Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் சுனாமி....?
#48
<i>வீணாணவன் நீங்கள் கூறியது சரிதான்..</i>



நிகோபார் தீவில் பலத்த பூகம்பம்: சுனாமி எச்சரிக்கையை விடுத்தது தாய்லாந்து

ரிக்டர் கருவியில் 7.2 ஆக பதிவு; சென்னையிலும் உணரப்பட்டது

அந்தமான் தீவை அடுத்துள்ள நிகோபார் தீவில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.12 மணிக்கு பலத்த பூகம்பம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை அளவிடும் ரிக்டர் கருவியில், அதன் திறன் 7.2 ஆகப் பதிவாகியுள்ளது.

சென்னை நகரிலும், ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்களிலும், இலங்கையில் தலைநகர் கொழும்பு உள்பட பல இடங்களிலும் தாய்லாந்திலும் அந்த பலத்த பூகம்பத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன.

அதையடுத்து தாய்லாந்து நாட்டின் தென்மேற்கில் உள்ள புகேட் தீவு உள்ளிட்ட பகுதிகளை சுனாமி தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை அந் நாட்டு அரசு விடுத்தது. இந்தோனேசிய அரசும் அதேபோன்ற சுனாமி எச்சரிக்கையை விடுத்தது. எனினும் சில மணி நேரங்கள் கழித்து, சுனாமி எச்சரிக்கையை தாய்லாந்து விலக்கிக்கொண்டது.

ஆனால், இந்தியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்க வேண்டிய தேவை இல்லை என்று மத்திய இணை அமைச்சர் கபில் சிபல் கூறினார். இலங்கையிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

""நிகோபார் தீவிலிருந்து தென்மேற்கே 60 கி.மீ. தொலைவில், தாய்லாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையே, இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலடியில் பூகம்பம் மையம் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து பல முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன. அதையடுத்து, நிகோபார் மற்றும் அந்தமான் தீவுகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். எனினும் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று நிகோபார் அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் கடற்கரைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மக்களை நிகோபார் அரசு எச்சரித்துள்ளது'' என்று நிகோபார் மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஏ. அன்பரசு, சென்னையிலிருந்து தொடர்பு கொண்ட நமது நிருபரிடம் தெரிவித்தார்.

கார் நிகோபார் தீவுக்கு அருகில் உள்ள கச்சால் தீவிலும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த இரு நாள்களாகவே கடல் அலையின் சீற்றம் இப் பகுதியில் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. அசாதாரணமான அந்த அலைகளால் தாழ்வான பகுதிகள் பல நீரில் மூழ்கின.

சென்னை மெரீனா கடற்கரையிலும் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிக அளவுக்கு உயர்ந்து வந்து, அருகில் உள்ள மணல் பகுதியை மூழ்கடித்தது. அதைத் தொடர்ந்து, இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து, பேரழிவு நிர்வாக கட்டுப்பாட்டு அறை உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நிகோபார் மற்றும் தமிழ்நாட்டு அதிகாரிகளுடன் அக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு கொண்டு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர் என்று மத்திய உள் துறைச் செயலர் (எல்லை நிர்வாகம்) டி.கே. சங்கரன் தெரிவித்தார்.

கடலுக்கு அடியில் ஏற்படும் பூகம்பத்தின் திறன் 7.2-லிருந்து 7.5 வரை இருந்தாலே, அதனால் வட்டார அளவில் சுனாமிகள் தாக்கக்கூடும் என்று அமெரிக்காவின் பசிபிக் சுனாமி கண்காணிப்பு மையத்தின் அதிகாரிகள் கூறினர்.

ஆனால், ""பூகம்பம் ஏற்பட்டு ஒன்றரை மணி நேரம் ஆன பிறகும் கடல்நீர் மட்டத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. எனவே சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆகவே, தேவையில்லாமல் சுனாமி எச்சரிக்கையை விடுத்து, மக்களைப் பீதிக்கு உள்ளாக்க விரும்பவில்லை'' என்று கூறினார் சங்கரன்.

dinamani.com
Reply


Messages In This Thread
[No subject] - by MEERA - 03-28-2005, 08:52 PM
[No subject] - by பரஞ்சோதி - 03-28-2005, 09:09 PM
[No subject] - by Danklas - 03-28-2005, 09:10 PM
[No subject] - by Nitharsan - 03-28-2005, 09:27 PM
[No subject] - by Nitharsan - 03-28-2005, 10:02 PM
[No subject] - by tamilini - 03-28-2005, 10:07 PM
[No subject] - by MEERA - 03-28-2005, 10:11 PM
[No subject] - by shanmuhi - 03-28-2005, 10:18 PM
[No subject] - by MEERA - 03-28-2005, 10:53 PM
[No subject] - by Danklas - 03-28-2005, 11:17 PM
[No subject] - by sompery - 03-28-2005, 11:26 PM
[No subject] - by sompery - 03-28-2005, 11:28 PM
[No subject] - by Nitharsan - 03-28-2005, 11:35 PM
[No subject] - by kirubans - 03-28-2005, 11:37 PM
[No subject] - by kuruvikal - 03-28-2005, 11:39 PM
[No subject] - by kirubans - 03-28-2005, 11:39 PM
[No subject] - by sompery - 03-28-2005, 11:39 PM
[No subject] - by sompery - 03-28-2005, 11:41 PM
[No subject] - by kuruvikal - 03-28-2005, 11:46 PM
[No subject] - by Danklas - 03-28-2005, 11:55 PM
[No subject] - by shiyam - 03-28-2005, 11:56 PM
[No subject] - by shiyam - 03-28-2005, 11:58 PM
[No subject] - by Danklas - 03-29-2005, 12:04 AM
[No subject] - by tamilini - 03-29-2005, 12:27 AM
[No subject] - by Danklas - 03-29-2005, 12:35 AM
[No subject] - by tamilini - 03-29-2005, 12:41 AM
[No subject] - by Danklas - 03-29-2005, 01:20 AM
[No subject] - by Nitharsan - 03-29-2005, 01:39 AM
tsunami - by yalie - 03-29-2005, 02:38 AM
[No subject] - by shiyam - 03-29-2005, 02:42 AM
tsunami - by yalie - 03-29-2005, 02:42 AM
[No subject] - by shiyam - 03-29-2005, 02:43 AM
[No subject] - by yalie - 03-29-2005, 02:52 AM
[No subject] - by hari - 03-29-2005, 09:19 AM
[No subject] - by hari - 03-29-2005, 09:57 AM
[No subject] - by thivakar - 03-29-2005, 11:25 AM
[No subject] - by Mathan - 03-30-2005, 12:13 AM
[No subject] - by vasisutha - 07-24-2005, 07:48 PM
[No subject] - by vasisutha - 07-24-2005, 07:53 PM
[No subject] - by வினித் - 07-24-2005, 08:00 PM
[No subject] - by vasisutha - 07-24-2005, 08:09 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)