07-31-2005, 11:03 PM
Thala Wrote:ஒரு(எல்லா நாட்டிலும்) நாட்டில் சிவில், இராணுவம் எண்று இரண்டு சட்டங்கள் இருப்பது உங்களுக்கேன் தெரியாமல் போனது ஏன்?,..
இராணுவசட்டம் இராணுவ வீரர்களின் ஒழுங்கீனம் போன்ற விடயங்களை கையாளுவது. இராணுவ சீருடையில் இல்லாத கொலைகள் நாட்டின் பொது சட்டத்தால் கையாளப்படும். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான யாழ்ப்பாணத்தில் தேசத்துரோகிகளை கையாளுவது பற்றி தமிழீழ மேன்நீதிமன்று தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். தேசத்துரோகம் பற்றி தமிழீழு சட்டத்ததில் பிரிவுகள் இருக்கின்றன. இவை இராணுவ சட்டத்தில் இருப்பதாக கூறி தமிழீழ மக்களுக்கான சட்டத்தில் இருந்து தவிர்க்கப்படவில்லை. சட்டம் கூறுவதை நீதிமன்றும் நீதித்துறையும் நிறைவுபடுத்த தவறினால் சட்டத்திற்கும் நீதித்துறைக்கும் மதிப்பிருக்காது. சட்டம் ஆளாத நாட்டை மற்ற சட்டம் ஆளும் நாடுகளும் ஐ.நா.வும் மதிக்கமாட்டா.
Thala Wrote:அப்படியானால் முத்தலீப்பும் தமிழீழப் பகுதிக்கு வரும் போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப் பட்டிருக்க வேண்டும் என்பீர்கள் போல் இருக்கு. நிக்சனுக்கும்,முத்தலீப்புக்கும் ஒரே வித்தியாசம் தான் அவன் செய்வீப்பவன் மற்றயவன் செய்பவன். எல்லாரும் ஒரே குட்டை தான் தமிழர்கள் தான்..
முத்தலீப்பின் கொலை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் இடம்பெற்றது. இது சம்பந்தமாக கொழும்பில் சட்டப்படி கைதுகள் செய்யப்பட்டு விசராணைகள் நடக்கின்றன. சிறிலங்காவின் சாதாரண சட்டப்படி (இராணுவ சட்டப்படியல்ல) விசாரணைகள் நடக்கின்றன.

