07-24-2005, 12:16 PM
<span style='color:blue'>உலகத்தில் வாழும் இஸ்லாமியர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்பது தமிழர்கள் அனைவரும் கொட்டி(புலிகள்) என்று சிங்களவர்கள் கருதியதற்கு இணையானது.
ஆரம்பத்தில் சிங்கள அரசும் பாதுகாப்பு படைகளும் அப்பாவிகளை பயங்கரவாதிகள் என்று வதைத்ததால்தான் கல்வியில் அக்கறை கொண்ட தமிழர் இளம் சமுதாயம் விடுதலைப் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டதை சரித்திரம் அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.
அது போலவேதான் இன்றைய நிலையும்......................
எனவே அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொள்ளாது அப்பாவிகளது மனதை நாம் புண்படுத்துவது சரியல்ல என்றே கருதுகிறேன்.
<b>லண்டனில் நேற்று முன் தினம் கூட ஒரு அப்பாவி பயங்கரவாதி என கொல்லப்பட்டிருக்கிறார்.</b>பின்னர் அவருக்கும் பயங்கரவாதத்துக்கும் சம்பந்தமில்லை என அறிக்கை விடப்பட்டிருக்கிறது.
http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=100026#100026
இதுபோல் எத்தனை எத்தனை ..................நடந்திருக்கும்.
இப்படிப் பாதிக்கப்பட்டோர் கிளர்ந்தெழும் போது அதன் வேகமும் .................... உணர்வுகளும் எப்படியிருக்கும் என்பதை பாதிக்கப்பட்டோரால் மட்டுமே உணர முடியும்.
ஆனால் உண்மையில் இவற்றால் பாதிக்கப்படுவோர் ஒன்றுமறியா அப்பாவிகள் என்பதே வருத்தமானது.
உதாரணத்துக்கு டாலர் தேசம் கட்டுரையின் ஒரு சில பகுதிகளை நினைவுக்கு கொண்டு வருகிறேன்.
:roll: [size=24]<b>டாலர் தேசம் (பா.ராகவன்)</b></span>
[size=16]
ஒரு தேசத்தின் சரித்திரப் பக்கங்களை ஒரு தீவிரவாதக்குழு கணிசமாக அபகரித்துக்கொள்வதென்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது விஷயத்தில், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தங்களுக்கு நிகராக இன்னொரு தேசத்தையும், இன்னொரு தீவிரவாத இயக்கத்தையும் உதாரணத்துக்குக்கூட எடுத்துக்காட்ட முடியாது.
ஏன், இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் யுத்தம் நடக்கவில்லையா, இஸ்ரேலுக்கும் ஹமாஸ§க்கும் பகையில்லையா, நேபாள அரசுக்கும் மாவோ தீவிரர்களுக்கும் சண்டையில்லையா என்று வரிசையாக இன்னும்கூட நாலைந்து உதாரணங்கள் தோன்றலாம். ஆனால், இவை எதுவுமே அமெரிக்கா_அல்கொய்தா யுத்தத்துடன் ஒப்பிட முடியாதவை.
மற்ற அனைத்து தேசங்களிலும் அரசுக்கு எதிராகப் போராடும் தீவிரவாத இயக்கங்களுக்கு இருக்கக்கூடிய நோக்கம் பொதுவானது. அதாவது விடுதலை வேட்கை சம்பந்தப்பட்டது அதெல்லாம். இலங்கையில் தமிழர்களின் சுதந்திரத்தை முன்வைத்து விடுதலைப்புலிகள் சண்டை போடுகிறார்கள். இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பாலஸ்தீன நிலப்பரப்பை மீட்பது தொடர்பான யுத்தம்தான் ஹமாஸின் அஜெண்டாவில் பிரதானமானது. நேபாளத்தில் மன்னர் ஆட்சிமுறை அருவருப்பாக இருக்கிறது என்பதுதான் அங்குள்ள தீவிரவாதிகளின் கோபம். செசன்யா, ஆப்கனிஸ்தான் போன்ற மற்ற பல தேசங்களிலும் இந்தியாவில் காஷ்மீரை முன்வைத்துச் செய்யப்படும் தீவிரவாத நடவடிக்கைகளிலும்கூட மேற்சொன்ன நிலவியல் காரணங்கள்தான் பிரதானமானவை.
ஆனால், அமெரிக்கா_அல்கொய்தா யுத்தம் ஒன்றுதான் தனிப்பகை தொடர்பானது. அமெரிக்காவை ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகுக்கும் எதிரியாக பின்லேடன் அறிவித்ததற்கும், யுத்தம் தொடர்ந்ததற்கும்கூட அரசியல்தான் காரணம். ஆனால், இது சற்று வேறுவிதமான அரசியல்.
