Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்க விவகாரம்
#5
மகேஸ்வரன் போன்றவர்களிற்கு என்னதான் செய்துகொள்வது
மண்ணென்ணை மகேஸ்வரன் எப்பதான் மாறப்போகின்றார் தனது குழந்தைத்தனமான விளையாட்டுகளில் இருந்து

இன்றைய உதயன் செய்தியில் இருந்து


உதயனை மிரட்டிப்பார்க்கிறார் அமைச்சர் தி;.மகேஸ்வரன்
இலங்கைத் தமிழ் ஊடகவியலா ளர் ஒன்றியத்தின் விருது வழங்கும் வைபவத்தில் அநாகரிகமான முறையில் - அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டு களை - ~உதயன்|, ~சுடர்ஒளிஷ பத்திரி கைகளின் பெயர் குறிப்பிடாமல் அவற் றின் மீது சுமத்தி, அமைச்சர் தி.மகேஸ் வரன் உரையாற்றியிருந்தமை குறித்து நேற்றுமுன்தினம் உதயனில் செய்தி வெளியாகியிருந்தது அல்லவா? அது தொடர்பாகத் தனது வழமையான - வாய்ச்சவாடல் மிரட்டல் பாணியில் - நீண்ட அறிக்கை ஒன்றைத் தமது அமைச்சின் சார்பில் தமது அமைச்சு ஊடாக அனுப்பி வைத்திருக்கின்றார் மகேஸ்வரன். வழ வழா, கொழ கொழா என்ற அந்த நீண்ட அறிக்கையின் சாராம் சம் இதுதான்:-
சம்பந்தப்பட்ட கூட்டத்தில் எந்தப் பத்திரிகை நிறுவனத்தையோ, நிறு வன நிர்வாகியையோ அமைச்சர் பெயர் குறிப்பிட்டு விமர்சிக்கவில்லை. உதயன் ~தொப்பி தனது தலைக்கே பொருந்தும்| என்ற ரீதியில் செய்தி வெளியிட்டு தனது சுயரூபத்தைக் காட்டியுள்ளது.
~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரிகை களில் பணிபுரிபவர்களை ஊடகவி யலாளர் ஒன்றியத்தில் இணையவி டாது வலியுறுத்துவதாக அப்பத்திரி கைகளில் பணிபுரிபவர்களே அமைச் சருக்குத் தெரிவித்துள்ளனர். அவர்களின் நலன்கருதி, அவர்களுக்கு அளித்த வாக் குறுதிகளுக்கு அமைவாக, அவற் றின் இரகசியத் தன்மையை அமைச் சர் பேணியுள்ளார்.
~~உதயனில் பணிபுரியும் பத்திரி கையாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கின்றார்கள்|| என்று ~உதயன்| தெரி வித்திருப்பது, நீதி தவறாது, நடுநிலை யாக, பக்கச்சார்பின்றி எவ்வளவோ சிர மத்தின் மத்தியில் செய்தி வெளியி டும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தில் அங்கம் வகிக்கும் பத்திரிகையா ளர்கள் எவரும் சுயாதீன நிலையில் செயற்படவில்லை எனக் குற்றம்சாட்டி அவர்களை அவமதிப்பதாக அமை கிறது. இது கண்டிக்கத்தக்கது. ஏனைய ஊடகங்களைக் கொச்சைப்படுத்துவதா கவும் அமைகிறது.
நல்லூர் திருவிழாக் காலத்தில் ஆலயச் சுற்றாடலில் பக்தர்களுக்கு இடையுூறாக அமைச்சர் வாகன பவனி வந்தார் என்பதை நிரூபிக்க முடியுமா? அமைச்சர் அப்படி வாகன பவனி வர வில்லை என்பதை இலங்கை வாழ் இந்துக்களின் ஒரே ஒரு ஆதீன குரு மகா சந்நிதானமும், யாழ் அரச அதிப ரும் அனைத்து இந்துக்களும் நன்கு அறிவர். திரிபுபடுத்தப்பட்ட இச்செய்தி குறித்து அவர்கள் விசனம் அடைந்துள் ளனர். தனது செய்தியில் குறிப்பிட்ட தகவலை உதயனால் நிரூபிக்க முடி யுமா?
