....
,
......
Posts: 219
Threads: 27
Joined: Dec 2005
Reputation:
0
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->அதாவது கருணானிதி என்ன சொல்றார்ன்னா ..குழ்ந்தை பெத்துகணுமாம் ஆனால் கல்யாணம் மட்டும் பண்ண கூடாதாம்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
<b>அவர் ஆசைப்படுவது பக்கத்துவீட்டுக்காரி குழந்தை பெறுவது பற்றி,அதற்கு ஆசைதான் படமுடியும் உதவி செய்ய முடியாது</b> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
!
-
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
ஏற்கனவே இலங்கை பிர்ச்சனையை வைத்து கேவலாம்க அரசியல் செய்தவர்தானே இந்த கலைஞர் !! நல்ல வேளை ஈழத்தில் கலைஞருக்கு ஏதும் மனைவிகள் இல்லை. இருந்து விட்டால் இந்த நேரம் அவருக்கு ஈழமும் சொந்தமாகி இருக்கும்
.
.
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
ஆனால் இந்த அம்மாவுக்கு அங்கேயும் கணவர்கள் உண்டு.....
,
......
Posts: 634
Threads: 23
Joined: Dec 2005
Reputation:
0
தம்பியடையான் !! நீங்கள் இணத்த கட்டுரையில் புலிகளோடு வைகோ கூட்டு சேர்ந்து அவரை கொல்ல நினைத்தார்கள் என்று அவர் சொன்னது போல பொறுள் படுகிறதே !! எது உண்மை ??
<b>நீங்கள் அந்த கட்டுரையில் சில் கருத்துகளை எடுத்து விட்டு இங்கு பிரசுரம் செய்த்து உள்ளீர்கள். முழு கட்டுரையும் இங்கு உங்கள் பார்வைக்காக</b>
முழுநேர பத்திரிகையாளராக தமிழ் நாட்டில் பணியாற்றியபோது, என் பார்வையில், தமிழ் நாட்டுக்கே உரிய சில அம்சங்கள் இருப்பதாகத் தோன்றின. கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகள் முன்வைக்கும் சில கோட்பாடுகளுக்கும், சாமான்ய குடிமகனின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏதும் சம்பந்தமில்லை என்பது தெரிந்தது. எனக்கு இது விசித்திரமாக இருந்தது. அடிப்படை விஷயங்களைவிட காலாவதியான சில பிரமைகளை, அவை தமிழனின் வாழ்வுக்கும் சாவுக்குமான பிரச்னை போல, மிக உணர்ச்சி வேகத்துடன் தலைவர்கள் பொது மேடைகளில் பேசுவதைக் கேட்க, எனக்கு வியப்பாக இருக்கும். தொலைவுகள் சுருங்கிப் போனதையும், தொழில் நுட்பங்களும் வேலை வாய்ப்புகளும் பூகோள வரைகோடுகளை அர்த்தமற்றதாக்கிவிட்டதையுமbr />?, வாழ்வின் ஆதார முக்கியத்துவங்கள் வெகுவாக மாறிவருவதையும், இறக்கை முளைத்து பறக்க ஆசைப்படும் தமிழனை ஒரு இனத்தின் கலாசார எல்லைக்குள் இனி கட்டிப்போடமுடியாது என்பதையும், உணரமுடியாத சிந்தனைத் தேக்கத்தில் அவர்கள் இருப்பார்களோ என்றும் கேள்வி எழும். அவற்றிற்குப் பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று சிந்திக்க வைக்கும். அது யாருக்கோ நிகழ்த்தப்படும் ஒரு நிழலாட்டம்போலத் தோன்றும். அது யார் என்பது விளங்காத புதிராக இருக்கும்.
தமிழ் மொழியும் இலங்கைத் தமிழர் பிரச்னையும் இந்த நிழலாட்டத்தில் அடிக்கடி பந்தாடப்படும் விஷயங்கள். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்திற்குப் பின், தமிழ் மொழிக்காகப் போர் தொடுக்கவேண்டிய அவசியம் மறைந்து போனது. ஆனாலும், தமிழ்ப் பற்றைப் புதுப்பிக்கவேண்டிய அவசியத்தில் தாங்கள் இருப்பதாக, திராவிடத் தோன்றல்களுக்கு அடிக்கடி பீதி ஏற்படுகிறது. மாணவர்களின் கவனம், காலத்தின் கட்டாயத்தால் தமிழுக்குப் பதில் ஆங்கிலத்திற்குத் திரும்பியது தங்களது தோல்வி என்று அவர்களுக்கு உறுத்துகிறதோ என்னவோ? அவ்வப்போது பொது மேடைகளில் தங்களது தமிழ்ப்பற்றைப் பறைசாற்றுவதும், உண்மைத் தமிழன் யார் என்ற கேள்வியை எழுப்புவதும், ஸான்கோபான்ஸா, வெட்டவெளியில் சுழலும் காற்றாடிகளுடன் சண்டைபோடக் கிளம்பிய காட்சிகளை எனக்கு நினைவூட்டும். வாக்காளர் எவருக்குமே, மொழி என்பது ஜீவ மரணப் போராட்டத்தின் அடையாளம் அல்ல இப்போது. பின் இவர்கள் யாருடைய திருப்திக்காக தமிழ் 'உணர்வை' உசுப்பிவிடும் பணியில் இடையிடையில் ஈடுபடுகிறார்கள்? உண்மையில் முன்னெப்போதும் இல்லாதவகையில் இப்போதுதான் தமிழ் படிப்பவர்களும், மிக நுணுக்கமான, நுட்பமான அணுகலுடனும் புதிய சொல்லாடல்களுடனும் தமிழில் எழுதுபவர்களும் அதிகரித்திருக்கிறார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தரமான நூல் வெளியீடுகளும் வெளியிடும் பதிப்பகங்களும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் தமிழுக்கு எங்கிருந்து வரும் ஆபத்து?
