11-25-2005, 05:45 AM
கதை நல்லாய் இருக்கு... கன நாள் லீவு தரமால் எழுதுங்கோ
|
வலி தெரியாக் காயங்கள்
|
|
11-25-2005, 08:02 PM
இந்திரஜித் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து இன்னும் பல கதைகளை தாருங்கள்.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
11-26-2005, 05:53 AM
கதையை துண்டு துண்டாக இணைத்தால் சுவாரசியம் போய்விடுமே? முடிந்தவரையில் பகுதி பகுதியாக எழுதி சேமித்து விட்டு இணைக்கலாமே இந்திரஜித்?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-26-2005, 08:36 AM
மன்னிக்கவேண்டும் எனது கணணியில் எதோ பிரச்சனை சேமித்து வைத்தால் சிக்கலாக இருக்கிறது இனிமேல் கூடியவரை முழுக்கதையாக எழுதமுயற்சிக்கிறேன் .நேரம் இன்மை இந்த வருட இறுதிவரை இருக்கும் அது தான் மதன் அவர்களே மற்றும் அன்பான ஆதரவு தரும் உள்ளங்களே நிலமையை புரிந்து மன்னிக்கவேண்டுகிறேன்
inthirajith
11-26-2005, 12:50 PM
நாங்கள் அனைவரும் உங்களுக்காக காத்திருக்கின்றோம் முடிந்தவரையில் பாகம் பாகமாக பிரித்து எழுதுங்கள். இதில் மன்னிக்க என்ன இருக்கின்றது, உங்களுடைய சிரமங்கள் புரிகின்றது வருத்தம் வேண்டாம்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
11-26-2005, 04:17 PM
வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 5
பாம்பை தேடிய படியே அடித்தடம் பார்த்து போனவன் கோடிக்கை போனான் அங்கே விறகு கும்மலுக்குள் பாம்பு போனதைக் கண்டான். ஒரு தடியுடன் பாம்பை தேடியபடியே இருக்கும் போது, அங்கே வந்த அவன் ஆசையுடன் வளர்த்த ஜோன் நாய்குட்டி பாம்பைப் பார்த்ததும் ஒரே பாய்ச்சல் அவனால் பாம்பை அடிக்கமுடியவில்லை. ஆசையாய் வளர்த்த ஜோன் பாம்பிடம் கடி வாங்கினாலும் பிடித்தபிடியை விடாமலே சண்டை இட்டது. இறுதியில் அவன் ஆசையாய் வளர்த்த நாய் குட்டி பாம்புடன் சேர்ந்து உயிரை விட்டபோது அவன் மனம் நொறுங்கித் தான் போனான். கண்ணோரம் ஈரம் கசிய விராந்தையில் வந்து இருந்தவனிடம் அம்மா வந்து "என்னதம்பி நடந்தது" என்று கேட்டபோது நடந்ததை சொல்லி கலங்கினான். வேணியின் அப்பா சந்தைக்கு போகும் போது அவர்கள் வீட்டுக்கும் தேவையானதை கேட்டு உதவி செய்வார். மரக்கறி கூட மலிவாக, புதியதாக வாங்கித் தருவார் மிகவும் மரியாதையாக பழகுவார். சண் அவருடன் "அம்மா, வேணி அப்பா சந்தைக்கு போறாராம் நானும் அவருடன் போகிறேன்" என்று சொல்லிவிட்டு காசையும் அம்மாவிடம் வாங்கி கொண்டு மருதனாமடம் சந்தைக்கு வேணியின் அப்பாவுடன் போனான். போகும்போது வழி முழுக்க அவர் அவனிடம் அன்பாகவே கதைத்துக் கொண்டு