Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வத்தல் குழம்பு (இந்தியா)
#1
வத்தல் குழம்பு (இந்தியா)

மல்லி ஒரு மேசைக்கரண்டி
துவரம் பருப்பு ஒரு மேசைக்கரண்டி
செத்தல் மிளகாய் 8
மிளகு முக்கால் மேசைக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
சின்னவெங்காயம் 10
உள்ளி 10 பல்லு
நல்லெண்ணை கால் பேணி
கடுகு அரை தேக்கரண்டி
வெந்தயம் கால் தேக்கரண்டி
உளுந்து அரைத்தேக்கரண்டி
புளி உருண்டை 30 கிராம்
கறிவேப்பிலை 2 கொப்பு(சும்மா)
உப்பு உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப

முதலில் இரும்புச்சட்டியில் நல்லெண்ணை விட்டு சூடு செய்யவும்

எண்ணை சூடாகியதும் மிளகு சீரகம் துவரம் பருப்பு செத்தல் மிளகாய் ஆகியவற்றை இட்டு மிளகு வெடிக்கும் வரை வறுக்கவும்

வறுத்து முடித்ததும் அவற்றுடன் ஏற்கனவே வெட்டி வைத்த வெங்காயத்தில் மற்றும் உள்;ளி பாதி எடுத்து மற்றும் கால் பேணி தண்ணீர் சேர்த்து நன்கு அரைக்கவும்

மீண்டும் கடாயில் எண்ணையை சூடுபண்ணி கடுகை இட்டு கிளறவும்

கடுகு வெடித்ததும் உளுந்து வெந்தணம் ஒரு செத்தல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்

பின் வெங்காயம் மற்றும் உள்ளி சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை கிளறவும்

அப்படியே புளி மற்றும் எற்கனவே அரைத்த விளுதை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்

சுவாலையை குறைத்து மேலும் கிளறவும்

எண்ணை பிரிந்து மேலே மிதக்க ஆரம்பித்ததும் வத்தல் குழம்பு தயார் என எடுத்துக்கொள்ளலாம்

சோறு தோசை மற்றும் இட்லி ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற சிறந்தது.
Reply


Messages In This Thread
வத்தல் குழம்பு (இந்தியா) - by aathipan - 07-30-2005, 11:09 PM
[No subject] - by கீதா - 07-30-2005, 11:42 PM
[No subject] - by kavithan - 07-30-2005, 11:59 PM
[No subject] - by sOliyAn - 07-31-2005, 12:01 AM
[No subject] - by kavithan - 07-31-2005, 12:05 AM
[No subject] - by aathipan - 07-31-2005, 12:10 AM
[No subject] - by vasisutha - 07-31-2005, 12:29 AM
[No subject] - by sOliyAn - 07-31-2005, 01:04 AM
[No subject] - by kavithan - 07-31-2005, 04:30 AM
[No subject] - by kavithan - 07-31-2005, 04:32 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)