மற்ற மொழிகளின் சேர்க்கையால் ஒரு மொழிக்கு ஆபத்து என்கிற சரித்திரம் எங்கும் இல்லை. ஆனால் தமிழுக்கு ஆபத்து என்கிற நாடகம் விடாமல், அவ்வப்போது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. இது ஒரு நாடகம் என்பது பொதுமக்களுக்கும் தெரியும் என்பதுதான் வேடிக்கை. ஆனால் இத்துடன் எந்த வகையிலோ சம்பந்தப்பட்ட இலங்கைத் தமிழர்ப் பிரச்னை அதிக சிக்கலானது. அது நமது திராவிடக் கட்சிகளுக்கு ஜனன காலத்திலிருந்து இருந்து வரும் அதீத ஈடுபாடு. இதில் அதிக ஆழமாகக் காலை நுழைத்திருப்பவர் வைகோ. என்ற வை.கோபால்சாமி. இதன் நேரடிப் பரிச்சயம் எனது இலங்கைப் பயணத்திற்கு முன்பே ஏற்பட்டது.
1993ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் திடீரென்று சென்னை முழுவதும் அந்தச் செய்தி காட்டுத் தீயாகப் பரவியது. வை.கோ., திராவிடக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பதுதான் அந்த செய்தி. எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், செய்தி கேட்டு, மூன்று கட்சித் தொண்டர்களும், இளைஞர்களும் தீக்குளித்தனர். இதில் இருவர் மாண்டார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதி, பத்திரிகையாளர்களை அழைத்து ஒரு திடுக்கிடும் செய்தியைச் சொன்னார். தி.மு.க.வில் ஒரு புதிய தலைமைக்கு, <b>அவர்களுக்கு இணக்கமான வை.கோ.வுக்கு வழிவகுக்க, கருணாநிதியைக் கொலை செய்ய எல்.டி.டி.ஈ. திட்டமிட்டிருப்பதாக இந்தியப் புலனாய்வுத்துறைக்குத் தகவல் கிடைத்தது என்று சொல்லப்பட்டது. அப்படியாக அதனிடமிருந்து தனக்குச் செய்தி வந்திருப்பதாக கருணாநிதி சந்திப்பில் தெரிவித்தார். வை.கோ. காணாமல் போனார். பிறகு கொஞ்ச நாட்களாக தலைமறைவாகி இருந்தார். அதோடு மறைவிடத்திலிருந்து அறிக்கை விட்டுக்கொண்டிருந்தார். ‘தன்னை கட்சியிலிருந்து விலக்குவதற்காக நடக்கும் சதி இது’ என்றார். </b>அவரை ‘இந்தியா டுடே’வுக்கு பேட்டி காண நான் முயற்சித்துக் கொண்டிருந்தேன். எனது நெடு நாளைய நண்பரும், வை.கோ.வுக்கு வலது கரம்போல் நெருக்கமாகவும் விசுவாசத்துடனும் இருந்த கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஒரு ரகசிய சந்திப்புக்கு ஏற்பாடு செய்தார். இரவு பத்து மணிக்கு மேல், நானும் ஆங்கிலப் பதிப்பின் பிரகாஷ் சுவாமியும் அந்த மறைவிடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.
வை.கோ. மிகவும் பதட்டமாகக் காணப்பட்டார். பேட்டி முழுவதும் என் பக்கமே திரும்பவில்லை. எனது கேள்விகளுக்கும் ப்ரகாஷ் சுவாமியைப் பார்த்து பதிலளித்தது எனக்கு விநோதமாக இருந்தது. அப்போது நான் தமிழ்நாட்டுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. தமிழ் அரசியல்வாதிகளின் உணர்ச்சிமிகுந்த தாபப் பேச்சும் எனக்கு அதுவரை பழக்கமில்லாதது. நிலப் பிரபுத்துவ காலத்துக்குச் சென்றதுபோல இருந்தது. "<b>நான் ஒரு தொண்டன் மட்டுமே. கலைஞர்மேல் உயிரை வைத்திருப்பவன். அவரது நிரந்தர விசுவாசி. எங்கு சென்றாலும் என்னை நான் முன் நிறுத்திக் கொண்டதில்லை. கலைஞரின் சார்பாக வந்திருக்கிறேன் என்றுதான் சொல்வேன்" என்றார் வை.கோ</b>.
<b>வை.கோ.வை நான் சந்தித்தபோது கட்சியிலிருந்து நீக்கப்பட்டதைவிட, மத்தியப் புலனாய்வுத்துறை, புலிகள் பற்றின செய்தியை பகிரங்கப்படுத்தியதுதான், அவருக்கு அதிக சங்கடத்தைக் கொடுத்ததாகத் தோன்றிற்று. ‘‘புலிகளுக்கும் உங்களுக்கும் தொடர்பு இல்லையா? என்றேன்.
