Posts: 123
Threads: 7
Joined: Nov 2003
Reputation:
0
நல்லதொரு கேள்வி..........நான் யாழினை கணணிப்பித்தன் என்ற யாழின் பழைய உறுப்பினர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டு உடனேயே அங்கத்தவராக பதிந்து சில கருத்துக்களையும் ஆரம்பத்தில் பதித்திருந்தேன். இப்போது கருத்துக்கள் எழுதுவது குறைவாக இருந்தாலும் தொடர்ச்சியாக, பெரும்பாலும் ஒவ்வொருநாளும் வாசித்து வருகின்றேன். ஏராளமான செய்திகள், தகவல்கள், பலரின் பார்வைக்கோணங்களை அறிவதற்கு உகந்த ஒரு இடமாக தொடர்ந்து இருந்து வருகின்றது. அத்துடன் மட்டுணர்த்தர்களின் பொறுப்பான செயற்பாடுகளினால் களம் சிறப்பாக செயற்படுகின்றது என்பது என் எண்ணம்.
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
யாழ் எப்படி அறிமுகமானது? நல்ல கேள்வி இளைஞன். யாழ், ஈழத்தில் இருக்கும் போதே அறிமுகமானது. அப்போது ஈழத்தில் வேலை செய்த இடத்தில் தனித்தனி நபர்களுக்கு இணைய இணைப்புக்கள் இருக்கவில்லை, (இப்போதும் இல்லை என்று தான் நினைக்கிறேன்). நிறுவனத்துக்கு பொதுவான இணைய சேவை வழங்கி நிலையம் ஒன்று இருந்தது. அங்கு மின்னஞ்சல் பாவிக்க, எமது பணி சம்பந்தமான தேவைகளுக்காக போவது வழக்கம், ஈழத்து இணைய வேகம் அங்கு இருந்த சிலருக்கு தெரிந்திருக்கும். சில நேரங்களில் ஒரு இணைய பக்கம் திறந்து அது முழுமை பெற நிமிடக்கணக்குகள் செல்லும். அதனால் பல இணைய சாளரங்களை திறந்து வைப்பதும் ஒன்று மாறி ஒன்றை பார்ப்பதும் வழக்கம். அப்படி இணைய பக்கங்களை திறக்கும் போது யாரொ பார்த்து இணைய விலாசம் பகுதியில் இருந்த யாழ்கள முகவரிக்கு ஏதேச்சையாக போக நேர்ந்தது. அப்போது உள்ள நேரத்தில் மேலோட்டமாக பார்த்ததுண்டு. மற்றும் படி அனைத்து பகுதிகளையும் பார்க்க நேரம் இருப்பதில்லை.
பின்னர் புலம் பெயர்ந்த பின், தனியான இணைய இணைப்பு, கணனி என வந்த பின் வீட்டில் இருக்கும் பொழுதுகளில் யாழுக்கும், ஏனைய தமிழ் தளங்களுக்கும் போவதுண்டு. அவ்வறு செல்ல முக்கிய காரணமாக இருந்தது எம் தாய் மொழியில் உரையாட யாருமே இருந்ததில்லை, இணைய வாசிப்பு தான் அக்குறையை போக்கும் ஒரே ஊடகம். உறுப்பினராக இணையும் எண்ணம் ஏற்பட்டதில்லை. அப்போது களத்தில் எழுதப்பட்டிருந்த சில ஆக்கங்கள், குறிப்பாக சங்கிலி மன்னனின் வாரிசு நெதர்லாந்தில் இருப்பதாக இணைக்கபட்ட செய்தி, மற்றும் பலருடைய நகைச்சுவையான எழுத்துக்கள் என பலதும் என்னை கவர உறுப்பினராக இணைந்து கொண்டேன்.
யாழ்களம், பல நல்லுறவுகளையும், பலரது அறிமுகத்தையும் ஏற்படுத்தி தந்தது. அத்துடன், அப்பொது புலம் பெயர்ந்த உடனடியான காலம், வீட்டில் இருக்கும் போது ஏற்படு தனிமை உணர்வை போக்குவதாக பலரது ஆக்கங்கள், எழுத்துக்கள் நகைச்சுவையாகவும்,சிரிப்பை வரவழைப்பதாகவும் இருந்தது.
