06-21-2003, 09:43 AM
போகட்டும் விட்டுவிடு
என்று யாரும் சொல்லலாம்.
பிள்ளையை இழந்தவனின்
துயரத்தீயை
அவளது தீராத தாகத்தை
களத்திலே வீழ்ந்தவனின்
ஒளிரும் கனவுகளை
அவன் வாழத்துடித்த மீதி
வாழ்க்கையை
அவனைப் பிரிந்த சோதரரின்
பெருந்துயரத்தை
துயர் வளையங்களுள் சுழலும்
அவர்களது மங்காத நினைவுகளை
எல்லாவற்றையும்
போகட்டும் விட்டுவிடு என்று
எப்படி இருப்பது?
ஊரெல்லாம் இன்னும் பரவியிருக்கு
நோயும் பிணியும்
பசியும் பட்டினியும்
பிரிவும் இழப்பும்
குருதியும் கண்ணீரும்
துயரமும் வேதனையும்
எல்லாம் யாரையாவது
ஆட்டிப்படைக்கட்டும்
என்றெப்படி இருப்பது?
நாம் போராடுகிறோம்
மரணத்தை மோதி மோதி
நொருக்கியபடி
அச்சத்தை தீயிட்டு எரித்தபடி
தடைகளை, நொறுக்கி எறிந்தபடி
புதிய வாழ்க்கையின் பிறப்புக்காக
நாம் போராடுகின்றோம்.
அமைதிக்காக, சமாதானத்துக்காக
நீதிக்காகவும்,
அன்புக்காகவும்
நாம் போராடுகின்றோம்
அடிமைச் சீவியம்
அகதி வாழ்க்கை
மரண முற்றம்
துயர ஞாபகங்கள்
எதுவும் வேண்டாம்
என்றபோதும்
சுழல் வளையங்கள் எதுவும்
நீங்கவில்லை.
சிலர் இருக்கிறார்கள்
சிலர் போய்விட்டார்கள்
சிலர் போகத்துடிக்கிறார்கள்.
எல்லாவற்றிலும்
யாருக்குப் பங்கு
யாருக்கு இல்லை
யாருக்குப் பொறுப்பு
யாருக்கு நிராகரிப்பு
யாருக்கு வாழ்க்கை
யாருக்கு மரணம்
யாருக்கு இழப்பு
யாருக்கு அமைதி?
போகட்டும் விட்டுவிடு என்று
யாரால் இருக்கமுடியும்
இப்போதும், இனியும்?
-கருணாகரன்.
என்று யாரும் சொல்லலாம்.
பிள்ளையை இழந்தவனின்
துயரத்தீயை
அவளது தீராத தாகத்தை
களத்திலே வீழ்ந்தவனின்
ஒளிரும் கனவுகளை
அவன் வாழத்துடித்த மீதி
வாழ்க்கையை
அவனைப் பிரிந்த சோதரரின்
பெருந்துயரத்தை
துயர் வளையங்களுள் சுழலும்
அவர்களது மங்காத நினைவுகளை
எல்லாவற்றையும்
போகட்டும் விட்டுவிடு என்று
எப்படி இருப்பது?
ஊரெல்லாம் இன்னும் பரவியிருக்கு
நோயும் பிணியும்
பசியும் பட்டினியும்
பிரிவும் இழப்பும்
குருதியும் கண்ணீரும்
துயரமும் வேதனையும்
எல்லாம் யாரையாவது
ஆட்டிப்படைக்கட்டும்
என்றெப்படி இருப்பது?
நாம் போராடுகிறோம்
மரணத்தை மோதி மோதி
நொருக்கியபடி
அச்சத்தை தீயிட்டு எரித்தபடி
தடைகளை, நொறுக்கி எறிந்தபடி
புதிய வாழ்க்கையின் பிறப்புக்காக
நாம் போராடுகின்றோம்.
அமைதிக்காக, சமாதானத்துக்காக
நீதிக்காகவும்,
அன்புக்காகவும்
நாம் போராடுகின்றோம்
அடிமைச் சீவியம்
அகதி வாழ்க்கை
மரண முற்றம்
துயர ஞாபகங்கள்
எதுவும் வேண்டாம்
என்றபோதும்
சுழல் வளையங்கள் எதுவும்
நீங்கவில்லை.
சிலர் இருக்கிறார்கள்
சிலர் போய்விட்டார்கள்
சிலர் போகத்துடிக்கிறார்கள்.
எல்லாவற்றிலும்
யாருக்குப் பங்கு
யாருக்கு இல்லை
யாருக்குப் பொறுப்பு
யாருக்கு நிராகரிப்பு
யாருக்கு வாழ்க்கை
யாருக்கு மரணம்
யாருக்கு இழப்பு
யாருக்கு அமைதி?
போகட்டும் விட்டுவிடு என்று
யாரால் இருக்கமுடியும்
இப்போதும், இனியும்?
-கருணாகரன்.

