10-15-2003, 10:48 PM
<img src='http://thatstamil.com/images14/china1-250.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://thatstamil.com/images14/china4-200.jpg' border='0' alt='user posted image'>
வீரரை விண்ணுக்கு செலுத்திய 'லாங் மார்ச்' ராக்கெட்
<img src='http://thatstamil.com/images14/china5-250.jpg' border='0' alt='user posted image'>
வீரர் யாங் லெவியுடன் விண்ணை சுற்றி வரும் 'சென்ஸோவ் 5' விண்கலம்
<img src='http://thatstamil.com/images14/china6250.jpg' border='0' alt='user posted image'>
'சென்ஸோவ் 5' விண்கலத்தின் மாதிரி
விண்ணை அடைந்தார் சீன வீரர்: பூமியை சுற்றிக் கொண்டிருக்கிறார்
பெய்ஜிங்:
லாங் மார்ச் ராக்கெட்டில் பொறுத்தப்பட்ட சென்ஸோவ் விண்கலத்தில் அமரும் சீன வீரர் யாங் லெவி.
விண்வெளி வீரருடன் தனது முதல் விண் கலத்தை சீனா இன்று விண்ணில் செலுத்தி பெரும் சாதனை படைத்தது.
விண்வெளிக்கு தனது ராக்கெட் மூலம் வீரரைச் செலுத்தியுள்ள உலகின் மூன்றாவது நாடு சீனா தான். ஆசியாவில் முதல் நாடும் சீனா தான்.
யாங் லிவே (வயது 38) என்ற விண்வெளி வீரருடன் 'சென்ஸோவ் 5' (புனிதக் கலன் 5) என்ற இந்த விண்கலத்தை சீனாவின் 'லாங் மார்ச்' ரக ராக்கெட் இன்று விணணில் செலுத்தியது. கோபி பாலைவனப் பகுதியில் உள்ள ஜிகுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று ஏவப்பட்டது.
இதை சீன அதிபர் ஹூ ஜின்டாவ் மற்றும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் பார்வையிட்டனர்.
இதை சீனத் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்யவில்லை. இந்திய நேரப்படி காலை 6.30 மணியளவில் இந்த ராக்கெட் ஏவப்பட்டது.
1999ம் ஆண்டு முதல் விண்வெளிக்கு வீரரை அனுப்புவதில் சீனா தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை 4 முறை ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்குச் செலுத்து அதை பத்திரமாக தரையிறங்கச் செய்தது சீனா.
இதைத் தொடர்ந்து இன்று வீரருடன் விண்கலத்தை அனுப்பியுள்ளது.
சீனாவின் சென்ஸோவ் விண் கலம் ரஷ்யாவின் சோயூஸ் கேப்சூல் விண்கலத்தைப் போலவே உள்ளது. 8.86 மீட்டர் நீளமும் 7,790 கிலோ எடையும் கொண்ட இந்த விண்கலம், சிறிய ராக்கெட்டுகள் மற்றும் பாராசூட்களைக் கொண்டது. இவற்றைக் கொண்டு இந்தக் கலன் விண்ணிலிருந்து பத்திரமாகத் தரையிறங்கும்.
இந்தக் கலம் மிகச் சிறப்பாக விண்ணில் இயங்கி வருவதாகவும், விண்ணில் செலுத்தப்பட்ட வீரர் யாங் லிவே பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், விண்வெளிக்கு ஆள் அனுப்பும் தங்களின் முயற்சி பெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும் சீனா அறிவித்துள்ளது.
ஏவப்பட்ட 10 நிமிடங்களிலேயே ராக்கெட்டில் இருந்து பிரிந்த அந்தக் கலன் விண்வெளியில் தனக்கு நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப் பாதையை அடைந்தது. இப்போது அந்தக் கலம் சீராக இயங்கி வருவதாகவும் சீனாவின் ஜின்ஹூவா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
அடுத்த சில நிமிடங்களில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தைத் தொடர்பு கொண்ட யாங் லிவே, தனது உடல் வெப்பம், ரத்த அழுத்தம் ஆகியவை மிக நார்மலாக இருப்பதாகத் தெரிவித்தார். அவருக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
விண்ணில் செலுத்தப்பட்டுள்ள வீரர் யாங் லிவே, சீன ராணுவத்தின் விமானப் படைப் பிரிவில் லெப்டினண்ட் கலோனல் பதவியில் உள்ளார். 1998ம் ஆண்டு முதல் விண்ணில் பறக்க பயிற்சியில் ஈடுபட்டுத்தப்பட்டார். தன 18 வயதில் சீன ராணுவத்தில் சேர்ந்தவர். 1,350 மணி நேரம் பல்வேறு ரக போர் விமானங்களை ஓட்டிய அனுபவம் கொண்டவர்.
சென்ஸோவ் விண் கலம் 90 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை முழு சுற்று சுற்றி வந்து கொண்டுள்ளது.
மொத்தம் 21 மணி நேரம் 14 முறை பூமியைச் சுற்றிய பின் வீரர் யாங் லெவி இந்தக் கலத்தின் மூலம் தரையிறங்கும்.
கலததை விண்ணில் ஏவுவது எளிது. பத்திரமாக தரையிறக்குவது தான் மிகவும் கடினமானது. இதனால் சீன வீரரின் இந்த விண்வெளிப் பயணத்தை உலகமே உற்று கவனித்து வருகிறது.
1961ம் ஆண்டில் ரஷ்யா தான் முதன்முதலில் தனது வீரரை விண்ணுக்கு அனுப்பியது. 1962ல் அமெரிக்க வீரர் விண்வெளிக்குச் சென்றார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பின் சீன வீரர் விண்ணை அடைந்துள்ளார்.
விண்கலத்தை வடிவமைப்பதிலும், விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதிலும் சீனாவுக்கு ரஷ்யா பெருமளவில் உதவியதாக அமெரிக்கா கூறுகிறது.
Our thanks to thatstamil.com and suratha's pongu tamil converter.!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>