Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாட்டின் தலைவியின் பேரினவாத முகம்
#1
<b>தென்னாபிரிக்காவில் சந்திரிகா என்ன பேசினார்?</b>

(பேராசிரியர் சிவசண்முகம்)

சிறிலங்கா அரசுத் தலைவர் சந்திரிகா மிகவும் வித்தியாசமான பெண். அவர் உரையாற்றும்போது உண்மைக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. முன்கூட்டியே பேச்சுக்களைத் தயாரித்து மேடைக்கு எடுத்துச் செல்வது முக்கிய அரசியல் தலைவர்களின் நடைமுறை. மேடையில் பேசவேண்டியவற்றை எழுதிக் கொடுக்கும் ஆலோசகர்களும் இருக்கிறார்கள். தனது பொதுவான கருத்தை அரசியல் தலைவர்கள் தமது பேச்சை எழுதும் அதிகாரிகளுக்குக் கூறுவார்கள். அதன் அடிப்படையில் மேடைப் பேச்சையோ நோர்காணலையோ தலைவர்கள் நடத்துவார்கள். வாயில் வந்ததைப் பகிரங்கமாகப் பேசும்போது வரும் ஆபத்துக்களையும் உயர்மட்ட முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்காகவே இந்த முன்யோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது.



சிறிலங்காவின் தலைவி சந்திரிகா இந்த நடைமுறைகளை மதித்து நடப்பதில்லை. என்ன பேசப்போகிறோம், நேர்காணல் செய்வோருக்கு என்ன பதில் கூறப்போகிறோம் என்று அவர் முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. என்ன அவர் வாயால் வரப்போகிறது என்பதை அவரே அறியமாட்டார். பேசி முடித்தபின்புதான் அவருக்குத் தெரியவரும். ஏதேனும் இசகுபிசகாகப் பேசி மாட்டிக்கொண்டால் சந்திரிகாவை மீட்பதற்கு லக்ஸ்மன் கதிர்காமர் போன்ற அடியார்கள் இருக்கிறார்கள். சந்திரிகா அப்படி ஒன்றுமே சொல்லவில்லை என்று அவர்கள் அடித்துக் கூறிவிடுவார்கள்.

சொல்வதும் மறுப்பதும் மாறிமாறி வரும் இரு நடைமுறைகள் என்று அவதானிகள் குறிப்பிடுகின்றனர். சந்திரிகா மாத்திரமல்ல வேறு சிங்களத் தலைவர்களும் சொல்வதும் மறுப்பதும் நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இது விபத்தல்ல, நன்கு உருவாக்கப்பட்ட திட்டமென்றும் கொழும்பு அரசியலை அவதானிப்பவர்கள் கூறுவார்கள். தமிழர் பிரச்சனையில் இந்த நடைமுறை சிங்களத் தலைவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

முதல்வரும் வாக்குறுதி வழங்கல், பின்வரும் பின்னடிப்பு. பிரச்சனை மோசம் அடைவதற்கு இவ்வகை ஏமாற்றும் இழுத்தடிப்பும் முக்கிய காரணங்களாக அமைகின்றன. சந்திரிகா வாக்குறுதி வழங்குகிறார் என்றால் அதை நம்பக்கூடாது என்பதில் ஈழத் தமிழர்கள் மிகவும் உசாராக இருக்கிறார்கள். அனுபவத்திலும் பார்க்கச் சிறந்த ஆசான் வேறில்லை. அம்மையார் பேசப் பிறிதொருவர் அவர் அப்படிப் பேசவில்லை, இப்படித்தான் பேசினார் என்று விளக்கவுரை வழங்க இப்படியே போகிறது சிறிலங்காவின் கோமாளி அரசியல்.