வந்தார். இந்தியன் ஆமியிடம் பட்டபாடுகள். போராட்டகாலத்தில் வீட்டில் வந்து மறைந்து இருந்தபோராளிகள். அதனால் ஏற்பட்ட இன்னல்கள் என்று சொன்னபோது அந்தநேரத்தில் தாங்கள் மட்டும் கொழும்பில் அதன் கஸ்ரம் புரியாமல் இருந்தது பற்றி ஏதோ வெட்கம் வந்தது நிஜம் தான். "சரி தம்பி நேரம் கிடக்கு நாங்கள் இணுவில் போவோமா வேணி சொன்னா உங்களுக்கு ரோஜா என்றால் பிடிக்குமாம் என்று வாங்கோ" என்று அவனையும் அழைத்துகொண்டு இணுவில் ரோஜா தோட்டம் பார்க்கப் போனார்கள். உண்மையிலே அழகான தோட்டம் தான் பதியன்களும் ஏதோ தேவலோகம் போல் இருந்தது சரி என்று பிடித்தகலரில் ஜந்து ரோஜாக்களும் வாங்கியபோது, பணம் கொடுக்க அந்த தோட்டகாரர் சொன்னார் "தம்பி உங்களுடன் வந்தவர் ஒரு மாவீரனின் அப்பா அவருக்கு ஏதோ என்னால் செய்யமுடிந்த மரியாதை காசுவேணாம் தம்பி" என்று மரியாதையாக சொன்னபோது அவனால் நம்பமுடியவில்லை. வரும் வழியில் அவனால் அடக்கமுடியாமல் வேணியின் அப்பாவிடம் கேட்டான் உண்மையா அவர் சொன்னது என்று "ஓம் தம்பி வேணியின் மூத்த அண்ணாதான் மாவீரர் இப்போ நடந்து ஐந்து வருடங்கள் ம்ம்.." என்று சொல்லிவிட்டு மௌனத்துடன் சைக்கிளை மிதிக்க தொடங்கினார்கள் சந்தையில் பொருட்கள் வாங்கியபோதும் மௌனமகவே இருந்தார்கள். வரும் வழியில் சண் மௌனத்தை கலைத்தான் "எப்பிடி நடந்தது". "ம்ம் அது தம்பி இந்தியன் ஆமியோட அடிபட்டுதான் மாவீரர் ஆனவர்" என்று சொல்லியபோது எப்போதுமே புன்னகை புரிந்தபடியே, அன்பை பொழியும் அந்த வேணியின் அப்பா கலங்கியதை கண்ட அவன் மௌனமாகவே வீடுவந்து சேர்ந்தான் அடுத்தநாள் காலையில் கோபமாக வீடுக்கு வந்தவேணி அவனிடம் ஒன்றுமே பேசாமல் அவன் அம்மாவிடம் போனள். அம்மா கேட்டா "என்ன கோபம் சண்ணுடன் கோபமா கதைக்காமல் வாறீர்" அருகில் வந்த சண்னுடன் ஒன்றுமே கதைக்காமல் முகத்தை தூக்கிவைத்து கொண்டு நிற்க "அம்மா பூந்தோடத்துக்கு இப்பிடிதான் ஒரு வெருளி பொம்மை வேணும் என்று தேடினனான் அது இங்கே இருக்கு"என்று சிரித்தான். கோபம் குறைந்து முகத்தை சுளித்தபடியே சிரித்தவேணி "என்னை விட்டு விட்டு நீங்கள் மட்டும் ரோஜா வாங்கி கொண்டு வந்தீங்களே சரியா இது" என்று கேட்டாள். "கடவுளே நான் வாங்க வேணும் என்று நினைக்கவே இல்லை உங்கள் அப்ப தான் எனக்கு விருப்பம் என்று நீர் சொன்னதை நினைப்பு வச்சு வாங்கி தந்தவர் அதுவும் இலவசமாக கிடைத்தது வாங்கோ பார்ப்போம்" என்று அவளை அழைத்து கொண்டு போன சண் அன்பாகவே கதைத்தபோது "என்ன இண்டைக்கு உங்களிடம் ஏதோ மாற்றம் தெரியுது என்ன என்டு சொல்லுங்கோ என்று கேட்ட வேணியிடம் "ம்ம் இந்த ரோஜாக்கள் எல்லாம் எனக்கு உரியவை இல்லை