07-25-2005, 08:00 AM
SUNDHAL Wrote:மண்னிக்க வேண்டும் வசம்பு
சுரேஸ் அவர்கள் ஒலிபரப்பில் நிகழ்த்திய சாதனை அவுஸ்த்திரேலியாவில் இன்பத்தமிழ் ஒலி வானொலி நிலையத்தில் அதன் பணிப்பாளருடன் இனைந்து பல மணிநேரம் ஒலிபரப்பில் ஈடுபட்டு நிலைநாட்டப்பட்டது அதற்கான கின்னஸ் நிறுவனத்தின் சான்றிதழ் இன்றும் எமது வானொலி நிலையகலையகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளது.
சுரேஷ் அவர்களும் பாலசிங்கம் பிரபாகரனும் இணைந்து வானொலி ஒலிபரப்பில் சாதனை படைத்தது உண்மையே.
ஆயினும் சிறிது காலத்தின் பின் சுரேஷ் கனடா கீதவாணி வானொலியில் தனிமனிதனாக 100மணிநேரம் ஒலிபரப்பில் ஈடுபட்டு சாதனை படைக்க எடுத்தமுயற்சி வெற்றியளிக்கவில்லை.
அதில் அவர் 100 மணித்தியாலம் ஒலிபரப்பாளராய் கடமையாற்றியது உண்மை( நான் நேரத்தினை சரியாகக் குறிப்பிட விரும்பவில்லை ஏனெனில் நான் அதனைப் பதிவுசெய்து வைத்து நேரம் அளக்கவில்லை. :wink: இது அவ்வொலிபரப்பு நடந்ததன் பின் அவ்வானொலி அறிவித்த தகவல்.)
ஆனால் அது கின்னஸ் சாதனையாக ஏற்கப்படாததும் உண்மை.
அதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை.
அதன்பின் இலண்டனில் ஒரு பெண் ஒலிபரப்பாளர் குறிப்பிட்ட சாதனையை நிகழ்த்த முற்பட்டமை அனைவரும் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். அது சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என எனக்குத் தெரியவில்லை.
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

