Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மணிமேகலை
#21
மணிமேகலை அக்கா தொடருங்க..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply
#22
<b>மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை</b>

உதயகுமாரன் கண்ட மணிமேகலையின் தோற்றம் அவனை மதிமயங்க வைத்தது.விளங்கொளி மேனியுடன் விண்ணவர் கூட வியந்து போற்றும் வனப்பையும் அழகையும் படைத்த மணிமேகலை, அவனுக்கு இனிய உணர்வுகளை ஊட்டுபவள் போல் தோற்றம் அளித்தாள்; அவன் கண்களுக்கு அவள் அவ்வாறு தென்பட்டாள். தாம் ஒரு நாட்டின் இளவரசன், அவளோ ஒரு நடனக் கணிகையின் மகள் என்ற எண்ணமே அவனிடம் இருந்தது. மணிமேகலையின் வனப்பையும் எழிலையும் கண்ட அவன் , அவள் மீது அளவு கடந்த வேட்கையை வளர்த்துக் கொண்டதால் எவ்விதமும் அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற வெறி கொண்டு நின்றான்.

மணிமேகலை. பற்றி நன்கு அறிந்ததால் சுதமதி " மன்னவனே, மணிமேகலை என்னைப்போன்ற ஒரு பெண்தான். ஆனால், கிரஞ்ச மலையை அழித்து வெற்றி வாகை சூடிய ஒப்பற்ற முருகனது இளமையழகை போன்று அழகனகத் திகழும் உன் இனிய தோற்றத்தை கண்ணாஅல் பருகி கழிப்படையும் தன்மையுடையவளல்லள், அவள் ஊழ் தருகின்ற தவக் கொடியாகும்; சாபமாகிய அம்பைக் கொண்டவள்; காமனைக் கடந்த வாய்மையள்" என்று உணர்த்தினாள்.

சுதமதியின் அறிவுரையோ , மணிமேகலை பற்றி அவனுக்கு எடுத்துரைத்ததோ அவன் அறிவிற்கு எட்டவில்லை. ஒருவனுடைய காம உணர்வு, வைரம் போன்று உறுதியாக இருந்தால் அவனை வேறு எதுவாலும் அமைதி படுத்த முடியாது எனக் கூறினான். சுதமதியை அன்பான வார்த்தைகளால் பேசி எப்படியும் மணிமேகலையை அடய் வேண்டும் என்று உறுதி கொண்டான்.

தன்னை அன்புடன் விசாரிப்பதை உணர்ந்த சுதமதி தன் சோக வரலற்றை கூறலானாள். உறுதி மிகுந்த நெஞ்சை உடைய என் தாயை இழந்தவுடன், என் தந்தையின் நிலமை மிகவும் கெட்டு விட்டது. வேள்வி முதலியவற்றை செய்வதில் துணை சென்றும் ஆலயங்களில் இறை வணக்கம் முதலியவற்றைச் செய்து வாழ்க்கை நாடாத்தி வந்தார். அப்போதுதான் எனது வாழ்வில் தவறு நடந்தது. நான் எங்கோ உயிரோடு இருக்கிறேன் என்பதை அறிந்த அவர், தென்றிசையாகிய குமரி நோக்கி வருவோருடனும் அவ்ரும் வந்தார். வழியில் காவேரி நதியில் நீராட வந்த போதுதான் இங்கே என்னைக்கண்டு வியப்புற்றார். எனது நிலையை கண்டு கண்ணீர் வடித்தார். நான் களங்கப்பட்டதால் இன்னொரு கணவனுடன் சேர்ந்து வாழ தகுதியற்றவளாயிருந்தேன். எனவே சமணப் பள்ளியில் சேர்ந்தேன். நான் சமணாப் பள்ளியிலும் தந்தை வெளியிலுமாக நாங்கள் வாழ்ந்து வந்தோம். இவ்வாறு இருக்கும் போது ஒரு நாள் ஒரு கொடிய பசு என் தந்தை மீது பாய்ந்து கொம்புகளால் அவரது வயிற்றை கிளித்துவிட்டது. எனவே வயிற்றிலிருந்த குடல் வெளி வந்து என் தந்தை பெரிதும் துன்புற்றிருந்தார்...

செவ்வரளி மலை போன்ற குடலைக் கையிலேந்தியவராய் நானிருந்த சமணப்பள்ளி வந்து சேர்ந்த தமக்கு உதவு செய்யுமாறு வேண்டினார். அந்தப்பள்ளி மறுத்தது மட்டுமின்றி என்னையும் என் தந்தையுடன் வெளியே அனுப்பிவிட்டது. சங்கதருமன் என்னும் பெயர் கொண்ட புத்த முனிவன் எங்களை கண்டு வேதனை கொண்டான். எங்கள் துயரநிலை அற்ந்தவனாகி, அவன் கையில் இருந்த பாத்திரதது என் கையில் தந்துவிட்டு, என் தந்தையை தம் தலையில் சுமந்தவனாய் புத்த பள்ளியில் கொண்டு சேர்த்து என் தந்தையின் துயர் போக்கினான். அன்று முதல் நான் புத்த பள்ளியில் இருந்து வருகிறேன் எனவே தான் மாதவி மணிமேகலை இவர்களின் நட்பு கிடைத்தது என தனது சோகக் கதையை கூறினாள்.அத்துடல் சிறு அறிவுரயும் சேர்த்து சொன்னாள். இவ்வளவு கூறிய பின்னரும். உதயகுமாரன் தனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. எவ்விதமும் சித்திராபதியின் மூலம் அவளை அடைய முயலுவேன் எனக் கூறி அவ்விடத்தை விட்டு சென்றான்
உதயகுமாரன் வெளியேறிய பின்னர் மணிமேகலை வெளி வந்தாள். " இவள் கற்பற்றவள், நல்ல தவ உணர்வு அற்றவள்" என்றெல்லாம் உதயகுமாரன் இகழ்ந்தாலும் என் மனம் அவன் பின்னே சென்றது அன்னையே, இதுதான் இந்தம் பொல்லாத காமத்தின் தன்மை போலும்! இவ்வாறு செல்வதுதான் காமத்தின் தன்மை என்றால் இதன் தன்மை கெட்டொழிக" என்று கூறியவண்ணம் நின்றாள் சுதமதியுடன்.