வேணி உங்களுக்கு தான் சொந்தம் என்ன" என்றான் "புதுசா ஏதோ எல்லாம் சொல்லுறீங்கள்" என்று சிரித்த வேணியிடம் வேணி இது உங்கள் அண்ணா மாவீரர் என்று சொல்லி எனக்கு தந்தார் அந்த தோட்டக்காரர் இப்படி ஒரு மரியாதைபட்ட குடும்பம் உங்கள் குடும்பம் என்று இன்று தான் புரிஞ்சது ஏன் நீங்கள் எனக்கு இதுவரையும் சொல்லாமல் இருந்தீங்களே வேணி ஏன்" என்று கேட்டபோது கண்கலங்கிய வேணி எங்கள் சோகம் எங்களுடன் இருக்கட்டுமென்று சொல்லி விட்டுப் போனாள். வேணி போன கையுடனே சண் இன்று தான் கேள்விப்பட்ட செய்தியை அம்மாவிடம் சொன்ன போது, அம்மாவின் பார்வையில் வேணியின் குடும்பம் மதிப்பில் உயர்ந்து விட்டது. -தொடரும்-
inthirajith
11-26-2005, 06:33 PM
அண்ணா கதை நன்றாக இருக்கின்றது ஆனால் மிகுதிக் கதையைக் கேட்க பெரும் ஆவலாக இருக்கிறது. உங்கள் சிரமம் புரிகின்றது. தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்
<<<<<..... .....>>>>>
11-27-2005, 12:36 AM
வலி தெரியாக் காயங்கள்.... பாகம் 6
அன்றில் இருந்து சண், வேணியின் குடும்பத்தினரோடு மிகவும் மரியாதையுடன் பழகத் தொடங்கினான். ஒரு நாள் வேணியுடன் "ஏன் நீங்கள் உங்கள் அண்ணாவை பற்றி ஏதுவுமே கதைப்பதில்லை." என்று கேட்டான். "அப்பா சொல்லுவார் தன் பிள்ளை என்று சொல்ல முடியாது அண்ணா தமிழ் மக்களின் சொத்து அவருக்காக பெருமைப்படவேண்டும். அழுவதற்காக இல்லை என்று சொல்லுவார். தனியே இருந்து கவலை படுவார் எங்கள் முன்னால் பெருமையாக பேசுவார்." என்று சொன்ன வேணி மௌனமாக சண் முகத்தையே பார்த்தபடி இருந்தா. "சரி வேணி நீங்க கேட்ட நோட்ஸ் புத்தகம் எல்லாம் எடுத்து வைத்து இருக்கிறேன் இருங்கோ தாறேன்" என்று எடுத்துக் கொடுத்தான் திறந்து பார்த்தவள் சொன்னாள் "இப்படி அழகான எழுத்து இருக்கும் ஆம்பிளை அம்மாவிடம் மரியாதையா இருப்பினம் என்று அம்மா சொன்னா உண்மை தான் " என்று சிரித்து விட்டுப் போனபோது, சண் அம்மா சொன்னா "தம்பி இனிமேல் வேணி குடும்பத்தை தனியாக பிரித்து பார்க்கக் கூடாது எங்கள் உறவுகளில் முக்கியம் அவை தான் தியாகம் பண்ணியும் பெருமையாக இருக்காமல் எங்களுக்கு உதவி பண்ணிய வேணியின் அப்பா உண்மையிலே மாவீரரை பெற்ற கனவான் தான்" என்று கண்கள் பனிக்க சொன்னா. அன்று அப்பாவின் கடிதம் வந்தது அதிலே ஓர் துயரமான செய்தி மாலினி அண்னா ஆனையிறவு தாக்குதலில் காணாமல் போனதாக இராணுவ தலைமைப்பீடம் அறிவித்ததுடன், எந்த கொடுப்பனவுகளும் இன்றி மிகவும் கஸ்ரத்தில் மாலினி படிப்பை நிருத்தி விட்டு, சண் அப்பாவிடம் 80000 ரூபா கடனாக வாங்கி ஒரு வீட்டு வேலைக்காக மத்திய கிழக்கு நாடொன்றுக்கு சென்று மூன்று மாதத்தில் அந்த வீட்டுகாரனின் தொல்லையால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து விட்டதாக இலங்கை தூதரகம் அறிவித்ததாம் என்றும், ஆனால் அது தற்கொலை இல்லை கொலை என்று அங்கே இருந்து வந்தவர்கள் சொன்னதாகவும்.