07-29-2005, 03:47 PM
<b>அச்சுறுத்தும் முரளிதரன் பந்துவீச்சு</b>
இலங்கையில் வரும் 30ம் தேதி முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது.
இந்தியா, இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கிடையேயான முத்தரப்பு கிரிக்கெட் போட்டி இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கவுள்ளதால் மூன்று அணிகளும் முழுவீச்சில் தங்களை தயார்படுத்தி வருகின்றன.
இந்தத் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் என்று இந்திய ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்கின்றனர். காரணம் மேற்கு இந்திய அணியில் முன்னணி ஆட்டக்காரர்களான லாரா உட்பட பலர் இடம் பெறவில்லை. இலங்கையை பொறுத்த வரையில் அந்த அணி முரளிதரனின் மாயாஜால பந்து வீச்சை தான் நம்பியுள்ளது.
<img src='http://img56.imageshack.us/img56/4366/27srilanka9hm.jpg' border='0' alt='user posted image'>
இந்த அணிகளுடன் இந்திய அணியை ஒப்பிட்டு பார்க்கும்போது சற்று சிறந்த அணியாக காட்சியளித்தாலும், கடந்த ஒராண்டு காலத்தில் இந்திய அணி எதுவும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
தற்போது இடம் பிடித்து இருக்கும் வீரர்கள் அனைவரும் இளைஞர்கள் என்றாலும் அவர்கள் அனுபவம் இல்லாதவர்கள் என்பதை நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கள் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவுதான்.
கடந்த 5 ஆண்டுகளில் இந்திய அணி, இலங்கைக்கு எதிராக பெரிய அளவில் வெற்றிகளைப் பெறவில்லை. 1999ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் இந்திய அணி, இலங்கையை பெரும் அளவில் பதம் பார்த்தது.
இந்திய ஆட்டக்காரர்களில் டிராவிட் மட்டுமே இலங்கைக்கு எதிராக 15 போட்டிகளில் 400 ரன்கள் மேல் எடுத்துள்ளார். மற்ற ஆட்டக்காரர்களான ஷேவாக், யுவராஜ், கைப், ஆகியோர் சொல்லி கொள்ளும் அளவுக்கு இலங்கைக்கு எதிராக சாதிக்கவில்லை.
<b>நடந்து முடிந்த இலங்கை, மேற்கு இந்திய தீவுகளுக்கான டெஸ்டில் முரளிதரனின் ஆதிக்கம் பிரமிக்க வைக்கிறது. இவர் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணிக்கு பெரும் நெருக்கடி தரக்கூடும். தோள்பட்டை காயம் காரணமாக 11 மாத இடைவெளிக்கு பின்னர் களம் திரும்பி சிறந்த முறையில் பந்து வீசுவதால் அது மற்ற வீரர்களுக்கு சற்று மனவலிமையை கண்டிப்பாக கொடுக்கும். ஆட்டத்தை பொறுத்தவரை மனவலிமை மிக அவசியமான ஒன்று</b>.
மற்ற பந்து வீச்சாளர்களான வாஸ், ஜொய்சா, ஃபெர்னான்டோ ஆகியோர் சிறந்த முறையில் பந்து வீசி வருகின்றனர். அந்த அணியின் பேட்ஸ்மேன்களான ஜெயசூரியா பற்றி சொல்லவே வேண்டாம். ஃபார்மில் இல்லை என்றாலும் இந்திய அணிக்கு எதிராக சதம் அடிக்கும் அளவுக்கு சிறப்பாக ஆடக்கூடியவர். அவரது பந்து வீச்சும் அந்த அணிக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம். மற்ற வீரர்கள் சங்ககாரா, மர்வன் அதப்பட்டு, அர்னால்ட் ஆகியோர் பக்க பலமாக இருக்கிறார்கள்.
இந்திய அணியைப் பொறுத்தவரை டிராவிட் மட்டுமே தற்போது ஃபார்மை வெளிப்படுத்தி வந்தாலும், கேப்டன் பொறுப்பு அவருக்கு கூடுதல் சுமையாகவே அமையும் என்பதும் உண்மை. ஷேவாகை பொறுத்த வரையில், களத்தில் இருந்தால்தான் ரன்கள் நிச்சயம். லஷ்மன் சிறப்பான ஆட்டத்தை காண்பது அரிது. இடைநிலை ஆட்டக்காரர்களான யுவராஜ் சிங், கைப் ஆகியோர் சிறப்பாக இணைந்து ஆடி ஓராண்டு கடந்து விட்டது.
மற்ற வீரர்களான மகேந்திர சிங் தோனி, பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். புதிய வீரர்களான வேணுகோபால் ராவ், சுரேஷ் ரெய்னா, ஜெய் பி. யாதவ் ஆகியோர் இனிமேல் தான் தங்களது ஆட்டத்திறனை வெளிக்காட்ட வேண்டும்.
பந்து வீச்சில் மட்டுமே இந்திய அணி சிறந்து விளங்குகிறது. இர்பான் பதான், ஜாகிர் கான், நேஹ்ரா, பாலாஜி ஆகியோர் தற்போது இந்திய அணிக்கு நம்பிக்கை பந்து வீச்சாளராக உருவாகி இருக்கிறார்கள். சூழல் பந்து மன்னர்கள் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரும் சிறந்த முறையில் பந்து வீசி வருகிறார்கள் என்பது நமக்கு ஊக்கமளிக்கும் செய்தி.
மேற்கு இந்திய தீவு அணியில் முன்னணி வீரர்கள் இல்லை என்றாலும் ஒருநாள் போட்டி பொறுத்தவரையில் அந்த அணி தனது முத்திரையை பதித்து வருகிறது. அந்த அணியில் சந்தர்பால், ரிக்கார்டோ போவல், ஜெர்மி, ராம்டென் ஆகியோர் துடிப்புள்ள வீரர்களாக இருக்கிறார்கள்.
பந்து வீச்சில் லாசன், பெஸ்ட் இருவரை மட்டுமே அந்த அணி நம்பியுள்ளது.
ஆக மொத்தத்தில் இந்த தொடரில் மேற்கு இந்திய தீவு அணிகளை விட இலங்கை அணி சற்று பலம் வாய்ந்ததாக இருக்கிறது. இலங்கை வீரர் முரளிதரனின் பந்து வீச்சை மட்டும் சமாளித்து ஆடினால் இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம் என்று கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.
எது எப்படி இருந்தாலும் போட்டியை பொறுத்த வரையில் இந்திய அணி அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். அப்படி செயல்பட்டால் முரளிதரனாக இருந்தாலும் சரி, மற்ற எந்த வீரர்களாக இருந்தாலும் சரி இந்திய அணியை வீழ்த்த முடியாது என்பது உறுதி
vikatan