யாழ்ப்பாணத்தில் கைது செய் யப்பட்ட சைவ சிறுவர் இல்லச் செயலாளரை இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் உள்ள சுவாமிகளுடன் ஒப்பிட்டு செய்தி வெளியிடவில்லை என்று உதயன்| மறுப்பது முழுப்புூ சணிக்காயைச் சோற்றில் மறைக்க முற்படும் செயலாகும். இந்தியாவில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவாமிகளிடம் ~உதயன்| நிர்வாகி ஆசிபெறும் படம் அமைச்சரிடம் உள்ளது. பத்திரிகை நிர்வாகமும் நிறுவனமும் விட்ட தவ றுக்கு நிர்வாகியின் குடும்பத்தினரை இழுப்பது மனித நாகரிகமற்ற செயல் என்பதாலும் அதனை ஏனைய ஊட கங்களில் பிரசுரிப்பது அநாகரிகமா னது என்பதாலும் அமைச்சர் இது விடயத்தில் தனது பெருந்தன்மையை வெளிக்காட்டி அமைதியாய் இருந்தார். தன்னிடம் உள்ள படத்தினை அமைச் சர் சமயப் பெரியார் அல்லது பொதுவான ஒருவரிடம் கையளிக்கத் தயா ராக உள்ளார். அவரிடம் அப்படத்தைப் பார்வையிட்டு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.
ஊடகவியலாளர் விருது வழங் கும் வைபவத்தில் உதயனுடன் இணைந்து செயற்பட்டதற்காக பத்திரி கையாளர் எவரும் கௌரவிக்கப்பட வில்லை. ~உதயன்| உரிமை கொண்டா டும் செய்தியாளர் திரு. தில்லைநாதன் கடந்த 38 வருட காலமாக வேறு செய் திப் பத்திரிகை நிறுவனத்தில் கடமை புரிபவர் என்ற முறையிலேயே அவ ருக்கு விருது வழங்கப்பட்டதேயன்றி ஷஉதயன்| - பத்திரிகையாளர் என்ற வகையில் அல்ல. அப்பத்திரிகையா ளர் மீது உதயன் நிறுவனம் எவ்விதத் திலும் உரிமை கொண்டாட முடியாது என்பதை ஆணித்தரமாகக் குறிப்பிட விரும்புகிறோம்.
இலங்கையில் தமிழ் ஊடகத்துறைக்கு அரும்பாடுபட்டு உழைத்துவ ரும் ஊடகவியலாளர் பங்குகொண் டுள்ள அமைப்புதான் தமிழ் ஊடகவிய லாளர் ஒன்றியம். அதன் செயற்பாடு கள் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமானவை. ஒன்றியத்தை விமர்சிக்கும் யோக்கியம் ~உதயன்|, ~சுடர்ஒளி|க்குக் கிடையாது. ~உதயன்|, ~சுடர்ஒளி| ஊடகவியலாளர்கள் மேற் படி சங்கத்தில் அங்கத்துவம் பெற வில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில்தான் அமைச்சர் மேற்படி நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஃவெளிவருகின்ற இரு பத்திரிகை நிறு வனங்களுக்கு தங்களால் ஏற்பட்ட நெருக்கடிகளை நாங்கள் அறிவோம். தனிப்பட்ட பகைமையை தனிப்பட்ட ரீதியில் எதிர்கொள்ள அமைச்சர் தயாராக உள்ளார். உங்கள் பாணியில் பதிலடியை எதிர்பார்த்தால் அதேபாணியில் பதில்தர தயாராக உள்ளார். அமைச்சரின் கௌரவ வர்த்தக நடவ டிக்கைக்கு குறுக்கீடு செய்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அதேபாணியில் அமைச்சர் இன்று அர சியல் ரீதியில் பதிலடி கொடுப்பதைத் தங்களுக்கு ஞாபகப்படுத்துவதுடன் தாங்கள் தொடர்ந்தும் எம்மீது அபாண் டமான பழி சுமத்தினால் உங்கள் பாணியில் பதிலளிக்க அமைச்சர் தயா ராக இருக்கிறார் - என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
உதயனின் விளக்கம்
அமைச்சரின் பதில் அளவுக்கு அதிகமாக நீண்டதாக இருந்ததால் அதன் முக்கிய அம்சங்கள் - சாரங்கள் - முழுதாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு விளக்கம் இங்கே தரப் படுகின்றது. அவற்றை வாசிக்கும் நமது வாசகர்கள், தமிழில் வெளியான ஷஉத யன்| செய்திகள் குறித்து அமைச்சரின் புரிந்துகொள்ளும் அறிவை எடைபோட முடியும் எனக் கருதுகிறோம்.