அதனால் மாலினி அப்பாவுக்கும் சித்தபிரமை பிடித்து அலைவதாகவும் அப்பா எழுதி இருந்தார்.... வாசித்த சண் அதிர்ச்சியில் உறைந்து விட்டான். போரில் எத்தனை குடும்பங்கள் இப்படி இனவெறியால் அழிகின்ற நாடு சொந்த ஊரிலே அடையாள அட்டையுடன் அலைகின்ற இனம் எம்மினம் தான். அவனுக்கு ஏதோ வேணியின் முகம் தான் அவன் முன் வந்தது சரி என்ன செய்வது என்று அவனுக்கு பல்கலை கழகம் தொடங்க முதல்வேணிக்கு கொஞ்சம் பாடங்கள் சொல்லி கொடுக்க சொல்லி வேணி அப்பா கேட்டார் "தம்பி, வேணி யாழ்ப்பானம் போவது சிரமம் என்று சொல்லி ரியூசனுக்கு போகாமல் நிக்கிறா. என்ன என்று கேளுங்கோ தம்பி" என்று சொல்லிவிட்டு போனார். வேணியிடம் போனபோது எங்கோ பார்த்தபடி இருந்தா "வேணி, வேணி என்ன யோசனை" என்று கேட்டபோது அவனை நோக்கி திரும்பிய வேணியின் கண்களில் ஈரம் "என்ன வேணி" என்று பதறியபடியே கேட்ட சண்ணிடம் "இல்லை நான் ரியூசனுக்கு போகும் போது சந்தியில் நிக்கும் பொடியங்கள் சரியான கஸ்ரம் கொடுக்கினம் பின்னாலே வந்தபடி கீழ்தரமாக கதைகினம் என்னால் அவமான படமுடியாது அப்பாவிடம் சொன்னால் வீண்பிரச்சனை வரும் படிப்பை விட எனக்கு அப்பாவின் சந்தோசம் முக்கியம் அதுதான் ரியூசனுக்கு போகவில்லை" என்று கண்கலங்கியபடியே சொன்ன வேணியிடம் "சரிவேணி நாளைக்கு நானும் வாறேன் வாங்கோ ரியூசனுக்கு இனிமேல் யாரும் உங்களிடம் வாலாட்ட முடியாது" என்று ஆத்திரத்துடன் சொன்ன சண் "காலமை எத்தனைமணிக்கு போகவேணும்" என்று கேட்டுவிட்டு "9.00 தானே நான் வாறன் ஒன்றாகவே போவோம்" என்று ஆறுதலாக சொன்னபோது வேணியின் இமைகள் தன்னை அறியாமலே படபடத்தன ஒரு மனதுக்கு பிடித்த துணை கிடைத்த நிம்மதி அந்தமுகத்தில் வந்தது -தொடரும்-
inthirajith
11-29-2005, 11:53 PM
இந்திரஜித் கதை நன்றாக செல்கிறது. மிகுதியை பார்க்க ஆவலாக உள்ளோம்
<b> .. .. !!</b>
11-30-2005, 08:43 AM
வாழ்த்துக்கள் இந்திரஜித்
நன்றாக எழுதுகின்றீர்கள். இவ்வளவு திறமையிருந்தும் ஏன் ஆரம்பிக்கத் தயங்கினீர்கள். தொடருங்கள். மேலும் சேமித்து வைப்பதில் தங்கள் கணனியில் பிரைச்சினை இருப்பதாக எழுதினீர்கள். ஏன் கணனியில் சேகரிக்காமல் USB சேமிப்பு இணைப்புக்களிலும் சேகரிக்கலாம் தானே? மேலும் முகத்தார் செய்வது போல் ஒரே தலையங்கத்தின் கீழேயே தொடர்ந்து இணைத்தீர்கள் என்றால் நல்லது.
