Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விண்ணியல் விநோதங்கள்...
<b>செவ்வாய் கோளில் தண்ணீர் பஞ்சம் இல்லை </b>

பொண்ணுக்கு செவ்வாய் தோஷம். செவ்வாய் தோடிம் இருக்கற மாப்பிள்ளையா பாக்கிறது நல்லது என்று சொல்லி முடித்தார் ஜோசியர். அதுக்கு இனி செவ்வாய் கிரகத்துக்குத்தான் கோகணும் என்று சலித்துக் கொண்டார் ஜாதகக் கட்டுகளை சுமந்து சுமந்து அலுத்துப் போன பெண்ணின் தந்தை.

அவர் கவலைப்படத் தேவையில்லை. அடுத்த 30 ஆண்டுகளுக்குள் செவ்வாய் கோளுக்கு ஆளை அனுப்பப் போவதாக அமெரிக்க அதிபர் புஷ் கூறியிருக்கிறார். அதற்கு முன்னேற்பாடாக அடுத்த பத்தாண்டுகளுக்குள் செவ்வாய் கோளில் ரோபோ மனித எந்திரத்தைக் கொண்டு போய் இறக்கவும் செவ்வாய்க் கோளை வலம்வர செயற்கைக் கோளை அனுப்பவும், அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பும், ஐரோப்பிய விண்வெளி அமைப்பும் திட்டமிட்டுள்ளன.

அது சரி, ஆனால் செவ்வாய்க் கோள் மனிதன் வசிப்பதற்கு ஏற்ற இடம் தானா அல்லது அங்கேயும் சென்னை நகரைப் போல தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுமா அந்தக் கவலை வேண்டாம் என்கிறார் அமெரிக்க விஞ்ஞாணி மேரி பெளர்க். அண்மையில் டப்ளின் நகரில் பிரிட்டிஷ் சங்கத்தின் அறிவியல் விழாவில் பேசிய அவர் மக்களின் இந்த சந்தேகத்தை நீக்கக் கூடிய சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

