Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
Vasampu Wrote:<b>தலா:</b>
நான் பி பி சி செய்தி 30 நிமிடங்கள் என்று சொன்னதற்கும் நீங்கள் தந்த இணைப்பிற்கும் என்ன சம்பந்தம். அதில் என்ன செய்தி 1 மணி நேரமா போகின்றது.
ஓ... அதில வாற விளக்கப்படங்கள் இனைப்புகள் எல்லாம் வானொலியிலும் வாறதா..?? அவர்களின் நோக்கம் என்ன என்பது விரிவாக விளங்க எனக்கு அரைமணி நேரம் தேவையே இல்லை...
உமது விளக்கமின்மைக்கு காரணம்தான் விளங்க வில்லை....!
சரி.... ஜெனிவால தமிழர் போராட்டம் பற்றிய பிபிசில இருப்பதாகச் சென்னீர்... மெய்யாலுமா இலங்கை <b>அரசுக்கெதிராய் தமிழர் போராட்டம் எண்டா போட்டார்கள்......???</b> அதற்கு தயாசங்ககிரி புலிகள் ஏவிய குண்டர்களின் போராட்டம் என்று சொன்னார் எண்டும் போட்டிருப்பார்களே... அப்பிடியா..???.. அப்ப மற்றய போராட்டங்கள் ஏன் வருவதில்லை..?? ...ஓஓஒ நேரம் போதாதா...??? அவ்வளவு பெரிதா தமிழர் போராட்டங்கள்...???..நண்றி.
முடிந்தால் மக்களின் உணர்வுகளைப் புரிந்து எழுத முயற்ச்சி செய்யும்..
::
Posts: 355
Threads: 9
Joined: Sep 2004
Reputation:
0
அப்படி மக்களின் உணர்வை உணர்ந்து எழுத தொடங்கினால் சுவிசிலிருந்து கொண்டு சொகுசாய் வயிறு வளர்க்க யாரப்ப காசு கொடுப்பானுகள்.
.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>அதுசரி வசந்தன்
சுவிசிலிருந்து சுரண்டப்படும் பணத்தில் நீர் வயிறு வளர்க்கின்றீர் என்பதற்காக எல்லோரையும் அப்படி நினைத்து விடாதீர்.
பொய்யான செய்திகளை புகுத்துவது பின் அதை வைத்தே வாதிடுவது. இது எல்லாம் ஒரு பிழைப்பா??????????</b>
Posts: 59
Threads: 22
Joined: Nov 2004
Reputation:
0
இந்தப் பதிவு தொடர்பாக எழுப்பப்பட்ட நியாயமான சந்தேகத்திற்கு விடைதேடி அதனைப்பெற்ற நான் இதுவரை வேறு எவராவது அந்த விடையைத் தேடி இங்கே தருதல்கூடும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தேன்.
பதிவு ஒன்றின் கீழ் ஒரு வினாவானது எழுப்பப்படும்போது அதற்கு நாம் அளிக்க முற்படும் பதிலுக்குப் பலம்சேர்க்கவல்ல ஆதாரங்களைத் தேடி அதனுடன் தருவது பிரதான உணவுடன் அறுசுவைக் கறிகளையும் சேர்த்துப் பரிமாறுவதற்கொப்ப சுவைதரும்.
ஆனால் வருந்தத்தக்கவிதத்தில் நாங்கள் அதனைக் கைக்கொள்வதில் ஆர்வம் காட்டாதிருக்கிறோம். பலர் பலவித நேரப்பழுக்களுடன் இங்கு வருவதால் ஒரு பதிவினை வாசித்தவுடன் பதிலை எழுதிவிடவே விரும்புகிறார்கள். அந்தப் பதிலிற்கான ஆதாரத்தைத் தேடிப்பிடிப்பதற்கு அவர்களுக்கு நேரப்பற்றாக்குறை பெரும் தடையாயிருத்தல் கூடும் என்பது எனது தனிப்பட்ட அனுமானம்.