11-30-2005, 09:44 AM
நன்றி நண்பர்களே நேற்று கிடைத்த 2 மணித்துளிகளில் கதை எழுதிவிட்டு போஸ்ட் செய்தபோது என்னால் அந்தகதை அனுப்பமுடியவில்லை முதல் முறையாக எழுத்து பிழை இல்லாமல் எழுதியும் என் கணணி சதி செய்து விட்டது இப்போ மூட் குழம்பிவிட்டது பார்ப்போம் 3 வது முறையாக இப்படி நடந்துவிட்டது கணனி பற்றி தெரிந்தவர்களும் அருகில் இல்லை
inthirajith
11-30-2005, 11:10 AM
inthirajith Wrote:நன்றி நண்பர்களே நேற்று கிடைத்த 2 மணித்துளிகளில் கதை எழுதிவிட்டு போஸ்ட் செய்தபோது என்னால் அந்தகதை அனுப்பமுடியவில்லை முதல் முறையாக எழுத்து பிழை இல்லாமல் எழுதியும் என் கணணி சதி செய்து விட்டது இப்போ மூட் குழம்பிவிட்டது பார்ப்போம் 3 வது முறையாக இப்படி நடந்துவிட்டது கணனி பற்றி தெரிந்தவர்களும் அருகில் இல்லை அண்ணா தோல்வி தான் வெற்றியின் முதற்படியும் எம்மை மேலும் மெருகுபடுத்துவதும் தோல்விதான் என்பதை மறக்காதீர்கள் மூட் குழம்பி விட்டது எனும் போது கவலை வேண்டாம் மீண்டும் முயற்சிக்கவும் நேரம் கிடைக்கும் போது உங்கள் ஆக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் நன்றி அண்ணா
11-30-2005, 01:24 PM
<b>இந்திரஜித்</b>
கவலையை விடுங்கள். இதற்குப் போய் மனதைத் தளர விடலாமா?? இனிமேல் நீங்கள் ஆக்கங்களை எழுதிய பின் மேல் பெட்டியிலுள்ளது முழுவதையும் அடையாளப்படுத்தி அதில் வலது பக்க மௌசை அமுத்தி பிரதி செய்யுங்கள். அதன் பின் உங்கள் ஆக்கத்தை அனுப்பும் போது ஏதாவது பிரைச்சினை வந்தால் நீங்கள் திரும்பவும் மேல் பெட்டியனுள் தொடக்கத்தை மௌசால் அடையாளப்படுத்தி வலது பக்க மௌசை அழுத்தி திரும்பவும் பிரதியீடு செய்யலாம். இதனால் இல்லாமல் போன உங்கள் ஆக்கம் மீண்டும் அங்கு வந்து விடும். இனியென்ன அனுப்ப வேண்டியது தானே. எமக்கேற்படும் ஒவ்வொரு தோல்விகளும் தான் வெற்றியின் படிக்கட்டுகளாகின்றன. கவலை வேண்டாம் தொடர்ந்து வாரும் நண்பரே!!!!!!!!
11-30-2005, 02:04 PM
[quote=Vasampu]<b>இந்திரஜித்</b>
கவலையை விடுங்கள். இதற்குப் போய் மனதைத் தளர விடலாமா?? இனிமேல் நீங்கள் ஆக்கங்களை எழுதிய பின் மேல் பெட்டியிலுள்ளது முழுவதையும் அடையாளப்படுத்தி அதில் வலது பக்க மௌசை அமுத்தி பிரதி செய்யுங்கள். அதன் பின் உங்கள் ஆக்கத்தை அனுப்பும் போது ஏதாவது பிரைச்சினை வந்தால் நீங்கள் திரும்பவும் மேல் பெட்டியனுள் தொடக்கத்தை மௌசால் அடையாளப்படுத்தி வலது பக்க மௌசை அழுத்தி திரும்பவும் பிரதியீடு செய்யலாம். இதனால் இல்லாமல் போன உங்கள் ஆக்கம் மீண்டும் அங்கு வந்து விடும். இனியென்ன அனுப்ப வேண்டியது தானே. வசம்பு அண்ணா சுப்பர் ஐடியா குடுத்தீங்க அப்ப இனி தொடர்ந்த எந்தப்பிரச்சினையும் இல்லாம கதை வரும் என நம்புவோம்
11-30-2005, 02:10 PM
இந்திரஜித் நோட் பாட்டில் அடித்து விட்டு அனுப்பும் போது கொப்பி பண்ணி அனுப்பலாமே இப்படி பலர் முன்பு கூறியிருக்கிறார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
11-30-2005, 02:17 PM
[quote=tamilini]இந்திரஜித் <b>நோட் பாட்டில் </b>
அப்பிடி அடிச்சிட்டு அனுப்பினா கதை யாழ் களத்துக்கு வராது வேறை எங்கையோதான் போகும்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>
11-30-2005, 02:20 PM
MUGATHTHAR Wrote:[quote=tamilini]இந்திரஜித் <b>நோட் பாட்டில் </b> ஏன் அப்பு அப்படி அனுப்பும் போது உங்களுக்கு எங்க போனது??? |
|
« Next Oldest | Next Newest »
|