Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வசந்தம் முளைவிட...!
#1
<img src='http://img114.imageshack.us/img114/8100/love6es.jpg' border='0' alt='user posted image'>

<b>வண்ண மலர்
வார்த்தை கொண்டு
வரவானால் இதயத்துள்
வண்ணம் இவன் வாழ்வும்
வகையாய் ஆனதுவே..!
வரைவிலக்கணங்கள் விதிமுறைகள்
வரைந்தே வாழப்பழகியவன்
வண்ணமவள் வரவோடு - இன்னும்
வளமானானே வடிவானானே...!

வயிற்றுக்குள் பசியும் இல்லை
வயதுக் குழப்படியும் இல்லை
வசதிகள் வாய்ப்புக்கள் தேடி ஓட்டமுமில்லை
வடிவாய்த் தனிமை தந்து
வண்ண மலரவள் நினைவோடு
வகையிலா மொழிகளில் பேசுறான்
வற்றாத ஊற்றாய் மகிழ்ச்சியங்கு பொங்குதே...!

வடிவுக்கு இலக்கணமாய் அவள் முகம்
வசந்தமாய் இவனுள் மலர்ந்தது முதலாய்
வகையில்லாப் புனிதம் தந்து
வகை வகையாய் ஆராதிக்கிறான்
வடிவாய்ச் சொன்னால்
வஞ்சிக் கடவுளாய் அவள்
வரம் வேண்டும் பூசகனாய் இவன்...!

வந்தவள் தங்கினள்
வருத்தம் சிலவும் தந்தனள்
வருந்த முதலே அணைக்கவும் செய்தனள்
வகையிலா தொகையிலா அன்பாலே
வளமாக்கி வாழ்வும் தந்தனள்...!
வஞ்சியவள் வரமான வார்த்தையிலே
வரவானது பாசமழை
வடிவாய் நானும் நனைகிறேன்
வசந்தம் முளைவிட
வந்தவள் ஆகினள் - என்றும் என்
அன்பின் ஜீவனாய்...!</b>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
வசந்தம் முளைவிட...! - by kuruvikal - 07-25-2005, 07:57 AM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2005, 08:10 AM
[No subject] - by Thala - 07-25-2005, 08:17 AM
[No subject] - by அனிதா - 07-25-2005, 08:27 AM
[No subject] - by Niththila - 07-25-2005, 09:26 AM
[No subject] - by tamilini - 07-25-2005, 09:42 AM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 11:50 AM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2005, 11:57 AM
[No subject] - by Malalai - 07-25-2005, 12:07 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 01:23 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 01:25 PM
[No subject] - by வெண்ணிலா - 07-25-2005, 02:23 PM
[No subject] - by Malalai - 07-25-2005, 03:35 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 05:07 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 05:08 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 05:10 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 05:11 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 05:11 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 05:12 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 05:15 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 05:15 PM
[No subject] - by tamilini - 07-25-2005, 05:39 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 05:42 PM
[No subject] - by tamilini - 07-25-2005, 05:46 PM
[No subject] - by Malalai - 07-25-2005, 05:52 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 06:05 PM
[No subject] - by Malalai - 07-25-2005, 06:08 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 06:18 PM
[No subject] - by Malalai - 07-25-2005, 06:23 PM
[No subject] - by kuruvikal - 07-25-2005, 06:29 PM
[No subject] - by tamilini - 07-25-2005, 06:30 PM
[No subject] - by Mathan - 07-25-2005, 06:39 PM
[No subject] - by kavithan - 07-26-2005, 07:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)