எனினும் நாங்கள் இங்கு எழுதிச் செல்லும் ஒவ்வொரு வசனமும் எங்களை வெளிப்படுத்தும் கண்ணாடிகள் என்றே நான் கருதுகிறேன். எனவே கருத்துகளை வெளியிடும்போது நாம் மிக அவதானத்துடன் கூடியளவு ஆதாரங்களுடன் வெளியிடுவது எல்லோரையும் கவருவதுடன் கருத்துமுரண்பாடுகள் நேரிடாமல் தடுத்துவிடும் என்பதும் எனது நம்பிக்கை.
<b>அதுஅவ்வாறிருக்க மேலே இணைக்கப்பட்ட புதினம் செய்திகள் தொடர்பில் கீழ்வரும் தரவினை என்னால் திரட்ட முடிந்துள்ளது.</b>
1) 23ம் திகதி புதன்கிழமை 2005ம் வருடம் வெளியான இந்துப்பத்திரிகையில் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள 'கருத்துச் சுதந்திரம் தொடர்பான கருத்தரங்கு' குறித்து விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
Quote:Journalists for Freedom Of Expression-Madras Union of Journalists-Reporters' Guild- Press Club-Network of Women in Media: Meeting on `Recent attacks on Freedom of Expression', Press Club, 3 p.m.
http://www.hindu.com/2005/11/23/stories/20...12320030300.htm
2) குறிப்பிட்ட கூட்டம் அங்கு கூடிய ஊடகவியலாளர்களது எதிர்ப்புக் காரணமாக அறிவிக்கப்பட்ட இடத்தில் நடைபெறவில்லை என்று இந்து நாளேடு மறுநாள் 24 ம் திகதி வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
Quote:Earlier, a group of journalists, saying they were "office-bearers" of various associations and unions of journalists, protested against the holding of the meeting at the Press Club. They insisted that the names of their organisations, such as the Madras Union of Journalists or the Press Club, had been included without getting a "written authorisation" from their executive committees.
<b>They did not allow the meeting to be conducted on the Press Club premises.</b>
http://www.hindu.com/2005/11/24/stories/20...12416160700.htm
3) ஆனால் அந்தக் கூட்டம் அதேதினத்தில் அருகிலுள்ள இன்னொரு இடத்தில் நடைபெற்றுள்ளது என்றும் இந்து நாளேடு தெரிவித்துள்ளது.
Quote:<b>Hence it was shifted to the nearby Asian College of Journalism.</b>
http://www.hindu.com/2005/11/24/stories/20...12416160700.htm
4) இந்தக் கூட்டம் இடம்பெற்றமை குறித்து சென்னை ஒன்லைன் என்ற இணைய செய்திச் சேவையில் வெளியான செய்தி வழியாகவும் அறிந்துகொள்ள முடிகிறது.
Quote:Journalists' meet condemns intolerance in TN
http://www.chennaionline.com/colnews/newsi...RYNAME=NATIONAL
<b>நன்றி:</b> இந்து
சென்னை ஒன் லைன்
<b>அன்புடன் திரு</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>நன்றி திரு</b>
உங்கள் வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் சிரத்தை எடுத்து தகவல்களை சேகரித்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் தந்த இணைப்பிலும் ரி.என.கோபாலனை பத்திரிகையாளன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் அவரை பி.பி.சி செய்தியாளர் என்று குறிப்பிடப்படவில்லை. அவர் அங்கு பத்திரிகையாளனாகவே கலந்துள்ளார். அதே போல் அவர்கள் மன்னிப்பு கேட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே செய்திகளைத் திரித்து எழுதுவதிலும் உங்களுக்கு உடன்பாடு உண்டா என்பது எனக்குப் புரியவில்லை. நீங்கள் அது பற்றிய விளக்கத்தையும் அளித்திருந்தால் எனக்கு இச்சந்தேகம் எழுந்திருக்காது.