1. சம்பந்தப்பட்ட நிகழ்வில் ~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரிகைகளின் பெயர் குறிப்பிடாமல் அவற்றின் மீது அபாண் டமான குற்றச்சாட்டுகளை அமைச்சர் சுமத்தினார் என்பதை தெட்டத்தெளி வாக தனது மூலச் செய்தியின் ஆரம் பத்திலேயே ~உதயன்| குறிப்பிட்டிருந் தான். நல்லூர் திருவிழாக் காலத்தில் அமைச்சரின் கார் பவனி பற்றிய செய்தி இலங்கை தமிழ் ஊடகங்களின் ~உத யன்|, ~சுடர்ஒளி|யில் மட்டுமே வெளியா கியிருந்தன. அதைக்குறிப்பிட்டு அமைச் சர் பிரஸ்தாபித்த பின்னர் ~தொப்பி எமக்கல்ல் யாருக்கோ| என்று ~உதயன்| பொறுத்திருக்க முடியாது.
2. எந்த ஊடகவியலாளர் சங்கத் திலும் ~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரிகை யாளர்களைச் சேரக்கூடாது என்றோ அல்லது சேரும்படியோ உதயனோ அதன் நிர்வாகமோ எந்தக் கட்டத்திலும் வற்புறுத்தவோ, வலியுறுத்தவோ, நிர்பந்திக்கவோ இல்லை என்பதை உதயன்-தனது பேனாவின் மீது ஆணை யாக - மீண்டும் உறுதிபடக் கூறுகிறான். ~உதயன்|, ~சுடர்ஒளி~ பத்திரிகைகளில் பணிபுரிபவர்களே அதைத் தன்னிடம் தெரிவித்தார்கள் என்றும், அவர்களின் நலன்கருதியும் அவர்களுக்கு அளித்த வாக்குறுதிக்கு அமைவாகவும் அவர்கள் பற்றிய இரகசியத் தன்மையைத் தான் பேணுகின்றார் எனவும் அமைச் சர் கூறுவது ஏற்கனவே தான் குறிப்பிட் டது பொய் என்பதால் அதை நிரூபிக்க முடியாத நிலையில், அதிலிருந்து தப்புவதற்கேயாகும். பொய்யில் வளர்ந்த அரசியல்வாதிகள் இவ்வாறு கூறிச் சமாளிப்பது பொதுவானதுதான்.
3. ~~உதயனில் பணிபுரியும் பத்திரி கையாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கின்றார்கள்|| என்று ~உதயன்| செய்தியில் குறிப்பிட்டிருப்பது ~உதயன்|, ~சுடர்ஒளி| ஆசிரிய பீட ஊடகவியலா ளரின் தனிப்பட்ட நிலைப்பாடே தவிர, உதயனின் நிலைப்பாடு அல்ல. அப் படி அவர்கள் கருதுவதை வெளிப்ப டுத்துவதன் மூலம் ~உதயன்|, ~சுடர் ஒளி| சுயாதீனமானவை, ஏனையவை சுயாதீனமற்றுச் செயற்படுபவை என்று ~உதயன்| கூற முன்வரவில்லை. அப்படி அமைச்சர் கருதுவது அவரது விளக்கமின்மையே தவிர வேறில்லை. அத்தோடு, தங்கள் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங்கத்தி லும் அங்கத்துவம் பெறாமல் இருப் பதை ஒருசாரார் விரும்புகின்றனர் என் றால், ஏனையோர் எல்லாம் ஒரு பக்கம் சார்ந்தவர்கள் என்று அவர்கள் கருது கின்றனர் என அர்த்தம் கொடுப்பது அமைச்சரின் வி~மத்தனம்தான். சங் கங்களில் இணையாமலேயே தங்க ளுக்குள் நல்லுறவைப் பேணும் பத்திரி கையாளர்களுக்கு இடையில் சிண்டு முடித்துவிடும் இம்முயற்சி அரசியல் கோமாளித்தனத்தின் ஓர் அங்கமே. அது பலிக்கும் என அமைச்சர் நினைப் பது அவரது பகல்கனவுதான்.
வாகன பவனி
4. அமைச்சரின் நல்லூர் வாகனப் பவனி குறித்து உதயனில் வெளியான செய்தி சரியானது என ~உதயன்| உறு திபடக்கூறுகிறான். அமைச்சரின் அன் றைய வாகனப் பவனியை ~உதயன்| படம்பிடித்து வைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், அங்கிருந்த பக்தர் கூட்டம் கண்ணை மூடிக்கொண் டிருக்கவில்லை என்பதையும் அவர்கள் அனைவரையும் அமைச்சர் இலகுவில் முட்டாள்களாக்கி விடமுடியாது என் பதையும் அவர் உணரவேண்டும்.
