Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடிய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் எங்கே?
#1
கனேடிய வெளிவிவகார அமைச்சர்
புலிகளைச் சந்திக்காதது கவலை
யாழ்.மாவட்ட பொது அமைப்புகள் கடிதம்
இலங்கைக்கு விஜயம் மேற்கொள் ளும் கனேடிய வெளிவிவகார அமைச் சர் பில் கிரஹம் விடுதலைப் புலி களைச் சந்தித்துக் கலந்துரையாட ஏற்பாடு செய்யாதது கவலை அளிக் கின்றது என்று யாழ். மாவட்டத்தில் இயங்கும் பொது அமைப்புக்கள் தெரி வித்துள்ளன.
கொழும்பில் உள்ள கனேடியத் து}தரகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத் திலேயே மேற்கண்டவாறு அந்த அமைப்புக்கள் கவலை தெரிவித் துள்ளன.
யாழ். மாவட்ட அதிபர் சங்கம், தமிழராசிரியர் சங்கம் உட்பட பல அமைப்புக்கள் இக்கடிதத்தை அனுப்பி யுள்ளன.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:-
இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டுமாயின், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலி களுடன் பேசவேண்டும். இலங்கைக்கு வரும் கனேடிய வெளிவிவகார அமைச் சர் விடுதலைப் புலிகளைச் சந்திப்ப தாக முன்னர் செய்திகள் வெளிவந்தன.
இப்போது விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை அவர் சந்திக்கமாட் டார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த அறிவிப்பு எமக்கு கவலை அளிப்பதுடன் ஏமாற்றத்தையும் ஏற் படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதி களைச் சந்தித்து பேச்சு நடத்தி தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணவேண்டும் என்பதே எமது விருப்பமாகும் - என்றுள்ளது.


நன்றி உதயன் செய்தி



கனடிய பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள் எங்கே? இதுபற்றி ஒன்றும் கூறவில்லையே ஏன்? அல்லது பாபா படம் வரும்போதுமட்டும்தானா அதை எதிர்த்து அவர்கள் பேசுவார்கள்?
Reply


Messages In This Thread
கனடிய பல்கலைக்கழக மாண - by Sangili - 10-16-2003, 07:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)