Posts: 59
Threads: 22
Joined: Nov 2004
Reputation:
0
செய்திகளைத் திரித்து எழுதுவதில் எனக்கு என்றும் உடன்பாடில்லை. அதனை நான் மொழிபெயர்க்கும் கட்டுரைகள் விடயத்தில் மிக அவதானமாகக் கையாண்டுவருகிறேன்.
இங்கு மேலே தரப்பட்ட புதினம் செய்தியிலும் பின்னர் நான் இணைத்துள்ள இந்து மற்றும் சென்னை ஒன்லைன் செய்திகளிலும் சில விடயங்கள் மட்டும் ஒத்திருக்கின்றன. அவற்றை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்துவில் அங்கு பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்துவதைத் தடுத்தமை குறித்த செய்தி வந்துள்ள அதேவேளை சென்னை ஒன்லைனில் அதுகுறித்து எதுவும் சொல்லப்படவில்லை. என்ன நடந்தது என்பது குறித்து அங்கிருக்கும் எவராவது தான் அறியத்தரவேண்டும்.
அதேவேளை இந்து மற்றும் சென்னை ஒன்லைன் செய்திகளின் பிரகாரம் மேலே குறிப்பிட்டிருக்கும் ஒரு ஊடகவியலாளர் நடந்துகொண்ட முறை குறித்து எனக்கு எந்தவிதமான ஆட்சேபங்களும் கிடையாது. அச் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பதன்படி அவர் தன்னை ஒரு ஊடகவியலாளராகவே அடையாளப்படுத்திக்கொண்டாரே தவிர, எந்த ஒரு செய்திநிறுவனம் சார்பாகவும் தம்மை அவர் வெளிக்காட்டி இந்தக் கூட்டத்தினை ஒழுங்கமைக்கவில்லை.
எவரையும் ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ ஊடகவியலாளருக்கு உரிமை உண்டு. இது அவரது தனிமனித சுதந்திரம் என்பது எனது நிலைப்பாடு. ஆனால் அவரது இந்தத் தனிப்பட்ட நிலைப்பாடு செய்திகளை அவர் தயாரிக்கும்போது அதிலே-செய்திகளிலே- வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதைத் தான் நான் எதிர்பார்க்கிறேன்.
இச்சம்பவத்தின் பின் இதுநாள்வரை தமிழோசையில் இந்தக் கருத்தரங்கு குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
இந்து மற்றும் சென்னை ஒன்லைன் செய்திகளின் பிரகாரம் மேற்குறித்த கருத்தரங்கு அதேநாள் அருகிலுள்ள பிறிதொரு இடத்தில் நடந்துள்ளது. எனவே மேலே குறிப்பிடப்பட்ட ஊடகவியலாளர் இதனை ஒரு செய்தியாகத் தமிழோசையில் கூறியிருக்கலாம். ஆனால் அவர் இன்றைய தினம் வரை அதனைச் செய்யவில்லை.
இந்த ஒரே ஒரு காரணம்பற்றியே நான் இந்த ஊடகவியலாளர் குறித்த விமர்சனத்தில் கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்க விரும்பினேன்.
அவர் இதனை தனது தனிப்பட்ட ஒரு விடயமாகக் கருதிச் செயற்பட்டிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். எனவே அதுபற்றி இங்கு நான் கருத்துச் சொல்வதே தவறு என்பது எனது மனஓட்டமாக இருந்தது.
எனினும் நண்பர் வசம்பு அவர்கள் கேட்டதன் பிற்பாடு இதே சந்தேகம் வேறு நண்பர்களுக்கும் வர வாய்ப்பு உள்ளதால் இங்கு பகிரங்கமாக எனது கருத்தினைக் கூறநேரிட்டது.
இதற்காக அந்தக் குறிப்பிட்ட ஊடகவியலாளர் என்னைப் பொறுத்தருளவேண்டும் என மானசீகமாக வேண்டிக்கொள்கிறேன்.
