07-23-2005, 10:10 PM
இளைஞன் நீங்கள் எந்த அடிப்படையில் இதை சொல்கின்றீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. உலகசாதனைப்புத்தகத்தில் ஒரு வருடத்திற்குள் ஒரே துறையில் பலபேர் சாதனை முயற்சி செய்திருந்தால் அதி உச்சசாதனை ஏற்படுத்தியவரின் விபரம் நிச்சயம் இடம்பெறும். உலகசாதனை ஒன்று ஒருவர் செய்திருந்தால் அவருக்கு கின்னஸ் ஒரு நற்சான்றிதழ் வழங்கும். அப்படி எத்தனை அவர் வைத்திருக்கின்றார். அதுமட்டுமல்ல அவர் கனடாவில் ஒலிபரப்பிலும் சாதனை முயற்சி செய்தார். ஆனால் விதிமுறைகள் அடிப்படையில் அதனை கின்னஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனை அவர் சாதனை முயற்சி மேற்கொண்ட வானொலியே ஒத்துக் கொண்டுள்ளது. ஆனால் தான் ஒலிபரப்பிலும் சாதனை செய்ததாக ரீல் விடுகின்றார். நான் தகுந்தமுறையில் அவரைப் பற்றிய விபரங்களை அறிந்துதான் அதனை இங்கு எழுதினேன். ஒன்றை நிச்சயமாக தெரிந்து கொள்ளுங்கள் உலகசாதனை செய்வதென்பது கின்னஸின் பல விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடித்தாலே ஏற்றுக் கொள்ளப்படும். விதிமுறைகள் சுலபமானவை அல்ல.

