Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வருந்தினால் உயிர் திரும்புமா ?
#5
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41337000/jpg/_41337183_menezes203.jpg' border='0' alt='user posted image'>
[size=18]பிரித்தானிய போலீசாரால் கொல்லப்பட்ட மென்சாஸின் கொலை தவறுதலால் நடந்தது எனவும், அதற்காக தாம் வருந்துவதாகவும் கூறியுள்ளனர். போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு அப்பாவிக் குடிமகன் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இக் கொலைக்காக கொல்லப்பட்ட பிரேசில் நாட்டு இளைஞரின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்ட லண்டன் மாநகர காவல்துறை ஆணையர் சர். இயன் பிளேர் காவல் துறையே இச் சம்பவத்துக்கு முழுப் பொறுபையும் ஏற்றுக் கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.

ஆனால் இவர் பற்றிய அறிக்கைகளில் இவர் திருட்டுதனமாக வதிவிட அனுமதி பெற்று வாழ்நதார் என யாருமே குறிப்பிடவில்லை.

லண்டன் வந்துள்ள பிரசீல் வெளிவிவகார அமைச்சர் தமது கவலையையும் வேதனையையும் தெரிவித்தாரே தவிர அவரது பேச்சில் வழுவல் நிலையையே காண முடிகிறது. பிரட்டன் அரசுக்கு பணிந்து போகிற போக்கை அவரது பேச்சுகள் காட்டுகின்றன. அரசு தரப்பில் பேசிய அதிகாரி கூட இறந்தவரது குடும்பத்தை கண்டு பேச விரும்புவதாகக் கூறினாரே தவிர இதுவரை இவர்களில் யாரும் மென்சாஸின் குடும்பத்தை சந்தித்ததாகத் தெரியவில்லை.

மென்சாஸின் நண்பனான அவியோலி தனது நண்பனை இரு வருடங்களாக தனக்கு நண்பராகத் தெரியும் எனவும் இவர்கள் சொல்லுவது போல தவறான நடத்தை கொண்டவரல்ல எனவும், அவர் அடுத்தவருக்கு உதவிகள் செய்து வாழ்ந்த ஒருவர் எனவும் விசனப்படுகிறார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41337000/jpg/_41337735_familyap_203.jpg' border='0' alt='user posted image'>
மெட்ரோ பொலிட்டன் போலீசாருக்கு எதிராக மென்சாஸின் குடும்பத்தினர் வழக்கொன்றைத் தொடுக்கவுள்ளனர்.
இதை தாங்கள் செய்யாதவிடத்து அப்பாவிகளை இவர்கள் தொடர்ந்தும் கொல்லக் கூடும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே பக்கசார்பற்ற ஒரு விசாரனை நடத்தப்படுவதாக அரசு தரப்பு அறிவித்து,
தற்போது எந்தக் கருத்தையும் கூற முடியாதென
பிரித்தானிய அரசு ஒரு நாடகமும் ஆடத் தொடங்கியுள்ளது.

மென்சாஸின் உறவினர் பெரேரா;
இறந்து போன மென்சாஸின் நடவடிக்கை பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்; அண்மையில் அவர் ஒரு குழுவினரின் தாக்குதலுக்குட்பட்டதாகவும், சாதாரண உடையில் நின்ற போலீசார் துரத்திய போது அப்படியான ஒரு குழுவினர் துரத்துவதாக எண்ணி பயந்து ஓடியிருக்கலாம் , இருந்த போதிலும் அவரை செயலிழக்க வைப்பதற்கு 5 முறை சுட்டதாக போலீசார் சொன்னாலும் 8 முறை சுட்டிருப்பதாக புதிய தகவல்கள் கசிகின்றன.

இவை எப்படியானாலும்,
இப்படியான கொலைகள் தொடர வாய்ப்பிருப்பதாக லண்டன் மாநகர காவல்துறை (மெட்ரோபொலிட்டன்)ஆணையர் சர். இயன் பிளேர் தெரிவித்திருக்கிறார்.

இது லண்டனில் வாழும் சிறுபான்மையின மக்கள் மட்டுமல்ல, எம்மவரும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகத் தெரிகிறது?.............
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 07-24-2005, 08:33 PM
[No subject] - by Thala - 07-24-2005, 10:22 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 06:32 PM
[No subject] - by AJeevan - 07-25-2005, 08:07 PM
[No subject] - by AJeevan - 07-25-2005, 08:30 PM
[No subject] - by sathiri - 07-27-2005, 07:50 AM
[No subject] - by kirubans - 07-27-2005, 06:55 PM
[No subject] - by Thala - 07-29-2005, 10:35 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 07-29-2005, 11:07 PM
[No subject] - by AJeevan - 07-30-2005, 09:06 PM
[No subject] - by Sooriyakumar - 07-30-2005, 09:53 PM
[No subject] - by Danklas - 07-30-2005, 11:23 PM
[No subject] - by ¦ÀâÂôÒ - 07-31-2005, 01:10 AM
[No subject] - by AJeevan - 07-31-2005, 12:48 PM
[No subject] - by ஊமை - 07-31-2005, 02:20 PM
[No subject] - by வினித் - 08-01-2005, 08:06 AM
[No subject] - by Thala - 08-01-2005, 08:43 AM
[No subject] - by AJeevan - 08-01-2005, 12:30 PM
[No subject] - by Danklas - 08-01-2005, 12:37 PM
[No subject] - by Niththila - 08-01-2005, 01:37 PM
[No subject] - by Mathan - 08-01-2005, 02:42 PM
[No subject] - by AJeevan - 08-01-2005, 06:31 PM
[No subject] - by Mathan - 08-01-2005, 08:02 PM
[No subject] - by AJeevan - 08-01-2005, 10:01 PM
[No subject] - by AJeevan - 08-17-2005, 07:28 PM
[No subject] - by tamilini - 08-17-2005, 07:57 PM
[No subject] - by AJeevan - 08-17-2005, 09:55 PM
[No subject] - by AJeevan - 08-18-2005, 09:25 AM
[No subject] - by AJeevan - 08-21-2005, 05:26 PM
[No subject] - by AJeevan - 08-21-2005, 05:51 PM
[No subject] - by Vaanampaadi - 08-21-2005, 06:55 PM
[No subject] - by ஊமை - 08-21-2005, 09:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)