‘‘இல்லவே இல்லை’’ என்று வை.கோ. மறுத்தார். ‘‘எனக்கு அந்த விஷயத்தைப் பத்தி எதுவும் தெரியாது. கலைஞருக்காக என் உயிரையும் கொடுக்க சித்தமாயிருக்கேன்’’ என்றார், திரும்பத் திரும்ப. ‘‘கலைஞர் என்னைத்தானே தன் உறை வாள் என்று சொல்வார்?’’ என்றார். </b>
அவரது தாபத்தை செவிமடுக்கும் மனநிலையில் கலைஞர் இருக்கவில்லை என்பது விரைவில் வெளிப்பட்டது. முரசொலியில் கலைஞர் சளைக்காமல் பதில் அளித்தார். ‘ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்கமுடியாது.’ அதற்கு மறு மொழியாக வை.கோ. வெடித்தார்: ‘கருணாநிதி இனி என் தலைவர் இல்லை!’ கட்சியிலிருந்து நீக்கப்பட்டதும், ‘தான்தான் உண்மையான தி.மு.க.வின் பிரதிநிதி’ என்றார் வை.கோ. தன்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற காரணத்துக்காகவே தன் மீது பழி சுமத்தப்பட்டிருப்பதாகச் சொன்னார்.
கருணாநிதியைப் பேட்டி காணும் தருணம் இது என்று நான் தயாரானேன். ஆச்சரியமாக கருணாநிதி உடனடியாகப் பேச சம்மதித்தார். அவரது கோபாலபுரம் இல்லத்திற்கு காலை ஒன்பது மணிக்குச் சென்றபோது, நான்கைந்து கட்சிக்காரர்கள் இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார்கள். குறுகலான மாடிப்படிகளைக் கடந்து கலைஞரைச் சந்திக்கச் செல்லும்போது, யாரோ, ‘‘முதுகிலெ குத்தினமாதிரி’’ என்று சொல்வது கேட்டது.
கருணாநிதி அமைதியாகக் காணப்பட்டார். ஆனால் பேசும்போது, கவலையோ, பீதியோ, ஏதோ ஒன்று அவரது கண்களில் நிழலாடியதாகத் தோன்றிற்று. பத்திரிகை உலகத்தில் அவரது கவலைகளைப் பற்றிப் பலவிதமான அலசல்கள் இருந்தன. ‘வை.கோ.வின் அதிகரித்துவரும் செல்வாக்கு அவரை அச்சுறுத்துகிறது; தமக்குப் பின் தனது மகன் ஸ்டாலினைப் பொறுப்பேற்கத் தயாரித்து வருபவருக்கு, வை.கோ. ஒரு நீக்கப்படவேண்டிய முட்டுக்கட்டையாகிப் போனார்’ என்று பரவலாகக் கருதப்பட்டது.
கருணாநிதியுடன் நடந்த அந்த நீண்ட பேட்டியின்போது ஒன்று தெளிவாயிற்று. ‘வை.கோ.வின் செல்வாக்கு, ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தல்’ என்ற உண்மையான கவலை அவருக்கு இருக்கக்கூடும். ஆனால் வைகோ.வை வெளியேற்ற வேண்டுமென்றே, புலனாய்வுத்துறையின் செய்தி முகாந்திரமாக உபயோகிக்கப்பட்டதாகத் தோன்றவில்லை. அவர் உண்மையிலேயே பீதியில் துவண்டிருந்தார்; ஊழ்வினையை நேரில் சந்தித்த அதிர்ச்சியில் இருப்பவர்போல.
‘‘ஆமாம், வை.கோ.வை என் உறைவாள்னு சொல்லியிருக்கேன். ஆனால் என் நல்லெண்ணத்தை அவர் பயன்படுத்திக்கொண்டு, இரண்டு வருஷமா தலைமைப் பதவியைப் பிடிக்கிற முயற்சியில் இருக்கார். 1989இலே, தி.மு.க. ஆட்சியிலே இருக்கிறப்ப, கட்சிக் கட்டுப்பாட்டுக்குப் புறம்பா, எங்கிட்ட சொல்லாம கொள்ளாம, பிரபாகரனைச் சந்திக்க சிலோனுக்குப் போனார். இது விஷயமா அவரை நான் கடுமையா கண்டிச்சேன். அப்பவே கட்சியிலேந்து அவரை நீக்கியிருக்கணும். அது பண்ணாதது தப்புதான். ஆனா, மன்னிச்சுக்குங்க! மன்னிச்சுக்குங்கன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். அதுக்குப் பிறகும் அநேகத் தப்புகளுக்கு மன்னிக்கச் சொல்லிக் கேட்பார். உண்மையைச் சொல்றேன், ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு கட்சிலே ரொம்பத் தெளிவான முடிவெடுத்தோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஈழம் கிடைச்சா சந்தோஷப்படுவோம்; ஆனா, தமிழ் ஈழத்துக்கு ஆதரவா கோஷம் போடமாட்டோம்னு. ஆனா, இந்த ஆள் தொடர்ந்து கட்சிக்கு சங்கடத்தை ஏற்படுத்தறார். வெளிப்படையாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவா, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவா பேசறார். கடந்த ஓராண்டு காலமா என் தலைமைக்குப் பதிலா வை.கோ.வுடைய தலைமை வந்தா நல்லதுன்னு கனடாவுலே, பாரிஸ்ஸிலெ, யாழ்பாணத்திலெ, எல்.டி.டி.ஈ.யுடைய பிரச்சாரம் பத்திரிகை மூலமாவும் வலைத்தளங்கள்ளேயும் நடப்பது எனக்குத் தெரிஞ்சிருக்கல்லே; சிஙிமிலேந்து தகவல் வர்ற வரைக்கும்.’’
