07-25-2005, 07:11 PM
<b>லண்டனில் கடந்த வாரத் தாக்குதல் சந்தேக நபர்கள் குறித்த விபரங்களை பொலிசார் வெளியிட்டனர்</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41341000/jpg/_41341197_suspect_duo_index203.jpg' border='0' alt='user posted image'>
<i>தேடப்படும் சந்தேக நபர்கள்</i>
தேடப்படும் சந்தேக நபர்கள்
லண்டன் போக்குவரத்து முறைமையை இலக்கு வைத்து நடத்தப்பட்டு, தோல்வியடைந்த குண்டுத் தாக்குதல்களின் நான்கு நாட்களின் பின்னர், இந்தத் தாக்குதலுக்கு aபொறுப்பானவர்கள் என்று தாம் சந்தேகிக்கும், தலைமறைவாகவிருக்கும் நபர்கள் குறித்து பிரிட்டிஷ் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த நால்வரில் இருவரது புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார், அவர்கள் முக்தார் சாயிட் இபெறியா மற்றும் பாசின் ஹசன் ஒமர் ஆகியோர் என்றும் பெயர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வார இறுதியில் லண்டனில் சுரங்க ரயில்கள் மற்றும் பேருந்து ஆகியவற்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் நான்கு குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவை என்று ஒரு உயர் பொலிஸ் அதிகாரியான பீற்றர் கிளார்க் கூறியுள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கொள்கலன்களில், வெடிபொருட்களை நிரப்பி அந்தக் குண்டுகள் செய்யப்பட்டிருந்ததாகவும், அப்படியான கொள்கலன்களை விற்றவர்கள் யாராவது அது குறித்த தகவல்களை தரமுடியுமா என்றும் அவர் கேட்டுள்ளார்.
BBC news