07-24-2005, 08:21 PM
லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டவர் தீவிரவாதி அல்ல என்றும் அவர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் லண்டன் போலீஸ் அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த குண்டுவெடிப்புகளால் லண்டன் நகர மக்கள் கடந்த சில வாரங்களாக பெரும் பீதியில் உள்ளனர். கடந்த 7ம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந் நிலையில் கடந்த வாரமும் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. ஆனால் இதில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
அடுத்தடுத்த இந்த குண்டு வெடிப்பால் லண்டன் நகர மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். பல இடங்களில் பலத்த பாதுகாப்பு இருந்த போதிலும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே அஞ்சுகின்றனர்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் ஸ்டாக்வெல் ரயில் நிலையத்தில் ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவன் குணடு வெடிப்புக்கு காரணமான தீவிரவாதிகளுள் ஒருவன் என்று முதலில் லண்டன் போலீஸார் தெரிவித்தனர்.
ஆனால் தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவன் தீவிரவாதி அல்ல என்று தெரியவந்துள்ளது. 27 வயதான ஜீன் சார்லஸ் டிமெனஜஸ் என்ற அந்த இளைஞர் பிரேஸில் நாட்டைச் சேர்ந்தவர் என்றும், கடந்த 3 வருடங்களாக லண்டனில் வசித்து வந்தார் என்றும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்திற்காக தாங்கள் மிகவும் வருந்துவதாக லண்டன் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே தங்களது நாட்டைச் சேர்ந்தவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பிரிட்டன் அரசிடம் பிரேஸில் விளக்கம் கேட்டுள்ளது.