இந்திட விழாவை காணவந்த மணிமேகலா தெய்வம் புகார் பதியில் வாழுகின்ற ஒரு பெண்ணை போல் தோற்றம் கொண்டு அங்கு வந்தாள் உவவனத்தை அடைந்து புத்த பீடிகையை வலம் வந்து மனமுருக மெய்யுருக அவள் போற்றித்துதித்துக் கொண்டிருந்தாள்.
<b> .. .. !!</b>
Reply
#23
Niththila Wrote:சிலப்பதிகாரம் கோவலன் கண்ணகி மாதவியின் கதை

ஆமா என்ன ரொம்ப முட்டாளா இருக்கன் நான்... 5ம் பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்தை மட்டும் தான் நான் படித்திருக்கிறேன்... இப்பொது ரசிகையின் புண்ணியத்தில் மணிமேகலையையும் படித்துக் கொண்டிருக்கிறேன். நன்றி
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#24
Quote:சிலப்பதிகாரம் என்பது யாருடைய கதை??? நள தமயந்தி கதையா??


சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவர். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் சொல்லுவார்கள். இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன் என்னும் வணிகன், தலைவி கண்ணகி கற்பிற் சிறந்த குடும்பப் பெண், கோவலனின் மனைவி. இவர்களின் கதையே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#25
<b>சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை</b>

அந்திமாலைப்பொழுதில் மணிமேகல தெய்வம் அழகு மிக்க வடிவத்தில் மின்னல் கொடி போல அங்கே வந்து சேர்ந்தது. சுதமதியிடம் அந்த ஒளிமிக்க தெய்வம் தான் யாரெனக் கூறாமல் யாரோ ஒரு பெண் போல் இயல்பாகவே பேசலானது. " என்னம்மா. இந்த நேரத்தில் இங்கே நிக்கிறாய் என்ன ஆயிற்று உனக்கு?" என அன்பொழுக கேட்டது. மணிமேகலா தெய்வத்தை யாரென அறியாத சுதமதி அனைத்தையும் கூறினாள். அதனைக் கேட்ட மணிமேகலா தெய்வம் சுதமதியிடம் பேசத் தொடங்கியது.

நீ சொல்வதை பார்த்தால் உதயகுமாரன் மணிமேகலையின் மீது தணியாத காதலுடையவன் என்று தான் தெரிகிறது அவன் ஒரு அரசகுமாரன் ஆனதினால் அவனுக்கு நினைத்தை முடிக்கும் ஆற்றல் உண்டு என்பதை அறிவீர்கள்.ஒருவேளை இரவு நேரம் ஆதலால் இந்தச் சோலையின் வெளிப்பக்கத்தில் தன் ஆட்களுடன் வந்து நின்றாலும் நிப்பான். எனவே நீங்கள் வந்த நேரனா பாதை வழியே செல்லாது இந்தச் சோலையின் மேற்குப்பக்கத்திலுள்ள சிறு வாசல் வழிச்செல்வீர்கள் ஆனால் சக்கர வள கோட்டத்தை அடையலாம். அங்கிருந்து எந்தப் பயமும் இன்றிப் போகலாம்" என்றது.

" அம்மா, நீயும் மாருக வேகன் என்ற விஞ்சையனும் தானே இந்தக் கோட்டத்தை இவ்வாறு சக்கர வாளக்கோட்டம் என்கிறீர்கள் ; மற்ற அனைவரும் இதனைச் சுடுகாட்டுக் கோட்டம் என்கிறார்களே, ஏன் இவ்வாறு சொல்கிறார்கள் என வினாவினாள். இதனைக் கேட்ட மணிமேகலா தெய்வம் சக்கரவாளக்கோட்டத்தின் வரலாறை சொல்லத் தொடங்கியது. . மணிமேகலா தெய்வம் விளக்கி உரைத்ததும் மணிமேகலை இந்த உலகத்தில் பிறந்தோரின் வாழ்க்கை பற்றி ஓரளவு புரிந்து கொண்டாள். சக்கரவாளக்கோட்டத்தின் வரலாற்றை கூறிக்கொண்டிருக்கும் போதே சுதமதி தூங்கி விட்டதால் , மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மயங்க வைத்து தம்முடன் வான்வழியே தூக்கிச் சென்றது முப்பது யோசனை தூரத்திலுள்ள் மணிபல்லவம் என்னும் தெற்குப் பக்கத்திலுள்ள தீவு ஒன்றில் இறக்கிவிட்டது.
<b> .. .. !!</b>
Reply
#26
Anitha Wrote:
Quote:சிலப்பதிகாரம் என்பது யாருடைய கதை??? நள தமயந்தி கதையா??


சிலப்பதிகாரம் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று. இதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவர். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் சொல்லுவார்கள். இவர் இளவரசுப் பட்டத்தை விடுத்துத் துறவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலன் என்னும் வணிகன், தலைவி கண்ணகி கற்பிற் சிறந்த குடும்பப் பெண், கோவலனின் மனைவி. இவர்களின் கதையே.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

விளக்கத்துக்கு நன்றி அனித்தா.. நானும் அந்த கதையை படித்து இருக்கிறேன்.. ஆனால் தலைப்புத்தான் மறந்துவிட்டேன்..
http://vishnu1.blogspot.com

<img src='http://img81.imageshack.us/img81/6884/rooszwart16zr.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
<b>துயில் எழுப்பிய காதை</b>

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை மணிபல்லவத்தீவிலே இறக்கிவிட்டு, மணிமேகலையின் இனிய நினைவுகளால் புரண்டு கொண்ட தூங்காது எதை எதையோ கற்பனை செய்து கொண்டிருந்த உதயகுமாரனைச் சந்தித்ததும் அவனுக்கு அறிவுரை கூறியது. நீ வீணான முயற்சிகளில் இறங்கி உன் மனதை வருத்திக் கொள்ளாதே. அவள் புனித்மானவள், தவ வாழ்க்கையை மேற்கொண்டவள் என்பனவற்றை எல்லாம் மறந்து விடாதே." இவ்வாறு உதயகுமாரனுக்கு அறிவுறுத்தி விட்டு மணிமேகலா தெய்வம் நேராக சுதமதி தூங்கிக்கொண்டிருந்த இடம் சென்றது.

சுதமதியிடம் மணிமேகலா தெய்வம் உரைத்தது.
உவவனம் சென்ற மணிமேகலா தெய்வம் சுதமதியை எழுப்பி தன்னை இன்னார் எனக் கூறியது, இந்திரவிழாவை காணவந்த விபரத்தையும் தெரிவித்தது, மணிமேகலையின் துன்பத்தை தாம் அறிந்ததாகவும் கூறியது. மணிமேகலைக்கு புத்த மதத்தில் சேருவதற்கு வாய்ப்பு உள்ளது எனவும், அவளைத்தாமே எடுத்துச்சென்று மணிபல்லவம் என்ற தீவில் கொண்டு வைத்திருப்பதாகவும் அவள் தம்முடைய முற்பிறப்பு பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டு இன்னும் ஏழு தினங்களுக்குள் இங்கு வந்து சேருவாள் என்றும் உரைத்தது. மணிமேகலை இவ்வாறு வரும் நாளில் அந்த இடத்தில் சில அற்புதங்கள் நிகழும் என்றும், மாதவியிடம் தான் வந்து மணிமேகலையைத் தூக்கிச்சென்ற விபரத்தை கூறுமாறு சொல்லியது.

