நாய் பற்றி எல்லாரும் உங்கட அனுபவங்களை சொல்றீங்கள்.. ரொம்ப பீலிங்கா இருக்கு எனக்கு.

<b>நாய் எண்டா எனக்கு அப்பிடி உயிர்</b>..
குருவி அண்ணா உங்கட நாயோட பெயர் தான் என்னோட நாயோடதும். <b>லக்கி</b>..அது அவையோட வம்சாவழிப்பெயர்..நான் வளர்க்கிற எல்லா நாயுக்கும் லக்கி தான்..ஒவ்வொன்டு ஒவ்வொன்டா இறந்து போக, எப்பிடியும் ரண்டு கிழமைக்குள்ள வீட்டில இன்னொருவர் ஓடித்திரிவார். லக்கி நம்பர் 3, நாங்கள் 95 இடம் பெயர்ந்தப்போ பக்கத்து வீட்ட விட்டுட்டுப்போயிட்டோம்..1 வருசத்தால வர என்னோட குரலைக்கேட்டுட்டு எங்க இருந்திச்சோ ஓடி வந்திட்டுது. ரொம்ப பாசம்..அம்மா எனக்கு வீட்டுக்க வைச்சு அடிச்ச யன்னலுக்கால எட்டி எட்டி அழுற மாதிரி சவுண்ட் குடுக்கும். அவருக்கு ஒரு பழக்கம் எங்க போனாலும் கூட வாற குணம். கோயில்ல எங்கக்கா வாசகம் (சேர்ச்ல) வாசிக்க மைக்கில குரல் கேட்கும் இல்லையா..அதுக்கு அவர் கோயிலுக்குள்ள வந்திட்டார்..அப்புறம் பாதர் யாரையோ கூப்பிட்டு சொல்லி..அவர் தடியால அடிக்க நான் அப்புறம் கோயில் முடிய அவரோட போய் சண்டை. துரத்தினா போகும் தானெ..அடிக்கிற வேலை எல்லாம் வைச்சுக்க கூடாது எண்டு..:twisted:
அப்புறமா அது நான் இல்லாத நேரமா இறந்து போயிட்டுது. நல்ல நாய் வீட்டில இறக்காதாம்..எண்டு சொல்லுவாங்க...அதுவும் அப்பிடித்தான். ஆனாலும் கடைசியா முகத்தைக்கூடப்பார்க்கல எண்டு எனக்கு கவலை.
<img src='http://img418.imageshack.us/img418/6098/lacky4ag.jpg' border='0' alt='user posted image'>
அப்புறமா இன்னொரு லக்கி நம்பர் 4.மேல படத்தில உள்ளவர் போலத்தான் இருப்பர். பிறந்து 4 நாள் இருக்கும்..கொண்டு வந்திட்டன். கண் கூட சரியாத்திறக்கல..விறாந்தைல உருண்டு உருண்டு விழுவார். எல்லாரும் குருட்டு நாய் எண்டு பேச பேச நான் வளர்த்தனான். சின்ன வயசில இருந்தே நாயை க்குளிப்பாட்டி வந்தால் அழகா இருக்கும் எண்டு எல்லா சம்பூவும் போட்டு நான் குளிக்க வார்ப்பன். அப்புறமா வீரம் வர வேணும் எண்டு...கிடங்கு ஒண்டு கிண்டி அதுக்குள்ள விட்டுட்டு ஸ்கூல் போயிடுவன்..அவர் வெளியில வர துள்ள துள்ள அவருக்கு வீரம் வரும். ஸ்கூலால வர கத்தி கத்தி களைச்சுப்போய் படுத்திருப்பார். எறும்பை பாலுக்க போட்டு குடுத்த எறும்பு கடிக்க வீரம் வருமாம்..பட் அது கொஞ்சம் ஓவர். பாவம்..அது எண்டு விட்டுட்டேன். ஆனால் அவருக்கு நல்ல துணிவு..வெளியில போனால் சுத்தி தான் வருவார் பட் ஈவினிங்க்கு முதல் வீட்ட நிக்கணும். வளர்ந்தப்புறம் அவர் எங்கட ஆட்டுக்குட்டி, மாட்டுக்கண்டு எல்லாத்தோடையும் விளையாடுவார். ரொம்ப விருப்பம் அவருக்கு. அதுகளோட கூட மேயக்கட்டுற இடத்துக்குப்போய் செக் பண்ணிட்டு வருவார். எங்க வீட்டுக்காரங்களும், பக்கத்து வீட்டு ஆன்டி அவையையும் தான் உள்ள விடுவார்..மற்றவை இல்லை. துரத்தி கேற் வரைக்கும் கொண்டு போய் விட்டுட்டு அங்கேயெ நிப்பார். அவங்க சட்டை எல்லாம் கிழிச்சிருக்கார். அவங்க வைரவா வைரவா...எண்டு கத்துவாங்க. ஆனாலும் கேட்க மாட்டார். நான் உள்ள போ எண்டால் போயிடுவார்..ஆனாலும் சின்ன உறுமலோட தான்...
