07-31-2005, 11:22 PM
ஜூட் Wrote:Thala எழுதியது:
ஒரு(எல்லா நாட்டிலும்) நாட்டில் சிவில், இராணுவம் எண்று இரண்டு சட்டங்கள் இருப்பது உங்களுக்கேன் தெரியாமல் போனது ஏன்?,..
இராணுவசட்டம் இராணுவ வீரர்களின் ஒழுங்கீனம் போன்ற விடயங்களை கையாளுவது. இராணுவ சீருடையில் இல்லாத கொலைகள் நாட்டின் பொது சட்டத்தால் கையாளப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான யாழ்ப்பாணத்தில் தேசத்துரோகிகளை கையாளுவது பற்றி தமிழீழ மேன்நீதிமன்று தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். தேசத்துரோகம் பற்றி தமிழீழு சட்டத்ததில் பிரிவுகள் இருக்கின்றன. இவை இராணுவ சட்டத்தில் இருப்பதாக கூறி தமிழீழ மக்களுக்கான சட்டத்தில் இருந்து தவிர்க்கப்படவில்லை. சட்டம் கூறுவதை நீதிமன்றும் நீதித்துறையும் நிறைவுபடுத்த தவறினால் சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் மதிப்பிருக்காது. சட்டம் ஆளாத நாட்டை மற்ற சட்டம் ஆளும் நாடுகளும் ஐ.நா.வும் மதிக்கமாட்டா.
இப்போ நிங்கள் சொன்னதிலேயே இருக்கிறது பதில் இராணுவம் இல்லாத ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலைகாறன் கண்டு பிடிக்கப்பட வேண்டும் அதோடு குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர்களை எல்லா நாட்டுச்சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்டவர் எண்றுதான் அழைக்க வேண்டும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். எனவே நீங்களும் எந்த அடிப்படையில் தமிழீழத்தை அல்லது புலிகளைக் குற்றம் சாட்டுகிறீர்கள் அவர்கள் தான் கொலை செய்ததென்று. தவிர நாங்கள் எமது பயணத்தில் எவ்வளவோ இழப்புக்களை காண்டாகிவிட்டது அதோடு இதுவும் ஒன்று எண்டாகட்டும். தமிழீழப் பயணமே எங்களின் நம்பிக்கை தான் அதுபோல் தமிழர் சட்டமாக்கலும் இன்று போல் எண்றும் சமத்துவாமாய் இருக்கும்..
::

