06-21-2003, 09:44 AM
சி ங்களக் கிராமமொன்றின் சிறுதெருவில்
காலாற உலவுவதாகக் கனவுவந்தது
விழித்தும் துரத்துகிறது என்னை.
பலிக்காத பகற்கனவெனினும்
பழைய நினைவுகளைக் கிளறி
வேடிக்கை பார்க்கிறது சனியன்,
அது என் சிங்கள நண்பனின் சிற்றூர்.
நான் அதிகம் களைப்பாறிய நிழல்
தமிழனெனத் தள்ளாது
தூக்கி ஓக்களையில் வைத்த ஊh .
அத்தனை அழகளையும் கொட்டி
எவன் படைத்தான் அந்த ஊரை?
சொர்க்கத்தில் வெட்டிய துண்டொன்றை
சுமந்த வந்து அங்கே போட்டவன் எவன
மனித உழைப்பதிகமின்றி
அதிசயமாய் அதன் அழகு நிகழ்ந்திருக்கலாம்.
எந்த ஒப்பனையுமின்றி
கிணற்றடி வாழையின் மதர்மதப்பாய்
ஓரமாய் கிடக்கும் ஊர்.
தினமும் மழைசிணுங்கும் மலைச்சாரலில்
காற்றில் சேலையுடுத்துவதாய்
மேகம் மிதந்து செல்லும்.
மேலே பார்த்து அதிசயத்தபடி
எந்த அவசரமுமற்று நகர்ந்து போகும் நதி.
ஊர்முழுதும் ஓடும் வாய்க்காலெங்கும்
ஜென்மமெடுத்ததே குளிப்பதற்கென்பதாய்
பாவாடை மேலேற்றிக் கட்டிய தாமரைகள்
கூச்சமற்றுக் குளித்தெழும்.
கிராமத்தை ஊடறுத்து கிழக்கு மேற்காக
புகைவண்டிப் பாதைபோகிறது.
தார்வீதியும் தண்டவாளமும்
அருகருகாய் இருப்பதால்
றெயில் பயணிகள் பஸ்சுக்கும்
பஸ் பயணிகள் றெயிலுக்குமாக
கைகளை ஆட்டியபடி இவ வுூர் கடப்பார்.
விரைவு வண்டி தரித்தேகா ஸ்டேசனொன்றும்
அங்குண்டு.
ஆற்றுக்கு மேலான பாலத்தேறி
அக்கரை போகவேண்டும் அதற்கு.
மாலைச் சூரியன் மலையில் இறங்குவதை
இந்தப் பாலத்தில் நின்று பார்க்கவேண்டும்
பிறவி பலன் பெறும்.
மாலையும்,
மாலைச் சூரியனும்,
பச்சை போh த்திய வயல்களும்.
ஈரலிப்பான இதமான காற்றும்.
உள்ளே உள்ள ஊர்களிலிருந்து ஓடிவரும்
வண்டிற் பாதைகளும்
என்னை விட்டுப் போவாயா நீயென
வாரிச்சுருட்டி தன்னுள் வைத்துக்கொள்ளும்.
அத்தனை அழகும் சேர்ந்து
எம்மைப் பித்தனாக்கிவிட்டுப் புன்னகைக்கும்,
விரலுக்கேற்ற வீக்கமாய்
ஒரு சின்ன பஸ்ரான்ட்,
அஞ்சாறு கடைகள்,
ஆண்களும் பெண்களுக்குமான
இரண்டு பாடசாலைகள்,
ஊரின் நடுவில் சடைவிh}த்த அரசமரம்
சின்ன விகாரை,
போகும் ஒவ வொரு தடவையும்
அங்கேயே தங்கிவிடச்சொல்லும் மனது,
தங்கிப் பிரியும் ஒவ வொரு முறையும்
வலிசுமந்து வெளியேறும் இதயம்.
வெள்ளைத் தட்டேந்திய சிறுமிகள்
புூசைக்குப் போவர்.
கூட்டியள்ளிக் கொஞ்சவேண்டும் போல
அத்தனையும் அழகுப் பொம்மைகள்.
மெல்லக் காற்றுலவுவது போல
புூமிக்கு நோகாமல் நடந்து
எவரையும் இறாஞ்சிக் கொண்டு போவர் இளம் பெண்கள்.
வரட்சியில்லாத அந்த வனப்பு
ஈரப்பலாக்காய்க்கு எவர் கொடுத்த வரம்?
முப்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு பௌர்ணமி நாளில்
அந்தக் கிராமத்தில் இருந்தேன் கடைசியாக.
என் சிங்களத்தோழன் சந்தகிரி வீட்டில்
இறுதியாகத் தமிழனுக்கு விருந்து நடந்தது.
இலங்கைத் தேசியம்.
இனங்களை மீறிய வர்க்க உறவு.
இரு இனங்களையும் இணைத்த பாட்டாளிகளின் புரட்சி
இப்படி என்னனென்னவோ எல்லாம் பேசியபடி
அந்த கிராமத்தின் தெருவில் உலவினோம்.
