07-31-2005, 08:56 PM
narathar Wrote:ஜுட் முதலில் சம்பவம் நடைபெற்ற யாழ் நகரம் தமிழீழ நீதிமன்றத்தின் ஆளுகைக்குட்பட்ட இடமல்ல.
நீங்கள் சொல்வதிப் போல் செய்வதானால் ,அந் நபர் கைது செய்யப்பட வேண்டும் இது எவ்வாறு சாத்தியம் என்பதை முதலில் சிந்திக்க வேண்டும்,மற்றும் இந் நபர் வீதியில் அலைந்து பத்திரிகை விற்க வேண்டிய கட்டாயம் என்ன,இராணுவத்தினரையே பத்திரிகை விற்க பயன் படித்தியுருக்கலாம்.
தமிழீழ சட்டம், தமிழீழ பிரதேசம் எங்கும் செல்லுபடியானது. வன்னியில் மட்டும்தான் தமிழீழ சட்டம் செல்லுபடியாகுமா? தமிழீழ வரைபடம் இவ்வாறு குறுக்கப்பட்டதாக இது வரை எந்த வெளியீடும் வரவில்லை. மேற்படி நபர் கைது செய்யப்பட்டு தமிழீழ சட்டப்படி திருத்தப்பட்டிருக்க வேண்டுமேயன்றி வீதியில் சுட்டுவீசப்பட்டிருக்க கூடாது. இப்படி சுட்டுவீசப்படுவது தான் முறையானால் யாழ்ப்பாணம் சிறிலங்காவிற்கு உரியது தமிழீழத்துக்குரியதல்ல என்று ஆவதுடன் தமிழீழ சட்டம் இங்கு மதிப்பிளக்கிறது. நீதிமன்றங்கள் அவமதிக்கப்படுகின்றன.
narathar Wrote:சட்டம் ஒழுங்கு என்பதெல்லாம் சாதாரண மனிதர்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் வைப்பதற்காகவே மேற்குலக அரசுக்களால் உருவாக்கப் பட்ட மாயத்திரை.
ஆக தமிழீழ சட்டக்கோவையும் நீதிமன்றங்களும் இப்படியான மாயத்திரைகள் மட்டும்தானா? இப்படியா தமிழீழ நீதித்துறையை (அவ)மதிப்பது?
<img src='http://www.tamilnet.com/img/publish/2002/11/te_court_batti-ampara_1_231102.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.infoeelam.com/images/eelampolice.jpg' border='0' alt='user posted image'>