இவ்வளவு உணர்வுபுூர்வமான (ளுநளெi வiஎந) விடயத்துக்கு உத்தியோக புூர்வமறுப்பு அனுப்புவதற்கு சுமார் இரண்டுமாத காலம் அமைச்சர் காத் திருந்ததே அமைச்சரின் இந்த விளக் கம் குறித்து வாசகர்கள் ஒரு முடிவை மேற்கொள்ள வழி செய்யும் என நினைக்கிறோம். தனது திருவிளையாடல் களுக்கு விளக்கம் கூற குருமகா சந்நி தானத்தையும் அரச அதிபரையும் அமைச்சர் அழைக்கத் தேவையில்லை.
5. யாழ்ப்பாணத்தில் கைது செய் யப்பட்ட சைவ நிறுவன அலுவலர் ஒரு வரை, ஏற்கனவே இந்தியாவில் குற் றம் சாட்டப்பட்டு சிறையிலே உள்ள சுவாமிகள் ஒருவருடன் ஒப்பிட்டு ~உத யன்|, ~சுடர்ஒளி| எழுதியதாக மீண் டும் அமைச்சர் குறிப்பிடுவது தமிழில் செய்திகள், தகவல்கள் குறித்து விளங் கிக் கொள்ளும் அடிப்படை அறிவு தன் னும் சிலருக்கு இல்லையே என்ற சந் தேகத்தையே ஏற்படுத்துகின்றது. அப் படி ஒப்பிடும் வகையில் செய்தி வெளி யானதாகவும், அதை மறுப்பது முழுப் புூசணிக்காயை சோற்றில் மறைக்க முற்படும் செயலாகும் என்றும் அமைச் சர் கூறுகின்றார். அந்த முழுப் புூசணிக் காயை அமைச்சர் அம்பலப்படுத்து வாரா? ~உதயன்|, ~சுடர்ஒளி| அலுவல கத்துக்கு அமைச்சரின் உதவியாளர்கள் யாரேனும் சமுகம் தந்தால், இக்காலத் தில் ஏற்கனவே பிரசுரமான ~உதயன்|, ஷசுடர்ஒளி| பத்திரிகைகள் அனைத்தி னதும் பிரதிகளுக்கு மத்தியில் இந்தப் ஷபுூசணிக்காயை| அவர் தேடி எடுப்பதற்கு வசதி செய்து கொடுக்கத் தயாராக இருக்கிறான் ~உதயன்|. ஆனால், அத்தகைய செய்தி எதிலும் அமைச் சர் குறிப்பிடும் குற்றச்சாட்டை நிரூபிக்கும் அம்சங்கள் ஏதும் இல்லை. ~~மொட்டைத் தலைக்கும் முழங்காலுக் கும் முடிச்சுப் போடும் விதத்தில்|| கட்டு ரைகளைத் தவறாகப் புரிந்துகொண்ட அமைச்சரின் அறிவே அவரை இப்படி கூற வைக்கின்றது என ~உதயன்| கருதுகிறான்.
கரிசனைக்கு நன்றி
6. ~உதயன்| நிர்வாகியின் குடும் பத்தினர் மீது அமைச்சர் காட்டும் கரி சனைக்கு நன்றி. அதேவேளை ~நாகரிகம்| குறித்தும் பெரும்தன்மை குறித்தும் பேசும் நிலையிலாவது அமைச்சர் இருக் கிறார் என்பது வியப்பளிக்கும் நல்ல தொரு மாற்றம். அமைச்சரின் தனிப் பட்ட வர்த்தக நடவடிக்கைக்கு முன் னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறுக்கீடு செய்தது குறித்து குறிப் பிட்டு இந்த விடயத்தில் தனது வர்த்தக விவகாரங்களையும் தானே இழுத்து விட்டிருக்கிறார் அமைச்சர். எனவே, அவரது தனிப்பட்ட வர்த்தக விடயங் களை பொது விவகாரத்தோடு நாம் தொடர்புபடுத்தும் நிலையை ~உதயன்| தானாக ஆரம்பிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டு மேலே செல்கிறோம்.