யாழ்களதின் நெடும் பயணதில் நாமும் சில காலம்.... சேர்ந்து பயணித்தோம், பயணித்துகொண்டிருக்கிறோம், அது எது வரை தொடரும்....... ?? ஆனால் யாழை மேலும் வளப்படுத்த புதிது புதிதாக பலர் வருவார்கள்.......
யாழ் வேற்றி நடை போடும்......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 852
Threads: 18
Joined: Mar 2004
Reputation:
0
யாழ் இணையம் நான் சுவிஸ் நாட்டுக்கு விடுமுறையில் சென்றபோது என் ஒன்றுவிட்ட அண்ணா ஒருவரால் அறிமுகப் படுத்தப்பட்டது. எனினும் தமிழில் எழுத பெரிதும் முயற்சி எடுக்காத காரணத்தால் 2004 ஆரம்பம்வரை இணையவில்லை. யுனிகோட்டில் எழுதப் பழகியபின் கருத்துக்கள் பதிய ஆரம்பித்தேன். பார்க்காமலே நட்பு (காதல்) என்பதில் எல்லாம் நம்பிக்கையில்லை. எனவே எல்லோருடனும் அதிக ஒட்டுதல் இல்லை, பகையும் இல்லை. எனினும் யாழ் களம் தமிழர்களினால் மிகவும் விரும்பிப் பார்க்கப்படும் ஒரு தளமாக என்றென்றும் இருக்கும் என்றே நம்புகின்றேன்.
<b> . .</b>
Posts: 219
Threads: 48
Joined: May 2005
Reputation:
0
ம்.ம்.ம்.ம் .... நல்ல முயற்சி.எனக்கு யாழ் ஐ.பி சி வானொலி மூலம் இரண்டாயிரமாம் ஆண்டளவில்தான் அறிமுகமானது. மற்றைய இணைய இணைப்புக்களைப் பார்ப்பதற்கு யாழையே பயன் படுத்துவேன். .கடந்த ஒரு வருடமாகத்தான் எனது கருத்துக்களை முன்வைத்து வருகிறேன். நானும் யாழ் கள உறுப்பினருள் ஒருவன் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
யாருக்கு தெரியும்.
மறந்து போச்சு.
கன காலமாகிட்டுது தானே.
வயசும் போட்டுது.
யாழ் இணையம் முன்னர் எப்படி இருந்திருக்கும் என்று அறிய ஆவலாய் இருப்பவர்கள் கீழே உள்ள லிங்குககளை கிளுக்கிப் பார்க்கவும்.
1999 இல் யாழ்.
2000 இல் யாழ்.
2001 இல் யாழ்.
2002 இல் யாழ்.
2003 இல் யாழ்.
2004 இல் யாழ்.
அந்த நாளையில பாருங்கோ . . . ( அடேய் அடேய் அடங்குடா . . )
இப்படி யாராச்சும் கேள்வி கேட்டாத்தானே . . .
சைக்கிள் கப்பில நானும் படம் காட்டலாம் எண்டு பார்த்தா விடுறாங்கள் இல்லை.
சரி விசயத்துக்கு வருவம்.
யாழ் இணையம் எப்படி அறிமுகமானது?
அம்மாவான எனக்கு சரியா ஞாபகம் இல்லை.
இணையம் வந்த புதிசில . . .
தமிழுக்கும் நாட்டுக்கும் உருப்படியா யோசிச்சு இணையத்தைப் பாவிச்சது . . .
நோர்வேல இருக்கிற ரெண்டு மூண்டு சீவன்கள்.
அதில ஒண்டு உந்த யாழ் இணையம்.
ஆரம்ப காலத்தில நானும் வந்து உந்த களத்தில படுத்துக் கிடந்து . . . உருண்டு பிரண்டு . . . எழும்பிப் போறனான்.
எப்படியும் வருசத்தில 2 - 3 தரமாவது ரெஜிஸ்டர் பண்ணுவன்.
அடிக்கடி கடவுச்சொல்லை மறந்து போடுவன்.
பிறகென்ன இன்னொரு பேரில வாறதுதான்.
எழுதிறத எண்டா . . வாழ்க்கை வெறுக்கும்.
