06-21-2003, 09:44 AM
சூரியன் மேற்கிளம்பிக் கொண்டிருந்த
ஒரு காலையில்
கடுஞ் சமருக்குப் பிறகு
மீட்கப்பட்ட ஊருக்கு
ஆவல் பொங்கியெழ விரைந்தேன்.
பத்தைகளில் சிக்குண்டு
முடங்கிக் கிடந்த தெருவழியே.
பாழடைந்து
நாறிக்கிடந்த ஊரின்
பயங்கர நிசப்தத்துள்
நுழைய நுழைய நெஞ்சிறுகிற்று.
கண்ணிவெடியில் கால்கள் இடற
குப்புற நான் விழுந்து
சிதறிச் சாவுறக் கூடுமென்று
அடிக்கடி திடுக்கிட்டேன்.
எறிகணைகள் குதறிக்குழிந்த தெருவிலிருந்து
நடுங்கும் கண்களால் இறங்கி
நடந்தேன்
பாழ்வெளியெங்கும் நடந்தேன்.
இடிபாடுகளுள் நெரிபடும்
கடவுளாரின் சிதைந்த படங்கள்
முறிந்த தென்னைகள்
தறியுண்ட பனைகள்
பட்ட மரங்கள்
முட்கம்பி வேலிகள்
மண் அணைகள்
வெடித்துச் சிதறிய காப்பரண்கள்.
விகாரித்து நாறிக் கிடக்கும்
பிணங்களைக் குதறும் காக்கைகள்
இரத்தம் தோய்ந்த இராணுவச் சீருடைகளில்
கத்தை கத்தையாய் கூலிக்காசுகள்
இளம் பெண்களின் ஒளிப்படங்கள்
(இராணுவத்தினரின் காதலிகளினதாய்
அல்லது மனைவியர்களினதாய்
அல்லது பிள்ளைகளினதாய் இருக்கலாம்)
அஞ்சலிடப்படாத வேற்றுமொழிக் கடிதங்கள்
(காதலியருக்கு
அல்லது உறவினருக்கு
இராணுவத்தினர் எழுதியவை)
விலங்கிடப்பட்ட எலும்புக் கூடுகளினதும்
நொறுங்குண்ட மண்டையோடுகளினதும்
அருகருகே உக்கிய நிலையில்
சேட்டுகள், சாறங்கள்.
சேலைகள், சட்டைகள்
ஜீன்சுகள், பெனியன்கள்
(காணாமற் போனோரது ஞாபகங்கள்)
வெடித்த ரவைகளின் கோதுகள்
வெடிக்காத ரவைகள்
இடிந்த கட்டிடங்களில்
உடைந்து கிடந்த எழுத்துக்களை
சல்லடையாக்கியிருந்தன
துப்பாக்கிச் சன்னங்கள்
கறள் கட்டிய முட்கம்பி வேலியில்
குப்புறக் கொழுவுண்டு கிடந்த
எலும்புக் கூடொன்றில்
தூங்கிக் கொண்டிருந்தது
வெள்ளிக் குருசு.
நிழல் உதிர்த்த
முறியுண்ட மரங்கள் மீதும்
இடிபாடுகளின் மேலும்
என் தலையிலும்
அவ வப்போது
உதிர்ந்து உலர்ந்து
கருகியழிந்தன
கிளைகளும்
கூடுகளும்
குஞ்சுகளும் தேடி
தவித்தலையும் பறவைகளின்
அவலக் குரல்கள்
திடீரென
இடிபாடுகளின் இடுக்குகளினூடே
கிளம்பியெழும் ஓலம்
கரிய புகை போலே
வெளியெங்கும் நிறைவதைப் பார்த்தேன்.
தீயெழுந்தோடி
திக்கெங்கும் கருகியுதிர்ந்த சாம்பலுள்
மூடுண்டு கிடந்த
மாபெரும் துயர் கண்டு
திகைத்தேன்
திகிலடைந்தேன்.
உச்சியில் மோதி
உள்ளிறங்கும் வெக்கையுடன்
ஒதுங்க நிழல் தேடியலைகையில்
உள்ளொலித்தது
உலகெங்கிலும்
மீட்கப்பட வேண்டிய ஊர்கள் பல
மீதமிருக்கின்றன வென்று.