சூரியக் குடும்பத்திலேயே மிகப் பெரிய மணல் திட்டுக்கள் செவ்வாய்க் கோளில் உள்ளன. இவற்றில் 50 விழுக்காடு வரை பனியும் உறைபனியும் கலந்திருக்கலாம் என்கிறார். செவ்வாய்க் கோளில் எப்போதாவது உயிரினங்கள் வசித்தனவா செவ்வாய் கோளின் மண்ணுக்கு அடியில் இன்னமும் சில நுண்ணியிரிகள் புதைந்திருக்கக் கூடுமா என்ற கேள்விகளுக்கும் விடைகாணத் துடிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஏனென்றால் செவ்வாய் கோள் முழுவதும் மணல் திட்டுக்கள் நிரம்பியுள்ளன. செவ்வாய் கோளில் மனிதன் காலடி எடுத்துவைத்ததும் அருகில் தென்படக் கூடிய ஒரு மணல் திட்டுக்குப் போய் அதைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கக் கூடும் என்று கூறும் மேரி பெளர்க் செவவாய் கோளின் வட துருவத்தில் உள்ள மணல்கடல் மற்றும் தென்பகுதியின் மணல் திட்டுப் பள்ளம் ஆகியவற்றின் செயற்கைக் கோள் படங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சி செய்திருக்கிறார். இவற்றின் புவியியல் தன்மைகளை ஆராய்ந்ததில் தண்ணீரினால் கெட்டிப் பட்டவைதான் இந்த இரண்டு மணல் திட்டுக்கள் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார்.
இவர் ஆராய்ந்த மணல் திட்டுக்களில் ஒன்று 1000 மீட்டர் உயரமான கெட்டியான குன்று. இதை ஒரு சிறிய மணல் மலை என்று சொல்லிவிடலாம். இது தவிர செவ்வாய் கோளின் மணல் பரப்பில் பிரம்மாண்டமான வண்டல் மண் படிவுகள் இருப்பதும். ஆறு போன்ற நீர் வடிகால் அமைப்புக்கள் இருப்பதும் அன்டார்ட்டிகாவின் உலர் பள்ளத் தாக்கின் மண்ணில் இருப்பது போன்ற LAMINATED கசடுகள் இருப்பதும் மணல் திட்டில் திடீரென தண்ணீர் பீறிட்டுக் கிளம்பி வழிந்தோடி வாயுவாக மாறி செவ்வாய்கோள் காற்றில் கலந்து விட்டதற்கான சான்றுகள் மணல் திட்டில் இருப்பதும் செயற்கைக் கோள் படங்களின் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சில மணல் திட்டுக்களின் சரிவுகள் மிகவும் செங்குத்தாக உள்ளன. மணல் கெட்டிப்படாமல் இருந்திருந்தால் இது சாத்தியம் இல்லை. அப்புறம் மணல் திட்டுக்களின் மீது குவிந்திருந்த தளர்வான மணலை காற்று அடித்துச் சென்ற பிறகு அதன் மேற்பரப்பு மொட்டைமாடி மீது சிமென்ட் பூசப்பட்டது போல் இருக்கின்றது. தண்ணீர் இல்லாமல் இவ்வாரு ஒரு பரப்பு உருவாக முடியாது என்கிறார் பெளர்க். ஒரு காலத்தில் செவ்வாய் கோள் ஈரமாக இருந்தது என்பதை 1996க்கு பிறகு செவ்வாய் கோளுக்கு அனுப்பப்பட்ட பல கருவிகளும் அதை வலம் வரும் செயற்கைக் கோள்களும் உறுதிப்படுத்தியுள்ளன. இப்போது டாக்டர் பெளர்க் நடத்திய ஆய்வில் பண்டைக்காலத்தில் இடம் மாறும் மணலுக்கு கீழே ஒரு மீட்டர் ஆழத்தில் பனியும் உறைபனியும் இருந்தது தெரிய வந்துள்ளது. அப்படியானால் அது உயிரினங்களின் உறைவிடமாக இருந்திருக்குமா அநேகமாக இருந்திருக்க முடியாது. ஆனால் ஆதிகால செவ்வாய் கோள் உயிரினங்களின் புதைபடிவுகள் நகரும் பனியில் இருக்கக் கூடும்.

செவ்வாய் கோளின் எல்லா இடங்களிலும் பனிக்கட்டி தட்டுப்பட்டுள்ளது. ஆனால் அதன் துருவங்களில் அதிகமாக உள்ளது. ஒரு பெரிய மணல் திட்டில் 500 கனமீட்டர். தண்ணீர் தேங்கியிருக்கலாம் என்று கணக்கிடுகிறார் டாக்டர் பெளர்க்.

செவ்வாய் கோள் அவ்வப்போது திடீரென தனது கோணித்தை மாற்றிக் கொள்கிறதாம். இதற்கு முன்பு சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் நடுக்கம் ஏற்பட்ட போது பனி பொழிந்திருக்கலாம் என்று டாக்டர் பெளர்க் கூறினார். இந்தப் பனிப் பொழிவால் மணல் கெட்டிப்பட்டு மணல் திட்டுக்களாக மாறியிருக்கலாம்.


நன்றி வட்டக்கச்சிகொம்
<b> .. .. !!</b>
Reply
நன்றி ரசிகை
[b][size=18]
Reply
Quote:பூமிக்கு அருகில் செவ்வாய்க்கிரகம் நெருங்கும் போது இந்த இரு கோள்களுக்கிடையிலான தூரம் <b>96 தசம் 4</b> மில்லியன் கிலோமீற்றராக குறைவடையும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது

இதுவே பிபிசியில் 69.4 மில்லியன் கிலோமீற்றர்கள் என்றிருக்கே...யாருடைய தகவல் சரியானது...??! :roll: :?:

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4384700.stm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
ஆமாம் குருவிகள் நானும் பார்த்தேன். தெரியவில்லை யாருடையது சரி என்று. 6 9 , 96 டைப் பண்ணும் போது யார் பிழைவிட்டார்கள் என்று தெரியவில்லை :roll:
<b> .. .. !!</b>
Reply
அனுமானத்தின் அடிப்படையில் (2003 அவதானிப்பின் படி பார்ப்பின் ) பிபிசி தகவல் சரி போலத்தான் தெரிகிறது..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
"கெஸின்' என்ற பெயருடைய விண்கலம் ஒன்று சனிக்கோளின் துணைக்கோளான "டைட்டன்' சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.
கெஸினியில் விசேடமாக கமரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. அது எடுத்து அனுப்பிய படங்களில் ஒன்றே இது. இருப்பினும் அந்தப் படத்தை வைத்து உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது என்ற கருத்தும் விஞ்ஞானிகள் மத்தியில் நிலவுகிறது. சனிக்கோளின் துணைக் கோளாகக் கருதப்படும் "டைட்டன்' தொடர்பான் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்ற "கெஸினி' விண்கலமானது சனிகோளில் பனிப்பாறையொன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
"கெஸினி' விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வெண்ணிற வட்ட வடிவில் காணப்படுகின்ற பிரகாசமான புள்ளியைக் கொண்டே இது உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த வட்டமானது 30 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
ஐஸ்மலைகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது
இதற்கு முன்னர் சனிக்கோளில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வுகளின் படி சனிக்கோளில் சமுத்திரம் காணப்படுவதாகக் கருதப்பட்டிருந்தது.எனினும், தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி சனிக்கோளில் அவ்வாறான சமுத்திரம் எதுவும் கிடையாது எனக் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு, "கெஸினி' விண்கலத்தில், பொருத்தப்பட்டிருக்கும் "விம்ஸ்' என்ற விசேட கமராவினால் எடுக்கப்பட்ட புகைப்படங்களின்படி, சனியில் ஐஸ் மலைகள் காணப்பட்டாலும் அவை உருகி நீர் நிலைகளாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்பதும் தெரியவந்துள்ளது.
இருந்த போதிலும் இந்தக் கருத்துக்களுக்கெல்லாம் எதிர்வாதம் புரிகின்ற மற்றொரு தரப்பினரின் கருத்தின்படி, மேற்படி "விம்ஸ்' கமராவில் பதிவாகியுள்ள படங்கள் தெளிவாக இல்லாததால் தெளிவற்ற அந்தப் படங்களை வைத்து உறுதியான முடிவு எதற்கும் வர முடியாது எனவும் தெரிவிக்கின்றனர்.



http://www.sudaroli.com/05102301ari.htm
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
தவறாக இணைத்து விட்டேன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
குருவி நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.
மதுரன் தகவலுக்கு நன்றிகள்
<b> .. .. !!</b>
Reply
<b>புளோட்டோவுக்கு செல்லும் விண்கலம் </b>

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம் `நாசா' அடுத்த ஆண்டு
ஜனவரி மாதம் புளுட்டோ கிரகத்துக்கு `நிï ஹாரிசான்' என்ற விண்கலத்தை அனுப்புகிறது.

`அட்லஸ்-5' ராக்கெட்டில் வைத்துஅனுப்பப்படும் இந்த விண்கலத்துடன்
7 நிபுணர்களும் செல்கிறார்கள். அந்த விண்கலம் புளோரிடாவில் உள்ள தளத்தில் வைக்கப்பட்டு இருக்கும் காட்சி.