<b>அன்புடன் திரு</b>
<b>குறிப்பு:</b> மேலுள்ள பதிவுகளில் தர்க்கிக்கப்பட்ட இன்னொரு விடயம் பி.பி.சி செய்தியாளராக இருக்கும் ஒருவர் இவ்வாறு தனிப்பட்ட நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாமா -ஒழுங்கமைக்கலாமா -என்பதுவாகும். இதுகுறித்து பி.பி.சி நிறுவனத்தின் செய்தியாளர்களுடனான ஒப்பந்தம் என்ன சொல்கிறது, பலஸ்தீனத்திலிருந்து செய்தி வழங்கிய பெண் நிருபர் ஒருவர் யசீர் அரபாத்; சிகிச்சைக்காகச் சென்றபோது தனது உணர்ச்சிகளை பி.பி.சியில் வெளிப்படுத்தியது குறித்த சர்ச்சையில் பி.பி.சி எடுத்த முடிவு ஆகியன பற்றிய விபரங்களை இப்போது சேகரிக்க முயன்றுவருவதால் அதுகுறித்து இப்போதைக்கு எதுவும் தெரிவிக்கவில்லை.
Posts: 59
Threads: 22
Joined: Nov 2004
Reputation:
0
எனக்குப் பிடித்தமான திருக்குறள் வரிகளுள் ஒன்று
<b>'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு"</b>
எந்த ஒரு ஊடகம் சொல்வதையும் அல்லது எவர் கூறும் செய்தியையும் முழுமையாக நம்புவது எனது வழக்கமல்ல. காரணம் இந்தக் கணனி யுகத்திலே நாமே தேடி ஆராய்ந்து ஓரளவுக்கு உண்மையைக் கண்டறியமுடியும் என நான் உறுதியாக நம்புவதுதான்.
அதனால் இந்தக் கருத்தரங்கு தொடர்பில் வெளிவந்த மூன்று வெவ்வேறு செய்திகளை இங்கு ஒப்பிட்டுப்பார்த்த எனக்கு சில விடயங்கள்- மூன்று செய்திகளிலும் -பொதுவாக இருப்பது தெரிந்தது.
மூன்று விதமான செய்தி ஊடகங்கள் -மூன்று வெவ்வேறு தளங்களிலிருந்து இயங்குபவை- பொதுவான சில கருத்துகளைத் தெரிவித்தால் அந்தக் குறிப்பிட்ட விடயங்கள் அனேகமாக நடந்திருக்கக்கூடும் என நாம் நம்பலாம்.அதனால்தான் அவற்றை மட்டும் குறிப்பிடவிளைந்தேன்.
மேலுள்ள மூன்று ஊடகங்களில் எது செய்திகளைத் திரித்தது என்ற முடிவுக்கு வருவது எனக்குச் சிரமமான பணி. ஏனெனில் உண்மையாக நடந்தது என்ன என்று எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் நான் இந்த மூன்றில் செய்திகளைத் திரித்தது எந்த ஊடகம் அல்லது எந்த ஊடகங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடுவேன்.
<b>அன்புடன் திரு</b>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நன்றி திரு
மீண்டும் உங்கள் விளக்கத்திற்கு. இங்கு நீங்கள் குறிப்பிட்ட 3 இணையத்தளங்களிலும் ஒரு இணையத்தளம் மாத்திரமே வெளிப்படையாக ரி.என் கோபாலனை அவர் ஊடகவியலாளராக செயற்பட்டும் வேண்டுமென்றே பி.பி.சி செய்தியாளர் என குறிப்பிட்டது. அந்தச் செய்தியை இங்கு இணைத்தவர் இன்னும் திரிபுபடுத்தி பி.பி.சி என்றே தலையங்கமும் இட்டிருக்கின்றார்.