அமைச்சரை ~~மண்ணெண்ணை மகேஸ்வரன்|| என்று ஏனையோர் இளக் காரமாக விமர்சித்தபோது ~உதயன்| அப்படிக்கருதவில்லை. யாழ் மக்க ளுக்கு அந்த நேரத்தில் - தாம் அரசியல் வாதியாக முன்னர் - அவர் கொண்டு வந்து கொடுத்த மண்ணெண்ணையின் பெறுமதி (ஏயடரந) என்னவென்பதை அந்த நேரத்தில் குடாநாட்டில் வாழ்ந்த மக்களும் உதயனும் நன்கு உணர்வர். அதேசமயம் அந்த மண்ணெண்ணை யைக் கொண்டு வந்து சேர்ப்பதற்காக அவர் எத்தனை ~~சுத்துமாத்து|| செய்ய வேண்டியிருந்தது என்பதும் விதந் துரைக்கப்படத்தக்கது. ~~கொக்கோ கோல|| போத்தலில் அதே நிறத்திலான ~~என்ஜின் ஒயில்|| அடைத்து எடுத்து வந்து, அது இடையில் சிக்கிய காதை, உதயனுக்கும் யாழ். மக்களுக்கும் நன்கு தெரியும். இதை ஏன் ~உதயன்| இங்கு குறிப்பிடுகிறான் என்ற கேள்வி வாசகர்களுக்கு எழலாம். அமைச்சரின் கெட்டித்தனங்களை இங்கு குறிப்பிட வேண்டிய தேவை உள்ளது.
பகிரங்க சவால்
இந்தியாவில் குற்றம்சாட்டப்பட்ட பிரேமானந்தா சுவாமியிடம் ~உதயன்| நிர்வாகி ஆசி பெறும் படம் தன்னிடம் இருப்பதாக கதை விடுகிறார் அமைச்சர். அந்தப்படமும் ~கொக்கோகோலா| போத் தலில் அடைக்கப்பட்ட ~என்ஜின் ஒயில்| போல் கம்பியுூட்டர் மூலம் செய்யப் படும் சுத்துமாத்தாக இருக்கக்கூடாது என்பதைச் சுட்டிக்காட்டவேண்டிய தேவை இருக்கின்றது.
தன்னிடம் இருப்பதாக அமைச்சர் ஹகதைவிடும்| படத்தை (கம்பியுூட்டர் மூலமான சுத்துமாத்தாக இல்லாமல்) ஒரிஜினல் பிலிம் றோலோடு பகிரங்கப் படுத்தி வெளிப்படுத்த அவர் தயாரா என மீண்டும் சவால் விடுகிறோம். சம யப் பெரியார்கள் மற்றும் இப்படங்க ளின் உண்மைத் தன்மையை உறுதிப் படுத்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முன்னிலையில் அதனை அம்பலப் படுத்துவதற்கான தினத்தை பகிரங்க மாக அறிவிக்கும்படி அவரை நேரடி யாகக் கேட்கிறோம். அப்படியான உண் மைப் படத்தை சமர்ப்பிக்க முடியாமல் போனால் தனது அமைச்சர் பதவி யைத் துறக்கவும் அவர் தயாரா என்று பகிரங்க சவால் விடுகிறோம்.
விருது விவகாரம்
7. விருது வழங்கும் வைபவத்தில் பாராட்டப்பட்ட செய்தியாளர் திரு. தில்லைநாதன் உதயனுடன் இணைந்து செயல்பட்டதற்காக அவருக்கு கௌர வம் வழங்கப்பட்டது என்று உரிமை கொண்டாட (அது சரியாக இருந்திருப் பினும் கூட) ~உதயன்| எந்தக் கட்டத் திலும் முயலவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். உதய னின் செய்தியைச் சரிவர வாசித்து அறிந்து கொள்ளும் அறிவின்மைதான் இங்கும் அமைச்சரை இப்படிக் குறிப் பிட வைத்திருக்கின்றது.
உதயனின் செய்தியில் ~~விருது வழங்கும் விழாவில் பிரதேச ரீதியாகப் பாராட்டப்பட்டவர்களில் ஒருவர் உதய னின் செய்தியாளர். அவர் ஊடகவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற் படுபவர். அவருக்கு விருது கிடைத் ததை ஒட்டி ~உதயன்| நிர்வாகம் அவருக்கு விசேட பாராட்டுக்களை அனுப்பி வைத்தது.|| - என்று மட்டுமே குறிப் பிடப்பட்டிருந்தது.
சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர் ~உதயன்| ஆரம்ப காலம் முதல் அதன் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகின்றார். அவருக்கு விருது வழங்கப்பட்டதை ஒட்டி, இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் அவர் ~உதயன்| செய் தியாளர் என்பது தெளிவாகக் குறிப் பிடப்பட்டுள்ளது. (அது விருது வழங் கும் விழாவின்போதும் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவிக்கப்பட்டது. சில சமயம் அதனைப் புரிந்துகொள்ளும் அறிவு அமைச்சருக்கு இல்லாமல் இருந்திருக்கலாம்.) உதயனில் பணியாற் றியதற்காகவோ அல்லது வேறு ஊட கத்தில் பணியாற்றியதற்காகவோ அவருக்கு விருது வழங்கப்பட்டது என் பது உதயனின் விவகாரம் அல்ல. அது ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விவகாரம்.
ஆனால், ~உதயன்| தனது செய்தி ஊடாகக் குறிப்பிட்டது - சம்பந்தப்பட்ட செய்தியாளர் பல ஊடகவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற்படு பவர் என்பதைத்தான்; உதயனில் பணி யாற்றும் செய்தியாளர் ஒருவர் பல ஊடகவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற்படுகின்றார் என்பதை யும் அவருக்கு விருது கிடைத்ததை ஒட்டி ~உதயன்| நிர்வாகம் பரிசு வழங்கி, பாராட்டு அளித்து கௌர வித்தது என்பதையும்தான்; அதன் மூலம் தனது செய்தியாளர் எவரேனும் ஊடக ஒன்றியங்களில் பணியாற்று வதை ~உதயன்| நிர்வாகம் தடுக்க வில்லை என்பதைத்தான்; அவ்வாறு ஒன்றியத்தில் இணைந்து செயலாற்றும் ஒருவருக்கு விருது கிடைத்ததை ~உதயன்| நிர்வாகம் பாராட்டுகின்றது என் பதைத்தான் அமைச்சர் மகேஸ்வரன் கனவு காண்பதைப்போல ஊடகவிய லாளர் ஒன்றியத்தில் தனது செய்தியா ளர்கள் இணைவதை ~உதயன்| நிர்வாகம் கட்டுப்படுத்த முனைந்திருக்கு மானால், அதற்கு மாறாகச் செயற்படும் தனது செய்தியாளரை ~உதயன்| பாராட்டியிருக்காது என்பதைத்தான்.
ஆனால், இதனைப் புரிந்து கொள்ள முடியாத அமைச்சர், திரு. தில்லை நாதனின் விருதுக்கு ~உதயன்| உரிமை கோருவதாக - தன்னைப்போல - உதய னையும் நினைத்து கருத்து வெளியிடு கின்றார்.
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றி யத்தை ~உதயன்| விமர்சிப்பதாகவும் அதற்கு உதயனுக்கு யோக்கியதை இல்லை என்றும் அமைச்சர் குறிப்பிட் டிருப்பதும் தவறு.
~உதயன்| கேட்டது ஒன்றுதான்:- ஒரு பத்திரிகை நிறுவனம் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் அபாண்ட மான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, மிகவும் கீழ்த்தரமான முறையில் விமர்சித்துப் பேசுவதற்கு அமைச்சர் மகேஸ்வரன் போன்றவர்களுக்குத் தங்கள் மேடையில் இடங்கொடுத்து அத்தகையோரை வளர்க்கும் ஊடகவிய லாளர் சங்கங்களில் அந்த நிறுவனத் தின் பத்திரிகையாளர் எவரும் இணைந்து செயற்பட முன்வருவார்களா? - என்ற கேள்விதான் அது.
அது ஒன்றியத்தை விமர்சிக்கும் செயல் அல்ல. ஒன்றிய மேடையைத் தவறான முறையில் அமைச்சர் மகேஸ் வரன் போன்றோர் பயன்படுத்தியதை ஒன்றியம் அனுமதிக்கின்றதா, ஏற்றுக் கொள்கின்றதா என்ற உதயனின் ஆதங் கம் நிறைந்த கேள்வியின் வெளிப் பாடே அது.