எந்தச் சார்பும் இல்லாத கண்ணுடன் பார்க்க முடியுமானால் இந்த விஷயத்தை இப்படிப் பார்க்கலாம்:
அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசங்கள் மீது எந்தவிதத் தனிப்பகையும் கிடையாது. மாறாக, எண்ணெய் வளம் கொழிக்கும் அரபு தேசங்கள்தான் அமெரிக்காவின் சொத்து மதிப்பைக் கணிசமாக உயர்த்தி வந்திருக்கின்றன. அச்சத்தின் காரணத்தால் சில தேசங்களும், நட்பு அடிப்படையில் சில தேசங்களும், ஆக்கிரமிப்பு காரணமாகச் சில தேசங்களும் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா தம் செல்வத்தை எடுத்தாண்டுகொள்ள அனுமதித்து வந்திருக்கின்றன. பதிலுக்கு, அமெரிக்காவிடமிருந்தும் பல உதவிகள் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, பொருளாதார, வர்த்தக, ராணுவ உதவிகள்.
இது இஸ்லாமிய தேசங்களில் மட்டும் நடந்த சங்கதியல்ல. அமெரிக்கா, எந்த ஒரு நாட்டின்மீது யுத்தம் தொடுத்தாலும் அல்லது உறவு வளர்த்தாலும் அதற்கு மேற்சொன்ன பொருளாதாரக் காரணம் அவசியம் உண்டு. 'தன்நலன்' என்பது தவிர அத்தேசத்துக்கு வேறு எந்தவிதமானதொரு சிறப்புக் காரணமும் எப்போதும் இருந்ததில்லை. அத்தேசத்தின் நானூறு ஆண்டு கால சரித்திரம் சொல்லும் உண்மை இதுவேயாகும். அதிபர்கள் மாறலாம். ஆட்சி மாறலாம். ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை மட்டும் எந்தக் காலத்திலும் மாறியதில்லை. தனக்கு லாபம் உண்டென்றால் அத்தேசம் இஸ்லாமிய நாடு என்றோ, வேறு மதங்களின் அடிப்படையில் ஆட்சி நடக்கும் நாடு என்றோ பார்ப்பதேயில்லை.
சொல்லப்போனால் கியூபாவுக்குத் தராத குடைச்சலை அமெரிக்கா வேறு எந்த ஒரு இஸ்லாமிய தேசத்துக்கும் அளித்ததில்லை. கியூபா என்ன இஸ்லாமிய நாடா? அட, வியட்நாமை எடுத்துக்கொள்ளுங்கள்! எத்தனை வருஷங்கள் நீண்ட யுத்தம்! எத்தனை ஆயிரம் பேர் மாண்டுபோனார்கள்! இத்தனைக்கும் வியட்நாம் ஒரு ஏழை நாடு. மெக்ஸிகோ, ருவாண்டா, ஈக்வடார், ஸ்பெயின் என்று தொடங்கி அமெரிக்கா தன் 'முத்திரை' பதிக்காத தேசமே இல்லை. இது விஷயத்தில் அமெரிக்காவுக்கு இஸ்லாமிய தேசம், கம்யூனிச தேசம், இன்னொரு தேசம் என்றெல்லாம் பாகுபாடுகள் கிடையாது. தனது சௌக்கியத்துக்காக மட்டுமே அமெரிக்கா இதுகாறும் யுத்தங்கள் செய்து வந்திருக்கிறது.
ஆனால், இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னைத்தானே அறிவித்துக்கொண்டு, ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின்மீது யுத்தம் அறிவித்தது மாதிரி வேறு யாரும் செய்யவில்லை என்பதால்தான், அமெரிக்கா ஒரு இஸ்லாமிய விரோத நாடு என்பதான கருத்தாக்கம் மிகவும் வலுப்பெற்றது. உண்மையில் இதுவிஷயத்தில் அமெரிக்கா, இஸ்லாமிய விரோத தேசம் அல்ல. அமெரிக்கா நீங்கலான ஒட்டுமொத்த மானுட குலத்துக்கே விரோதமான நடவடிக்கைகளைத்தான் தொடர்ந்து அத்தேசம் எடுத்து வந்திருக்கிறது.
இருபத்தோராம் நூற்றாண்டின் தொடக்கம் வரையிலான அமெரிக்க சரித்திரத்தை இதுவரை ஆராய்ந்து வந்ததில் நாம் பெறக்கூடிய விடை இதுவாகத்தான் இருக்கிறது.
மேலதிகமாக வாசிப்பதற்கு:-
http://www.yarl.com/forum/viewtopic.php?p=30072#30072