ஒரு ஊடகத்தின் பகுதி நேரச் செய்தியாளரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் அந்த ஊடகத்தைச் சார்ந்ததா என்பதற்கு நீங்கள் ஏன் பாலஸ்தீனம் வரை செல்கின்றீர்கள். உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக் கொள்வோமே. சில வாரங்களுக்கு முன் ஒரு செய்தி சம்பந்தமாக தவறான தகவல் தந்ததற்காக மன்னிப்பு கோரினீர்கள். அதை இன்னொரு ஊடகம் நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்தைச் சொல்லி அந்நிறுவனம் மன்னிப்புக் கேட்டது என்று போடமுடியுமா?? அல்லது நீங்கள் போராட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை தருகின்றீர்கள் என்பதற்காக நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் போராட்டத்திற்கு உதவுகின்றது என்று செய்தி போட முடியுமா?? ஒரு முறை இப்பக்கத்தை முழுமையாக வாசித்துப் பாருங்கள். பின் விரும்பினால் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
Posts: 1,886
Threads: 60
Joined: Aug 2005
Reputation:
0
வசம்பு உங்களுடைய சந்தேகம் இதுதானே.
செய்தியின் நம்பகத்தன்மையை செய்தியை இணைத்தவரால் கூட இதுவரை நிரூபிக்க முடியவில்லை. ஊகங்களுக்கும் செய்திகளுக்கும் வித்தியாசம் தெரியாமலிருப்போர்களுடன் தொடர்ந்து வாதிடுவதில் எந்தவித பயனுமில்லை.
அதுதானே தெளிவாக நிருபிக்கப்பட்டு விட்டதே பின்னர் என்ன "தீட்டியமரத்தில் கூர்பாக்கிறீர்களா?" :wink:
.
.
Posts: 59
Threads: 22
Joined: Nov 2004
Reputation:
0
<span style='color:red'><b>ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கைகளை -அது அவர் வழங்கும் செய்திகளில் எதிரொலிக்காதவரைக்கும் அல்லது அமைப்பின் செயற்போக்கில் எதிரொலிக்காதவரைக்கும்- ஒருபோதும் ஒரு அமைப்பின் அல்லது ஊடக நிறுவனத்தின் கருத்து என்று கொள்ளமுடியாது. அது தவறானது </b>என்பது எனது தனிப்பட்ட கருத்து. (எனது நினைவில் இருப்பதன்பிரகாரம் பி.பி.சி நிருவாகம் பலஸ்தீன விவகாரத்தில் அவ்வாறுதான் முடிவெடுத்தது என்று கருதுகிறேன்). அதன்படி மேற்படி ஊடகவியலாளர் கருத்தரங்கு தொடர்பான செய்திகளைத் தரவில்லை. எனவே இங்கு பி.பி.சி தொடர்பான கேள்வி எழ வேண்டிய அவசியமும் இல்லை.
ஆனால் வழக்கம்போல இதேவிடயத்தை பி.பி.சி தனது செய்தியாளர்களுடனான ஒப்பந்தத்தில் வலியுறுத்துகிறதா? அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் அதன் நடவடிக்கை எவ்வாறு அமைந்தது?? என்பது குறித்து விரிவாகச் சொல்லி எனது மேற்படி கருத்தினை வலியுறுத்தவே ஆதாரத்தினைச் சேகரிக்க விளைகிறேன்.
எப்போதும் நான் சொல்வதை ஆதாரத்துடன் சொல்ல விரும்புவதுதான் இதற்குக் காரணம். இன்றேல் 'பி.பி.சி நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கெனச் சிறப்பு விதிகள் உண்டு' என்று எவராவது சொன்னால் நான் அதன்பின் அந்த நிறுவன விதிகளை ஆராய்ந்து பார்த்து அது சரியானால் அந்த விளக்கத்தினை மறுபடி இங்கே தரவேண்டியிருக்கும். எனவே அதனை ஒரேயடியாகச் செய்துவிட விரும்பியிருந்தேன்.