மாதவிக்குத் தன்னை தெரியும் என்றும் , மணிமேகலையை பெயர் சூட்டக் கோவலனும் மாதவியும் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது, தமது குல தெய்வத்தின் பெயரை இடவேண்டும் என்று கோவலன் மாதவிக்கு கூறியதை நினைவு படுத்தி தம் பெயரைச் சூட்டியதும்.அந்தத் தெய்வம் அப்போது தெரியபடுத்தியது. குழந்தைக்கு 'மணிமேகலை" என்று பெயர் சூட்டிய அன்று இரவு , மாதவியின் கனவில் தாம் தோன்றி, காமன் எதுவும் செய்ய முடியாமல் ஏங்கும்படி மாபெரும் தவக்கொடியாம் பெண்ணணங்கைப் பெற்றாள் மாதவி என்று கூறி வாழ்த்தியதை அவளுக்கு கூறி நினைவு படுத்த வேண்டும் என்றும் அந்த தெய்வம் கேட்டுக் கொண்டது.. இவ்வாறு எல்லாம் கூறிவிட்டு மணிமேகலா தெய்வம் அவ்விடத்தை விட்டு அகன்று விட்டது. இவையனைத்தும் சுதமதிக்கு ஒரு கனவு போல் இருந்தது.

மணிமேகலா தெய்வம் கூறிய வண்ணம் அவள் அந்த சக்கரவளக்கோட்டம் வழியே சென்றாள் அந்தப் பெருஞ்சாலையில் சம்பாபதி கோயிலின் கிழக்குப் பக்கமுள்ள தூணில் துவதிகன் என்பவனுடைய வடுவத்தை போன்று அமைக்கப்பட்ட பாவையிருந்தது. அந்தப்பாவை நாவுடைய பாவை என்றும் கூறுவார்கள். இந்தப்பாவை முக்காலத்தைப் பற்றியும் கூற வல்லது. அது சுதமதியிடம் பேச ஆரம்பித்தது. 'இரவிவர்மன் என்ற வேந்தனின் மகளே என்றும் துச்சன் என்ற அரசனின் மனைவியே என்றும் அவளை அழைத்தது. இதை உணர்ந்த சுதமதி விழித்தாள் முக்காலத்தையும் தெரிந்த பாவை விளக்கமாகப் பேசியது.

"உனது மூத்தாள் தாரை மது உண்டு மயங்கிய ஒரு யானையால் இறந்தாள்; அதைக் கேட்டப் பொறுக்க முடியாத நீயும் இறந்து போனாய். அந்தத் தாரை தான் மாதவி என்றும் கூறினாள். அப்பொழுது நீ வீரை என்னும் பெயருடன் உலவி வந்தாய், பின்னர் கௌசிகன் என்னும் அந்தணன் மகளாக வந்து பிறந்தாய். உன் இப்போதுள்ள பெயர் சுதமதியாகும். உனக்கு இலக்குமி என்ற பெயரில் ஒரு தங்கை இருந்தாள். அந்த இலக்குமி தான் இப்போது மாதவியின் மகளாக - மணிமேகலையாக வந்து பிறந்து இருக்கிறாள். இந்த மணிமேகலையும் தன்னுடைய பழம்பிறவியை உணர்ந்து தெளிந்தவளாய் இன்னும் ஏழு நாட்களில் இங்கு வந்து சேருவாள். நீ எதற்கும் அச்சம் அடைய வேண்டியது இல்லை என்று கூறியது.

பொழுது எப்போது புலரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த சுதமதி, நன்றாக விடிந்ததும் விரைந்து சென்று முந்தைய இரவு நடந்த அனைத்தையும் சொன்னாள். சுதமதி சொல்லிய அனைத்தையும் கேட்ட மாதவி பெரிதும் வேதனைப்பட்டாள். மகளின் பிரிவால் பெரிதும் வாடினாள். அவளுக்கு வந்த துயரத்தை எண்ணி வருந்தினாள்.
<b> .. .. !!</b>
Reply
#28
<b>மணிபல்லவத்துக் துயர் உற்ற காதை</b>

மணிமேகலை கண் விழிக்க அவள் பார்த்த காட்சிகள் அவளுக்கு புதுமையாகத் தோன்றியது. மணிபல்லவத்து மணல் வெளியில் உதிர்ந்து கிடந்த மலர் இதழ்களின் மேல் இரவெல்லாம் அவள் தூங்கி இருக்கிறாள். தாம் எங்குள்ளோம் என்று தெரியாத அவள் திகைப்புற்றாள். சுதமதியைக்காணாது பெரிதும் வருந்தினாள். சுதமதி தன்னை விட்டுவிட்டு எங்கயோ சென்று விட்டாள் என புலம்பலானாள்.கண்ணீருடன் புலம்பித்தவித்த மணிமேகலையின் முன்னர் ஒரு புத்தபீடிகை தீடீரென்று தோன்றியது.இந்தப் பீடிகையை அடைய வேண்டும் என்று கீழ்த்திசையை சார்ந்த நாக நாட்டு அரசர்கள் இருவர் போர் புரிந்தார்கள் என்பது வரலாறு. புத்தபீடிகையை கண்டதும்மணிமேகலை தம்முடைய சிவந்த கைகளைத் தலைமேல் தூக்கி வணங்கலானாள். அந்தப் பீடிகையை வணங்கியதும் அவள் முற்பிறப்பை பற்றி அறிந்து கொண்டாள்.


எப்போதும் கடலின் ஒலி கேட்டுக் கொண்டிருக்கும் அசோக நகரத்தை ஆண்ட இரவிவன்மன் மனைவியாம் அமுதபதி என்னும் பெருந்தேவியின் வயிற்றில் இலக்குமி என்னும் பெயருடன் பிறந்தேன் அத்திபதி என்னும் அரசனும் அவன் பெருந்தகை தேவியாம் சித்திரபுரத்தை ஆண்ட சீதரன் திருமகளாக விளங்கிய 'நீலபதி' என்னும் அரசிக்கும் மகனாகப் பிறந்த இராகுலன் என்பவரின் மனைவியானேன். இவ்வாறு நாங்கள் இனிதே வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒருநாள் உன்னிடம் வர இன்றிலிருந்து பதினாறாவது நாளில் என் கணவன் திட்டி விடம் என்னும் பாம்பு கடித்து இறப்பார் என்றும் நீ கூறினாய், மேலும் என் கணவரைத்தொடர்ந்து நானும் தீப்புகுந்து இறப்பதாகவும் உரைத்தாய். பின்னர் நான் காவிரிப் பூம்பட்டினத்தில் பிறக்கப் போவதாகவும் அங்கு சென்று பிறந்து வளர்ந்து வரும் நாளில் எனக்கு ஒரு பெருந்துன்பம் ஏற்படும் என்றும் தெரிவித்தாய்.