அவரது பேச்சை எனது ஒலி நாடா பதிவு செய்கையில், அவரது உதவியாளர் சண்முகநாதன், விறுவிறுவென்று தனது கையேட்டில் குறித்துக்கொண்டிருந்தார். பலவித பத்திரிகை கட்டிங்குகள், குறிப்புகள் தயாராக மேஜையில் வைக்கப்பட்டிருந்தன. ‘‘தகவல் கிடைச்சதும் வை.கோ.வை நேரிடையாக விளக்கம் கேட்டிருக்கலாமே’’ என்றேன். '‘‘பத்திரிகையாளர் கூட்டம் ஏன்?’’
‘‘சிஙிமி தகவல் ‘கோபால்சாமிக்கு வழிவகுக்கும் [tஷீ யீணீநீவீறீவீtணீtமீ] கொலைத் திட்டம்னு சொன்னதே தவிர, அதுக்குப் பின்னாடி கோபால்சாமி இருந்ததாச் சொல்லல்லே. அவரை எதுக்குக் கேட்கணும்? சிஙிமி தகவலை லேசா எடுக்கக் கூடாதுன்னு மக்கள்கிட்ட போக வேண்டியதாகிவிட்டது.’’ ‘‘எனக்கு முதல்லே நம்பமுடியல்லே’’ என்று கருணாநிதி தொடர்ந்தார். ‘‘ஆனா கோபால்சாமி நடந்துக்கிற விதத்தைப் பார்த்தா இப்ப சந்தேகம் வலுப்படுகிறது. ‘‘சிஙிமி அனுப்பிச்ச கடிதம் தனக்கு அதிர்ச்சி ஏற்படுத்திச்சு’’ன்னு சொல்றார். ‘‘ஆனா என்னைக் கூப்பிட்டு ஏன் பேசல்லே?’’ நான் அவரோடு பேசத்தான் விரும்பினேன். ஆனா அகப்படல்லே. சென்னையிலே இருந்துகிட்டே இல்லேன்னு போக்குக் காட்டறார். பத்திரிகைக்கு அறிக்கை விடறார், அவரை கட்சியிலேந்து நீக்க இது ஒரு சூழ்ச்சின்னு. நாற்பது நாள் காத்திருந்து பிறகுதான் கட்சியிலேந்து நீக்கினோம்.’’
<b>அவருடைய பார்வை மேஜையில் இருந்த புலிகளின் பத்திரிகை கட்டிங்குகள் மேல் பதிந்தது. ‘‘இதையெல்லாம் பார்க்கும்போது சிஙிமி கடிதத்துலே உண்மை இருக்கணும்னு சந்தேகம் வருது, வெளியிலே அவருக்கு ஆதரவு இருக்கலாம்னு; திட்டம் ஏதோ இருக்கணும்னு தோன்றுகிறது."</b>
‘‘புலிகளுடன் தனக்கு இப்போது தொடர்பு இல்லை’’ என்று வை.கோ. சொன்னதைச் சொல்கிறேன்.
‘‘அவர் உண்மை பேசறாரா என்பதைப் பத்தி நான் எதுவும் சொல்ல விரும்பல்லே’’ என்றார் கருணாநிதி.
‘‘உங்கள் விமர்சகர்கள் சொல்கிறார்கள், திமுகவில் இப்போது ஜனநாயகம் இல்லை, வாரிசு அரசியல்தான் நடக்கிறது என்று...’’
கருணாநிதியின் முகத்தில் சட்டென்று எரிச்சல் படர்ந்தது. "நான் எப்பவும் சொல்றேன். தி.மு.க., சங்கர மடமோ, மன்னர் ஆட்சியோ நடத்தவில்லை, வாரிசு அரசியல் செய்ய. பிரதமர் நரசிம்மராவின் மகன் மாநிலத்தில் அமைச்சர். ரங்கராஜன் குமாரமங்கலத்துடைய அப்பாவும் தாத்தாவும் மந்திரிகளா இருந்தார்கள். அதைப் பத்தி யாரும் பேசறதில்லே. என்னைப் பத்தி மட்டும்தான் தப்பு சொல்கிறார்கள். ஏன்னா நான் சூத்திரன்."
"உங்க கட்சியிலேயே அப்படி ஒரு கருத்து இருக்கு" என்று நான் இடைமறித்தேன்.
"அது விஷமத்தனமான பேச்சு" என்றார் அவர். "வாரிசு அரசியல் செய்யணும்னா 1989 இலே தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோதே செஞ்சிருக்கலாமே.?" அதற்குமேல் அதைப் பற்றிப் பேச ஏதும் இல்லை என்பதுபோல் அதை ஒதுக்கிவிட்டு, மீண்டும் புலிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். முதல் முதலில் பிரபாகரனையும் அவரது சகாக்களையும் சந்தித்தது, தமிழர்கள் இலங்கையில் படும் சிரமங்களை அவர்கள் விவரிக்கக் கேட்டு பதைத்தது, பிரபாகரனின் இளமையும் கள்ளமில்லா முகமும் தன்னை வெகுவாக ஈர்த்தது, கடைசியில் அவர்களது செயல்கள் தன்னை அதிரவைத்தது, எல்லாவற்றையும் கதைபோல் அவர் சொல்லி வருகையில் நான் ஒரு பத்திரிகையாளர் என்பதை அவர் மறந்து போனதுபோல் இருந்தது. அவர்களைப்பற்றி நினைக்கும்போதெல்லாம் முதுகில் குத்தப்பட்டதாக உணர்வதுபோல் சொன்னார். "நம்பமுடியல்லெம்மா. நீங்க உட்கார்ந்திருக்கிற இந்த சோஃபாவுக்கு நேர் எதிரத்தான் அவங்க உட்கார்ந்திருந்தாங்க, ஏதுமறியாப் பிள்ளெங்க போல. அவங்களுக்கும் வன்முறைக்கும் சம்பந்தப்படுத்த முடியாத தோற்றம். சென்னையிலேயே பத்மனாபாவையும் அவருடைய சகாக்களையும் கொலை செஞ்சபோது அதிர்ச்சியா இருந்தது. ராஜீவ் காந்தியுடைய படுகொலைக்குப் பிறகு இனிமே எந்தத் தொடர்பும் இருக்கமுடியாதுங்கற முடிவுக்கு வந்தேன்."
