07-24-2005, 07:27 PM
<b>லண்டன் சுரங்க ரயிலில் சுட்டுக் கொல்லப்பட்டவரின் குடும்பத்திடம் போலீசார் மன்னிப்பு</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41337000/jpg/_41337735_familyap_203.jpg' border='0' alt='user posted image'>
மென்சாஸின் கொலைக்கு போலீசாரின் திறமையீனமே காரணம் - அவரின் குடும்பத்தார்
லண்டன் சுரங்க ரயிலில் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது ஒரு அப்பாவிக் குடிமகன் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். இக் கொலைக்காக கொல்லப்பட்ட பிரேசில் நாட்டு இளைஞரின் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்ட லண்டன் மாநகர காவல்துறை ஆணையர் சர். இயன் பிளேர் காவல் துறையே இச் சம்பவத்துக்கு முழுப் பொறுபையும் ஏற்றுக் கொள்கிறது என்றும் கூறியுள்ளார்.
ஸ்கை தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில் அவர் பயங்கரவாத சந்தேக நபர்களைக் கையாளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைகளில் எந்த விதமான மாற்றமும் இருக்கப் போவதில்லை என்றார். இலங்கை உட்பட பல நாடுகளின் அனுபவங்களினூடாகத் தாங்கள் அறிந்து கொண்டது பயங்கரவாத சந்தேக நபர்களைச் சுட வேண்டிய சமயம் அவர்களின் தலைக்குக் குறி வைப்பதை விட வேறு பயன் இல்லை என்பதைத் தான் என்றார் அவர்.
ஜான் சார்ள்ஸ் ட மென்ஸாஸின் கொலை பிரிட்டிஷ் முஸ்லிம் சமூகத்தை கலவரமடைய வைத்துள்ளது. பிரிட்டிஷ் முஸ்லிம் கவுண்சிலின் மூத்த உறுப்பினரான இப்ராஹிம் மொக்ரா அவர்கள் பயங்கரவாத சந்தேக நபர்களைக் கையாளும் போது போலீசார் அளவுக்கு மிஞ்சின துடிப்புக்கு உள்ளாகாமல் இருப்பது அவசியம் என்றுள்ளார். தன்னுடன் பேசிய அனைவரும் ஏற்கனவே பிடித்துத் தரையில் குப்புறத் தள்ளிப் பிடித்து வைத்திருந்த ஒருவர் மீது ஏன் போலீஸ் 5 குண்டுகளைப் பாய்ச்ச வேண்டும் என்று கேட்கிறார்கள் என்றார்.
கொல்லப்பட்ட இளைஞரின் பாட்டியார் மென்ஸாஸ் தான் தனக்குப் பிடித்தமான பேரன் என்றும், நன்றாகப் படித்த, புத்திசாலியான, கடும் உழைப்பாளி அவன் என்றும் கூறினார்.
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41337000/jpg/_41337183_menezes203.jpg' border='0' alt='user posted image'>
Born 07/01/78,
a Brazilian national
Originally from the city of Gonzaga, 500 miles northeast of Sao Paulo in the south-eastern state of Minas Gerais in Brazil
Moved to Sao Paulo at age 14Lived in London for three years,
working as an electrician

