Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அன்னை சோனியாவும் சகோதரி பிரியங்காவும்...!
#9
மாற்று இயக்கங்கள் இந்திய அரசின் நய வஞ்சகத்துக்கு துணை போய் போராட்டத்தினை காட்டிக் கொடுத்தவர்கள் எப்படி தமிழர்களுக்கு நல்லது செய்வார்கள்? ஒரு கதைக்கு புலிகள்தான் மாற்று இயக்கம் மீது கடுமையாக இருக்கிறார்கள் எனில் இவர்கள் மக்களுக்கு ஏன் நல்லது செய்யக் கூடாது? ஆனந்தசங்கரி தனது சுயரூபத்தினை காட்டியதால் அவர் தற்பொழுது முகவரி இல்லாமல் இருக்கிறார்.

தற்போதைய காலகட்டத்தில்,

ஈபிடிபி மக்களுக்கு செய்த நன்மை என்ன?

ஈபிஆர்எல்எஃப் வரதர் அணி மக்களுக்கு செய்த நன்மை என்ன?

புளட் மக்களுக்கு செய்த நன்மை என்ன?

இவர்கள் எதற்காக மக்களையும், விடுதலைப்போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள்? கடந்த காலங்களில் இராணுவத்தினர் எத்தனையோ தடவை மக்கள்மீது வாகனங்கள் மூலமாகவும் மோதி முரட்டுத்தனமாக நடந்து கொண்டுள்ளனர். அப்பொழுது இந்த மாற்று இயக்கங்கள் என்ன செய்தன? மக்களை ஒன்று திரட்டி இராணுவத்தினருக்கு போராடினார்களா? இன்று வட, கிழக்கு பகுதியில் எத்தனையோ விடயங்கள் செய்ய இருக்கின்றன. அதனையெல்லாம் இந்த மாற்று இயக்கங்கள் செய்தால் மக்கள் மனதில் இடம்பெறலாம். ஆனால் அவர்கள் செய்வது தொடர்ந்தும் துரோகத்தனங்களே இவர்களுடன் இணைந்து இடைக்கால நிர்வாகம் என்ன சமஷ்டி கூட பங்கு கொடுக்க முடியாது.

மதிவதனன் அவர்களே கடந்த காலங்களில் போராடியது சமஷ்டிக்காகவா அல்லது இடைக்காலத்துக்காகவா எனக் கேட்கிறீர்கள். உங்களுடைய இப்படியான கேள்விகள் பலர் மனதில் இருப்பது உண்மைதான் இல்லையென நாம் கூறவில்லை.

தற்பொதைய உலக ஒழுங்கு எப்படி போகிறது என்பதனை நீங்கள் சிந்தித்து பாருங்கள். பயங்கரவாதத்தினை ஒழிக்கிறேன் பேர்வழி என ஈராக், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா உள் நுழைந்திருக்கிறது. எமது கையில் விழ இருந்த யாழினை இந்தியா காப்பாற்றியது. இப்படியான நிலையில் புலிகள் தொடர்ந்து போரிட்டால் எமது இனம் முற்றாக அழியுமே தவிர எதுவுமே மிஞ்சாது. உலகத்தில் நடைபெற்ற போராட்டங்களில் நைஐீரியாவில் ஒரு இனம் தமது உரிமைக்கு போராடி இன்று அந்த இனம் இருந்த தடயமே இல்லாமல் போய் இருக்கிறது. இப்படி தமிழினத்துக்கு வர வேண்டுமா? நீங்களே கூறுங்கள்.

தற்போதைய புலிகளின் காலத்துக்கு உகந்த மாற்றத்தினாலேயே சர்வதேச சமூகத்தின் இராஐதந்திரிகள் வன்னியினை நோக்கிய பயணத்தின மேற்கொள்கிறார்கள். அடுத்து விஐயம் மேற்கொள்ளவிருப்பவர் கனடிய வெளியுறவு அமைச்சர். இப்பொழுது சமாதானமா? சண்டையா என்பதனை தீர்மானிப்பது என்பது இலங்கை அரசின் கையிலேயே உள்ளது. ஆகவே உங்களுடைய விதண்டவாத போக்கினை நீங்கள் ஒத்து ஊதுகிறவர்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள்.

எப்பொழுதும் காலங்கள் ஒரே மாதரியாக செல்வதில்லை. தற்பொழுது பலருக்கு புரியாத இவ் மாற்றங்கள் சிறிது சிறிதாக பலருக்கு புரியும். அப்பொழுது உங்களுடைய முகம் எங்கே இருக்கும் என பார்ப்போம்.
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 10-11-2003, 09:28 AM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 11:19 AM
[No subject] - by kayanmathi - 10-11-2003, 01:51 PM
[No subject] - by Mathivathanan - 10-11-2003, 05:00 PM
[No subject] - by yarl - 10-11-2003, 10:02 PM
[No subject] - by Kanani - 10-11-2003, 11:42 PM
[No subject] - by kayanmathi - 10-12-2003, 01:32 AM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 05:19 AM
[No subject] - by kayanmathi - 10-12-2003, 12:02 PM
[No subject] - by Mathivathanan - 10-12-2003, 02:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)