என்னோட கிளாசில படிக்கிற பிள்ளை எங்கட ரோட்டில தான் இருக்கு..அவாவும் நாய் வளர்ப்பா. அவவோட நாய்க்கும் லக்கிக்கும் சண்டை. அதுவும் ரோட்டில. அவாட நாயில் தான் பிழை :evil: அது தான் எங்கட வீட்டுக்கு முன்னாடி வந்து கலர் காட்டி இருக்கார். அப்போ என்ட நாய்க்கு கோவம் வரும் தானெ. சோ, சண்டை. அந்த நாய் கிழட்டு நாய் லக்கிக்கு கடிச்சிட்டுது..இவர் விழுந்தப்போ நல்லா திரும்பவும் கழுத்தில கடிக்க..இவருக்கு தாங்கல. கத்தின கத்தல்ல நான் லக்கி எண்டு ஓடிப்போய் வேலியில ஒரு கம்பு முறிச்சு அவாட நாய்க்கு அடிச்சுத்தான் ஆளை விலக்கினான். அவ அதுக்கு என்னோட சண்டைக்கு வந்து அதுக்கப்புறம் நான் அவவோட கதைக்கிறேல்ல.
எனக்கு ஆச்சர்யம் என்னென்டா இதே லக்கியும் எனக்கு அம்ம அடிச்ச அல்லது சத்தமா பேச நான் அழுதால் யன்னலில வந்து தானும் கூட அழுறப்போல சவுண்ட் குடுக்கும். வெளியில வர காலுக்க வருவார். குளிக்க வார்க்க கூப்பிட்ட சரி ஓடிடுவார்..வீட்டைச்சுத்தி ஓடுவார். அண்ணாவும் சேர்ந்து தான் பிடிச்சு கமுக மரத்தில கட்டி குளிக்க வார்ப்பன். சரியான பஞ்சி. அவருக்கு முகத்துல தண்ணி வார்க்க பயம். வார்த்த அழுவார்..சோ, நான் மெல்லமா தடவிட்டு சடார் எண்டு வார்த்திடுவான். அப்புறமா கொண்டு போய் சீமெந்து நிலத்தில கட்டி விடுவன். இல்லன்னா மண்ணில உருண்டு தண்ட ஒரிஜினல் குணத்தை காட்டிடுவார். அவருக்கு கழுத்தில பெலிட் எல்லாம் கட்டி..ரொம்ப அழகா வளர்த்தனான். எங்கட வீட்டு நாய்களோட ஒரே ஒரு விசேசம். களவா எங்கையும் போய் அப்பச்சட்டியையோ இல்லை தோசைக்கல்லையோ தூக்கிடு வர மாட்டாங்க. அப்புறம் என்கிட்ட தப்ப ஏலாது. வீட்டை விட்டு நான் போனால் கேற் வரைக்கும்..அங்கால கொஞ்ச தூரம் வரலாம்..அப்புறம் வீட்டுக்க ஓடிடுவாங்க.
வெளிநாட்டுக்கு வர்றப்போ அவர் உண்மையாவெ அழுதவர். ( சும்மா சொல்லல) கண் எல்லாம் கலங்கி..அவர் மனிசர் இல்லன்னாலும் ஏதோ இவங்க போறாங்க என்டு விளங்கிட்டுது. சோ, ரொம்ப சோகமா இருந் தார். நான் கட்டிப்பிடிச்சு தடவக்கூட அமைதியா நிண்டு கவலையா பார்த்தார்.அப்புறமா நான் எங்க வீடில இருந் தவங்களை அவரைப்பார்க்க அடிகக்டி டெலிபோனில சொல்லுவேன். என்னோட ப்ரெண்டு பக்கத்து வீடு, அவகிட்டையும் சொல்லுவேன். போட்டோ எல்லாம் அனுப்ப சொல்லுவன். கரைச்சல் தான் ஆனால் என்ன செய்ய..என்னால முடியல. அப்புறம அவர் 2005 புதுவருடப்பிறப்பண்டு இறந்திட்டதா எனக்கு பங்குனி மாதம் தான் சொன்னாங்க. நான் கோவப்பட்டு ஏன் முதல் சொல்லல எண்டால் எங்கட வீட்டில எல்லாருக்கும் தெரியும் எனக்கு சொன்னா கவலைபபடுவேன் எண்டு சொல்லலையாம்.

நான் அவர் நினைவா வீட்டில ஒரு நாய்க்குட்டி சிலை வாங்கி வைச்சிருக்கேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
சாறி..நான் நாய் எண்டதும் கொஞ்சம் பீல் பண்ணிட்டேன். நீங்கள் எல்லாரும், பிருந்தன் அண்ணா, குருவி அண்ணா..ரமாக்கா அழகாக சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.. என்னால அப்பிடி முடியல. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> போரா இருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்..வாசிக்காமல் விட்டாலும் பற்வாயில்லை. எனக்கு மனசில உள்ளதை சொன்ன ஒரு குட்டி சந்தோசம் ...அதே போதும். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!