~உதயன்| ஆசிரியரையும் கௌரவ அதிதியாக அழைத்து வைத்துக் கொண்டு, அந்தப் பத்திரிகை மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு அந்த மேடையை அமைச்சர் பயன்படுத்தியதை ஒன்றி யம் அனுமதிக்கின்றதா? இது தொடர் பாக ஒன்றியத்தின் நிலைப்பாடு என்ன? ~உதயன்|, ~சுடர்ஒளி| ஊடகவி யலாளர்களை ஒன்றியத்தில் இணை யவிடாமல் அதன் நிர்வாகத்தினர் தடுக்கின்றனர் என்று பொய்க்குற்றச் சாட்டைச் சுமத்தி நீலிக் கண்ணீர்விடுத்த அமைச்சர், தமது பதில் அறிக்கை யில் ~உதயன்|, ~சுடர்ஒளி| ஊடகவிய லாளர்கள் மேற்படி சங்கத்தில் அங் கத்துவம் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்திய நிலையில்தான் அமைச்சர் அவர்கள் பிரதம விருந் தினராகக் கலந்துகொண்டார்|| என்று கூறியிருப்பது முன்னுக்குப் பின் முர ணாக இருக்கின்றதே! ~உதயன்|, ~சுடர் ஒளி| ஊடகவியலாளர்கள் இந்த ஒன்றியத்தில் அங்கத்துவம் பெற்றிருக்கிறார்கள் என அமைச்சருக்குத் தெரி விக்கப்பட்டிருந்தால் அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டிருக்க மாட்டாரோ? இவ்வாறு உறுதிப்படுத் தித்தான் அமைச்சர் விழாவில் கலந்து கொள்ள இணங்கினாரா? அவர் அந்த மேடையை பயன்படுத்திய முறை நாகரிகமானதா? இந்த விழா தொடர் பாக ~உதயன்|, ~சுடர்ஒளி| பத்திரி கைகளின் செயற்பாடு எத்தகையது? - என்பது பற்றியெல்லாம் தங்கள் நிலைப்பாட்டை தெளிவாக - விளக்க மாக - வெளிப்படுத்துவதன் மூலம் உண்மை நிலையை அம்பலப்படுத்த ஊடகவியலாளர் ஒன்றியம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை ~உதயன்| பணிவோடு முன்வைக்கிறான்.
மிரட்டல் பலிக்காது
8. வேறு இரு பத்திரிகைகளோடு உதயனைத் தொடர்புபடுத்தும் அமைச் சரின் கூற்று இவ்விடயத்துடன் பொருத் தமற்றது. வழமைபோல அமைச்சரின் அபாண்டமான குற்றச்சாட்டும்கூட. அந் தப் பத்திரிகைகளில் ஒன்று தேர்தல் காலத்தில் தனக்கெதிராகச் செயல் பட்டது என்பதற்காக அதனையும் அதன் செய்தியாளர்களையும் பொலீஸ{க்கு இழுத்து, மிரட்டியதை மறந்துவிட்டு - மறைத்துவிட்டு - ~உதயன்| ஏதோ நெருக்கடி கொடுத்ததாக அமைச்சர் கதைவிடுவது வியப்புக்குரியது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ{க்கு தான் பதிலடி கொடுத்ததாக வீரம் பேசி, அதனைக் காட்டி உதயனை மிரட்டப் பார்க்கின்றார் அமைச்சர் மகேஸ்வரன்.
இதில் இரண்டு விடயங்கள். முன் னாள் அமைச்சர் டக்ளஸோடு அரசி யல் ரீதியில் மோதிய அமைச்சர் மகேஸ் வரனின் துணிவை இன்றும் ~உதயன்| மெச்சுகின்றான். ஆனால் ~தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்குகின்றேன்| என்று தேர்தலுக்கு முன்னரே அறிக்கையு டன் மனம் சோர்ந்து, ~உதயன்| அலுவல கத்துக்குவந்த தி.மகேஸ்வரனுக்கு பின்னர் போட்டியிடும் துணிவும் திடளுமும் உணர்வும் எங்கிருந்து வந்தன என்பதை அவர் சிந்தித்துப்பார்த்தால், தனது தற்போதைய இத்தகைய மிரட் டல் பலிக்காது என்பது அவருக்குப் புரியும்.
~தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பது போன்ற| அவரது சவடால் பேச்சுக்கு அஞ்சும் நிலையில் ~உதயன்| இல்லை.
அரசியல்வாதி டக்ளஸ் தேவானந் தாவும் உதயனும் ஒன்று என அமைச்சர் மகேஸ்வரன் கருதுவது அவரது அறிவீனத்தின் வெளிப்பாடுதான்.
இவ்வாறு கடந்த 18 ஆண்டு காலத் தில் உதயனை மிரட்டிய பல அரசியல் வாதிகள் இன்று விலாசமே இல் லாமல் தடுமாறுகின்றார்கள். ஆனால், ~உதயன்| இன்றும் - என்றும் - நிலைத்து நிற்பான்.