இந்தப் பெருந்துன்பத்தை மணிமேகலா தெய்வம் வந்து தீர்த்து வைப்பாள் என்றும் இந்தத் துன்பத்திலிருந்தும் என்னைக் காக்க, அந்தத் தெய்வமானது அங்கிருந்து யாரும் அறியா வண்ணம் தெந்திசை நோக்கி எடுத்துச் சென்று ஒரு தீவில் கொண்டு வைக்கும் என்றும் கூறினாய். புத்தபீடிகையை வணங்கும் பாக்கியம் கிடைக்கும் என்றும் உரைத்தாய். இவ்வாறு நான் புத்த பீடிகையை தொழுது வணங்கும் போது எனது பழம் பிறப்புப் பற்றிய உண்மைகளை அறிந்து கொண்டேன்.என்னை அந்த தீவிற்கு கொண்டு வந்த தெய்வம் என் கணவனைப் பற்றிக் கூறும் என்றாய். அந்த தெய்வம் வந்தவுடன் எனது கணவனைப் பற்றி கேட்டு அறிந்து கொள்ளலாம் என நினைக்கிறன், எனவே அந்த தெய்வத்தை காண துடிக்கிறேன். அந்த தெய்வத்தை இதுவரை காணவில்லையே என்ன செய்வேன் என மணிமேகலை ஏங்கி அழுதாள்.
<b> .. .. !!</b>
Reply
#29
<b>மந்திரம் கொடுத்த காதை</b>

புத்த பீடிகையை மணிமேகலை வணங்கி வந்ததால் அவள் தம்முடைய பழம் பிறவி பற்றி அறிய முடிந்தது. இவள் உண்மையிலே பெற்றவளாய் எண்ணினா. ஆகாயத்திலிருந்தும் ஒரு பூங்கொடி இறங்கி வந்தது போன்று அங்கே தோன்றியது அந்த மணிமேகலா தெய்வம்.!மணிமேகலா தெய்வம் புத்த பீடிகையை வணங்கிப் போற்றியதும் மணிமேகலை, மணிமேகலா தெய்வத்தை பார்த்து வணங்கியவளாய்" அருள் தாயே உன் ஒப்பற்ற திருவருளால் என் பிறப்பை உணர்ந்தேன். என் கணவன் எங்கேயிருக்கிறான்? என்று மிக்க ஆர்வத்துடன் கேட்டாள்.

அன்புடையவளே நீயும் இராகுலனும் ஒரு நாள் மலர்ச்சோலையில் இருந்தபோது, நீ உன் கணவ்ருடன் ஊடல் செய்துகொண்டாய். உன் மீது உயிரையே வைத்திருந்த உன் கணவன் அந்த ஊடல் போக்க உன்னிடம் எவ்வளவோ அன்புடன் நடந்து கொண்டான். அவ்வேளை, வானத்திலிருந்து "சாது சக்கரன்" என்பவர் இறங்கி வந்து உங்கள் முன் தோன்றினார், நீ உடனே உன் கணவரிடம் கொண்ட கோபத்தை விட்டுவிட்டு, அவரை வணங்க ஆரம்பித்தாய். அதனால் உன் கணவனோ " யார் இவர்?? என்று கேட்டு நின்றான். இதைக் கேட்ட உன் உள்ளம் பதை பதைக்க ஆரம்பித்தது. தெய்வ அருள் பெற்ற ஒருவரை- எல்லோரும் வணங்கிப் போற்றுதற்குரிய மகானை போய் தன் கணவர் இவ்வாறு கேட்கிறாரே என்று எண்ணியவளாய் உன் கணவரின் வாயைப் பொத்தி " வந்திருப்பவரின் அருமை பெருமைகளை தெரியாமல் இவ்வாறு கேட்கலாமா என்று கோபித்து அவனையும் சேர்த்து அந்த தெய்வ அருள் பெற்ற முனிவரின் காலில் விழச் செய்தாய்.

இவ்விதம் இருவரும் அந்த முனிவரை வணங்கி அவரை உணவருந்திச் செல்லுமாறு அன்புடன் வெண்டினாய்.நீயும் உன் கணவரும் மிகவும் பய பக்தியுடன் உணவு பரிமாறினீர்கள். அன்று அந்த மாமுனிக்கு அன்புடன் உணவளித்து உண்ண வைத்த அறச் செயலே இப்பூது உன் பிறப்பை நீக்குதற்குக் காரணமாக அமைந்தது. அந்த உன் கணவனான இராகுலந்தான் இப்போது உன் மீது ஆறாக்காதல் கொண்டு உன்னை அடையத் துடிக்கும் உதயகுமாரன் ஆவான். உன்னிடம் அவன் காதல் கொண்டு அலைவது போன்று அவனிடமும் உன் மனம் நாடக் காரணமும் முற்பிறவியிலுள்ள கணவன் மனைவி உறவேயாகும். இவ்விதம் உன்னை அவன் நாடி திரிந்த காரணத்தால் தான் உன்னைச் சுதமதியிடமிருந்து இந்த இடத்திற்கு கொண்டு வந்தேன்ன் என்றது அந்த தெய்வம். முற்பிறவியில் உனக்கு சகோதரிகளாக இருந்த தாரை வீரை என்பவரே இப்போ மாதவியும் சுதமதியும் ஆவர் என்று கூறினாள்.

