Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விபத்தா..? கொலையா..?
#26
தாத்தா இதற்கு என்ன சொல்லப்போகின்றீர்கள்.
விபத்து என்றால் ஒரு தடவை நடக்கும். இத கொலை முயற்சிபோலல்லவா தெரிகின்றது
அடிக்கடி நடக்கின்றது.

நன்றி உதயன்


~கண்டி வீதியில் அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் நேற்று மாலை இராணுத் தினரின் பவள் கவசவாகனம் ஒன்று வீதியில் பயணித் துக்கொண்டிருந்த ஓட்டோவை மோதியதில் ஒருவர் காயமடைந்தார். ஓட்டோ மிக மோசமாக சேதமடைந்தது. இந்த விபத்தைத் தொடர்ந்து அங்கு கூடிய பொதுமக்களுக்கும் இராணு வத்தினர் மற்றும் பொலீஸாருக்கும் இடையே பெரும் களேபரம் ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் படையினரை நோக்கி கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்களைக் கலைப்பதற்காக பொலீஸார் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். படையினர் கொட்டன்களால் பொதுமக்களை துரத்தித் துரத்தித் தாக்கினர். இதில் ஏழு பேர் காயமடைந்தனர். இந்தக் களேபரங்களுக்கு மத்தியில் அப்பகுதியிலுள்ள மாணவன் ஒருவனைக் காணவில்லை என்றும் கூறப் படுகின்றது.
கடந்த பத்து நாள்களில் யாழ்.குடாநாட்டில் இராணு வத்தினரின் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களைத் தொடர்ந்து பொதுமக்கள் தாக்கப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். நேற்று மாலை 5 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கண்டி வீதி வழியாக நாவற்குழி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஓட்டோவை எதிரே வந்த பவள் கவச வாகனம் திடீரென மோதியது. தனது பாதையை விட்டு விலகி ஓட்டோ பயணித்துக்கொண் டிருந்த பகுதிக்குள் புகுந்து பவள் அதனை மோதியுள்ளது.
இதனால் ஓட்டோ மிகமோசமாகச் சேதமடைந்தது. அதன் சாரதி வெளியே பாய்ந்து தப்பிவிட அதில் பயணித்துக்கொண்டிருந்த கொழும் புத்துறையைச் சேர்ந்த ம.மகேஸ்வரன் (வயது 40) என்பவர் படுகாயமடைந் தார். அவரது வலது கால் முறிந்துள்ள தாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. விபத்தை அடுத்து அப்பகுதியில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடினர். வீதியின் இரு பங்கங்களிலும் தடைகளை ஏற்படுத்தி போக்குவரத்தை அவர்கள் தடைசெய்தனர். விபத்தில் சம்பந்தப்பட்ட கவசவாக னத்தை அங்கிருந்து அகற்றுவதற்கும் அவர்கள் கடும் எதிர்ப்புத் தெரி வித்தனர்.
சிறிதுநேரத்தில் அங்கு போக்கு வரத்துப் பொலீஸார் வந்து சேர்ந்தனர். பொதுமக்கள் பொலீஸாருடனும் இராணுவத்தினருடனும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நேரம் ஆக ஆக அப்பகுதியில் இராணுவத்தினரும் பொலீஸாரும் மேலும் மேலும் குவிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்துக் கேள்வியுள்ள கண்காணிப்புக் குழுவினரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு நிலைமைகளை அவதானித்த கண்காணிப்புக்குழு அதிகாரி கள் பொதுமக்க ளுடனும் இராணுவ மற்றும் பொலீஸ் அதிகாரிகளுடனும் கலந்துரையாடினர்.
சம்பவ இடத்துக்கு நீதிவான் வந்து பார்வையிட்ட பின்னரே பவள் கவசவாகனத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்களின் இந்த நிலைப் பாடு தொடர்பாக கண்காணிப்புக் குழு அதிகாரிகள் படை அதிகாரி களுக்குத் தெரியப்படுத்தினர்.
ஆனால், அங்கு நின்ற 514ஆவது பிரிகேட் படைப்பிரிவின் அதிகாரி மேஜர் செனரத் இது ஒரு சாதாரண விபத்து என்பதால் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை களை எடுப்பது பொலீஸாரின் கடமை என்று கண்காணிப்புக் குழு அதிகாரி களிடம் கூறினார்.