கருணாநிதி மீண்டும் தலை அசைத்தார். '‘‘நம்பமுடியல்லே!" கண்களில் நிழலாடிய பீதி, முகத்தில், தசைகளில், திரையாய் போர்த்திற்று. அடுத்த இலக்கு தாமாக இருக்கலாமோ என்கிற பீதி. ‘‘முதுகிலெ குத்தினது போல’’ என்று கீழே யாரோ சொன்னதற்குப் புதிய பரிமாணம் சேர்ந்தது போலத் தோன்றிற்று.
‘‘கடிதம் வந்தது உண்மையா அல்லது வை.கோ.வைக் கட்சியிலிருந்து விலக்கும் முகாந்திரமா அது!’’ என்கிற கேள்வி விரைவில் எல்லோருக்கும் மறந்து போனது. அடுத்த சில மாதங்களில் தி.மு.க. அதிகாரபூர்வமாகப் பிளந்தது, இரண்டாம் முறையாக. முதல் பிளவு ஏற்பட்டபோது கட்சிக்கு நிகழ்ந்த சேதம், இம்முறை ஏற்படாது என்று சில தி.மு.க.வினர் என்னிடம் கருத்து சொன்னார்கள். ‘‘எம்.ஜி.ஆரின் விசேஷ ஆளுமை வை.கோ.வுக்குக் கிடையாது’’ என்றார்கள். ஆனால் இரண்டு கட்சித் தோண்டர்கள் தீக்குளித்து இறந்தார்கள், தங்கள் தலைவனுக்கு நேர்ந்த அநீதிக்காக. அந்தச் சாவைக் கண்டு யாரும் பதைக்கவோ, அதிரவோ இல்லை என்பது எனக்கு விநோதமாக இருந்தது. அத்தகைய சாவுகள் தலைவரின் செல்வாக்கை உறுதிப்படுத்தும் அளவுகோல்களாகப் பார்க்கப்பட்டன. வை.கோ. தமது புதிய கட்சிக்கு, ‘மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று பெயர் வைத்தார். அவரது கட்சி ஏடு ‘சங்கொலி’ கர்ஜித்தது. ‘போர்க்களம் தயாராகிவிட்டது. படை திரண்டுவிட்டது. பகைவன் வெல்லப்பட்டான். சங்கே முழங்கு!’
<b>நாடகத்தனமாகத் தோன்றும் இந்த வசனங்களுக்குப் பின்புலத்தில் வேறு அர்த்தங்கள் புதைந்திருப்பதாக நான் உணர்ந்தேன். யாழ்பாணத்திற்கு நான் சென்றபோது, பலர் _ சாமான்யர்களிலிருந்து பல்கலைக்கழகத்தில் பணிபுரிபவர்கள் வரை_ என்னிடம் திட்டவட்டமாகச் சொன்னார்கள்: ‘‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகளிடம் சொல்லுங்கள்; தயவு செய்து அவர்கள் எங்கள் பிரச்னையில் மூக்கை நுழைக்கவேண்டாம்!’’ </b>
.
.
Posts: 219
Threads: 27
Joined: Dec 2005
Reputation:
0
¿¡ý ¸Õò¨¾ Á¨È츧ÅñÎõ ±ý¸¢È §¿¡ì¸¢ø ¦ÅðÊô§À¡¼ Å¢ø¨Ä «ôÀÊ ´Õ ±ñ½õ þÕ󾡸 ±Îò¾ þ¼ò¨¾ ÌÈ¢ôÀ¢ðÎ þÕì¸Á¡ð§¼ý.
§ÁÖõ «Ð ¿£í¸û §¸ð¼ §¸ûŢ측¸¾¡ý ¸¨Ä»Ã¢ý §Àðʨ þ¨½ò§¾ý.
ÁüÈ ÀÊ Å¡Šó¾¢Â¢ý ±ó¾ ´Õ ¸ÕòÐìÌõ þô§À¡Ðõ ±ô§À¡Ðõ ±ÉìÌ ¯¼ýÀ¡Êø¨Ä.
!
-
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நன்றி ராஜா....
நீங்கள் இணைத்திருக்கும் கடிதத்தில் தனக்கும், புலிகளுக்கும் தொடர்பே கிடையாது என்று வைகோ கூறியதாகத் தெரிகிறது.... அவரது இரட்டைநாக்கினை இங்கிருக்கும் ஈழத்தமிழ் சகோதரர்கள் உணரும் வகையில் கட்டுரையை இணைத்திருக்கிறீர்கள்....
,
......
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
அப்படியா.... வையகம் உங்களை "கோமாளிகளாக" பார்க்கப் போகிறது.... கொஞ்சம் சாக்கிரதையாக இருங்கள்....
