[quote="shanmuhi"]<img src='http://img287.imageshack.us/img287/314/sinn19wg.jpg' border='0' alt='user posted image'>
<span style='font-size:25pt;line-height:100%'><b>சிரிச்சி சிரிச்சி வந்தார்...</b></span>
சாந்தமான பார்வையுடனே
சிரிச்சி சிரிச்சி வந்த சின்னப்பு
சிங்காரமாய் நெஷனல் உடுத்தியே
சைக்கிள் மிதிச்ச காலாலே இப்போ
பென்ஸ் கார் காஸ் யை மிதிச்சி மிதிச்சி
பத்து கிலோ மீட்டர் தூரத்தையும்
பவிசாக மின்னல் வேகத்தில் கடந்து
களம் நோக்கி வருகிறார் எங்கள் அப்பு
அறுபது கருத்தென்ன ஆழமான
ஆறாயிரம் கருத்துக்கள் என்ன
வாயெல்லாம் பற்கள் தெரிய அழகாய்
டுத்பேஸ்ட்டுக்கு விளம்பரம் தந்தது போல்
சிரிச்சி சிரிச்சி வாழ்த்துக்கள் கூறுவது
கடவுள் தந்த வரமோ என்றெண்ணியே
சின்னப்புக்கும் இனிதே வாழ்த்துக்கள்
<b>*** </b>குடிச்ச வாயாலே இங்கே
ரெமி மார்டின் என்றும் ஸ்கொட்ச் என்றும் மப்பில்
வாய்க்கு ருசி சிப்சும் கச்சானுமாய் தேடுறார்
பிலாவில குடிச்ச கூழும் மறந்து போய்
கரண்டி கத்தியுடன் சண்டை பிடித்தே
பிட்சா என்றும் இறைச்சி பொறியலுமாய் ஒரு
வெட்டு வெட்டியே உள்ளே தள்ளுறார்
பழசு தான் புதுசு என்ற நினைப்புடன்
இளமை ஊஞ்சலாடுது என்றே
கறுப்புக் கண்ணாடியுடனும் சேட் பொத்தானை
திறந்து விட்டுக் கொண்டும் ஒரு பவுணில்
தோடுடைய செவியனாய் வலம் வந்தே
த்ரிஷாவுடன் ஆடும் நடத்துற லூட்டி
அப்பப்பா கொஞ்சநஞ்சமல்ல
சின்னாச்சிக்கு விஷயத்தை போட்டுக்கொடுக்க
நானும் சின்னாச்சியின் வீட்டுக் கதவைத்தட்ட
பாதி த்ரிஷாவும் பாதி சின்னாச்சிமாய்
மேக்கப் கலைந்தும் கலையாமல் வந்து நின்ற
சின்னாச்சியை பார்த்தே சிலையாய் சமைந்து போனேன்
சிரிச்சு சிரிச்சு வந்தார் சின்னப்பு தாத்தா டோய்......
http://media.putfile.com/cinna3
இது எப்படி இருக்கு. :wink:
.
.