ஆனால், கண்காணிப்புக்குழு அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். ~~விபத்து சிறிது என்கிறீர் களே. அதன் சேதம் இவ்வளவு பெரி தாக இருக்கிறதே?|| என்று கண் காணிப்புக் குழு அதிகாரி ஒருவர் படை அதிகாரியைப் பார்த்துக் கேட் டார். இதனையடுத்து இருதரப்புக் கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் உச்சக்கட்டத்தை அடைந்தபோது ~~இது ஒரு விபத்து இதில் நடவடிக்கை எடுக்கவேண்டி யது பொலீஸாரின் பொறுப்பு. எனவே நீங்கள் இதில் தலையிட வேண்டாம்|| என்று படை அதிகாரி கண்காணிப் புக்குழு அதிகாரிகளிடம் உரத்த குர லில் கூறினார்.
இதில் பொதுமக்கள் சம்பந்தப்பட் டிருப்பதாலும் இங்கு கலவரம் ஏற்படும் நிலை காணப்படுவதாலும் தாம் தலையிடவேண்டியது அவசியம் என்று கண்காணிப்புக்குழு அதிகாரி சுட்டிக் காட்டினார்.
இந்த வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென நு}ற் றுக்கணக்கான இராணுவத்தினரும் கலகம் அடக்கும் பொலீஸாரும் அவ் விடத்தில் குவிக்கப்பட்டனர்.
இராணுவத்தினருடனான பேச்சுக்கள் வெற்றியளிக்காத நிலையில் கண்காணிப்புக் குழு வினர் அங்கிருந்து புறப்பட ஆயத்தமாகினர். அவர்களைத் தடுத்து நிறுத்த பொதுமக்கள் பிர யத்தனம் செய்தனர்.
நிலைமை மோசமாகியதைத் தொடர்ந்து கண்காணிப்புக்குழுப் பிரதிநிதிகளை இராணு வத்தினர் அரு கிலிருந்த வீடு ஒன்றினுள் அழைத் துச் சென்றனர்.
இராணுவத்தினரின் இத்தகைய நடவடிக்கையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பொலீஸார் மற்றும் இராணுவத்தினரை நோக்கி கல்லெ றிய ஆரம்பித்தனர்.
உடனடியாக இராணுவத்தினரும் பொலீஸாரும் பொதுமக்களை அங்கி ருந்து விரட்டுவதற்காக அவர்கள் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீசப் பட்டன. துப்பாக்கிப் பிரயோகம் மேற் கொள்ளப்பட்டது.
இதனால் சிதறி ஓடிய பொதுமக் களைத் துரத்தித் துரத்தித் தாக்கிய படையினர் அவர்களில் சிலரைப் பிடித்து வைத்துக் காடைத்தனமாகத் தாக்கினர்.
இராணுவத்தினரின் இத்தகைய மூர்க்கத்தனமான தாக்குதல்களினால் 6 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டனர்.
இந்தக் களேபரத்துக்கு இடையே அங்கு நிறுத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் குழுவினரின் வாகனக் கண்ணாடியை சிப்பாய் ஒருவர் கொட் டனால் அடித்து நொறுக்கினார். அங்கு நின்ற எமது செய்தியாளர்கள் இந்தக் காட்சியை நேரில் கண்டனர்.
பொதுமக்களை விரட்டி விரட்டித் தாக்கிய படையினர் அப்பகுதியில் இருந்த கடை களின் பெயர்ப் பலகைகள், ராக்கைகள் என்பவற்றையும் அடித்து துவம்சம் செய்தனர்.
இரவு 7 மணிவரையில் இந்தக் களேபரம் தொடர்ந்தது. இதற்கிடை யில், பொதுமக்கள் விபத்து நடந்த இடத்தை விட்டு விரட்டப்பட்ட மறு கணம் பவள் கவச வாகனம் இராணு வத்தினரால் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
இந்தச் சம்பவங்களால் மாம்பழம் சந்திப் பகுதியில் நேற்றிரவு பதற்றம் காணப்பட்டது.