பிறகு என்ன மண்ணுக்கு யாழ் களத்துக்கு வாறனி எண்டு நீங்கள் எல்லாம் கேப்பீங்கள்.
மற்ற சனம் என்ன எழுதி இருக்குது.
வேலை இல்லாததுகள் எத்தனை உது வழிய திரியுதுகள் எண்டு பார்க்கத்தான்.
யாழ் இணையம் எப்படி அறிமுகமானது எண்டு கேட்டா அவனவன் தன்ட சுயசரிதம் எழுதி கொண்டு இருக்கிறான்.
8 வருசம் ஆகிட்டுதா?
நம்பவே முடியல.
எத்தனையோ . . இடர்கள், தடைகள், தொந்தரவுக்குள்ளால . .
(எல்லாம் ஒண்டுதான் போல . . .)
8 வருசமாச கொண்டோடின மோகன் அண்ணாவும் . .
அவருக்கு துணையா இருக்கும் அனைத்து சீவன்களும் . .
உங்கட காலை காட்டுங்கோ . . .
நன்றி ஐயா நன்றி . . .
தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு இப்படியான ஒரு இணையத்தை தந்ததற்கும் . . .
அதைத் தொடர்ந்து தரம் தாளாமல் பேணிக் கொண்டு இருப்பதற்கும்.
"வரலாறு என்னை விடுதலை செய்யும்."
அதையேன் இஞ்ச சொல்லுறன்.
அடச் சீ . . .
எதை எதை எங்க சொல்லுறது எண்டும் தெரியாது . . .
ஏதாச்சும் பஞ்ச் டயலாக் சொல்லுவம் எண்டா . . .
நமக்கு இருக்கிற ஒண்டே காணும்.
.. . .
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
சனியன் வயசு போனா ஒழுங்கா இணைப்புமா குடுக்கத்தெரியா? யாழ் முன்பு எப்பிடி இருந்ததென்று பார்க்க ஆர்வம் தான்...புறு புறுக்காம லிங் குடுத்தா நல்லது.
\\யாழ் இணையம் எப்படி அறிமுகமானது எண்டு கேட்டா அவனவன் தன்ட சுயசரிதம் எழுதி கொண்டு இருக்கிறான்.\\
கண்ணாடியைப் போட்டு வாசிக்க வேணும்....யாழ் உங்களுக்கு எப்பிடி அறிமுகம் என்பதுதான் கேள்வி !
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
அட சா..........மெனக்கட்டு ரைப் பண்ணினது வேஸ்றறறறறறறறறறறறறா
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Saniyan Wrote:லிங்க் குடுக்க மறந்து போனன்.
http://www.proud2btamil.com/yarl/
நன்றி
எல்லாம் சரி 2000 ஆண்டு யாழ் இணையதிலை உதயனுக்கு லிங் குடுத்திருக்கு போல ??
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 75
Threads: 7
Joined: Oct 2003
Reputation:
0
மோகன் அண்ணோய் . . .
1999ம் ஆண்டு சைட்டில உலகின் முதலாவது தமிழ் தேடல் பொறி எண்டு ஒண்டு கிடக்கு . . அது தேனீ தானே?
.. . .
Posts: 422
Threads: 10
Joined: Oct 2005
Reputation:
0
யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?
நல்லதொரு தலைப்பு.
ஆழ்ந்த நினைவகளை மீட்டிப்பார்க்கும் ஒரு தேடல்.
அதிலெழுகின்ற ஆனந்தத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் ஓர் இன்பம்.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒரு நண்பருடன் பேசிக்கொண்டிருக்கும்போது "யாழ் களத்தில்" என்று ஆரம்பித்து ஏதோவெல்லாம் கூறி மகிழ்ந்தார். அன்றே அவரிடம் முழுமையான முகவரியைப் பெற்று தினமும் வந்து வாசித்தேன்.