~உதயன்| ~பனங்காட்டு நரி|. சலசலப் புக்கு அஞ்சான்.
ஆயுதங்களுடன் வந்தும் கூட உத யனை மிரட்டியவர்கள் பலர். அவர் கள் போல் அமைச்சர் மகேஸ்வரனும் ~அட்ரஸ்| இல்லாதவராகிவிடக் கூடாது என்ற எதிர்பார்ப்பில்தான் பல தவறு களை ~உதயன்| சுட்டிக்காட்டுகிறான். அமைச்சர் மகேஸ்வரனைப் பொறுத் தவரையில் அப்படி சுட்டிக்காட்ட வேண் டிய பொறுப்பும் கடமையும் தனக்கு உண்டு என ~உதயன்| கருதுகிறான்.
புரட்டு செல்லுபடியாகாது
இதே சமயம் -
கடந்த மே 9 ஆம் திகதி இரண்டா வது உலக இந்து மாநாட்டை முன் னிட்டு நல்லை ஆதீனத்தில் ஆரம்ப மான பிராந்திய மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரை யாற்றிய சமயம் அமைச்சர் மகேஸ்வரன் ஆற்றிய உரையின் விவரம் அடுத்தநாள் உதயனில் வெளியாகி யிருந்தது.
அதில் ~~உதயனே! உன்னை நான் நேசிப்பதற்கும் தயாராக இல்லை. உன்னை இழிவு படுத்துவதற்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்பதை செய்தியாளர்களிடம் கூறியி ருக்கிறேன்|| என்று குறிப்பிட்டிருந்தார் மகேஸ்வரன்.
அந்த முயற்சியை அவர் இப்போது ஆரம்பித்திருக்கிறார் அவ்வளவே.
அடுத்தடுத்துப் பொய்களைக் கூறி வர்த்தகத்தில் நுகர்வோரை ஏமாற்றலாம். ஆனால், விடுதலை அரசியலில் வீறு கொண்டிருக்கும் நமது மக்களிடம். அந்தப் பொய், புரட்டு, அபாண்டம், எல்லாம் செல்லுபடியற்றது என்பதை அமைச்சர் புரிந்துகொள்வது நல்லது
[b] ?
Reply


Messages In This Thread
சங்க விவகாரம் - by yarl - 10-13-2003, 10:03 AM
[No subject] - by தணிக்கை - 10-13-2003, 11:24 AM
[No subject] - by P.S.Seelan - 10-13-2003, 12:34 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 06:41 AM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:49 PM
[No subject] - by yarl - 10-16-2003, 07:00 AM
[No subject] - by Paranee - 10-16-2003, 09:23 AM
[No subject] - by தணிக்கை - 10-16-2003, 09:40 AM
[No subject] - by Paranee - 10-16-2003, 09:52 AM
[No subject] - by தணிக்கை - 10-16-2003, 10:14 AM
[No subject] - by P.S.Seelan - 10-16-2003, 01:02 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 01:15 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 01:29 PM
[No subject] - by சாமி - 10-16-2003, 02:36 PM
[No subject] - by சாமி - 10-16-2003, 03:19 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 04:16 PM
[No subject] - by Mathivathanan - 10-16-2003, 06:34 PM
[No subject] - by P.S.Seelan - 10-17-2003, 12:52 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 02:23 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 02:27 PM
[No subject] - by Mathivathanan - 10-17-2003, 02:34 PM
[No subject] - by yarl - 10-17-2003, 02:58 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:08 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:09 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:10 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:11 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:11 PM
[No subject] - by சாமி - 10-17-2003, 03:19 PM
[No subject] - by Paranee - 10-17-2003, 03:36 PM
[No subject] - by Paranee - 10-18-2003, 05:26 AM
[No subject] - by Mathivathanan - 10-18-2003, 06:41 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:14 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:20 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:35 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 07:42 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:59 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 08:02 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 08:05 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:14 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:15 AM
[No subject] - by Mathivathanan - 10-18-2003, 08:16 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:21 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:24 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 08:30 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 09:23 AM
[No subject] - by yarl - 10-18-2003, 09:46 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:02 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:13 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:17 PM
[No subject] - by Paranee - 10-18-2003, 01:24 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:29 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:32 PM
[No subject] - by Paranee - 10-18-2003, 01:38 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:42 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 03:30 PM
[No subject] - by yarl - 10-18-2003, 04:13 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 04:23 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 05:54 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 06:40 PM
[No subject] - by தணிக்கை - 10-19-2003, 10:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)