லக்கி லுக்கி எழுதியது
"வையகம் ஆயிரம் சொல்லட்டும் எங்களுக்கு தலைவன் தான் நீதிபதி"
எங்களை வையகம் கோமாளியாக எனி பார்க்கும் என குறிப்பிட்டு இருந்திர்கள் ஆனால் தங்களை உலகம் தற்போதே அவ்வாறு தான் பார்கிறது.கி கி கி கி........
"To think freely is great
To think correctly is greater"
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
வையகத்துக்கும் உலகத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் கோமாளிகள் தான் என்பதில் ஐயமில்லை.....
,
......
Posts: 333
Threads: 16
Joined: Jan 2006
Reputation:
0
வையகத்துக்கும் உலகத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்கள் கோமாளிகள் தான் என்பதில் ஐயமில்லை.....
தலைவா இரண்டுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
"To think freely is great
To think correctly is greater"
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
ஸ்டாலின் vs வைகோ - 1
அடுத்த முதல்வர் ஸ்டாலினாக இருக்க கூடும் என்று சிலர் யூகங்களை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றனர். கலைஞர் முதல்வராக பதவியேற்று விட்டு பிறகு ஸ்டாலினிடம் பொறுப்பை ஒப்படைப்பார் என்றும், ஸ்டாலின் துணை முதல்வராக ஆகக் கூடும் என்றும் சில யூகங்கள் உலாவிக் கொண்டிருக்கிறன. ஆனால் தனக்கும் இந்த யூகங்களுக்கும் எந்த ஒரு பொருத்தமும் இல்லாதது போல ஸ்டாலின் வழக்கம் போல கலைஞர் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறார். திமுகவின் அடுத்த தலைவரிடம் இருக்க வேண்டிய குணநலன்களோ, ஆளுமைத் தன்மையோ, போர்க்குணமோ, சாணக்கியத்தன்மையோ ஸ்டாலினிடம் இருக்கிறதா ?
கலைஞரின் "அன்பு" மகன் என்பதால் தான் ஸ்டாலினுக்கு மரியாதையும் தலைவர் இமேஜும் ஏற்பட்டதே தவிர ஸ்டாலின் இயல்பாக தலைவராக இருக்கக் கூடிய தகுதி வாய்ந்தவரா என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. Stalin is not a leader on his own right என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. எத்தனை தருணங்களில் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதை யோசிக்கும் பொழுது என்னால் ஒரு உதாரணத்தையும் வெளிப்படுத்த முடியாத நிலையில் தான் இருக்கிறேன்.
தமிழகத்தின் தலைவர்களாக இருப்பவர்களிடம் ஒரு கவர்ச்சி இருக்கவேச் செய்திருக்கிறது. இதனை Charismatic என்று சொல்லலாம். மக்களை இழுக்கக் கூடிய தன்மை. பெரியார், காமராஜர் தொடங்கி இன்றைக்கு தலைவர்களாக இருக்க கூடிய திருமாவளவன் வரை அவர்களிடம் இயல்பாக தெரியக்கூடிய ஆளுமைத் தன்மை, போராட்டக்குணம், மக்களை கவரும் தன்மை போன்றவை ஸ்டாலினிடம் காணப்படவில்லை என்றே நான் நினைக்கிறேன்.
தமிழகத்தின் தலைவர்களாக இருக்கக் கூடியவர்களிடம் நல்ல பேச்சாற்றல் இருக்க வேண்டும் என்பதான ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் பேச்சாற்றல் மட்டுமே தலைவர்களை உருவாக்கி விடுவதில்லை. அதைக் கொண்டு மட்டுமே தமிழக மக்கள் தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுத்து விடுவதில்லை.
தமிழகத்தின் தற்போதைய பல தலைவர்களின் மேடை பேச்சுக்களை நான் கேட்டிருக்கிறேன். வைகோ, திருமாவளவன் போன்றவர்களின் பேச்சு அளவுக்கு ஸ்டாலினின் பேச்சு இருக்காது என்றாலும் அவர் மோசமான பேச்சாளர் அல்ல. ஸ்டாலின் மிகச் சிறப்பாக பேசக்கூடியவர் தான். சென்னை நகரின் மேயர் பதவி பறிபோன நிலையில் அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பேச்சை கேட்டிருக்கிறேன். நன்றாக பேசக்கூடியவர் தான். ஆனாலும் திருமா, வைகோ போன்றவர்கள் இத்தகைய தருணத்தில் எப்படி பேசி இருப்பார்கள் என்பதைக் கவனிக்கும் பொழுது ஸ்டாலினின் பலவீனம் நமக்கு தெரியவரும். வைகோ, திருமா போன்றவர்கள் இத்தகைய தருணத்தில் பேசும் பேச்சு சிலரையாவது சலனப்படுத்தி இருக்கும். ஆனால் ஸ்டாலின் யாரையும் சலனப்படுத்தவில்லை.
இன்றைய தமிழக அரசியல் தலைவர்களில் மோசமான பேச்சாளர் என்றால் அது டாக்டர் ராமதாஸ் தான். இவரது பேச்சை நான் ஒரு திருமண விழாவில் கேட்டிருக்கிறேன். இவர் பேச்சை அவரது கட்சியின் தீவிர தொண்டர்கள் கூட கவனித்ததாக தெரியவில்லை. ஒரு சில வார்த்தைகளை கோர்த்து மேடைப் பேச்சு தமிழில் பேசக் கூட இவருக்குத் தெரியவில்லை. சாதாரண பேச்சுத் தமிழில் தான் பேசினார். ஒரு சாதாரண அரசு மருத்துவராக இருந்து, அரசியல் பிண்ணணி இல்லாமல் ஒரு தலைவராக உருவாக இவரது பேச்சாற்றல் இரு காரணமாக இருந்திருக்கலாம் என்றே நான் அது வரை நினைத்திருந்தேன். ராமதாசின் வளர்ச்சிக்கு சாதி ஒரு காரணம் என்று வாதிட்டாலும், அந்தச் சாதியில் பல தலைவர்கள் இருந்தாலும் ராமதாசை மட்டுமே அந்த மக்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். அது போல தலித் சமுதாயத்தில் பல தலைவர்கள் இருந்தாலும் திருமாவளவன் தான் தலைவராக உருவாக முடிந்தது.
