07-27-2005, 10:53 PM
<b>குண்டுத்தாக்குதல் சூத்திரதாரி என்று நம்பப்படும் ஒருவர் பேர்மிங்ஹாமில் கைது</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41348000/jpg/_41348559_omar_203.jpg' border='0' alt='user posted image'>
<i>யாசின் ஹசன் உமர்...........</i>
பிரிட்டனின் பேர்மிங்ஹாம் நகரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர் லண்டனில் உயர்பாதுகாப்புப் பகுதியில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த வாரம் லண்டனில் தோல்வியடைந்த குண்டுத் தாக்குதல்கள் குறித்து அங்கு அவரிடம் பொலிசார் விசாரித்தனர்.
கடந்த வியாழக்கிழமை குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்ற வேளையில் பாதுகாப்புக் கமெராக்களில் உருவம் பதிவாகிய யாசின் ஹசன் உமர் என்பவர்தான் இவர் என்று பொலிசார் நினைப்பதாக ஸ்கொட்லாண்ட் யார்டில் உள்ள பிபிசி செய்தியாளார் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் பாதுகாப்புப் படையினர், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பேர்மிங்ஹாம் உள்ளூர்ப் பொலிசார் கலந்து கொண்ட ஒரு நடவடிக்கையின் போது இன்று காலையில் இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் கைது செய்யப்பட்ட போது இவரிடம் இருந்த பொதியை இராணுவத்தின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் ஆராய்ந்து வருகின்றனர்.
அதேவேளை பேர்மிங்ஹாமின் வேறு இடங்களில் இருந்தும் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
<b>பிரிட்டனின் ஏனைய பகுதிகளிலும் பலர் கைது</b>
<img src='http://www.bbc.co.uk/worldservice/images/2005/07/20050727071903050727birminghan203.jpg' border='0' alt='user posted image'>
<i>பேர்மிங்ஹாமில் தேடுதல் நடக்கிறது.........</i>
லண்டன் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து பிரிட்டனின் ஏனைய பகுதிகளிலும் பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கைகளை பொலிசார் நடைமுறைப்படுத்தியதில் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
லண்டனுக்கு அருகே உள்ள் லூட்டன் விமான நிலையத்திலிருந்து பிரன்ஸ்ஸுக்கு பறந்து செல்லவிருந்த ஒரு நபர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.
ஸ்கொட்லாந்தில் இருந்து லண்டனுக்கு வந்து கொண்டிருந்த இரு நபர்கள் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.
லண்டனின் வடபுறத்தே பயங்கரவாத தடுப்புப் பொலிசார் பல வீடுகளில் திடீர் தேடுதல் நடத்தியதியிருக்கிறார்கள்.
thanks: BBC tamil