வயலில் நடந்தோம்.
ஜில்லென வந்து தழுவும்
மலைச்சாரற்காற்றை அளைந்தபடி
மலைகளை அகற்றிய மூடக்கிழவனைப் பற்றி
பேசியதாயும் நினைவு.
சந்தக}ரியின் தங்கைதான் பராமா}த்தாள்.
குளிக்க ஆற்றுக்குப் போனபோதும்
குளித்து திரும்பியபோதும்
அவளும் கூடவே வந்தாள்.
வழமை போல் அன்றும் பிரியும் போது
மீண்டும் சந்திப்போமெனச் சொல்லிக் கொண்டோம்.
பஸ்ரான்ட் வரை வந்து
வழியனுப்பி வைத்தனர் சந்தகிரியும் தங்கையும்.
எல்லாம் நேற்றுப போல் நிழலாட
முப்பது வருடங்களை விழுங்கிவிட்டதா காலம்?
இன்று கனவிலேன் வந்தது அந்தக் கிராமம்!
சந்தகிரியை மீண்டும் சந்திக்கவில்லையே
எங்கிருக்கிறாய் நண்பா?
அந்த ஊரில்அதேவீட்டிற்தானா?
பன்னிரண்டு முறை இடம்பெயர்ந்து
இப்போ வன்னியிலிருக்கிறேன் நான்.
இடையில் நடந்ததனைத்தையும்
மறந்து விடுவோம்.
நீ இப்போதும் Nஐ-வி-பியின் செயற்குழுவிலெனில்
இன்றைய கனவை நான் சபிக்கிறேன்.
நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு
இப்போதுதான் அதிகமுண்டு.
அதே ஊரில்
அதே ஆற்றின் மேற் போட்ட பாலத்தில்
அதே ஜில்லெனக் காற்றுத் தவழும் வயல்களில்
சந்திக்க முடியும் தோழனே.
உன்தங்கைக்குச் சொல்க
எனக்கு மூன்று பிள்ளைகள் என்று.
கனவின் மீதியெழுதும் காலம் வந்துள்ளது
கைவிட்டு விடாதீர்.
நல்ல நண்பர்களாக,
நல்ல அயலவராக
ஒன்றெனில் ஓடிவரும் உறவினராக
அருகருகாய் வாழமுடியும்.
உங்கள் கைகளிற்தான் எல்லாமும்.
புதுவை இரத்திiதுரை
காலாற உலவுவதாகக் கனவுவந்தது
விழித்தும் துரத்துகிறது என்னை.
பலிக்காத பகற்கனவெனினும்
பழைய நினைவுகளைக் கிளறி
வேடிக்கை பார்க்கிறது சனியன்,
அது என் சிங்கள நண்பனின் சிற்றூர்.
நான் அதிகம் களைப்பாறிய நிழல்
தமிழனெனத் தள்ளாது
தூக்கி ஓக்களையில் வைத்த ஊh .
அத்தனை அழகளையும் கொட்டி
எவன் படைத்தான் அந்த ஊரை?
சொர்க்கத்தில் வெட்டிய துண்டொன்றை
சுமந்த வந்து அங்கே போட்டவன் எவன
மனித உழைப்பதிகமின்றி
அதிசயமாய் அதன் அழகு நிகழ்ந்திருக்கலாம்.
எந்த ஒப்பனையுமின்றி
கிணற்றடி வாழையின் மதர்மதப்பாய்
ஓரமாய் கிடக்கும் ஊர்.
தினமும் மழைசிணுங்கும் மலைச்சாரலில்
காற்றில் சேலையுடுத்துவதாய்
மேகம் மிதந்து செல்லும்.
மேலே பார்த்து அதிசயத்தபடி
எந்த அவசரமுமற்று நகர்ந்து போகும் நதி.
ஊர்முழுதும் ஓடும் வாய்க்காலெங்கும்
ஜென்மமெடுத்ததே குளிப்பதற்கென்பதாய்
பாவாடை மேலேற்றிக் கட்டிய தாமரைகள்
கூச்சமற்றுக் குளித்தெழும்.
கிராமத்தை ஊடறுத்து கிழக்கு மேற்காக
புகைவண்டிப் பாதைபோகிறது.
தார்வீதியும் தண்டவாளமும்
அருகருகாய் இருப்பதால்
றெயில் பயணிகள் பஸ்சுக்கும்
பஸ் பயணிகள் றெயிலுக்குமாக
கைகளை ஆட்டியபடி இவ வுூர் கடப்பார்.
விரைவு வண்டி தரித்தேகா ஸ்டேசனொன்றும்
அங்குண்டு.
ஆற்றுக்கு மேலான பாலத்தேறி
அக்கரை போகவேண்டும் அதற்கு.
மாலைச் சூரியன் மலையில் இறங்குவதை
இந்தப் பாலத்தில் நின்று பார்க்கவேண்டும்
பிறவி பலன் பெறும்.
