07-28-2005, 02:31 PM
அமெரிக்க விண்வெளி ஓடமான டிஸ்கவரி கடந்த 26-ந்தேதி விண்வெளியில் ஏவப்பட்டது. அதில் 7 விஞ்ஞானிகள் உள்ளனர். விண்வெளியில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அடுத்த மாதம் 7-ந்தேதி தரை இறங்க திட்டமிட்டு இருந்தனர்.
இதற்கிடையே டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டபோது சேதம் அடைந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓடம் மேலே சென்றபோது அதன் எரிபொருள் டேங் மேலே வெப்பத்தை தாங்குவதற்காக ஒட்டப்பட்டிருந்த ஓடு உடைந்து கீழே விழுந்துள்ளது. இது 24 அங்குலத்தில் இருந்து 33 அங்குலம் வரை இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல இன்னொரு பகுதியில் 6 அங்குல அளவுக்கு ஓடு பெயர்ந்து கீழே விழுந்து இருக்கிறது.
இதனால் விண்வெளி ஓடம் தரை இறங்கும்போது ஆபத்து ஏற்படலாம் என்று கருதப்படுகிறது. 2003-ம் ஆண்டு கொலம்பியா ஓடத்தில் இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டுத்தான் விபத்தில் சிக்கியது. அதே மாதிரி நிலைமை டிஸ்கவரி ஓடத்துக்கும் ஏற்பட்டு விடுமோ என்று விஞ்ஞானிகள் அஞ்சுகின்றனர்.
ஓடத்தில் எந்த இடத்தில் சேதம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை துல்லியமாக கண்டு பிடிப்பதற்காக போராட் கை மூலம் ஓடத்தில் இருந்தே விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினார்கள்.
இருந்தாலும் சேதம் பற்றி முழுமையாக இதுவரை கண்டுபிடிக்கவில்லை.
இதற்கிடையே டிஸ்கவரி விண்கலம் இன்று விண்ணில் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்டிருக்கும் சர்வதேச விண் வெளி நிலையத்துக்கு செல் கிறது. டிஸ்கவரி பயணத் திட்டத்தில் விண்வெளி நிலையத் துக்கும் செல்வதும் ஒன்றாக சேர்க்கப்பட்டிருந்தது. விண் வெளி நிலையத்துக்கு தேவையான சில பொருட்களையும் டிஸ்கவரி ஓடம் எடுத்து சென்றது.
பயண திட்டப்படி இன்று சர்வதேச விண்வெளி நிலை யத்திற்கு ஓடம் செல்கிறது. அங்கு சென்றதும் ஓடத்தை நிறுத்தி முழுமையாக சோதனை நடத்துகிறார்கள். பின்னர் சேதம் ஏற்பட்ட இடத்தில் மீண்டும் ஓடுகளை ஒட்டி பழுது சரி செய்யப்படும்.
ஒருவேளை பழுதை சரி செய்ய முடியாவிட்டால் டிஸ்கவரி ஓடம் கைவிடப்படும். ஓடத்தில் இருக்கும் விஞ்ஞானிகள் அனைவரும் விண்வெளி நிலையத்துக்கு சென்று அங்கே தங்கி இருப்பார்கள்.
அவர்களை வேறு ஒரு விண்கலத்தை அனுப்பி மீட்டு வருவார்கள். இதற்காக அமெரிக்காவின் இன்னொரு விண்வெளி ஓடமான அட்லாண்டிஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் இதை அனுப்பி மீட்டுவர சில நாட்கள் வரை காத்து இருக்க வேண்டியது இருக்கும்.
டிஸ்கவரி பழுது சரி செய்யப்பட்டால் மட்டுமே அதை தொடர்ந்து இயக்குவார்கள் மற்ற பயண திட்டங்கள் கைவிடப்படும் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே டிஸ்கவரி சுற்றுப்பயணம் முடிந்ததும் வருகிற செப்டம்பர் மாதம் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் விஞ்ஞானிகளை ஏற்றிக் கொண்டு விண்வெளிக்கு செல்வதாக இருந்தது. ஆனால் இந்த பயணம் தள்ளி வைக்கப்படும் என்று விஞ்ஞானிகள் அறிவித்து உள்ளனர்.
விண்வெளி ஓடத்தில் ஏன் இதுபோன்ற சேதம் ஏற்படுகிறது என்பதை முழுமையாக கண்டறிந்து அதை எப்படி நீக்கலாம் என்பதை கண்டு பிடித்த பிறகே இனி விண்வெளி பயணம் இருக்கும் என்று அவர்கள் கூறி இருக்கின்றனர்.

oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............