அமரதாஸ்
ஒரு காலையில்
கடுஞ் சமருக்குப் பிறகு
மீட்கப்பட்ட ஊருக்கு
ஆவல் பொங்கியெழ விரைந்தேன்.
பத்தைகளில் சிக்குண்டு
முடங்கிக் கிடந்த தெருவழியே.
பாழடைந்து
நாறிக்கிடந்த ஊரின்
பயங்கர நிசப்தத்துள்
நுழைய நுழைய நெஞ்சிறுகிற்று.
கண்ணிவெடியில் கால்கள் இடற
குப்புற நான் விழுந்து
சிதறிச் சாவுறக் கூடுமென்று
அடிக்கடி திடுக்கிட்டேன்.
எறிகணைகள் குதறிக்குழிந்த தெருவிலிருந்து
நடுங்கும் கண்களால் இறங்கி
நடந்தேன்
பாழ்வெளியெங்கும் நடந்தேன்.
இடிபாடுகளுள் நெரிபடும்
கடவுளாரின் சிதைந்த படங்கள்
முறிந்த தென்னைகள்
தறியுண்ட பனைகள்
பட்ட மரங்கள்
முட்கம்பி வேலிகள்
மண் அணைகள்
வெடித்துச் சிதறிய காப்பரண்கள்.
விகாரித்து நாறிக் கிடக்கும்
பிணங்களைக் குதறும் காக்கைகள்
இரத்தம் தோய்ந்த இராணுவச் சீருடைகளில்
கத்தை கத்தையாய் கூலிக்காசுகள்
இளம் பெண்களின் ஒளிப்படங்கள்
(இராணுவத்தினரின் காதலிகளினதாய்
அல்லது மனைவியர்களினதாய்
அல்லது பிள்ளைகளினதாய் இருக்கலாம்)
அஞ்சலிடப்படாத வேற்றுமொழிக் கடிதங்கள்
(காதலியருக்கு
அல்லது உறவினருக்கு
இராணுவத்தினர் எழுதியவை)
விலங்கிடப்பட்ட எலும்புக் கூடுகளினதும்
நொறுங்குண்ட மண்டையோடுகளினதும்
அருகருகே உக்கிய நிலையில்
சேட்டுகள், சாறங்கள்.
சேலைகள், சட்டைகள்
ஜீன்சுகள், பெனியன்கள்
(காணாமற் போனோரது ஞாபகங்கள்)
வெடித்த ரவைகளின் கோதுகள்
வெடிக்காத ரவைகள்
இடிந்த கட்டிடங்களில்
உடைந்து கிடந்த எழுத்துக்களை
சல்லடையாக்கியிருந்தன
துப்பாக்கிச் சன்னங்கள்
கறள் கட்டிய முட்கம்பி வேலியில்
குப்புறக் கொழுவுண்டு கிடந்த
எலும்புக் கூடொன்றில்
தூங்கிக் கொண்டிருந்தது
வெள்ளிக் குருசு.
நிழல் உதிர்த்த
முறியுண்ட மரங்கள் மீதும்
இடிபாடுகளின் மேலும்
என் தலையிலும்
அவ வப்போது
உதிர்ந்து உலர்ந்து
கருகியழிந்தன
கிளைகளும்
கூடுகளும்
குஞ்சுகளும் தேடி
தவித்தலையும் பறவைகளின்
அவலக் குரல்கள்
திடீரென
இடிபாடுகளின் இடுக்குகளினூடே
கிளம்பியெழும் ஓலம்
கரிய புகை போலே
வெளியெங்கும் நிறைவதைப் பார்த்தேன்.
தீயெழுந்தோடி
திக்கெங்கும் கருகியுதிர்ந்த சாம்பலுள்
மூடுண்டு கிடந்த
மாபெரும் துயர் கண்டு
திகைத்தேன்
திகிலடைந்தேன்.
உச்சியில் மோதி
உள்ளிறங்கும் வெக்கையுடன்
ஒதுங்க நிழல் தேடியலைகையில்
உள்ளொலித்தது
உலகெங்கிலும்
மீட்கப்பட வேண்டிய ஊர்கள் பல
மீதமிருக்கின்றன வென்று.
அமரதாஸ்