</span><b>அன்புடன் திரு</b>
Posts: 59
Threads: 22
Joined: Nov 2004
Reputation:
0
Quote:இது டி என் கோபாலனின் தனிப்பட்ட நடவடிக்கைதான், ஆயினும் இது நடந்து முடிந்திருந்தால், இப்படி நடந்து இருக்கிறது என பிபிசிக்கு செய்தி கொடுத்திருப்பார், அப்படி நடக்காததால் அது செய்தியாகவில்லை, தடுக்கப்பட்டதால் உண்மை வெளிவந்திருக்கிறது, அதைத்தான் நான் கூறுகிறேன் செய்தியாளர்கள், தமது பக்கச்சார்பை தினிக்க முயற்ச்சிக்கிறார்கள். ஒரு செய்தியாளரே இப்படி முறைகேடாக நடக்கிறார் என்றால், தமிழ் சேவையை நடாத்துபவர்கள் எப்படி நடப்பார்கள்? இன்னமும் விளக்கம் தேவை என்றாள் திருமகள் எழுதிய பிபிசி பற்றிய நடுநிலைமை பற்றிய கட்டுரையை படித்துப்பாருங்கள்.
<span style='color:red'><b>இங்கு விவாதிக்கப்படும் விடயத்திற்கும் எனது 'தடுமாறும் தமிழோசை' என்ற கட்டுரைக்கும் தொடர்பிருப்பதாக நான் கருதவில்லை.</b>
ஏனெனில் இங்கு குறிப்பிடப்படும் ஊடகவியலாளர் -இந்தக் கூட்டம் நடந்திருந்தபோதிலும் - அது குறித்து எதுவும் தெரிவிக்காது விட்டமை தற்போது எமக்குத் தெரியவந்திருப்பதை வைத்து, அவர் முன்னுதாரணமாகச் செயற்பட்டுள்ளார் என்றே கருதுகிறேன்.
காரணம் அவர் தாமே முன்னின்று ஒழுங்கமைத்த ஒரு நிகழ்வு குறித்து -தமக்குள்ள வசதிவாய்ப்புகளைப் பயன்படுத்திக் -கருத்துருவாக்கத்தை ஏற்படுத்தாது தவிர்த்திருக்கும் செயலானது பாராட்டப்படவேண்டியது என்பது எனது தனிப்பட்ட கருத்து
எனது கருத்தை அன்பிற்குரிய நண்பர் பிருந்தன் அவர்களும் ஏற்றுக்கொள்வார் என்று நம்புகிறேன்.
அது அவ்வாறிருக்க, தமிழோசை நிருவாகம் தற்போது தமது செவ்விகளில் பக்கம்சாராது எல்லாத்தரப்பினது கருத்துகளும் உள்ளவாறே வெளிப்படுமாறு தமது வினாக்களை அமைத்துள்ளமை பாராட்டத்தக்கது. </span>
<b>அன்புடன் திரு</b>
Posts: 2,840
Threads: 30
Joined: Apr 2005
Reputation:
0
<!--QuoteBegin-Thiru+-->QUOTE(Thiru)<!--QuoteEBegin-->
ஒருவரது தனிப்பட்ட நடவடிக்கைகளை -அது அவர் வழங்கும் செய்திகளில் எதிரொலிக்காதவரைக்கும் அல்லது அமைப்பின் செயற்போக்கில் எதிரொலிக்காதவரைக்கும்- ஒருபோதும் ஒரு அமைப்பின் அல்லது ஊடக நிறுவனத்தின் கருத்து என்று கொள்ளமுடியாது. அது தவறானது என்பது எனது தனிப்பட்ட கருத்து. (எனது நினைவில் இருப்பதன்பிரகாரம் பி.பி.சி நிருவாகம் பலஸ்தீன விவகாரத்தில் அவ்வாறுதான் முடிவெடுத்தது என்று கருதுகிறேன்). அதன்படி மேற்படி ஊடகவியலாளர் கருத்தரங்கு தொடர்பான செய்திகளைத் தரவில்லை. எனவே இங்கு பி.பி.சி தொடர்பான கேள்வி எழ வேண்டிய அவசியமும் இல்லை.
