07-23-2005, 10:27 PM
<span style='font-size:25pt;line-height:100%'><b>'லண்டனில் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டவர் தாக்குதலுடன் தொடர்புடையவர் அல்ல'</b>
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/41334000/jpg/_41334723_stockwellpa2_index.jpg' border='0' alt='user posted image'>
லண்டன் குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டவர் தமது விசாரணைகளுடன் தொடர்புடையவர் அல்ல என்று லண்டன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபரின் கொலை தொடர்பாக தற்போது பொலிசார் கவலை தெரிவித்துருப்பதுடன், இது ஒரு துயரச் சம்பவம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஸ்டொக்வெல் சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று ஒரு நபரை துரத்திச் சென்று சுட்டுக் கொன்ற பொலிசார், அந்த நபர் தற்கொலைக் குண்டுதாரியாக இருக்கலாம் என்று முன்பு கூறியிருந்தனர்.
இது தொடர்பான செய்திகளை நாங்களும் வெளியிட்டிருந்தோம்.
பிரிட்டன் முஸ்லிம்கள்
இதேவேளை இலண்டன் நகரில் ஜீலை குண்டு வெடிப்புக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பொலிசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகள், முஸ்லிம் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கியிருப்பதாக இலண்டன் முஸ்லிம் பிரதிநிதிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இலண்டன் ஸ்டாக்வெல் சுரங்க ரயில்நிலைய துப்பாக்கிச் சூடு, அதனைத் தொடர்ந்த அதிரடி சோதனைகளினால் புறநகர்ப் பகுதிகளில் இருந்து மத்திய இலண்டன் வருவதை முஸ்லிம் இளைஞர்கள் தவிர்க்க விரும்புவதாக, பிரிட்டிஷ் முஸ்லிம் அமைப்பின் ஊடகத் துறையைச் சேர்ந்த நாசர் ஹமீத் தெரிவிக்கிறார்.
கடும் போக்கு இஸ்லாமிய பிரச்சாரகர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் சிறுபான்மையினர் என்றும், அவர்களுக்கு பெரும்பான்மையான மக்களிடையே எவ்வித ஆதரவும் இல்லையெனவும் ஆனால் வலதுசாரி ஊடகங்கள் கடும் போக்காளர்கள் சிலரின் நடவடிக்கைகளையே பெரிதுபடுத்திக் காட்டுவதாகவும் நாசர் ஹமீத் கூறினார்.</span>
BBC tamil news