<b>2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ஓட்டங்களால் வெற்றி </b>
இன்று டில்லியில் நடந்து முடிந்த இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 188 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது ஆட்டம் பற்றிய குறுகிய விபரணம். . . .
<b>1ம் நாள் ஆட்டம் </b>: முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 3 விக்கட்டுகள் இழப்புக்கு 232 ஓட்டங்களை ஆட்ட நேர முடிவில் பெற்றிருந்தது சச்சின் தனது 35வது சதத்தினைப் புூர்த்தி செய்து உலக சாதனையை நிலை நாட்டீனார்
<b>2ம் நாள் ஆட்டம் </b>: மிக பெரிய எதிர்பார்ப்புடன் இன்று ஆட்டத்தை தொடங்கி இந்திய அணி முரளியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கட்டுகளை இழந்தது முரளி 23ஓட்டங்களை குடுத்து 5 விக்கட்டுகளை எடுத்தன் மூலம் இந்தியா சகல விக்கட்டுகளையும் இழந்து 290 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது (முரளி மொத்தம் 7 விக்கட்டுகள் )அடுத்து களமிறங்கிய இலங்கைணி ஒரு கட்டத்தில் 163ஓட்டத்துக்கு 3 விக்கட்டுகளை மாத்திரம் இழந்திருந்தது ஆனால் கும்ளேயின் சூழல் பந்து வீச்சு இவர்களையும் நிலை குலைய வைத்தது மாவன் சிறப்பாக ஆடினாலும் (88) இறுதி ஓவரில் கும்ளேயிடம் அவுட்ஆனதால் இலங்கையணி ஆட்டநேர முடிவில் 198 ஓட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்தது
<b>3ம் நாள் ஆட்டம் </b>: இன்றும் கும்ளேயிடம் இலங்கை வீரர்கள் திணறினார்கள் ஆட்டம் தொடங்கி சிறுது நேரத்திலேயே இலங்கையணி சகல விக்கட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களை பெற்று இந்தியாவை விட 60 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது கும்ளே 6 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார் 2வது இன்னிங்ஸ்யை தொடங்கிய இந்திய அணி இர்பான் பத்தானின்(93) சிறப்பான ஆட்டத்தின் மூலம் 5 விக்கட்டுகள் இழப்புக்கு 237 ஓட்டங்களை ஆட்ட நேர முடிவின் போது எடுத்திருந்தது
<b>4ம் நாள் ஆட்டம் </b>: தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி யுவராஜ் சிங்(77) டோனி(51) இருவரின் இணையாட்டமூலம் 375 ஓட்டங்களை 6 விக்கட்டுகள் இழப்புக்கு எடுத்திருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது மொத்தம் 435 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி எண்ட நிலையில் தனது 2வது இன்னிங்ஸ்யைத் தொடங்கிய இலங்கையணி 1விக்கட் இழப்புக்கு 108 எண்ட இலக்கை அடைந்திருந்தது ஆனா என்னவோ தெரியவில்லை இறுதிநேரத்தில் அடுத்தடுத்து 5 விக்கட்டுகளை இழந்து 123 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டம் நிறுத்தப்பட்டது மாவன்(67)
<b>5ம் நாள் ஆட்டம் </b>: மிகுதி 5 விக்கட்டுகளையும் எடுத்தால் வெற்றி என்ற தெம்புடன் இன்று களத்தில் இறங்கியது இந்திய அணி. ஆரம்பத்திலேயே 1 விக்கட் விழ அவர்களின் வெற்றி தெட்டத் தெளிவானது மகல ஜெயவர்தனாவில் (67) விக்கட் விழுந்ததுடன் இலங்கையின் ஆட்டம் முடிவுக்கு வந்தது மதிய இடைவேளையின் பின்னர் இலங்கையணி 247 ஓட்டங்களை பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது
<i>ஸ்கோர் விபரம்</i>
<span style='font-size:25pt;line-height:100%'>இந்தியா - 298 . 375/6 dec</span>
<span style='font-size:25pt;line-height:100%'>இலங்கை 230 - 247</span>
<b>இந்தியா 188 ஓட்டங்களால் வெற்றி பெற்றது</b>
ஆட்ட நாயகன் : <b>அனில் கும்ளே </b>10விக்கட்டுகள்(இந்தியா)
http://usa.cricinfo.com/db/NEW/LIVE/frames...-14DEC2005.html
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>