மாலையும்,
மாலைச் சூரியனும்,
பச்சை போh த்திய வயல்களும்.
ஈரலிப்பான இதமான காற்றும்.
உள்ளே உள்ள ஊர்களிலிருந்து ஓடிவரும்
வண்டிற் பாதைகளும்
என்னை விட்டுப் போவாயா நீயென
வாரிச்சுருட்டி தன்னுள் வைத்துக்கொள்ளும்.
அத்தனை அழகும் சேர்ந்து
எம்மைப் பித்தனாக்கிவிட்டுப் புன்னகைக்கும்,
விரலுக்கேற்ற வீக்கமாய்
ஒரு சின்ன பஸ்ரான்ட்,
அஞ்சாறு கடைகள்,
ஆண்களும் பெண்களுக்குமான
இரண்டு பாடசாலைகள்,
ஊரின் நடுவில் சடைவிh}த்த அரசமரம்
சின்ன விகாரை,
போகும் ஒவ வொரு தடவையும்
அங்கேயே தங்கிவிடச்சொல்லும் மனது,
தங்கிப் பிரியும் ஒவ வொரு முறையும்
வலிசுமந்து வெளியேறும் இதயம்.
வெள்ளைத் தட்டேந்திய சிறுமிகள்
புூசைக்குப் போவர்.
கூட்டியள்ளிக் கொஞ்சவேண்டும் போல
அத்தனையும் அழகுப் பொம்மைகள்.
மெல்லக் காற்றுலவுவது போல
புூமிக்கு நோகாமல் நடந்து
எவரையும் இறாஞ்சிக் கொண்டு போவர் இளம் பெண்கள்.
வரட்சியில்லாத அந்த வனப்பு
ஈரப்பலாக்காய்க்கு எவர் கொடுத்த வரம்?
முப்பது வருடங்களுக்கு முன்னர்
ஒரு பௌர்ணமி நாளில்
அந்தக் கிராமத்தில் இருந்தேன் கடைசியாக.
என் சிங்களத்தோழன் சந்தகிரி வீட்டில்
இறுதியாகத் தமிழனுக்கு விருந்து நடந்தது.
இலங்கைத் தேசியம்.
இனங்களை மீறிய வர்க்க உறவு.
இரு இனங்களையும் இணைத்த பாட்டாளிகளின் புரட்சி
இப்படி என்னனென்னவோ எல்லாம் பேசியபடி
அந்த கிராமத்தின் தெருவில் உலவினோம்.
வயலில் நடந்தோம்.
ஜில்லென வந்து தழுவும்
மலைச்சாரற்காற்றை அளைந்தபடி
மலைகளை அகற்றிய மூடக்கிழவனைப் பற்றி
பேசியதாயும் நினைவு.
சந்தக}ரியின் தங்கைதான் பராமா}த்தாள்.
குளிக்க ஆற்றுக்குப் போனபோதும்
குளித்து திரும்பியபோதும்
அவளும் கூடவே வந்தாள்.
வழமை போல் அன்றும் பிரியும் போது
மீண்டும் சந்திப்போமெனச் சொல்லிக் கொண்டோம்.
பஸ்ரான்ட் வரை வந்து
வழியனுப்பி வைத்தனர் சந்தகிரியும் தங்கையும்.
எல்லாம் நேற்றுப போல் நிழலாட
முப்பது வருடங்களை விழுங்கிவிட்டதா காலம்?
இன்று கனவிலேன் வந்தது அந்தக் கிராமம்!
சந்தகிரியை மீண்டும் சந்திக்கவில்லையே
எங்கிருக்கிறாய் நண்பா?
அந்த ஊரில்அதேவீட்டிற்தானா?
பன்னிரண்டு முறை இடம்பெயர்ந்து
இப்போ வன்னியிலிருக்கிறேன் நான்.
இடையில் நடந்ததனைத்தையும்
மறந்து விடுவோம்.
நீ இப்போதும் Nஐ-வி-பியின் செயற்குழுவிலெனில்
இன்றைய கனவை நான் சபிக்கிறேன்.
நாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு
இப்போதுதான் அதிகமுண்டு.
அதே ஊரில்
அதே ஆற்றின் மேற் போட்ட பாலத்தில்
அதே ஜில்லெனக் காற்றுத் தவழும் வயல்களில்
சந்திக்க முடியும் தோழனே.
உன்தங்கைக்குச் சொல்க
எனக்கு மூன்று பிள்ளைகள் என்று.
கனவின் மீதியெழுதும் காலம் வந்துள்ளது
கைவிட்டு விடாதீர்.
நல்ல நண்பர்களாக,
நல்ல அயலவராக
ஒன்றெனில் ஓடிவரும் உறவினராக
அருகருகாய் வாழமுடியும்.
உங்கள் கைகளிற்தான் எல்லாமும்.
புதுவை இரத்திiதுரை