தினமும் பார்க்காதுவிட்டால் என்னவோ போலிருக்கும். அப்போது நானும் களத்தில் வந்து கருத்தெழுதவேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. அப்படி வாசித்துக் கொண்டிருக்கும்போதுதான் பலர் தமிழ்ச்சொற்களை எப்போதும் தவறாகவே எழுதிவந்தார்கள். இதனைப் பார்த்ததும் ஓர் இனிய பாயாசத்துள் சிறு சிறு கற்கள் கடிபடுவதைப்போல் இருந்தது. அவற்றைக் களையவேண்டும் என்கின்ற எண்ணத்தோடுதான் கடந்த வருடத்திலிருந்து களத்துள் நுழைந்து கருத்துக்களை எழுதிவருகிறேன்.
அவ்வப்போது சிலருக்கு அவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறேன். அதேவேளைகளில் நான்கூட தவறுகள் விட்டுவிடுகிறேன். அவற்றைச் சுட்டிக்காட்டுபவர்களுக்கு எனக்குள் நன்றி சொல்வேன். அப்போது சிரிப்புத்தான் வரும்.
எனக்குப் பிடித்தவைகள்: கள உறவுகளின் அறிவுபுூர்வமான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், முக்கியமாக பலவிதமான நகைச்சுவைகள் என்பன. ஆனால் சண்டை பிடிப்பதும், மற்றவர்கள் சண்டைபிடிப்பதைப் பார்ப்பதும் பிடிக்காது. (அண்மைக்கால அனுபவம் உட்பட).
இங்கே கருத்துக்கள் எழுதிவர்களின் அனுபவங்களைப் படிப்பதே ஒருவித ஆனந்தத்தைக் கொடுக்கின்றது.
பல வேலைப் பழுக்களின் மத்தியிலும் இந்தத்தலைப்பைப் பார்த்ததும் இன்று மீண்டும் களத்துள் நுழையவேண்டும் என்ற அவாவும் ஏற்பட்டது.
எல்லோருக்கும் என் நன்றிகள் பல.
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
எனக்கு யாழ் களம் எப்படி அறிமுகம் ஆனது எண்டா சுனாமி நடைபெற்ற சமயம் எமது வானொலி நிதி சேகரிப்பு நிகழ்வை தொடர்ந்து நாடாத்திக் கொண்டு இருந்த நேரம் இரவுப் பணியை எனக்குக் கொடுத்து இருந்தார்கள். சில நாட்கள் தனியாகவும் ஒரு சில நாட்கள் சக அறிவிப்பாளர்களுடனும் செய்து கொண்டு இருந்த போது தமிழ்நாதத்தில கவிதைகளுக்காகவும் செய்திகளுக்காகவும் பார்த்து கொண்டு இருந்தபோது அறிமுகமானது தான் யாழ்.
அந்த இரவுப் பொழுதில் உற்ற நண்பனாக இருந்தது. யாழ் களத்தில் வந்த சுனாமி பற்றிய கவிதைகளையும் செய்திகளையும் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. உண்மையைச் சொன்னால் யாழ் கள உறவுகளின் சுனாமி பற்றிய ஆழமான கவிதைகளைக் கேட்டு அந்த நள்ளிரவிலும் எமக்கு நிதி தந்தோர் பலர்....
அதற்கு பின்பு 2005 ஆம் ஆண்டளவில் நான் என்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 2,010
Threads: 258
Joined: Jun 2005
Reputation:
0
ஆஆ இப்ப ஒ கே வா?
அட விடமாட்டாங்கப்பா....
ஜயோ இப்படி தமிழ் பேசினா தான் அறிவிப்பாளளாராவே வரலாம் தெரியுமா?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
நல்லாக் கேளுங்கோ தூயவன் அண்ணா <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> லேசுப்பட்ட வானொலியா....இன்பத்தமிழ் வானொலி.
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>
Posts: 928
Threads: 32
Joined: Jul 2005
Reputation:
0
தூயவன் Wrote:வாழ்த்துக்கள் சுண்டல்
இன்று தான் அதிக சொல்களைப் பாவித்து மடல் எழுதியிருக்கின்றீர்கள். :wink: இருந்தாலும் ஒரு வானொலி அறிவிப்பாளருக்கு தமிழ் இப்படித்தான் வருமா??? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நல்லாக் கேளுங்கோ தூயவன் அண்ணா <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> லேசுப்பட்ட வானொலியா....இன்பத்தமிழ் வானொலி. :wink:
..
<img src='http://img301.imageshack.us/img301/354/xkittens015tx.gif' border='0' alt='user posted image'>