07-29-2005, 03:20 PM
<b>கிழக்குக் கடற்கரை சாலையில் நண்பர்களுடன் கும்மாளம்?: த்ரிஷா மறுப்பு </b>
குடித்துவிட்டு கிழக்குக் கடற்கரை சாலையில் நண்பர்களுடன் ஆட்டம் போட்டதாக வந்த செய்தியை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார்.
<img src='http://img53.imageshack.us/img53/1399/29trishap7cm.jpg' border='0' alt='user posted image'>
சென்னை ஈஞ்சம்பாக்கம் கடற்கரை சாலையில் நடிகை த்ரிஷா நண்பர்களுடன் குடித்துவிட்டு ஆட்டம் போட்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை நடிகை த்ரிஷா மறுத்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:&
படப்பிடிப்பு இல்லாத நாள்களில் எனது தோழிகளை சந்திப்பது வழக்கம். அதுபோலதான் நான் அன்று கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள எனது தோழி வீட்டிற்கு சென்றேன். அப்போது எனது காரை சாலையின் ஓரத்தில் நிப்பாட்டி வைத்திருந்தேன். சிறிது நேரத்தில் இரவு நேர ரோந்து போலீஸ்காரர் அவ்வழியே வந்தார்கள். கார் சாலையின் ஓரத்தில் நிற்பதை பார்த்து என்னிடம் லைசென்ஸை கேட்டார்கள். லைசென்சை காட்டியபோது என்னை அந்த போலீஸ்காரர்கள் அடையாளம் கண்டுகொண்டனர். பின்பு அவர்கள் இந்த இடம் மோசமான இடம் இங்கே நிற்காதீர்கள் உடனே கிளம்புங்கள் என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்கள்.
ஆனால் இந்த சம்பவத்தை சில பத்திரிகைகள் நான் குடித்துவிட்டு நண்பர்களுடன் ரோட்டில் ஆடியதாக பிரசுரம் செய்துவிட்டார்கள். சம்பவத்தின்போது நானும், என் தோழிகளும் மட்டுமே இருந்தோம். வேறு எந்த நண்பர்களும் இல்லை. நடனமும் ஆடவில்லை. எல்லாம் பொய்யான கற்பனை.
நடக்காத ஒன்றை நடந்ததாக பத்திரிகைகளில் எழுதி என்னையும் என் குடும்பத்தினரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
vikatan