Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்க விவகாரம்
#1
உதயன்

ஊடக விருது வழங்கும் விழாவில் மகேஸ்வரன்
உதயன் மீது அபாண்டமான குற்றச்சாட்டு
உதயன் - சுடரொளி பத்திரிகை கள் மீதும் அதன் நிர்வாகி மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருக்கிறார் அமைச்சர் தி.மகேஸ் வரன்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் விருதுவழங்கும் விழா நேற்றுமாலை கொழும்பு வெள்ள வத்தை சிறீ இராமகிரு~;ண மிசன் மண்டபத்தில் நடைபெற்றது. அதில், பிரதம அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அந்த மேடையை உதயன் - சுடரொளி நிறுவனங்களையும், அதன் நிர்வாக இயக்குநரையும் பெயர் குறிப்பிடா மல் - அபாண்டமான பொய்களைக் கூறி - விமர்சிப்பதற்குப் பயன்படுத் தினார் அமைச்சர் மகேஸ்வரன்.
அவ்வாறு அவர் சுமத்திய குற்றச் சாட்டுக்கள் வருமாறு:-
1. ஒருசில பத்திரிகை நிறுவனங் கள் தங்கள் நிறுவனங்களில் பணி புரியும் பத்திரிகையாளர்களை ஊடக வியலாளர் சங்கங்களில் இணைய விடாது அடக்கிவருகின்றன. அவர் களுக்கும் சுதந்திரம் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2. இருபது மாதங்களாக இந்து சமய விவகார அமைச்சராகவிருக் கும் நான், நல்லு}ர் திருவிழாக் காலத் தில் ஆலய சுற்றாடலில் காரில் பவனி போனேன் என்றும் அதனால் பக்தர் கள் விசனமடைந்தனர் என்றும் சாரப் பட அந்த நிறுவனம் செய்தி வெளியிட் டிருக்கிறது.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன உயர் அலுவலர் ஒருவரை தமிழகத்தில் பாலியல் விவகாரங்கள் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக் கும் பிரேமானந்தா சுவாமியுடன் ஒப் பிட்டு இப்பத்திரிகை விமர்சித்திருந் தது. ஆனால், அந்தப் பத்திரிகை நிறு வனத்தின் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமியின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் ஒன்றை ஓர் அன்பர் அடுத்தவாரம் எனக்கு அனுப்பிவைத்திருந்தார். அந் தப் படத்தை வேறு ஏதேனும் ஒரு பத் திரிகையில் பிரசுரித்து உண் மையை அம்பலப்படுத்தும்படி அந்த அன்பர் என்னைக் கேட்டுக்கொண்டார்.
- இதுவே அமைச்சர் மகேஸ் வரன் திருவாய் மலர்ந்து குறிப்பிட்ட அபாண்ட பொய்கள்.
அமைச்சர் மகேஸ்வரனின் இத்த கைய சவடல்தனமான பொய்ப் பேச்சுக் களை மக்கள் கண்டுகொள்ளாவிட்டா லும்கூட சிலவற்றை அம்பலப்படுத்து வது கட்டாயமானது. எனவே, உத யன் பின்வருவனவற்றைத் தெரிவு படுத்த விரும்புகிறான்.
1. தனது பத்திரிகையாளர்கள் எவ ரையும் எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் சேரும்படியோ அல்லது சேரக் கூடாது என்றோ ஷஉதயன்| நிர்வாகம் வற்புறுத்தவும் இல்லை. அதில் தலை
யிடவும் இல்லை. ஆனால், உதயனில் பணிபுரியும் பெரும்பாலான பத்திரிகை யாளர்கள் தங்களின் சுயாதீன நிலை கருதி எந்த ஊடகவியலாளர் சங் கத்திலும் அங்கத்துவம் பெறாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையே. எண்பதுகளின் மத்தியில் இயக்கங் களின் பின்னணியோடு ஊடகவிய லாளர் சங்கங்கள் உருவாக்கப்பட்டு அவற்றில் இணையும்படி வற்புறுத் தப்பட்ட போதும்கூட ஷஉதயன்| அலுவ லக பத்திரிகையாளர்கள் மசிந்து கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
எனினும், வடக்கில் தற்போது சுயா தீனமாக இயங்கும் இரண்டு ஊடக வியலாளர் சங்கங்களினதும் பொது வான நடவடிக்கைகளிலும் செயற்பாடு களிலும் அங்கத்துவம் பெறாமலேயே அவர்கள் தவறாது பங்குபற்றி வரு வது வழமை. நேற்றுக் காலை நல்லு} ரில் கண்காணிப்புக்குழுவின் அலுவல கம் முன்னால் யாழ்ப்பாணம் ஊடக வியலாளர் சங்கம் நடத்திய பத்தி ரிகையாளர்களின் மறியல் போராட்டத் தில் ஷஉதயன்| ஆசிரியர் உட்பட பெரும் பாலான ஆசிரியர் பீட உறுப்பினர் கள் பங்குபற்றினர். அதேபோன்று நேற்று மாலை இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கொழும் பில் நடத்திய விருதுவழங்கும் விழாவில் சிறப்பு அதிதியாக அழைக் கப்பட்டிருந்த ஷஉதயன்| ஆசிரியரும் மற்றும் சுடர்ஒளி செய்தியாளர்களும் பங்குபற்றினர். நேற்றைய விருது வழங்கும் விழாவில் பிரதேச hPதி யாக பாராட்டப்பட்டவர்களில் ஒருவர் உதயனின் செய்தியாளர். அவர் ஊட கவியலாளர் சங்கங்களில் இணைந்து செயற்படுபவர். அவருக்கு விருது கிடைத்ததையொட்டி ஷஉதயன்| நிர் வாகம் அவருக்கு விசேட பாராட் டுகளை அனுப்பிவைத்திருந்தது.