காயமடைந்தவர்கள்
படையினரால் தாக்கப்பட்டு காய மடைந்த 6 பேரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இ.இதயபவன் (வயது 21, வலம்புரி பத்திரிகைச் செய்தியாளர்), பா. டயனிகரன் (வயது 21 - அரியாலை), கா.சந்திரன் (வயது 21 - அரியாலை), ம.பகீரதன்(ஆசீர்வாதப்பர் வீதி, அரி யாலை), இ.இராமதீஸன் (வயது-23 - கனகரத்தினம் வீதி, அரியாலை), வெற்றி (வயது 24 - வன்னி) ஆகி யோரே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தின் போது பொலீஸார் மற்றும் படையினர் மீது கல் லெறிந்தார்கள் என்று குற்றச்சாட்டின் பேரில் 10 பேரைத் தாம் கைதுசெய்து வைத்துள்ளனர் என யாழ். பொலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவத்தில் இரு பொலீஸார் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினார்.

இராணுவம் வேண்டுமென்றே பொதுமக்களை
சீண்டி கோபமூட்டி அமைதியைக் குலைக்கிறது
புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் துறை குற்றச்சாட்டு
அரியாலை மாம்பழம் சந்திப் பகுதி யில் இராணுவ கவசவாகனம் - ஓட் டோவை மோதிய சம்பவத்தையும் கடந்த வாரங்களில் இடம்பெற்ற விபத்துக்களையும் பார்க்கும்போது இராணுவத்தினர் வேண்டுமென்றே மக் களைச் சீண்டி கோபமூட்டி அமைதி யைக் குழப்பும் முயற்சியில் இறங்கு வதாகவே கருதவேண்டியுள்ளது.
விடுதலைப் புலிகளின் யாழ். மாவட்ட அரசியல்துறை மேற்கண்ட வாறு குற்றஞ்சாட்டியுள்ளது.
போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு அவர்களது அலுவலகத்தில் சந்தித்துப் பேச்சு நடத்திய சமயம் கையளித்த முறைப் பாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக் கப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாட்டில் மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது:-
இராணுவத்தால் ஏற்படும் விபத் துக்கள் தொடர்பாக ஏற்கனவே பல தடவை எமது வருத்தத்தினையும் கண்டனத்தையும் தெரிவித்திருந்த போதும் படைத்தரப்பு நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கும் நிலைப்பாட்டையே எடுத்துவருகிறது.
மடத்தடிச்சந்தி, கச்சாய், நாவாந் துறை, நெல்லியடி என தொடர் விபத் துக்களால் மக்கள் பாதிப்புற்று வரு கின்றனர். இராணுவத்தின் தவறைச் சுட்டிக்காட்ட முனையும் போது கண் ணீர்ப்புகைகுண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, தடியடி என மக்கள் தாக்கி அச்சுறுத்தப்படுகின்றனர்.
மேற்கூறியவாறான சம்பவங்கள் வீதியில் நடமாடும் மக்களின் சுதந் திரத்தை பறிப்பதாகவே உள்ளது. தமது தெருக்களில் அன்றாட அலுவல் களை நிம்மதியாக அச்சமின்றி ஆற்ற முடியாத மக்கள் தமது உரிமைக் காக கொந்தளிப்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
பாதிப்படைந்த மக்கள் மேலும் பாதிப்புகள் தொடரக்கூடாது என்பதில் மாற்றுக் கருத்துக்கள் ஏதுமின்றி ஒன்றுதிரண்டு தம்மாலியன்ற எதிர்ப் புக்களைக் காட்டுகிறார்கள். மக்கள் உணர்ச்சி மேலீட்டாலும் பாதிப்புக்க ளால் ஏற்பட்ட உள்ளக்கொதிப்பாலும் தமது எதிர்பை அவர்கள் வலுவாக காட்டுகின்றனர். பாதிப்பை உண்டு பண்ணியோரையும், அவர்களுக்கு பாது காப்பு வழங்குவோரையும் நேரடியாக தாக்க முற்படுகின்றனர்.
