08-02-2005, 05:36 PM
<span style='font-size:22pt;line-height:100%'><b>லண்டன் சோதனைகள் குறித்து முஸ்லிம்கள் அதிருப்தி </b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/08/20050801221027_41356131_raid203.jpg' border='0' alt='user posted image'>
<i>லண்டன் சோதனைகள்</i>
லண்டனில் குண்டுத் தாக்குதல்கள் நடந்ததைத் தொடர்ந்து அண்மைக்காலமாக லண்டன் சுரங்க ரயில் நிலையங்களுக்கு பெரிய பொதிகளுடன் வரும் பயணிகள், குறிப்பாக தெற்காசியர்கள் மற்றும் ஆபிரிக்கர்கள் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக பிரிட்டன் முஸ்லிம் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான தமது கவலைகள் குறித்து இந்தச் சங்கத்தினர், லண்டன் மேயரிடமும் ஏனைய தரப்பினருடனும் பேச்சு நடத்தியுள்ளனர்.
இப்படியாக குறிப்பான ஒரு சமூகத்தினர் மீது சோதனைகள் நடத்தப்படும் போது ஏனைய சமூக மக்கள் அவர்களை ஒரு சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதாகவும், இதனால் சமூக ஒற்றுமை குலையும் அபாயம் உள்ளது என்றும் பிரிட்டன் முஸ்லிம் சங்கத்தைச் சேர்ந்த நாஸர் என்பவர் தமிழோசைக்குக் கூறினார்.
ஆசிய, அரேபிய, ஆபிரிக்க மற்றும் ஐரோப்பிய இனங்கள் உட்பட உலகின் அனைத்து இனங்களிலும் பெரும்பாலும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் அப்படியிருக்க ஒரு இனத்தை மாத்திரம் பிரித்து சோதனை செய்வது தவறு என்றும் அவர் குறிப்பிட்டார்.
பெரும்பாலான முஸ்லிம்கள் எந்த வித வன்முறைகளுடனும் சம்பந்தமில்லாதவர்கள் என்று கூறும் நாஸர் அவர்கள், தமது சமூகத்தினர் பிரிட்டன் பொலிசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு தமது அமைப்பினால் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்.</span>
bbc tamil