நீ அறிய வேண்டியவைகளையும் பழைய பிறப்பு வரலாறுகளையும் அறியும் வாய்ப்பு பெற்றாய். மற்ற சமயவாதிகளுடைய கொள்கை என்ன , அவற்றின் சிறப்பு என்ன என்பவற்றையும் நீ அறிந்து கொள்வாய். அந்தச் சமயவாதிகள் உன்னை மிகவும் இளையவள் என்று கருதி உனக்கு அவை ப்ற்றிச் சொல்லாவிட்டால் நீ வேற்றுரு கொள்வது நல்லது. என்று கூறி அந்த தெய்வம் வேற்றுருவம் பெறத் தகுந்த மந்திரத்தையும் வான்வழியே செல்லத்தக்க சக்தி தரும் மந்திரத்தையும் உபதேசித்தது. "புத்தபிரான் போற்றிக் கூறியருளிய உயர்ந்த நல்ல "புத்தபிரான் போற்றிக் கூறியருளிய உயர்ந்த நல்ல அற வழியில் செல்லல் உறுதி என்பதை உணர வேண்டும்" என்று கூறியவண்ணம் புறப்பட ஆயத்தமானது. பின்னர் மீண்டும் வந்து, உயர்ந்த விரத்ங்களை காத்து நிற்பவளே, உணவின் அடிப்படையில் தான் இந்த மக்கள் வாழ்க்கை அமைந்துள்ளது. எனவே இந்த கொடிய பசியை போக்கிடும் இந்த மந்திரத்தையும் நீ தெரிந்து கொள்வாய்: என்று மணிமேகலா தெய்வம் அந்த மந்திரத்தையும் மணிமேகலைக்கு கூறிச் சென்றது.
<b> .. .. !!</b>
Reply
#30
<b>பாத்திரம் பெற்ற காதை</b>

மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு மந்திரங்களை உரைத்து சென்ற பின்னர், மணிமேடலை ஓரளவு நிம்மதியுடன் அந்த தீவிலே உலவி வந்தாள். அவளுக்கு தன்னிடம் ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. முன்னர் அவள் உள்ளத்தில் இருந்துவந்த பயம் அவளை விட்டு நீங்கிவிட்டத்ய். மணிமேகலை அந்தத் தீவில் உலவிக் கொண்டிருக்கும் போது தீவதிலகை என்ற பெண் தோன்றினாள். அவள் யாரெனக் கேட்டதும் மணிமேகலை எல்லா உண்மையையும் சொன்னாள். மணிமேகலை தன்னைப் பற்றிக் கூறி மணிமேகலா தெய்வம் தூக்கி வந்து அருள் செய்வதை கூறியதும். மணிமேகலைபற்றி உயர்ந்த எண்ணாத்தை தீவதிலகை கொண்டாள். என்வே மணிமேகலையிடம் தன்னைப் பற்றி தெரிவித்தாள்.

தருமத் தலைவனாம் புத்த பெருமானது நல்லறத்தைப் பின்பற்றி நடப்பவர்கள் இந்தப் புகழ் பெற்ற புத்த பீடிகையைக் கண்டு தொழுதால் நன்மைகளையெல்லாம் அடைவார்கள். தமது பழைய பிறப்பு உணர்வைப் பெறுவார்கள். எனினும் இங்கு வந்து இந்த புத்த பீடிகை முன்னால் குவளையும் நெய்தலும் நெருங்கி மலர்ந்து ஒளி விடும் கோமுகி என்னும் சிறப்பு கிக்க பொய்கை ஒன்று உள்ளது. புத்தபிரான் அவதரித்த நாளில் அமுதசுரபி என்னும் அருள் நிறைந்த உணவு வழங்கும் பாத்திரம் இந்த பொய்கைல் வெளிவந்து காணப்படும். இவ்வாறு அமுதசுரபி தோன்றும் அந்த ஒப்பற நாள். இந்நாள் தான். இதைப்பற்றி மேலதிக விவரம் தேவையாயின் நீ அறவணடிகளிடம் கேட்டு தெரிந்து கொள். என்றாள். மணிமேகலை இதை கேட்டு மகிழ்ந்தவளாய் மீண்டும் அந்தப் புத்த பீடிகையை வணங்கி எழுந்தாள்.

புத்த பீடிகையை உள்ளமுருக வேண்டிய மணிமேகலை, பின்னர் தீவதிலகையுடன் அவள் குறிப்பிட்டுக கூறீய புனித பொய்கையை அடைந்தாள். மணிமேகலை அந்த பொய்கைய சென்று வணங்கி நின்றதும் பொய்கையின் நடுப் பக்கத்திலிருந்து எழுந்த அமுதசுரபி விரைவாக மணிமேகலையின் கைகளை அடைந்தாள். அள்ள அள்ள குறையாது அமுதத்தை வழங்கும் அமுதசுரபி கிடைத்ததும் தீவதிலகை மணிமேகலையிடம் பசிப்பிணியின் கொடுமை பற்றிக் கூறினாள்.அவளுக்கு கிடைத்த அற்புத அமுதசுரபி மூலம் எண்ணற்றோரின் பசிபிணியை போக்குமாறு வேண்டினாள். உணவுக்கு ஏங்கும் அவல நிலை இனி இருக்க கூடாது என மணிமேகலை முடிவு செய்தாள்.


தெய்வம் கூறிய ஏழு நாட்கள் கழிந்து விட்டனவே இதுவரை மணிமேகலை வரக் காணோமே என மாதவி புத்தர் பள்ளியில் வாடிப் போய் நின்றாள். அதே நேரத்தில் மணி பல்லவத்தில் தீவதிலகை மணிமேகலையை புகாருக்கு புறப்படச் சொன்னாள். புத்தபீடிகையயும் தீவதிலகையும் வணங்கி கையில் அமுத சுரபியுடன் வானத்தின் வழி புறப்படும் மந்திரத்தை உச்சரித்த வண்ணாம் புறப்பட்டாள்.புகாரை அடைந்த மணிமேகலை தனது அவ்ர்களது முற்பிறப்பை பற்றி கூறி அந்த அமுதசுரபுயை வணங்குமாறு வேண்டினாள். மணிமேகலைத் தீவில் நடந்த நிகழ்ச்சியை கேட்ட அவர்கள் வியப்பும் மகிழ்வும் அடைந்தார்கள்.
<b> .. .. !!</b>
Reply
#31
<b>அறவண அடிகளை தொழுத காதை</b>

அறவணடிகளைச் சந்திக்க வேண்டும் என்ற பேரவாவால் தன் தாயாருடனும் சுதமதியுடனும் புத்த பள்ளி சென்றாள். அறவணடிகள் எங்கு உள்ளார் என்று கேட்டு முதிய நிலையில் இருந்த அறவணடிகளை வணங்கி பணிந்து உபசரித்தாள்.. அடிகளிடம் மணிமேகலை தான் உவவனம் சென்றதையும்,அங்கு நடந்த நிகழ்ச்சி அனைத்தையும் ஒன்று விடாது கூறினாள். இவ்வாறு மணிமேகலை உரைத்ததும் அனைத்தும் கேட்டு அறிந்தார் அடிகள். அவர் உள்ளம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. மணிமேகலா தெய்வத்தின் அருள் பெற்ற மணிமேகலையை அவர் பெரிதும் பாராட்டியுரைத்தார்
அறவணடிகள் புத்த பெருமானின் பெருமைகளை கூறினார் அப்புறம் மணிமேகலையின் சிறப்புக்களை கூறினார்.

