10-11-2003, 10:42 AM
ஈழத்தமிழர்களின் பிரதேசங்கள் எங்கும் பெண்கள் எழுச்சி நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. ஈழத்தமிழர் பிரதேசங்கள் உட்பட உலகெங்கும் மார்ச் 8 ஆம் திகதி மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது. ஆனால், அதற்கு மேலாக ஒக்ரோபர் 10 ஆம் திகதியை மகளிர் எழுச்சி நாளாக ஈழத்தமிழர்கள் அனுஷ்டித்து வருகிறார்கள். அதற்கு சிறப்பான காரணங்கள் உண்டு.
வீட்டுக்குள் அடங்கியும் - அடக்கப்பட்டும், அடுப்பங்கரையில் முடங்கியும், முடக்கப்பட்டும் கிடந்த ஈழத்தமிழ் பெண்கள், வீறுகொண்டெழுந்து விட்டார்கள் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் நாளாக ஒக்ரோபர் பத்து திகழ்கின்றது. ஆம், ஈழத்தமிழரின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போரில் களப்பலியான முதலாவது பெண் போராளி - மாவீரரான - இரண்டாம் லெப்டினன்ட் மாலதியின் நினைவு நாள்தான் மகளிர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 1987 இல் இந்தியப் படை, ஈழத்தமிழரின் பிரதேசங்களை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உட்படுத்த முயன்ற சமயம் அதை எதிர்த்து களத்தில் சமராடி, தன்னுயிர் ஈந்து, விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு பற்றிய புதிய பரிணாமத்தை விரிவடைய வைத்தார் இரண்டாம் லெப்டினன்ட் மாலதி.
பெண்கள் உரிமை, பால் சமத்துவம் குறித்தெல்லாம் சர்வதேச மட்டத்தில் "வெத்துவேட்டு" பிரசாரங்களும், அறிக்கைகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்க, அதனை பெரும் எழுச்சியாக - செயலில் - வெளிப்படுத்திக் கொண்டிருகின்றார்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள்.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை அடிமைப்பட்டுக் கிடந்த பெண்ணினம் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் விழித்துக்கொண்டது. கல்வி உரிமை கூட மறுக்கப்பட்ட பெண்கள், தங்களைப் புத்தூக்கப்படுத்திக் கொண்டதால் கல்வி மற்றும் பொருளியல் துறைகளில் உயர்வுறும் சூழ்நிலை ஏற்பட்டது. <b>இப்போது பல்கலைக்கழகக் கல்வி கற்போரில் அறுபது வீதமானோர் பெண்கள் என்ற புள்ளிவிவரம், உயர் கல்வித்துறையில் பெண்களின் பங்களிப்பை</b> - இடத்தை - உறுதிப்படுத்தப் போதுமானதோர் உதாரணமாகும்.
காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த உலகின் பல்வேறு இனக் கலாசாரங்கள், பண்பாடுகள் பெண்களின் ஆளுமையை நிராகரிக்கும் பண்பையே அடித்தளத்தில் கொண்டிருந்தன. அந்தப் பண்புப் போக்கில் பெரிய மாற்றம் இப்போது நிகழ்ந்து வருவதை யதார்த்தத்தில் காண்கின்றோம். பெரிய அளவில் அந்தப் பண்பு மாற்றத்தை ஏற்படுத்திய பெருமை ஈழத்தமிழ் மகளிருக்கு உண்டு. பால் நிலை சமத்துவம், பால் நிலை நீதி என்பவற்றுக்காக வழமையாகப் பெண்கள் போராடும் நிலைமைக்கு அப்பால் சென்று, பால் நிலை வீரத்தை வெளிப்படுத்தும் விஞ்சிய நிலையில் - உச்சத்தில் - மிளிர்கிறார்கள் அவர்கள்.
<b>சமூகத்தில் ஆணுக்கு நிகரானவள் பெண் என்றும், அவளுக்கு சமூகத்தில் சமவுரிமை வழங்கப்படுவது அவசியம் என்றும் பழைய பல்லவிக் குரல்களை ஏனையோர் எழுப்பிக் கொண்டிருக்க</b>, சமூகத்தில் மட்டுமல்ல, சமராடும் களத்திலும் ஆண்களுக்கு நிகரான வீரம்மிக்கவர்கள் பெண்கள் என்பதை செயலில் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள். அடுக்களையில் இருந்து அகப்பை ஏந்திய தமிழ்ப் பெண்கள் இன்று அதிரடித் தாக்குதலுக்காக ஆயுதங்கள் ஏந்தவும் தயாராகி விட்டார்கள். அன்று தங்க மாலைகளை கழுத்தில் அடுக்கியிருந்த பெண்ணினம் இன்று நஞ்சு மாலையைக் கழுத்தில் தாங்கி நிற்கின்றது.
இந்த எழுச்சியை - உயர்ச்சியை - வெளிப்படுத்தி, பெண்ணினத்தை மேலும் உயர்த்துவதே இந்த "மகளிர் எழுச்சி நாள்" அனுஷ்டிக்கப்படுவதன் நோக்கம். "பாரதி கண்ட புதுமைப் பெண் ஈழத்தில் பிறந்து விட்டாள்" - என்ற செய்தியை உலகுக்குப் பறைசாற்றும் தினமாகவும் இன்றைய நாளைக் கொள்ளலாம். பெண்ணை வெறும் போகப் பொருளாகவும், வீட்டு அடிமையாகவும், குடும்பப்பாரத்தை தனியே சுமக்கும் சுமைதாங்கியாகவும் கருதும் காலத்தைக் கடந்து, தேவையெனில் வீரம் கொண்ட புயலாகவும் பெண்கள் மாறுவார்கள் என்பதை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும் இன்றைய தினம் அமைகின்றது.
நன்றி: உதயன்
-----------------------------------------------------
அப்போ ஆண்கள் என்ன அந்நிய நாடுகளில் குப்பையா கொட்டிக்கிறார்கள்...ஈழவிடுதலை என்ன ஆண்களின் வீழ்ச்சிக்கா வழிவகுக்கிறது...??? ஈழத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைவிடப் பலமடங்கு அதிகம்...அதை ஏன் இந்தக் கட்டுரை சொல்லத்தவறியது....!பெண் எழுச்சி என்பது ஆணின் வீழ்ச்சியால் பெறப்படுமாயின் அது ஆணின் சமூக நிலைப்பாதிப்பை நோக்கி இட்டுச் செல்லும் என்பது உறுதி...! பெண்ணிற்கொப்ப ஆணும் சமவீத வளர்ச்சியை காண்பிக்க வேண்டியது அவசியமே அத்துடன் ஆணின் வீழ்ச்சியை பெண்ணின் உயர்சியாய்க் காட்டுதல் தவிர்க்கப்படுதலும் அவசியம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>