10-11-2003, 09:19 AM
kuruvikal Wrote:ராஜீவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு தனது கணவரின் பிரிவு தாங்காது சோனியாவும் தந்தையின் பிரிவு தாங்காது பிரியங்காவும் அழுது கண்ணீர் மழை பொழிந்து உரை நிகழ்த்தியுள்ளனர்....இது செய்தி...காரணம்...சோனியா அரசியல் குடும்பப் பிரமுகர் பிரியங்கா அவரது மகள்......ஈழத்தில் இதே ராஜீவ் காந்தி என்ற மனிதர் அனுப்பிய படைகளால் கொன்றொழிக்கப்பட்ட எத்தனை ராஜீவ் காந்திகளின் மனைவிகளும் மக்களும் அழுகின்றனர்...அதை யார் செய்தியாய் தருகின்றீர்...அவர்கள் வீழ்ந்த இடத்தை யார் நாட்டுக்கு அல்லது உலகிற்கு அடையாளப்படுத்துகின்றீர்....! ஆக ராஜீவ் என்ற அரசியல் பிரபல்யம் மட்டும் மனிதர் மற்றவரெல்லாம் மாக்களோ..மனிதரல்லவோ....ராஜீவ் என்பவரை மனிதராகக் கண்டால் அவரது இழப்பு எமக்குத் தரும் துயரத்தை ஒப்ப அவரது படைகளால் துப்பாக்கி ரவைகளால் புளூத்தண்டர்களால் தாங்கிகளால் செல்களால் அழிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழ் மக்களின் இழப்பும் எமக்கு எவ்வளவு மடங்கு துயரத்தைத் தருகின்றன என்பதையும் குறிப்பிட்ட செய்தியாளர்கள் தெரிவிப்பதுதான் மனித தர்மம்....! செய்வீர்களா....!...செய்வார்களா...???????????!
<span style='font-size:21pt;line-height:100%'>இல்லையப்பா குருவி அதுதான் 16 வருஷத்துக்குப்பிறகும் அப்ப தந்த அதே இடைக்கால நிர்வாகம்.. சமஸ்டி ஆட்சியெண்டு நாடு நாடா திரியிறமாக்கும்.. அப்பவே ஒப்புக்கொண்டிருந்தால் நீங்கள் பெருக்கி சொல்லுறதுகளே நடந்திருக்காது.. இல்லையோ..
எல்லோரும் அழாமல் சந்தோஷமா இருந்திருப்பம் இல்லையோ..
அழிவுகளையே கண்டிருக்கமாட்டம் இல்லையோ..
நாடுநாடா பிச்சைகேட்டு அலையமாட்டம் இல்லையோ..?
உதுகளைச் சொன்னால் உங்களுக்கு கோபம் வரும்தான் அதுக்கு நான் என்ன செய்யிறது..?</span>
------------------------------------------------------
ராஜிவ் நினைவிடத்தில்.. ராஜிவ் நினைவுகளில் சோனியா குடும்பம்
சென்னை:
ராஜிவ் காந்தி நினைவிடத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க சோனியா காந்தி தனது கணவரின் நினைவுகளில் ஆழ்ந்தார். துயரம் தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார். பிரியங்கா தனது உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிக்கடி கண்ணீர் விட்டு அழுதார். அவரை சகோதரர் ராகுல் காந்தி ஆறுதல் படுத்தினார்.
நிகழ்ச்சியில் யாரும் பேசுவதாக திட்டமில்லை. இருப்பினும், மரபுகளை மீறி குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிரார்த்தனை ஒன்றை நடத்தினார். முதலில் தமிழிலும், பின்னர் ஆங்கிலத்திலும் அவர் பிரார்த்தனை நடத்தியது கூடியிருந்தவர்களிடையே பெரும் உருக்கத்தையும் கண்ணீரையும் வரவழைத்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, இந்த இடத்துக்கு வரும்போதெல்லாம் ராஜிவ் என்னுடன் இருப்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டுவிடுகிறது என்றார் கண்ணீரை அடக்கியபடி. பிரியங்கா பேசுகையில், இன்னும் எனக்கு என் தந்தை கொல்லப்பட்ட அந்த தினம் தான் நினைவுக்கு வருகிறது என்றார்.
7 மாநில காங்கிரஸ் முதல்வர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும் கலந்து கொண்டார். முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடைசி நேரத்தில் அழைப்பு சென்றது. ஒப்புக்கு அனுப்பப்பட்ட இந்த அழைப்பைப் புறக்கணித்த ஜெயலலிதா அமைச்சர் மில்லரை அனுப்பி வைத்தார்.
நிகழ்ச்சியில் ராஜீவ் காந்தியின் பதிவு செய்யப்பட்ட பேச்சு ஒலிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு டி.ஆர். பாலுவின் திடீர் வருகை அரசியல் புருவங்களை உயரச் செய்துள்ளது.
Our Thanks to thatstamil.com..and.. suratha's pongku tamil converter
Truth 'll prevail

