08-01-2005, 08:02 PM
AJeevan Wrote:ஆனால் சில தவறான தகவல்களும்
தவறான அரச நடை முறைகளும் தொடருமானால்
இதுவே மேலதிக பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடும்.
அப்பாவிகள் தாக்கப்படுவதோ,துன்புறுத்தப்படுவதோ ,
அவர்களையும் பயங்கரவாதிகள் என்ற தன்மைக்கு மாற்றி விடும். இது போன்ற நிலைகள்
உலக வரலாறுகளில் அதிகமாக பார்க்கலாம்.
மிரண்டவன் கண்களுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது போல, சில நடைமுறைகள் நடக்கின்றன.
மக்களை பீதியடைய செய்வதும் குழப்பமடைய செய்வதும் குண்டு வைத்தவர்களின் நோக்கங்களில் ஒன்று. இந்த குண்டு வெடிப்புகளை தொடர்ந்து குறிப்பிட்ட இன சமுக மக்களின் மீது சந்தேகமும் வெறுப்புணர்வும் தோன்றுவது இயல்பானது. அந்த வெறுப்புணர்வை கண்டு குறிப்பிட்ட இன மக்கள் வெகுண்டு தம்முடன் இணைய வேண்டும் என்று தீவிரவாதிகள் எதிர்பார்க்கின்றார்கள். அதற்கு அப்பாவிகள் தவறுதலாக தாக்கப்படுவது துன்புறுத்தப்படுவதும் துணைபுரிகின்றது. அது அரசிற்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் அது போன்ற சூழ்நிலைகளை தவிர்க்கும் முயற்சிகளை எடுக்கின்றார்கள் ... தவறுகள் நடப்பதை முடிந்தவரை தடுக்க முயல்கிறார்கள். அப்படி இருந்தும் ஒரு அசம்பாவிதம் நடந்துவிட்டது இனியும் நடக்க வாய்ப்புக்கள் உள்ளது. இவற்றை எந்த அரசினாலும் 100 வீதம் தடுக்க முடியாது என்று நினைக்கின்றேன். எப்படியிருந்தாலும் இனிமேல் எதுவிதமான உயிரிழப்புக்களும் ஏற்படாது ஏற்படக்கூடாது என நம்புவோம்.
AJeevan Wrote:லண்டனைப் பொறுத்தவரை ஏகப்பட்டவர்கள் (நம்மவர்கள் உட்பட ) அனுமதிகளற்று வாழ்கிறார்கள். இவர்களது நிலை பரிதாபகரமானது.
அவற்றை நான் எழுத விரும்பவில்லை.
நீங்கள் குறிப்பிட்டது போல் நம்மவர்கள் உட்பட ஏகப்பட்டோர் தகுந்த வாழ்விட அனுமதி இல்லாமல் பரிதாபமான நிலையில் வாழ்கிறார்கள் என்பது உண்மைதான். இந்த நாட்டில் மற்றய நாடுகளள விட பல இன மத மொழி பிரிவுகளை சேர்ந்த பெருந்தொகையானோர் தஞ்சம் கோரி இருக்கின்றார்கள். அது தவிர ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் நிராகரிக்கப்படும் பலரும் பிரான்ஸ் ஊடாக இங்கு வந்து சேர்க்கிறார்கள். ஏனெனில் இங்கு வந்து சேர்பவர்களின் தஞ்ச கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டாலும் அவர்களை திருப்பி அனுப்புவது மிக மிக குறைவு. அதுதவிர தஞ்ச கோரிக்கை நாளடைவில் ஏற்கப்படும் வாய்ப்பு இருப்பதாலும் அதுவரை சுதந்திரமான நடமாட்டத்திற்கும் தடையின்மையாலும் வேறு பல வாய்ப்புக்கள் இருப்பதாலையுமே பலரும் இங்கு இருப்பதுடன் இங்கு வர வேண்டும் என்று முயல்கிறார்கள். ஐரோப்பிய நாடுகளிடையே ஒப்பிட்டு பார்க்கும் போது பிரித்தானியா தஞ்சம் கோருபவர்களை நன்றாகவே நடத்துகின்றார்கள் என்று நினைக்கின்றேன்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