மணிமேகலா தெய்வத்தின் அருளைப் பெற்றவளே நீ இந்த நாட்டில் பலவிதமான அற்புதங்களை செய்ய போகிறாய். இவ்வாறு நீ நிகழ்த்த போகின்ற புதுமைகளுக்கு பிறகு தான் எனது அறிவுரைகள் உனது மனதில் ஆழமாகப் பதியும். உன்னுடன் வந்திருக்கும் மாதவி சுதமதி இருவரும் பாதபங்கஜ மலையை தரிசித்த பின்னர் புத்த பெருமானின் திருவடிகளை வணங்கி எல்லா விதமான தீய வினைகளிலிருந்தும் விலகி உயர் பெரும் வீட்டும் பேற்றையடைவார்கள். உன்னிடம் அளிக்கப்பட்ட அமுதசுரபியால் மக்கள் பசி மட்டுமன்றி தேவர்களின் பசியையும் போக்க வேண்டும்; இதுவே சிறந்த அறமாகும். எனவே இந்த உலகத்திலுள்ள அத்தனை உயிர்களின் பசிப்பிணியை தீர்த்து சிறப்புடன் வாழ்வாயாக என்று வாழ்த்த அவ்விதமே செய்வதாக மணிமேகலை பணிவுடன் கூறினாள்.
<b> .. .. !!</b>
Reply
#32
<b>ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை</b>

அமுதசுரபி என்னும் மாபெரும் பாத்திரத்தை மடக்கொடியாம் மணிமேகலைகருளிய ஆபுத்திரனின் வரலாற்றை அறவணடிகள் கூறினார். வாரணாசியில் அபஞ்சிகன் என்ற ஏழைப் பிராமணனின் மனைவி சாலி என்பவள் சந்தர்ப்ப வசத்தால் கற்பிழந்து விடுகிறாள். இந்தப் பாவத்தை போக்க தெற்கே கன்னியாகுமாரி முனை சென்று தீர்த்தமாடிச் செல்ல எண்ணிப் புறப்பட்டாள். ஒவ்வொரு ஊராகத் தங்கி தங்கி வந்தாள். அப்போது அவள் சூல் கொண்டிருந்த காரணத்தால் அவளால் மேலும் நடக்க முடியவில்லை. பாண்டி நாடு வந்த அவள் கொற்றாகைகருகே ஒரு தோட்டத்தில் ஆண் குழந்தையை ஈன்றாள். அவள் செய்த பாவச் செயலால் அந்தக் குழந்தையை பேணி வளர்க்க முடியாத நிலையில் சென்றாள். அந்த குழந்தை அழுதவண்ணம் இருந்தது. இதைக் கண்ட பசு ஒன்று பசித்து அழுது கொண்டிருந்த அக்குழந்தைக்கு தனது மடி பாலைக் கொடுத்தது.

அவ்வழியால் வந்த பூதி என்னும் பெயர் கொண்ட அந்தணன் அக்குழந்தையை எடுத்து ஆபுத்திரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். வேள்வி என்ற பெயரால் பசுவை கொலை செய்து வரும் படுபாதகச் செயல்களை அவன் வெறுத்தான். இதனால் அவன் பல பிரச்சினைகளை எதிர் நோக்கி அவ்வூரை விட்டு துரத்தப்பட்டான். அந்த ஊரை விட்டு தென்மதுரை சென்று இரந்து கிடைத்ததில் பெரும் பங்கை கூன் குருடு எதுவுமே இயலாத ஏழையர் இஅவ்ர்களுக்கு அளித்து , மிஞ்சியதைத் தான் உண்டு வந்தான். நம் வயிற்றை வளர்ப்பதுக்கு மட்டுமல்லாது பிறர் வாழவும் கையேந்தினான். நோயால் துடித்து துவண்டவர்களுகெல்லாம் உதவினான்; அவர்களின் துரம் போக்கி ஒரு நிம்மதியைக் கண்டான்.
<b> .. .. !!</b>
Reply
#33
<b>பாத்திர மரபு கூறிய காதை</b>


பசியால் வாடுவோர்க்கு தாம் இரந்து கொண்டு வந்தை அளித்து அவ்ர்கள் பசிபோக்கியவன் ஆபுத்திரன். ஒருநாளிரவு அம்பலத்தில் சிலர் வந்து அவனை எழுப்பி தம்பசியை பற்றிக் கூறினார்கள். ஏதாவது உதவியை அவன் செய்வான் என அவ்ர்களுக்கு நம்பிக்கை இருந்தது. அவனால் அந்த இரவு எதையும் கொடுக்க முடியாதகாரணத்தால் பெரிதும் வருந்தினான், தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறுவதை விட இறைவனிடம் மனமுருக வேண்டினான். அவன் கண்களிலிருந்து நீர் சுரந்து பெருகியது. இவ்வளவு இரக்கப்பட்டு வேண்டிய ஆபுத்திரன் முன் சிந்தாதேவி தோன்றினாள். ஆபுத்திரா வருந்தாதே, இந்ததிருவோட்டில் உணவு இருக்கிறது. இந்த நாடே வறுமையுற்றாலும் இந்தத் திருவேட்டுக்குக் குறைவு வராது.. அள்ள அள்ளா பெருகிக் கொண்டே வரும். எனவே உன்னைப் பசி என நாடி வருபவர்களுக்கு எல்லாம் உணவு வழங்கிக் கொண்டே இரு. இது உயிர் காக்கும் உணவான் அமுதத்தை தருவதால், அதாவது சுரப்பதால். அமுத சுரபி என்று சொல்லலாம். என்று கூறி அதை அவனிடம் கொடுத்தது. ஆபுத்திரனுக்கு தெய்வத்தின் அருளால் அமுதசுரபி கிடைத்ததும் ஏழை எளியவர்களின் துயரை தீர்த்து வைத்தான்.

