07-29-2005, 03:25 PM
<b>மும்பையில் சுனாமி வதந்தி: நெரிசலில் சிக்கி 18 பேர் பலி</b>
மும்பை நேரு நகரில் சுனாமி பீதி ஏற்பட்டதால் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் பலியாகி உள்ளனர்.
மும்பையில் கடந்த 4 நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது. இந்த பலத்த மழைக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனால் மும்பையில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மும்பை நேரு நகர் கடற்கரை பகுதியில் சுனாமி வருவதாக வதந்தி கிளப்பப்பட்டது. இந்த சுனாமி வதந்தியால் மக்கள் தங்கள் இருப்பிடங்களைவிட்டு ஓட ஆரம்பித்தனர். இந்த சுனாமி பரபரப்பினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மக்கள் முட்டிமோதி ஓடத்தொடங்கியதால் பலர் நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். இதில் 18 பேர் மிதிபட்டும், மூச்சுத் திணறியும் இறந்தனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் ஒலிப்பெருக்கி மூலம் சுனாமி உருவாகவில்லை என்று அறிவிப்பு செய்ததால் மக்கள் நீண்ட நேரத்துக்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பினர்.