தகவல் http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&
<b> .. .. !!</b>
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41054000/jpg/_41054432_itokawa_jaxa_203.jpg' border='0' alt='user posted image'>

ஆய்வுக்குள்ளான விண்கல் (Asteroid)

ஜப்பானிய விண்கலம் ஒன்று வெற்றிகரமாக விண்கல் ஒன்றை அடைந்து அங்கு ஆய்வுக்கு தேவையான மாதிரிகளைப் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..! குறிப்பிட்ட விண்கலம் பூமியில் இருந்து கிட்டத்தட்ட 290 மில்லியன் கிலோமீற்றர்களுக்கு அப்பால் வலம் வரும் குறிப்பிட்ட விண்கல்லில் இருந்தே ஆய்வுக்குரிய மாதிரிகளைப் பெற்றுள்ளது..! குறித்த விண்கலம் மாதிரிகளுடன் மீண்டும் 2007 இல் பூமிக்கு திரும்ப இருக்கிறது..! இந்த மாதிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் சூரியக் குடும்பத்தின் சில ரகசியங்கள் அவிழ்க்கப்படலாம் என்று எதிர்வுகூறப்படுகிறது,,!

http://news.bbc.co.uk/1/hi/sci/tech/4467676.stm
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தகவலுக்கு நன்றி குருவிகள்
ஆரம்பத்தில் இந்த விண்கலம் தொடர்புகளை இழந்ததாகவும் ஜப்பானிய விண்வெளி முயற்சி தோல்வியுடன் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன தானே?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
<b>சிறு கிரகத்தில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம் </b>

<img src='http://img200.imageshack.us/img200/4963/vinkalam0sc.gif' border='0' alt='user posted image'>

விண்வெளியில் முக்கிய கோள்களுக்கு இடையே ஆயிரக் கணக்கான சிறு கோள்களும் சுற்றிக் கொண்டிருந்தன. `அஸ்டராயிட்ஸ்' எனப்படும் இந்த சிறு கோள்கள் விண் கற்கள் என்றும் அழைக் கப்ப டுகின்றன.

இந்த சிறு கோள்களில் `இதோகவா' என்று ஜப்பான் மொழியில் அழைக்கப்படும் சிறு கோள் பற்றி ஆய்வு நடத்தவும் மண் மாதிரிகளை எடுத்து வரவும் ஜப்பான் `ஹயாபூசா' என்ற வீண்கலத்தை கடந்த 2003-ம் ஆண்டு அனுப்பியது. விண்வெளிக்கு சென்ற அந்த விண்கலத்தில் திடீர் கோளாறும் ஏற்பட்டது. அந்த கோளாறு சரி செய்யப்பட்டது. பூமியில் இருந்து 29 கோடி கி.மி. தூரத்தில் உள்ள அந்த சிறு கோள் பரப்பில் `ஹயாபூசா' ராக்கெட் வெற்றி கரமாக இறங்கியது. அங்கிருந்து மண் மாதிரிகளையும் சேகரித்து கொண்டு 2007-ம் ஆண்டு இந்த விண்கலம் பூமியை அடையும்.

இந்த விண்கலம் 2003 அடி நீளம், 100 மீட்டர் அகலம் உள்ளது. பூமி ஒருவானது பற்றிய புதிய தகவல்களும் இந்த பயணம் மூலம் தெரிய வரும்.

http://www.vaddakkachchi.com/tech/index.ph...t_from=&ucat=2&
<b> .. .. !!</b>
Reply
அணுகுண்டு போட்டவுடன் அழிந்தே போய்விட்டது என்று பலர் நினைத்த நாடு இப்போது ரோபோ தொழில்நுட்பத்தில் மட்டுமல்ல, விணவெளியிலும் கால் வைத்திருப்பது எம் இனத்துக்கு சிறந்த எடுத்துக்கட்டு.
[size=14] ' '
Reply
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41255000/jpg/_41255894_planet_eso_b203.jpg' border='0' alt='user posted image'>

<b>பூமியை ஒத்த கோள் கண்டுபிடிப்பு..! </b>

பூமியைப் போல 5 மடங்கு திணிவைக் கொண்டதும் இயல்புகளில் கிட்டத்தட்ட பூமியை ஒத்தது என்று கருதத்தக்கதுமான சிறிய கோள் ஒன்றை 25,000 ஒளியாண்டுகளுக்கு அப்பால் பால்வீதியில் சர்வதேச விண்ணியலாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனராம் என்று அறிவிக்கப்படுகிறது. OGLE-2005-BLG-390Lb எனப் பெயரிடப்பட்டுள்ள இக்கோள் சூரியனை ஒத்ததும் ஆனால் ஒப்பீட்டளவில் சிறியதும் குளிர்ச்சியானதுமான அதன் தாய் நட்சத்திரத்தை 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை வலம் வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இது பூமி உள்ளதை ஒத்த ஒரு உடுத்தொகுதியில் (galaxy) இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இது பால்வீதி உடுத்தோகுதியில் galactic மையத்தை அண்மித்துக் காணப்படுகிறதாம்.