இங்கு ஒன்றை கவனிக்கலாம். பேச்சாற்றல், எதுகை மோனையுடன் கவிதையான பேச்சு, குட்டிக் கதைகள் இவற்றை மட்டுமே கொண்டு தங்கள் தலைவர்களை மக்கள் தேர்ந்தெடுத்து விடுவதில்லை. நல்ல பேச்சாற்றல் உள்ளவர் தான் தலைவராக உருவாக முடியும் என்றால் வைகோ பெரிய தலைவராகி இருக்க வேண்டும். ராமதாஸ் தலைவராகவே ஆகியிருக்க முடியாது. ஆனால் மக்கள் வேறு ஏதோ ஒரு குணத்தைக் கொண்டே தங்கள் தலைவர்களை தேர்தெடுக்கிறார்கள். இந்தத் தலைவர்களிடம் இருக்க கூடிய சில குணநலன்கள் மக்களை கவர்ந்திருக்க வேண்டும்.
அப்படி பார்த்தால் எனக்கு தெரிவது தலைவர்களின் செயல்பாடுகள், அவர்கள் மேற்கொள்ளும் "அதிரடி" நடவடிக்கைகள், பிரச்சனைகளை அணுகும் முறை, போராட்டக் குணம் போன்றவையே மக்களை கவருகிறது. தொண்டர்களிடம் தலைவர்கள் நெருக்கமாக பழகுவதே தொண்டர்களை கவருகிறது. இது இந்தியா என்று இல்லை, பல நாடுகளிலும் இவ்வாறு தான் இருந்து வருகிறது. தொண்டர்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத தலைவர்கள் பிரகாசிக்க முடிவதில்லை.
திமுகவில் வைகோவின் எழுச்சி தொண்டர்களிடம் அவர் கொண்ட நெருக்கத்தாலேயே நிகழ்ந்தது. வைகோவின் பேச்சாற்றல், அவரது கம்பீரம் நிறைந்த கவர்ச்சி, தொண்டர்களை அரவணைக்கும் முறை போன்றவற்றாலேயே வைகோ திமுகவில் ஒரு முக்கிய தலைவராக வளர்ந்தார். ஆனால் வைகோவை கலைஞருக்கு மாற்றாக திமுக தொண்டர்கள் நினைக்கவில்லை. கலைஞரின் போர்வாள், கலைஞருக்கு அடுத்த திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்பதாகவே வைகோவை கருதினர். எனவே தான் வைகோ கலைஞருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியதை நிறைய திமுக தொண்டர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. வைகோ திமுகவை பிளப்பார் என்று கருதப்பட்ட நிலையில் ஒரு சிறு பிரிவையே தன்னுடைன் வெளியே கொண்டுச் செல்ல முடிந்தது.
ஆனால் கலைஞருக்கு பின் ?
திமுக தொண்டர்கள் போர்க்குணம் நிறைந்த, பேச்சாற்றல் மிக்க வைகோவை ஏற்பார்களா, ஸ்டாலினை ஏற்பார்களா ?
இது தான் இன்றைய தமிழக அரசியலில் சுவாரசியமான கேள்வி
சாதாரண திமுக தொண்டன் இன்றும் வைகோவை விரும்புகிறான். கலைஞருடன் வைகோ இருந்தால் வைகோ மீது அவனுக்கு தனிப்பாசம் ஏற்படவே செய்கிறது. ஸ்டாலினுடன் ஒப்பிடும் பொழுது வைகோவிற்கு கவர்ச்சியும் அதிகம். ஆனால் வைகோ ஜெயலலிதாவுடன் செல்லும் பொழுது திமுக தொண்டனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவனால் எந்தக் காலத்திலும் ஜெயலலிதாவுடன் உறவாடுவதை ஏற்க முடியாது. வைகோவை ஜெயலலிதா பக்கம் கொண்டு செல்வதே திமுக தொண்டனை தக்க வைத்துக் கொள்ளும் சரியான முயற்சி. அதைத் தான் ஸ்டாலின் இந்த முறைச் செய்தார்.
அடுத்து ஆட்சியை பிடிப்பதை விட வைகோ மீதான அச்சமே கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் இருந்தது. அதனாலேயே வைகோ திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலையை உருவாக்கினார்கள்.
வைகோ மீது ஸ்டாலினுக்கு ஏன் இத்தகைய அச்சம் ? திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் யாரும் வைகோவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிந்தும் வைகோ ஏன் ஸ்டாலினை அச்சப்படுத்த வேண்டும் ?
ஏனெனில் திமுகவில் ஸ்டாலின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக எந்த ஒரு வளர்ச்சியையும் பெறவில்லை. அவருடைய வளர்ச்சி கலைஞர் என்ற
பிம்பத்தால் நிகழ்ந்தது. ஸ்டாலினின் தனிப்பட்ட எந்த குணநலனும் திமுக தொண்டனை கவர்ந்ததில்லை.