தேவலோகத்தில் வசிக்கும் இந்திரன் ஆபுத்திரனை அணுகி தன்னை அறிமுகம் செய்து கொண்டான். ஆபுத்திரா நான் இந்திரன் நீ அன்னதான்ம் செய்து எல்லோர் புகழையும் பெற்றாய், நீ இவ்வாறு செய்வதால் அதற்குரிய பயன் என்ன உண்டோ அதை என்னிடம் பெற்றுக் கொள் என்றான். இதைக் கேட்ட ஆபுத்திரன் நகைத்தான். இந்த நாட்டில் இல்லாதது வானுலகத்தில் என்ன இருக்கிறது என்று கர்வமாக பேசினான். இதனால் வருத்தமடைந்த இந்திரன் அவனது கர்வத்தை போக்க எண்ணி நாட்டில் மழை வர செய்து பசி பட்டிணி எல்லாம் போக்கினான். இதனால். ஆபுத்திரனிடம் உணவு கேட்டு வருவோர் எண்ணிக்கை குறைந்தது.இதனால் ஆபுத்திரன் பெரிதும் துயர் உற்றான். எனவே ஊரை விட்டு பாண்டி நாட்டை விட்டுச் செல்ல வேண்டியவன் ஆனான். ஒவ்வொரு இடமாகச் சென்று யாருக்காவது உணவு வேண்டுமா எனக் கேட்டான். இவ்விதம் கேட்டுக் கொண்டு த்ரிகிறானே இவன் என்ன பைத்தியமா என மக்கள் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஊர்தோறும் நாடுதோறும் ஆபுத்திரன் அலைந்து கொண்டிருக்க சாவக நாட்டிலே கடுமையான பஞ்சம் என்று அவன் கேள்விப் பட்டான். எனவே அங்கு செல்ல எண்ணி அவன் கப்பல் ஏறிவிட்டான். கப்பலில் சென்று கொண்டிருந்தவன் கற்பனையில் மிதந்த வண்ணம் சென்றான். கப்பல் சென்று கொண்டிருக்கும் போது காற்று கடுமையாக வீசியதால் மேலே செல்ல முடியாது மணிபல்லவத்தில் கப்பல் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மணிபல்லவத்தில் கப்பல் நின்றதால் ஆபுத்திரன் இறங்கி மணிபல்லவத்தை பார்த்து வர புறப்பட்டான். திரும்பி வருவதற்குள் அனைவரும் வந்துவிட்டார்கள் என்ற எண்ணத்துடன் மாலுமி கப்பலை ஓட்டிச் சென்று விட்டான். இதன் காரணத்தால் அவன் அங்கு தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது,

பல உயிர்களை காத்து போற்றுகின்ற அட்சய பாத்திரத்தை வைத்துக் கொண்டு தனி ஒரு மனிதன் சாப்பிடுவதில் என்ன நன்மை ஏற்படும் என்று எண்ணிய ஆபுத்திரனுக்கு வெறுப்பு தோன்றீயது. எனவே அவன் அமுதசுரபியை மேலும் வைத்துக் கொள்ள விரும்பாது. நீ ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஒப்புரவாளர்கள் யாராவது வந்தால் அவர்கள் உண்மையானவர்கள் என்றால் நீ அவர்களுடைய கைகளில் சென்று அடைய வேண்டும் அவ்ர்கள் மூலம் உன் தொண்டு சிறக்க வேண்டும் எனக் கூறி அந்தப் பாத்திரத்தை வண்ங்கி கோமுகி என்னும் பொய்கைல் வீசி எறிந்தான். பின்னர் உயிர் வாழ பிடிக்காது. உண்ணா நோன்பு இருக்க புறப்பட்டான். அப்போது அறவணடிகள் அங்கு சென்றிருக்கிறார். அவனைப் பற்றி கேட்டு அறிந்து கொண்டார் அவ்ர் எவ்வளவே சொல்லியும் கேட்காமல் உண்ணா நோன்பு இருந்து உயிர் விட்டான். அவன் விரும்பியது போல சாவக நாட்டு வேந்தனின் பசு வயிற்றில் பிறந்தான்
<b> .. .. !!</b>
Reply
#34
<b>
பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை.</b>


ஆபுத்திரனுக்கு பாலூட்டிய பசு தெய்வ அருளால் அதுக்கு பொன் கொம்புகளுடன் பொற் குழம்புகளுடனும் சாவக நாட்டிற்கு சென்று தவள மலை என்னும் மாமலயில் தவம் செய்து கொண்டிருந்த மண்முக முனிவரை அடைந்தது. இந்த மாமுனிவர் அந்தப் பசு வயிற்றில் இருந்து அற்புதங்கள் செய்யும் ஒருவன் பிறக்க போகிறான் என்றான். புத்தர் புறந்த வைகாச பூரண பௌர்ணமியன்று குறிப்பிட்ட பசுவின் வயிறில் ஆபுத்திரன் மீண்டும் வந்து பிறந்தான். அன்று பல நற்குறிகள் தோன்றின. இதே நற்குறிகள் புத்த பெருமான் பிறக்கும் போதும் ஏற்பட்டது என்று கூறக் கேட்ட சாவக மன்னன் தனக்கு வாரிசி இல்லாத காரணத்தால் அந்த அதிசய குழந்தையை தாம் வளர்க்க விரும்பினார். அவ்வாறு வந்தவனே தற்போதைய சாவக நாட்டு மன்னனாக விளங்கிறான். அங்கு இப்போது பெரும் பஞ்சம் ஆகவே அங்கு செல்லுமாறு கூறினார். அவரது கூற்றின் படியே மணிமேகலை தாயாருடனும் சுதமதியுடனும் அங்கு புறப்படலானாள்.

ஆபுத்திரன் மூலம் கிடைக்கப் பெற்ற அமுதசுரபுயில் முதலில் ஒரு பத்தினிப்பெண் பிச்சையிட வேண்டும் பின்னர் அந்திலிருந்து எடுக்க எடுக்க உணவுப் பொருள் வந்து கொண்டிருக்கும். எனவே பிக்குணி வேடம் பூண்டு கையில் அமுதசுரபியை கையில் ஏந்திய வண்ணம் நகர்ப்புற வீதியை அடைந்தாள்.பத்தினிப் பெண்ணொருத்தி தனது அமுதசுரபியில் உணவு இடுதலே சிறப்பாகும் எனக் கூற காயசண்டிகை எனும் பெண் அவளிடம் வந்து ஆதிரை என்ற உயர் கற்புடைய பெண்ணின் வீட்டைப் பற்றிக் கூறினாள்.
<b> .. .. !!</b>
Reply
#35
<b>ஆதிரை பிச்சையிட்ட காதை.</b>

காயசண்டிகை ஆதிரையின் கற்பைப் பற்றி பெரிதும் போற்றியுரைத்தாள். தன் கணவன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு தானும் அவ்வழி செல்ல தீக்குளித்தாள். குளிர்ந்த நீர் போல் அத்தீயானது அவளைக் குளிப்பாட்டியது. இதனால் ஆதிரை பெரிதும் வேதனையுடன் கண்ணீர் உகுத்து நின்றாள் அப்போது ஒரு அசரீரி கேட்டது ஆதிரை உனது கணவன் உயிரோடிருக்கிறான்.அவன் நாகர் வாழும் மலைப்பகுதியில் பத்திரமாகவே உள்ளான் விரைவில் பொன்னுடனும் பொருளுடனும் இங்கு வந்து சேருவான். என்ற குரல் கேட்டு மகிழ்ந்தாள். ஆதிரை மணிமேகலையை பற்றி கேள்விப் பட்டவள் அவள் வெளியே வந்து மணிமேகலையை வண்ங்கி அவள் வைத்திருந்த பாத்திரதில். நிறையும் அளவு உணவிட்டாள். இந்த உலகத்தை பிடித்திருக்கும் பசிப்பிணி ஒழிய வேண்டும் என வாழ்த்தினாள்.
<b> .. .. !!</b>
Reply
#36
உங்கள் பணிக்கு நன்றி ரசிகை.
ரசிகை காதை காதை என எழுதுறீங்களே. அது என்ன கதை என்று வருமா? இல்லை அதற்கு வேறேதும் அர்த்தமா?
----------
Reply
#37
ஒவ்வொரு பகுதியையும் காதை என்று சொல்கிறார்கள் எனக்கு சரியா தெரியவில்லை அதுக்கு என்ன அர்த்தம் என்று :?
<b> .. .. !!</b>
Reply
#38
<b>உலக அறவி புக்க காதை,</b>