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இப்போதான் எனக்கு முக்கியமாய் ஒரு கேள்வி வருகிறது.. ஒருவர் ஒரு கூட்டத்தக் கூட்டுகிறார்.... அதற்கு தகுதி அடிப்படை தேவை இல்லையா...???<b> சென்னை மாநகரசபையில் சுத்திகரிப்புத் தொழிலாளியாகிய நான் தனிப்பட்ட ரீதியில் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தைக் கூட்டமுடியுமா....????</b> .. அந்தக் கூட்டத்துக்கு. மக்களிக்குப் பயன்படும் வகையில் ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்பாக்கங்கள் எல்லாம் வளங்கி ஒரு கண்னியமான இடத்தில இருக்கும் ஊடகவியலாளர் திருவால் வரமுடியுமா....????.
நான் கூப்பிடமாட்டன் பயம் வேண்டாம்....! அதை ஏன் கேட்டேன் எண்றால் டி என் கோபாலனின் பிபிசி செய்தியாளர் எண்ட பெயர் இல்லாவிட்டால், அந்த நற்பெயர் (GOODWILL) இல்லாத ஒருவர் தனிநபராய் கூட்டத்தைக் கூட்ட முடியாது, அவர் பிபிசி நிருபர் எண்டவகையில்த்தான் அக்கூட்டம் கூட்டப்பட்டது என்று சொல்லப்படுவது தப்பில்லை. காரணம் அந்தவகையில்தான் அவர் அளைக்கும் போது அனேக ஊடகவியலாளர்கள் போயும் இருப்பார்கள்...
இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன திரு...????
::
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
நண்பர் திரு அவர்கள் அறிய,
நீங்கள் எதனை வைத்து இவ்வாறு எழுதுகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. ராமகோபாலன் போன்றோரை தமிழ்நாட்டு செய்தியாளனாக நியமித்ததில் இருந்தே தெரியவில்லையா? பி.பி.சி தமிழோசை தமிழரிற்குஎதிரான செய்திகளை பரப்பும் நோக்கத்தோடு செல்வதை. தமிழ் இனத்துன் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டுள்ளவர்களே பி.பி.சி தமிழோசையில் பணி புரிகின்றார்கள்.
அந்த வகையில் இவர்கள். பி.பி.சி என்னும் முத்திரையினைப் பயன்படுத்தி தமிழகத்தில் தங்களை விட்டால் ஊடகத்துறையில் யாரும் இல்லை என்பதைப் போல ஒரு விம்பத்தை உருவாக்கி. மிகவும் வறிய குடும்பங்களில் பிறந்த ஊடகவியலாகளோடு போட்டி போட எண்ணும் இவர்களைப்போன்றவர்களை உலகம் கண்டு கொள்ளாதது மிகவும் வேதனைக்குரிய விடயமே. இந்த வட்டத்திற்குள் அடங்கக் கூடிய இன்னும் பலர். அவர்களில் ஒருவர்தான் இந்து ராமும். ஆனால் நமக்கு முனால் இருக்கின்ற பாரிய சவால் எதுன்றால். நமது இளைய தலைமுறையினர் நமது எதிர்கால நலன்கள் கருதி ஊடகத்துறைகளில் அவர்களின் கவனத்தினை சொலுத்திட வேண்டும்.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
பீபீசியின் செய்திவாசிப்பாளர் ஒருவர் யாழ்பாணத்தில் நடந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான வன்முறை பற்றி கேட்டவிதம் பீபீசியின் திருந்தாத, பக்கச்சார்பான போக்கை காட்டியது. உபவேந்தர் மோனதாஸ்சை கேட்டார். "நீங்கள் உப்படி ஆர்பாட்டம் செய்யாவிட்டால் இராணுவம் உங்களைத் தாக்கியிருக்காது தானே?" என்று
எல்லோரும் அவ் ஆர்ப்பாட்டம் தொடர்பான செய்திகளைப் பார்த்திருப்பீர்கள். அதில் எவ்வளவு வன்முறையுடன் சிங்கள இராணுவம் தாக்குவதை கண்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆர்பாட்டத்தைக் கூட இப்படித் தாக்கும் சிங்கள இராணுவம் செய்தது சரி போலவும், ஏதோ மாணவர்கள் செய்தது தான் தவறு போலவும் சுட்டிக்காட்டும் இது நடுநிலமையா? கனம் ஜனநாயகவாதிகளே உங்களின் ஜனநாயகக் கருத்துக்கள் எவ்வாறு அமையும்?
