10-12-2003, 10:00 AM
<img src='http://thatstamil.com/images14/billgraham-150.jpg' border='0' alt='user posted image'> <img src='http://thatstamil.com/images14/prabhakaran-200.jpg' border='0' alt='user posted image'>
பிரபாகரனை சந்திக்கிறார் கனடா வெளியுறவு அமைச்சர்
கொழும்பு:
இந்தியாவிலும் இலங்கையிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் பில் கிரஹாம், விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை வன்னிக் காட்டுப் பகுதியில் சந்தித்துப் பேசுவார் என்று தெரிகிறது.
புலிகள் அமைப்புக்கு நெருக்கமான இலங்கையின் சுடர் ஒளி சஞ்சிகை இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இப்போது ஐயர்லாந்து நாட்டில் உள்ள புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனும் இந்தச் சந்திப்பின்போது உடனிருப்பார் என்று தெரிகிறது.
வடகிழக்குப் பகுதியில் இடைக்கால நிர்வாகம் அமைப்பது தொடர்பாக இலங்கை அரசு அளித்துள்ள வரைவுத் திட்டம் குறித்தும், அதில் தாங்கள் விரும்பும் மாற்றங்கள் குறித்தும் புலிகள் இயக்கப் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த தமிழ்ச்செல்வன் ஐயர்லாந்து சென்றுள்ளார்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்திக்கும் பில் கிரஹாம், பின்னர் பிரபாகரனையும் சந்திப்பார் என்று தெரிகிறது. அப்போது, தடைபட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் குறித்தே முக்கிய ஆலோசனை நடக்கும் என்று தெரிகிறது.
புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுடனான சந்திப்பைத் தொடர்ந்து போரினால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு இலங்கைப் பகுதிகளையும் பார்வையிட பில் கிரஹாம் திட்டமிட்டுள்ளர்.
கனடாவில் உள்ளது போல இலங்கையிலும் மாகாணங்ளுக்கு அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்று புலிகள் விரும்புகின்றனர். அதிகாரப் பகிர்வு, கூட்டு நிர்வாகத்தைப் பொறுத்தவரை கனடாவின் அரசியல் சட்டத்தை புலிகள் ஒரு மாதிரியாக முன் வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந் நிலையில் அந் நாட்டு அமைச்சரும் பிரபாகரனும் சந்திப்பது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையே ஐயர்லாந்தில் உள்ள தமிழ்ச் செல்வன் தலைமையிலான குழு விரைவில் நார்வே மற்றும் டென்மார்க் நாடுகளுக்கும் செல்லவுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முக்கிய காரணமாக இருந்து நார்வே நாட்டுக்கு புலிகளின் கிழக்கு மண்டல கமாண்டர் கலோனர் கருணாவும் செல்ல இருக்கிறார்.
அங்கு நார்வே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேன் பீட்டர்சன் மற்றும் அமைதித் தூதர்களை தமிழ்ச் செல்வனும், கருணாவும் சந்திக்கவுள்ளனர்.
பிரபாகரனைச் சந்திக்க கனடா அமைச்சர் பில் கிரஹாம் வருகை தரும்போது இலங்கை வந்துவிட்டு தமிழ்ச்செல்வன் நார்வேக்குச் செல்வார் என்று கூறப்படுகிறது.
சமீப காலங்களில் நார்வே அமைதித் தூதர்களையும், சர்வதேச பத்திரிக்கையாளர்களையும் சந்தித்த பின்னர் வெளிநாட்டு அமைச்சர் ஒருவரை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
Our Thanks to thatstamil.com and surathas pongu tamil converter...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>