10-12-2003, 10:09 AM
அமைதிக்கான நோபல் பரிசில் வென்ற பெண்மணிக்கு வாழ்த்துக்கள்...தங்கள் சேவை தொடரட்டும்...!
-------------------------------------
ஈரான் பெண்ணிற்கு அமைதிக்கான நோபல் பரிசு!
வெள்ளி, 10 அக்டோபர் 2003
ஜனநாயகத்திற்காகவும், அடிப்படை மனித உரிமைகளுக்காகவும் தொடர்ந்து போராடிவரும் ஈரான் நாட்டின் மனித உரிமைகள் போராளி ஷிரின் எபாடி என்கின்ற பெண்மணி இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்!
வழக்கறிஞராகவும், நீதிபதியாகவும், விரிவுரையாளராகவும், எழுத்தாளராகவும், மனித உரிமை போராளியாகவும் பண்முகம் கொண்ட ஷிரின் எபாடி, தான் பிறந்த ஈரானிலும், அதன் எல்லைகளுக்கு அப்பாலும் அடிப்படை மனித உரிமைகளை நிலை நிறுத்த தொடர்ந்து போராடிவரும் துணிச்சல் மிக்க பெண்மணி ஆவார் என்று நோபல் குழு பாராட்டியுள்ளது.
வன்முறையே வாழ்க்கை முறையாகிவிட்ட இந்த யுகத்தில், அஹிம்சையே வாழ்வின் அடிப்படையாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவரும் ஷிரின் எபாடி, ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் சக்தியே மனித உரிமைகளை காக்கவல்ல அதிகபட்சம் பலம் கொண்டது என்று தனது மக்களிடையே பேசி வருபவர்.
மனித உரிமைகளுக்காக பொதுவாக போராடினாலும், பெண்களும், குழந்தைகளும் முழு உரிமை பெற்று வாழும் சமூகமே நாகரீக சமூகமாக இருக்க முடியும் என்று கூறிவரும் எபாடியை, உணர்வுடைய முஸ்லீம் என்றும், இஸ்லாத்திற்கும், அடிப்படை மனித உரிமைகளுக்கும் இடையே எவ்வித மோதலும் இல்லை என்கின்ற அவருடைய கருத்து பாராட்டத்தக்கது என்று நோபல் குழு கூறியுள்ளது.
ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நோபல் பரிசு கிடைப்பது இதுவே முதல் முறை. இது ஈரான் மக்களுக்கு மகிழ்ச்சியையும், கௌரவத்தையும் அளிக்கும் என்றும், உலகம் முழுவதும் மனித உரிமைகளுக்காக போராடிவரும் ஆர்வலர்களுக்கு உற்சாகத்தை அளிக்கவல்லதாக இருக்கும் என்று நோபல் குழு கூறியுள்ளது.
டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் இருந்து சட்ட பட்டம் பெற்ற ஷிரின் எபாடி, டெஹ்ரான் நகர நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞராக 1975 முதல் 1979 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.
ஈரானில் நீதிபதியாக பணியாற்றிய முதல் பெண்மணி என்கின்ற பெருமை பெற்ற எபாடியின் பதவிக்காலம் 1979 ஆம் ஆண்டு நடந்த "மத புரட்சி"யால் முடிவிற்கு வந்தது. தற்பொழுது வழக்கறிஞராகவும், டெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் சட்ட விரிவுரையாளராகவும் பணியாற்றிவரும் எபாடி, இஸ்லாமிய சட்டத்திற்கு புதிய விளக்கம் அளிக்கப்படவேண்டும் என்று கோரி வருபவர் ஆவார்.
------------
our thanks to webulagam.com and suratha's pongu tamil converter.

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>