அவ்வாறே மறுநாள் செய்தியில் சம்பந்தன் அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியில் விசாரணைக் குழு அமைத்தாகி விட்டாது தானே, எனி தீர்வு கொடுப்பார்கள் என்ற பாணியில் கேட்கும் போது அவர் இவ்வளவு காலம் அமைத்த விசாரணைக் குழுக்களின் கதியை விமர்சித்து கடுமையான பதிலை அளித்தவுடன் அடங்கிப் போனார்கள்.
[size=14] ' '
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஏன் தூயவன்..அவர்கள் அவ்வாறு வினாக்களைத் தொடுக்கும் போது சாதுரியமான பதில்களை அளிக்கலாம் தானே.. சம்பந்தன் ஐயா செய்தது போல..!
அவர்கள் செய்தியாளர்கள்..அப்படித்தான் இருப்பார்கள்..அவர்களின் அரசுகளின் கொள்கைக்கு முரணாகப் போவார்களோ...??! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>தூயவன்</b>
உப்படி முழுப்புூசனிக்காயை சோற்றில் மறைக்க முயலாதீர்கள். செய்வி காணும் போது எல்லாவித கேள்விகளையும் கேட்பது வழமைதான். அவர்கள் அரசோ அல்லது டக்ளஸ் போன்றவர்களையேர் கேள்வி கேட்கும் போதும் பலதடவை இப்படி அவர்களையும் கேள்வி கேட்டுள்ளார்கள். அத்துடன் சம்பந்தனிடம் கேள்வி கேட்கும் போது அரசு விசாரணைக்கமிசன் அமைத்தது தொடர்பாகவே அவரின் கருத்தைக் கேட்டார். அதற்கு சம்மந்தன் விசாரணைக்கமிசனில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்று சொன்னபோது நீங்கள் அரசு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றீர்கள் என்று வினா எழுப்பினார். அதற்குச் சம்பந்தன் அதைத் தாங்கள் என்னும் தீர்மானிக்கவில்லையென்றே பதிலளித்தார். தயவு செய்து திரித்து எழுதுவதை இனியாவது நிறுத்துங்கள்.
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
வந்திட்டார் வந்திட்டார்..............வந்திட்டார்யா....
நல்ல பாட்டு கேட்டியளோ? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=14] ' '
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
<b>உமக்கு கற்பனைகள் நிறையத்தான். ஏதாவது கதை எழுதுமன். சும்மா ரீல் விடுவதை விட அது பறுவாயில்லை.</b>
Posts: 186
Threads: 20
Joined: Dec 2005
Reputation:
0
எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் இங்கேயும் ரீல் விட்டுக் கொண்டிருக்கிறாரா?
Posts: 2,758
Threads: 54
Joined: Jun 2005
Reputation:
0
ஆமாம். உங்களைப் போல சில குள்ளகுணம் கொண்டவர்களுக்கு வக்காளத்து வாங்கும் திறமை இல்லதால் அதைத் தான் செய்யவேண்டியிருக்கின்றது
[size=14] ' '
|