கற்புடைய செல்வி ஆதிரை இட்ட உணவு அமுத சுரபியில் விழுந்ததும் அது பெருகி வளர்ந்த்து. இதனால் அமுதசுரபு வந்தவர்களுகெல்லாம் உணவு வழங்கும் ஆற்றலைப் பெற்றுத் திகழும் என்று மணிமேகலை நம்பினாள்.காயசண்டிகைக்கு ஆறாப் பசி. எவ்வளவு உணவு உண்டாலும் தன் பசி தீரவில்லை எனவே மணிமேகலையிடம் வேண்டினாள் நீ தான் எனது பசியை போக்க உணவு தந்தருள வேண்டும் என்று, மணிமேகலை அதிலிருந்து ஒரி பிடி உணவை எடுத்தி கொடுக்க அவளது கொடிய யானைப் பசி தணிந்தது. காயசண்டிகை தனக்கு ஏன் ஆறாப் பசி ஏற்பட்டது என்னும் வரலாற்றை மணிமேகலைக்கு கூறினாள். அத்துடன் சக்கரவாளக் கோட்டத்தில் செல்லுகின்ற பாதையில் உள்ள உலக அறவியில் பசியால் வாடுவார்கள் நோயால் நலிந்து போய் இருப்பார்கள் அங்கு மணிமேகலை சென்று அவ்ர்கள் துயர் துடைக்க வேண்டும் என அவள் வேண்டினாள்.

காயசண்டிகை கூறியது போன்று உலக அறிவிற்கு மணிமேகலை சென்றாள். சம்பாதி கோயிலையும் கந்திற் பாவையையும் வணங்கினாள். கையில் அமுதசுரபியுடன். அங்கு நின்று எல்லோரது பசியையும் போக்கினாள். அவர்களது முகமலர்ச்சி கண்டு தானும் மகிழ்வுற்றாள்.
<b> .. .. !!</b>
Reply
#39
<b>உதயகுமாரன் அம்பலம் புகுந்த கதை.</b>

மணிமேகலை இவ்வாறு செய்வதை பெரிதும் விரும்பாத மாதவியின் தாயாரான சித்திராபதிக்கு கோவமும் வருத்தமும் ஏற்பட்டது. அவள் உதயகுமாரனை மாளிகை சென்று அவனைக் கண்டு அவன் மணிமேகலை மேல் கொண்ட ஆசையத் தூண்டி விட வேண்டும் என முடிவு செய்தாள். மணிமேகலை அடைய எண்ணி முயன்று பார்த்து தோல்வியுற்ற உதயகுமாரன் ஓரளவு அமைதியுடனே காணப்பட்டன் சித்திராபதின் தூண்டுதல் அவனிடம் மணிமேகலை பற்றிய எண்ணத்தை வளர்த்திட உதவியது. சித்திராபதியுன் தூண்டுதலால் எவ்விதமும் மணிமேகலையை அடைந்தே தீருவது என முடிவு செய்தான்.

உதயகுமாரன் மணிமேகலையை கண்டான். அவளது மாற்றத்துக்கு காரணம் யாதெனக் கேட்டான். மணிமேகலையும் பொறுமையுடன் அவனுக்கு அறிவுரை சொன்னாள். சொல்லிவிட்டு அவன் நின்ற இடத்தை விட்டு அகன்று சம்பாபதியின் கோயிலில் உட்பக்கம் சென்று விட்டாள். உண்மையான உருவத்துடன் இருத்தல் கூடாது என எண்ணியவளாய் வேற்றுருவம் கொள்ளும் மந்திரத்தை ஓதியபடி காயசண்டிகையின் உருவத்துடன் அமுதசுரபியைக் கைல் ஏந்தி வெளியே சென்றுவிட்டாள். உதயகுமாரன் ஒன்றும் புரியாமல் விழித்தான். தெய்வமே மணிமேகலை இன்றி என்னால் வாழ இயலாது என்ற நிலைக்கு ஆகிவிட்டேன் எனவே அவள் என்னுடன் வர இசைவது வரை நான் இங்குதான் இருப்பேன் என்று மணிமேகலையை எதிர்பார்த்து சூளுரைத்து நின்றான்.
<b> .. .. !!</b>
Reply
#40
<b>சிறை கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய காதை</b>

மணிமேகலையுடன் தான் வெளியே செல்லப் போவதாக அவள் வரவில்லையானால் அந்த இடத்தை விட்டு தான் நகரப் போவதில்லை எனவும் உதயகுமாரன் சூளுரைக்க கேட்டதும் உள்ளிருந்து ஒரு குரல் ஒலித்தது. "நீ ஆராயாமல் சூளுரைத்தனை " என்ற தெய்வக குரல் அவனை அச்சுறுத்தியது. எனவே மேற்கொண்டி அங்கு நிற்காமல் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்றெண்ணி வெளியே வந்து விட்டான்

காயசண்டிகை உருவத்துடன் மணிமேகலை சிறைக்கோட்டத்துக்கு சென்று அங்குள்ள கைதிகளுடன் அன்பொழுக பேசி அவர்கள் பசி போக்கினாள். இதைக் கண்ட சிறைக்க் கோட்டத்து அதிகாரிகள் இந்த வியத்தகு செயலை மன்னருக்கு தெரிவித்தனர். இதனைக்கேட்ட மன்னன் அவளை அழைத்து வருமாறு கூறினான். அரச சபைக்கு வந்த மணிமேகலை மன்னை போற்றிப் பாடினாள். மன்னன் அவள் செஉஅல்களை பெரிதும் பாராட்டி தம்மிடமிருந்து எதையாவது கேட்குமாறு உத்தரவிட்டார். மணிமேகலை உடனே சிறைக்கோட்டமெல்லாம் அறக்கோட்டமாக வேண்டும் என வேண்டினாள். அவள் வேண்டுகோளுக்கு இணங்க சிறைக் கோட்டமேல்லம் அறக் கோட்டமாகின.
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)