இவ்விடயத்தில் படைத்தரப்பு மக் களின் கொதிப்பை மேலும் கிளரும் விதமாக ஆயுதப் பிரயோகம், தடியடி, கண்ணீர்புகை தாக்குதல் என்பவற்றை மேற்கொள்கிறது. பெரிய அளவில் படையினரை அப்பிரதேசத்தில் குவித்து அப்பிரதேசத்தை இராணுவமயமாக்கு வதும் புரிந்துணர்வு உடன்பாட்டை மீறும் செயலே. அத்தோடு மக்களின் நடமாட்டத்தை முடக்கும் மோசமான மனித உரிமை மீறலும் இதுவாகும்.
மேலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை மனித உரிமை ஆணைக்குழுவும், போர்நிறுத்த கண் காணிப்புகுழுவும் மக்களுக்கு உறு திப்படுத்த வேண்டும் - என்றுல்லது.
[b] ?


Messages In This Thread
[No subject] - by yarl - 10-05-2003, 07:03 AM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 07:19 AM
[No subject] - by kuruvikal - 10-05-2003, 09:39 AM
[No subject] - by kuruvikal - 10-05-2003, 09:57 AM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 10:19 AM
[No subject] - by சாமி - 10-05-2003, 11:47 AM
[No subject] - by Mathivathanan - 10-05-2003, 12:19 PM
[No subject] - by Paranee - 10-05-2003, 03:39 PM
[No subject] - by P.S.Seelan - 10-08-2003, 12:49 PM
[No subject] - by Mathivathanan - 10-08-2003, 01:12 PM
[No subject] - by P.S.Seelan - 10-09-2003, 12:30 PM
[No subject] - by Mathivathanan - 10-09-2003, 12:47 PM
[No subject] - by P.S.Seelan - 10-10-2003, 12:27 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 01:28 PM
[No subject] - by mohamed - 10-10-2003, 03:43 PM
[No subject] - by Mathivathanan - 10-10-2003, 04:05 PM
[No subject] - by P.S.Seelan - 10-11-2003, 12:28 PM
[No subject] - by P.S.Seelan - 10-11-2003, 12:43 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 04:32 PM
[No subject] - by kuruvikal - 10-11-2003, 08:49 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 09:21 PM
[No subject] - by yarl - 10-11-2003, 09:59 PM
[No subject] - by Kanani - 10-11-2003, 11:32 PM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 04:47 AM
[No subject] - by Paranee - 10-12-2003, 05:24 AM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 05:56 AM
[No subject] - by P.S.Seelan - 10-12-2003, 12:28 PM
[No subject] - by P.S.Seelan - 10-12-2003, 12:37 PM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 09:29 PM
[No subject] - by kuruvikal - 10-12-2003, 10:58 PM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 09:09 AM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 09:29 AM
[No subject] - by P.S.Seelan - 10-13-2003, 12:30 PM
[No subject] - by Kanani - 10-13-2003, 12:59 PM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 03:59 PM
[No subject] - by kuruvikal - 10-13-2003, 05:05 PM
[No subject] - by Mathivathanan - 10-13-2003, 08:59 PM
[No subject] - by kanthan - 10-14-2003, 11:50 AM
[No subject] - by kuruvikal - 10-14-2003, 12:10 PM
[No subject] - by kanthan - 10-14-2003, 12:16 PM
[No subject] - by kanthan - 10-14-2003, 12:21 PM
[No subject] - by kuruvikal - 10-14-2003, 12:21 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 12:28 PM
[No subject] - by kuruvikal - 10-14-2003, 12:33 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 12:44 PM
[No subject] - by yarlmohan - 10-14-2003, 12:52 PM
[No subject] - by P.S.Seelan - 10-14-2003, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 01:05 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 01:18 PM
[No subject] - by mohamed - 10-14-2003, 01:30 PM
[No subject] - by yarl - 10-14-2003, 04:11 PM
[No subject] - by Mathivathanan - 10-14-2003, 05:08 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 07:48 AM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 11:05 AM