1. ஒரு பத்திரிகை நிறுவனம் மீதும் அதன் நிர்வாகிகள் மீதும் அபாண்ட மான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்துப் பேசு வதற்கு அமைச்சர் மகேஸ்வரன் போன் றவர்களுக்குத் தங்கள் மேடையில் இடம்கொடுத்து அத்தகையோரை வளர்க்கும் ஊடகவியலாளர் சங்கங் களில் அந்த நிறுவனத்தின் பத்திரிகை யாளர்கள் எவரும் இணைந்து செயற் பட முன்வருவார்களா என்பது கேள் வியே.
2. நல்லு}ர் திருவிழாக் காலத்தில் அமைச்சர் மகேஸ்வரன் ஆலய சுற் றாடலில் பக்தர்களுக்கு இடையூறாக தனது வாகனத்தில் பவனிவந்தார் என்ற செய்தி உதயனில் வெளியாகியிருந் தமை உண்மையே. எனினும், அமைச் சர் மகேஸ்வரன் தான் அவ்வாறு நடந்துகொண்டதை இதுவரை மறுக்க வில்லை. அந்தச் செய்தி வெளியா கிய காலத்தில்கூட அதற்கான மறுப்பு எதனையும் அவர் உதயனுக்கு அனுப்பிவைக்கவில்லை. எனவே, அந்தச் செய்தியில் கூறப்பட்ட தகவல் உண்மையானது என்று உதயன் - இப்போதும் உறுதியாகக் கூறுகின் றான்.
3. யாழ்ப்பாணத்தில் கைதுசெய் யப்பட்ட இந்துசமய நிறுவன அலுவ லர்கள் எவரையும் கீழ்த்தரமாக விமர் சிக்கும் செய்தியையோ, கருத்தையோ ~உதயன்| எப்போதும் பிரசுரித்ததில்லை. இந்தியாவில் பாலியல் குற்றச்சாட் டுச் சுமத்தப்பட்ட பிரேமானந்தா சுவாமி களை ~உதயன்| நிர்வாகிகள் எவ ரும் நேரில்கூடக் கண்டதில்லை.
உதயன் நிர்வாகி தனது மனைவி சகிதம் பிரேமானந்தா சுவாமிகளின் காலில் வீழ்ந்து வணங்கும் படம் என்று தானே கூறிக்கொள்ளும் அந்தப் புகைப் படத்தை வெளியிட அமைச்சர் மகேஸ் வரன் முன்வருவாரா என பகிரங்கமாக அவருக்கு சவால் விடுகின்றான் உதயன்.
Reply


Messages In This Thread
சங்க விவகாரம் - by yarl - 10-13-2003, 10:03 AM
[No subject] - by தணிக்கை - 10-13-2003, 11:24 AM
[No subject] - by P.S.Seelan - 10-13-2003, 12:34 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 06:41 AM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:49 PM
[No subject] - by yarl - 10-16-2003, 07:00 AM
[No subject] - by Paranee - 10-16-2003, 09:23 AM
[No subject] - by தணிக்கை - 10-16-2003, 09:40 AM
[No subject] - by Paranee - 10-16-2003, 09:52 AM
[No subject] - by தணிக்கை - 10-16-2003, 10:14 AM
[No subject] - by P.S.Seelan - 10-16-2003, 01:02 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 01:15 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 01:29 PM
[No subject] - by சாமி - 10-16-2003, 02:36 PM
[No subject] - by சாமி - 10-16-2003, 03:19 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 04:16 PM
[No subject] - by Mathivathanan - 10-16-2003, 06:34 PM
[No subject] - by P.S.Seelan - 10-17-2003, 12:52 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 02:23 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 02:27 PM
[No subject] - by Mathivathanan - 10-17-2003, 02:34 PM
[No subject] - by yarl - 10-17-2003, 02:58 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:08 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:09 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:10 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:11 PM
[No subject] - by தணிக்கை - 10-17-2003, 03:11 PM
[No subject] - by சாமி - 10-17-2003, 03:19 PM
[No subject] - by Paranee - 10-17-2003, 03:36 PM
[No subject] - by Paranee - 10-18-2003, 05:26 AM
[No subject] - by Mathivathanan - 10-18-2003, 06:41 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:14 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:20 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:35 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 07:42 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 07:59 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 08:02 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 08:05 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:14 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:15 AM
[No subject] - by Mathivathanan - 10-18-2003, 08:16 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:21 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 08:24 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 08:30 AM
[No subject] - by Paranee - 10-18-2003, 09:23 AM
[No subject] - by yarl - 10-18-2003, 09:46 AM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:02 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:13 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:17 PM
[No subject] - by Paranee - 10-18-2003, 01:24 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:29 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:32 PM
[No subject] - by Paranee - 10-18-2003, 01:38 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 01:42 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 03:30 PM
[No subject] - by yarl - 10-18-2003, 04:13 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 04:23 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 05:54 PM
[No subject] - by தணிக்கை - 10-18-2003, 06:40 PM
[No subject] - by தணிக்கை - 10-19-2003, 10:25 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)