1998 செம்ரெம்பர் மாதம் தென் ஆபிரிக்காவில் நடந்த அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு சிறிலங்கா தலைவி தனது பரிவாரங்களோடு சென்றது, ஞாபகமிருக்கலாம். அணிசோரா இயக்கம் பனிப்போர் முடிவோடு இறந்துவிட்டது. ஆனால் இப்போதும் ஒன்று கூடல்கள் நடக்கின்றன. இச்சந்திப்பின்போது எடுக்கப்படும் முடிவுகளும், தீர்மானங்களும் பயனற்றதாக இருக்கின்றன. உலக அரசியலில் இவற்றால் ஒரு பயனுமில்லை. பொதுமக்கள் பணம் வீண் விரயமாவதுதான் மிச்சம். ஆனால் சந்திரிகா போன்றோர் தமது மனதிலுள்ள காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவதற்கு இதுபோன்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்துகின்றனர்.

தென்னாபிரிக்கா தொலைக்காட்சி நிறுவனம் சந்திரிகாவை ஒரு பகிரங்க நேர்காணல் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. அம்மணியும் சென்றார். அந்த நேர்காணலில் அவர் ஈழத்தமிழர் பற்றிக் கூறிய ஒரு அப்பட்டமான பொய்யுரை இன்றுவரை பெரும் உணர்வுகளைக் கிளப்புகிறது. ஈழத்தமிழர் பிரச்சனை பற்றி வினவியபோது சந்திரிகா தனக்கே உரித்தான ஆண்குரலில், "இலங்கையின் ப+ர்வீக குடியினர் அல்லாத ஒரு சிறுபான்மை இனத்தவர், தனிநாடு கோருகின்றனர்" என்று சொன்னார்.

இந்த நோர்காணல் முழுவதும் செப்ரம்பர் 05, 1998ம் ஆண்டு இரவு 10.00 மணிக்கு ரூபவாகினி ஆங்கில சேவையில் வெளியிடப்பட்டது. இதை நாட்டு மக்கள் யாபேரும் பார்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. ஒருவிதமான மறைப்பும் இல்லை. தென்னாபிரிக்காவில் வழங்கப்பட்ட நேர்காணல் அப்படியே சிறிலங்கா ரூபவாகினியில் மறு ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மாமனிதர் குமார் பொன்னம்பலம் போன்ற அரசியல் தலைவர்கள் இந்த ஒளிபரப்பை வீடியோப் பிரதி பண்ணி வைத்திருந்தனர். அத்தோடு தென்னாபிரிக்கத் தெலைக்காட்சியுடன் தொடர்பு கொண்டு நோர்காணலின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொண்டனர்.

சரியாக ஒரு மாதம் சென்றபின் சிறிலங்காவின் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் எறிக் பெர்னாந்து வெளியுறவு அமைச்சரும் சந்திரிகாவுக்கு நெருக்கமானவருமான லக்ஸ்மன் கதிர்காமரை "ஜனமண்டல" நிகழ்ச்சியில் நோர்காணல் கண்டார். இதன்போது தொலைபேசி மூலம் கதிர்காமரைக் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. ஜனமண்டல என்பதின் அர்த்தம் அதுதான்.

சிவனேசன் என்று தன்னை அறிமுகம் செய்த ஒரு கொள்ளுப்பிட்டி நேயர், ஈழத்தமிழர்கள் பற்றி தென்னாபிரிக்காவில் சந்திரிகா கூறியது பற்றி வினவினார். இதற்குக் கதிர்காமர், 'மிகவும் சுருக்கமான பதில் என்னவென்றால் சந்திரிகா அப்படி ஒன்றுமே சொல்லவில்லை. மிகவும் அண்மைக் காலத்தவர் என்றும் அவர்கள் இலங்கைக்கு உரியவர்கள் அல்லவென்றும் அவர் அப்படி ஒன்றுமே சொல்லவில்லை". என்று ஆணித்தரமாகப் பதில் கூறினார். இருவரில் யாரை நம்புவது என்று தெரியாமல் தவிக்கவேண்டிய அவசியம் இல்லை.

நன்றி சங்கதி..
::
Reply


Messages In This Thread
நாட்டின் தலைவியின் பேரினவாத முகம் - by Thala - 07-30-2005, 07:59 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)