ஆனால் வைகோவின் வளர்ச்சி அவ்வாறு இல்லை. வைகோவின் வளர்ச்சி ஒரு இயல்பான வளர்ச்சி. எந்த ஒரு திட்டமிடுதலும் இல்லாமல் அடிமட்ட
தொண்டனாக தொடங்கிய வைகோ தன்னுடைய தனிப்பட்ட பண்புகளாலேயே வளர்ச்சி அடைந்தார். வைகோ வளர்ச்சி அடையும் ஒவ்வொரு சூழலிலும் அதனை தடுக்க கலைஞர் தன்னுடைய சாணக்கியத்தனத்தை நுழைத்துள்ளார். வைகோ தன்னை கொல்ல முனைந்ததாக கதை கட்டி திமுக தொண்டனை வைகோவிற்கு எதிராக மாற்ற முனைந்தார். இதில் அவருக்கு வெற்றி தான்.
அடுத்து ஜெயலலிதா வைகோவை கைது செய்த பொழுது, வைகோ சிறையில் இருந்த நிலையில் வைகோவிற்கு இயல்பாக எழுந்த அனுதாபத்தை
முறியடிக்க அந்த அனுதாபத்தில் தன்னையும் கலைஞர் இணைத்துக் கொண்டார். இன்று மறுபடியும் வைகோவை ஜெயலலிதாவிடமே வைகோவை கொண்டுச் சேர்த்து திமுக தொண்டர்களை வைகோவிற்கு எதிராக மாற்றி விட்டார். கலைஞரின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் வெற்றியே பெற்றார். வைகோ பலிகடாவாகவே மாறினார்.
இந் நிலையில் தேர்தல் முடிவு தான் பல நிலைகளை தெளிவாக்க முடியும்.
ஆனாலும், வைகோவால் திமுக தொண்டர்களை கவர முடியுமா ? ஸ்டாலினால் திமுகவை தன்னிடத்தே தக்க வைத்துக் கொள்ள முடியாதா ? என்ற கேள்விகளும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
இது ஒரு சுவாரசியமான எதிர்காலத்தை குறித்த அலசலாக இருப்பதால் இது குறித்த யூகங்களும் ஆர்வங்களும் வளர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.
அந்த வகையில் தான் இந்த பதிவை எழுத முனைந்துள்ளேன்
ஸ்டாலின் vs வைகோ, யார் வெற்றி பெற போகிறார்கள், உண்மையிலேயே இது ஒரு போட்டி தானா இல்லை ஊடகங்கள் உருவாக்கிய மற்றொரு தேவையில்லாத சர்ச்சையா ?
நன்றி:
http://thamizhsasi.blogspot.com/2006/03/vs-1.html
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 497
Threads: 12
Joined: Aug 2005
Reputation:
0
<img src='http://img93.imageshack.us/img93/5581/310320060040056jx.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
திமுகவில் 25 சீட் கிடைத்திருந்தால் எங்கு போய் இருக்கும் இவரின் வாதங்கள் எல்லாம். இவ்வளவு வீரம் பேசும் வைகோ தமிழகத்தில் வருடம் 800 கோடி இலாபம் சம்பாதிக்கும் குடிபானத் தயாரிப்பு நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை வெளிக் கொண்டு வருவாரா?? வைகோ அணி மாறியதற்கு சமீபத்தில் அவரது வலது கரமான நாஞ்சில் சம்பத் சொன்னது : கட்சிச் செலவிற்கு அதிமுக நிறையப் பணம் தருகின்றது அத்துடன் தனித்துப் போட்டியிட்டால் சென்ற முறைபோல் டெபாசிட்டையும் இழக்க நேரிடும். இது தான் உண்மை. அதிமுக தண்ணீர் போல் கோடிக் கணக்கில் செலவிடும் பணம் எங்கிருந்து வருகின்றதென்பதையும் வைகோ சொல்வாரா அல்லது சொதப்புவாரா?? திமுக வாஜ்பாயுடன் கூட்டணி வைத்து பின் காங்கிரசுடன் கூட்டணி வைத்ததைக் கண்டிக்கும் வைகோ ஏன் அதை அப்போதே கண்டித்து திமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைக்காமல் இருந்திருக்கலாமே?? இவரது நேர்மையைக் கணித்துத் தான் தான் தமிழக மக்கள் மதிமுகவை இதுவரை சட்டசபையில் நுழைய விடவில்லை. கட்சி தொடங்கி 13 வருடங்களாகியும் சட்டசபையில் ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில் இப்படி குறுக்கு வழியிலாவது ஏதாவது கிடைக்குமா என்று முயல்கின்றார். முயற்சி திருவினையாக்குமா?? அல்லது முகத்தில் அறையுமா?? விரைவில் தெரிந்து விடும்.
<i><b> </b>
</i>
Posts: 1,321
Threads: 76
Joined: Dec 2005
Reputation:
0
நன்றாக சொன்னீர்கள் வசம்பு....
இந்த ஏழைப்பங்காளன் வைகோ இப்போது உபயோகிக்கும் 65 லட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரை யார் வாங்கிக் கொடுத்தது என்று உலகுக்கு அறிவிப்பாரா?
,
......
Posts: 197
Threads: 3
Joined: Jun 2005
Reputation:
0
எல்லா தலைவனுங்க பேச்சிலை சோக்கா ஜமாய்கிறாங்க....இந்த லெக்சன் வந்து டைம்பாஸிங்குக்கு ஜாலியாய் இருக்குதுங்க..... <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
|