[No subject] - by mohamed - 10-15-2003, 11:30 AM
[No subject] - by mohamed - 10-15-2003, 11:35 AM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 11:40 AM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 12:42 PM
[No subject] - by P.S.Seelan - 10-15-2003, 01:04 PM
[No subject] - by Paranee - 10-15-2003, 01:22 PM
[No subject] - by mohamed - 10-15-2003, 01:58 PM
[No subject] - by Mathivathanan - 10-15-2003, 03:18 PM
[No subject] - by Paranee - 10-16-2003, 05:15 AM
[No subject] - by P.S.Seelan - 10-16-2003, 12:47 PM
[No subject] - by Mathivathanan - 10-16-2003, 01:08 PM
[No subject] - by P.S.Seelan - 10-17-2003, 01:00 PM
[No subject] - by Mathivathanan - 10-17-2003, 01:43 PM
[No subject] - by P.S.Seelan - 10-18-2003, 01:01 PM
[No subject] - by Mathivathanan - 10-18-2003, 08:28 PM
[No subject] - by P.S.Seelan - 10-19-2003, 12:22 PM
[No subject] - by Kanani - 10-19-2003, 06:08 PM
[No subject] - by kuruvikal - 10-19-2003, 06:29 PM
[No subject] - by Mathivathanan - 10-19-2003, 06:51 PM
[No subject] - by P.S.Seelan - 10-20-2003, 12:26 PM
[No subject] - by Mathivathanan - 10-20-2003, 04:04 PM
[No subject] - by P.S.Seelan - 10-21-2003, 12:40 PM
[No subject] - by P.S.Seelan - 10-21-2003, 12:45 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 01:28 PM
[No subject] - by சாமி - 10-21-2003, 09:03 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 09:14 PM
[No subject] - by Mathivathanan - 10-21-2003, 09:39 PM
[No subject] - by mohamed - 10-22-2003, 08:36 AM
[No subject] - by தணிக்கை - 10-22-2003, 08:57 AM
[No subject] - by mohamed - 10-22-2003, 09:28 AM
[No subject] - by தணிக்கை - 10-22-2003, 12:14 PM
[No subject] - by P.S.Seelan - 10-22-2003, 12:55 PM
[No subject] - by Mathivathanan - 10-22-2003, 03:31 PM
[No subject] - by P.S.Seelan - 10-23-2003, 12:32 PM
[No subject] - by Mathivathanan - 10-23-2003, 03:05 PM
[No subject] - by kuruvikal - 10-23-2003, 03:32 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 03:36 PM
[No subject] - by தணிக்கை - 10-23-2003, 03:39 PM
[No subject] - by Mathivathanan - 10-23-2003, 10:16 PM
[No subject] - by P.S.Seelan - 10-24-2003, 12:50 PM
[No subject] - by Mathivathanan - 10-24-2003, 04:09 PM
[No subject] - by P.S.Seelan - 10-25-2003, 12:38 PM
[No subject] - by Mathivathanan - 10-25-2003, 03:24 PM
[No subject] - by S.Malaravan - 10-25-2003, 06:07 PM
[No subject] - by Mathivathanan - 10-26-2003, 09:22 AM
[No subject] - by P.S.Seelan - 10-26-2003, 12:34 PM
[No subject] - by Mathivathanan - 10-26-2003, 02:05 PM
[No subject] - by P.S.Seelan - 10-27-2003, 12:38 PM
[No subject] - by Mathivathanan - 10-27-2003, 04:48 PM
[No subject] - by aathipan - 10-28-2003, 06:08 AM
[No subject] - by Paranee - 10-28-2003, 07:38 AM
[No subject] - by P.S.Seelan - 10-28-2003, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 10-28-2003, 07:55 PM
[No subject] - by P.S.Seelan - 10-29-2003, 12:46 PM
[No subject] - by Mathivathanan - 10-29-2003, 02:12 PM
[No subject] - by P.S.Seelan - 10-30-2003, 12:54 PM
[No subject] - by Mathivathanan - 10-31-2003, 07:58 PM
[No subject] - by P.S.Seelan - 11-02-2003, 12:12 PM
[No subject] - by Mathivathanan - 11-02-2003, 12:31 PM
[No subject] - by P.S.Seelan - 11-03-2003, 12:49 PM
[No subject] - by Mathivathanan - 11-03-2003, 01:26 PM
[No subject] - by P.S.Seelan - 11-04-2003, 12:30 PM
[No subject] - by yarlmohan - 11-04-2003, 12:43 PM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)