08-01-2005, 06:31 PM
Mathan Wrote:அஜீவன் அண்ணா,
குண்டு வெடிப்பை தொடர்ந்து பிரிட்டிஷ் அரசு என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? வருந்தினால் உயிர் திரும்பாது என்பது உண்மை. ஆனால் இரண்டு குண்டு வெடிப்புக்கள் நடத்த நிலையில் இது போன்ற சம்பங்களை முற்று முழுதாக தடுப்பது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா? அதுதவிர பல இன சமுதாய மக்கள் வாழும் லண்டன் நகரில் மக்களுக்கு போதியளவு உரிமைகள் சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று கருதுகிறீர்களா? பொதுவாக ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் இங்கு அதிகளவான இன மத கலாச்சார மக்களுக்கு வாழ வசதியளிக்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் தம்முடைய தனித்தன்மையை பேச முடிந்தளவு வசதி வாய்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கின்றது என நினைக்கின்றேன். இங்கு வழங்கப்பட்டிருக்கு அதிகளவான சுதந்திரமே சில பிரைச்சனைகளுக்கு காரணம்.
உங்கள் கருத்தும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் சில தவறான தகவல்களும்
தவறான அரச நடை முறைகளும் தொடருமானால்
இதுவே மேலதிக பிரச்சனைகளுக்கு வழி வகுத்துவிடும்.
அப்பாவிகள் தாக்கப்படுவதோ,துன்புறுத்தப்படுவதோ ,
அவர்களையும் பயங்கரவாதிகள் என்ற தன்மைக்கு மாற்றி விடும்.
இது போன்ற நிலைகள்
உலக வரலாறுகளில் அதிகமாக பார்க்கலாம்.
மிரண்டவன் கண்களுக்கு அரண்டதெல்லாம் பேய் என்பது போல, சில நடைமுறைகள் நடக்கின்றன.
லண்டனைப் பொறுத்தவரை ஏகப்பட்டவர்கள் (நம்மவர்கள் உட்பட ) அனுமதிகளற்று வாழ்கிறார்கள்.
இவர்களது நிலை பரிதாபகரமானது.
அவற்றை நான் எழுத விரும்பவில்லை.
ஆனால் நடக்கும் செய்திகளை கொடுக்கும் போது,
அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது.
சில தகவல்கள் அவர்களை சாந்தப்படுத்துகிறது.
இதையாவது நாம் செய்ய வேண்டும்.
பலர் இங்கே மௌனமாகவே இருக்கிறார்கள்.
அங்கு பத்திரகைகளில் வரும் செய்திகளையாவது <span style='color:red'>பொய்யான தகவல்களைத் தவிர்த்து..............
இங்கு வெளியிட்டால்
அவை பலருக்கு நன்மை பயக்கலாம் என நினைக்கிறேன்.</span>