மேலதிக விபரங்களுக்கு - http://kuruvikal.blogspot.com/ நன்றி - பிபிசி.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
தகவலுக்கு நன்றி குருவிகள்
<b> .. .. !!</b>
Reply
தகவலுக்கு நன்றிகள் குருவிகள்.

Reply
நன்றி தகவலுக்கு குருவி அண்ணா..
ஆனால் ஏன் இந்த புதிதாய் கண்டு பிடிப்பவைகளுக்கு பெரீய வாசிக்கவே கஷ்டமான பெயர்களை வைக்கிறார்கள்..இப்போ ரமா,ரசி,அனி,இல்லை சகி அப்பிடி ஏதும் வைக்க ஏலாதா? :roll: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply
<b>டிஸ்கவரி விண்வெளி ஓடத்திலிருந்து 16 ரப்பர்நுரைத் துண்டுகள் விழுந்தன </b>

மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்துச் சிதறிய கொலம்பியா விண்வெளி ஓடத்திலிருந்து நுரை ரப்பர்கள் (ஃபோம்) பிதுங்கி வெளியேறியதைப் போலவே இந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட டிஸ்கவரி விண்வெளி ஓடத்திலும் நிகழ்ந்திருக்கிறது.

நாசா தனது வலைதளத்தில் இத் தகவலை இப்போது விவரமாகத் தெரிவித்திருக்கிறது.

அதிலிருந்து 16 நுரை ரப்பர் துகள்கள் வெளிப்பட்டுள்ளன. இது விண்வெளி ஓடத்தை வடிவமைத்த பொறியாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கொலம்பியாவுக்கு நேரிட்ட கதி பிற விண்வெளி ஓடங்களுக்கு நேரிடக்கூடாது என்ற எண்ணத்துடன் மற்ற விண்வெளி ஓடங்களில் இக்குறையை நீக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது. அப்படியிருந்தும் இத்தனைத் துண்டுகள் வெளிப்பட்டிருப்பது குறித்து அமெரிக்காவின் உயர் விண்வெளி ஆய்வு அமைப்பான "நாசா கவலை கொண்டிருக்கிறது.

கொலம்பியாவில் எரிபொருள் சேமிப்பு தொட்டியைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த நுரை ரப்பர்கள் வெளியேறியதால் அது சுடேறி வெடித்தது; உயிரைக்குடிக்கும் விஷ வாயுக்கள் வெளியேறி விண்கலத்தில் புகுந்தன. இதனால் கொலம்பியா வெடித்துச் சிதறியது. அதில் இருந்த 7 பேரும் உயிரிழந்துவிட்டனர்.

ஆனால் டிஸ்கவரி விண்வெளி ஓடத்தை விண்ணில் சோதித்த விண்வெளி வீரர்கள் அது நல்ல நிலையிலேயே இருப்பதாகப் பின்னர் தெரிவித்தனர். அதில் இருந்தவர்கள் பத்திரமாக பூமிக்கும் திரும்பிவிட்டனர்.

வரும் மே மாதம் மீண்டும் ஒரு விண்வெளி ஓடத்தை விண்ணில் அனுப்ப நாசா தயாராகி வருகிறது.

இந்த நுரை ரப்பர் விவகாரம்தான் அதற்கு இப்போது பூதாகாரமாகத் தெரிகிறது.

dinamani.com
<b> .. .. !!</b>
Reply


Forum Jump:


Users browsing this thread: 5 Guest(s)