08-02-2005, 05:30 PM
[size=16]<b>டிஸ்கவரி பழுது பார்க்கப்பட்டது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41367000/jpg/_41367907_crew_nasa_203.jpg' border='0' alt='user posted image'>
<i>டிஸ்கவரியில் பயணித்தவர்கள்</i>
அமெரிக்க விஞ்ஞானிகளால் டிஸ்கவரி விண்வெளி ஒடம் விண்ணில் ஏவப்பட்டதை அடுத்து அந்த விண்கலனின் அடிப்பகுதியில் ஏற்பட்ட சேதத்தைச் சரி செய்ய முயல, கலனில் உள்ள விண்வெளி வீரர்கள், சற்று வித்தியாசமான ஒரு சந்தர்ப்பத்தில் விண்வெளியில் நடந்து சரி செய்ய உள்ளனர்.
அதாவது, விண்வெளியில் இந்த விண்வெளி ஓடம் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டு இருக்கும்போதே, விண்வெளி வீரர்கள் இந்த ஓடத்தின் அடிப்பகுதிக்கு, அதாவது வெளிப்புறத்தில் உள்ள அடிப்பகுதிக்கு, நடந்து சென்று இதை சரி செய்ய உள்ளனர்.
இவ்வாறு கலன் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் போது அவர்கள் வெளியே வந்து நடப்பது இதுவே முதல் முறை.
நாசா விஞ்ஞானிகள் இந்த மாதிரி அவர்கள் நடப்பதில் பெரும் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகவும் பாதுகாப்பான வழி என்றும் கூறுகிறார்கள்.
இந்த் பிரச்சினை தெரியவந்த கடந்த மூன்று நாட்களாகவே, நாசா விஞ்ஞானிகள், எப்படி அடுத்த வாரம் டிஸ்கவரி ஓடத்தை பூமிக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கொண்டு வருவது என்பது குறித்து முயன்று கொண்டிருக்கிறார்கள்.
இந்த கலனிலிருந்து ஹூஸ்டன் நகரில் உள்ள திட்டக்கட்டுப்பாட்டு தலைமயகத்துக்கு கிடைத்த புகைப்படங்கள் எல்லாம் டிஸ்கவரி ஓடத்தின் அடிப்பகுதியில் , வெளிப்புறத்தில் உள்ள ஓடுகளுக்கிடையே உள்ள இடைவெளியை ஒட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் செராமிக் இழைகள் சில பிய்ந்து தொங்கிக்கொண்டிருப்பதைக்காட்டின.
இந்த தொங்கிக்கொண்டிருக்கும் இழைகள், ஓடம் திரும்ப வருகையில் , பூமியின் சூழலுக்குள் நுழையும் போது, பெருமளவு உஷ்ணமாகி ஆபத்தைத் தோற்றுவிக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள்.
இருக்கும் சிக்கல்கள் மற்றும் அபாயங்களைக் கணித்த பிறகு, விஞ்ஞானிகள், இந்த கலனில் ஏற்பட்ட இந்த சேதத்தை சரிசெய்ய, இரு விண்வெளி வீரர்களை கலனில் இருந்து ஒடத்தின் அடிப்பகுதிக்கு விண்வெளியில் நடந்து சென்று, தொங்கிக்கொண்டிருக்கும் இழைகளை உடைத்து அப்புறப்படுத்தவைக்க முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு கலன் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கையில், விண்வெளி வீரர்களை நடந்து கலனின் அடிப்பகுதிக்கு சென்று இதைச் சரி செய்ய வைப்பது என்பது இதற்கு முன்னர் வரை செய்யப்படாத, ஒத்திகை பார்க்கப்படாத ஒரு முறை.
ஆனால், இதுதான் இந்த கட்டத்தில் இருக்கும் சிறந்த வழி என்று நாசா விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இதை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் செய்வதற்கான தகவல்கள் தங்களிடம் இருக்கின்றன, விண்வெளி வீரர்களுக்கு இதைச்செய்வதற்கான திறன் இருக்கிறது என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தி உள்ளனர்.
bbc tamil